வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் பெருங்கலைஞன். எம்ஜிஆர் என்ற ஆளுமையின் ஆஸ்தான கவிஞன். நான்கு தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்திழுந்த காந்தம்.
கொள்கைப் பாடல்கள், என்றாலும் சரி, காதல் பாடல்கள் என்றாலும் சரி, தத்துவ பாடல்கள் என்றாலும் சரி, சோகப் பாடல்கள் என்றாலும் சரி, நாயகனை உயர்த்திப் பிடிக்கும் பாடல் என்றாலும் சரி, நாட்டு மக்களுக்கு நல்லது சொல்லும் பாடல்கள் என்றாலும் சரி, வாலியின் தமிழ் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும்.
எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி முத்துராமன், ஜெய்சங்கர் காலம் வரை. எம்.எஸ்.வி காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஆளுமையான கவிஞர் வாலி தொடக்க காலத்தில் திரைத்துறைக்கே பொருத்
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.