சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் இதுவும் ஒன்று. அறிவியல் என்பது என்ன என்ற விளக்கத்தில் துவங்குகிறார். கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளை பட்டியலிடுகிறார். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ,கடவுள் பற்றிய சிந்தனைகள் என்று சுஜாதாவின் கட்டுரைகளின் வீச்சு பிரம்மிக்கத்தக்கது.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
2002 ஆம் ஆண்டு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பே 'கற்பனைக்கும் அப்பால்'. இப்புத்தகத்தில் மொத்தம் 25 அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. எது அறிவியல், எது அறிவியல் இல்லை, என்பது தொடங்கி கடவுளுக்கும் அறிவியலிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சம்பந்தம் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறார்.
முதலில் அறிவியல் எது? எது அறிவியல் இல்லை? என்பதை விளக்குகிறார் சுஜாதா. நம் முன்னே நடக்கும் சில அசைவுகளை உற்றுப் பார்த்து அதற்காக ஒரு hypothesis அமைத்து அந்த hypothesis வேறு வேறு சூழலில் சரியாக இருக்கிறதா என்பதை அறிவதே அறிவியல். எடுத்துக்காட்டாக நியூட்டன், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் அமைத்த விதிமுறைகள் என்பது அறிவியல். அறிவியல் இல்லாததற்கு எடுத்துக்காட்டாக ஜோசியம், வாரபலன் இதனையெல்லாம் பொய்யான விஞ்ஞானம் என்று சுஜாதாவே கூறினாலும், இன்று வரையிலும் நம் ஊடகங்களில் தினசரி ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒன்றும் குறைந்தபாடில்லை.
மூக்கு, அதில் இருக்கும் Olfactory receptors பற்றிய கட்டுரை எனக்கு பிடித்தமான ஒரு கட்டுரையாக அமைந்தது. மனிதர்களிடம் மோப்ப சக்தி எனும் ஆற்றல் Evolution processல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதும் விலங்குகளிடம் இன்னும் மோப்ப சக்தி conservedஆக பாதுகாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று சுஜாதா கூறுவதை உணர முடிந்தது.
இயற்பியல் ஆராய்ச்சி, கணிப்பொறி ஆராய்ச்சி, உயிரியல் ஆராய்ச்சி என்று அறிவியலில் எந்தப் பிரிவை எடுத்தாலும் சுஜாதாவிற்கு எழுதுவதற்கு நிறைய விடயங்கள் தெரிந்திருக்கிறது, அதுவும் அந்தந்த துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டில் அவர் எவ்வளவு updatedஆக இருந்திருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் போது தெரியவரும். எப்படி ஒரு நபரால் அறிவியலின் எல்லாப் பிரிவுகளிலும் ஆர்வங்கொண்டு அவற்றின் எதிர்கால விளைவுகளைக் கனிக்க முடியுமென்பதை இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்பொழுது ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக 'Homeoffice is the future', 'Effects of Artificial Intelligence' போன்ற நிகழ்கால நிகழ்வுகளை 2000களிலே கனித்து நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது.
அறிவியல் காரணங்களில் சில போதாமைகளையும், அறிவியலின் அபார வளர்ச்சியின் விளைவாக மனிதச் சமூகத்திற்கு ஏற்படும் விபரீதங்களையும் கடவுள் மற்றும் கடவுள் கோட்பாட்டிற்கு எதிரானது என்று ஆத்திகவாதிகள் விவாதங்கள் பல செய்வதைக் கூறியும் "கடவுள் இருக்கிறாரா என்பது பிரச்சனை இல்லை. கடவுள் தேவைப்படுகிறார்" என்று சொல்லி இத்தொகுப்பை நிறைவு செய்கிறார் எழுத்தாளர் சுஜாதா.
#286 Book 47 of 2024-கற்பனைக்கும் அப்பால் Author-சுஜாதா
நான் பொதுவாக “non fiction” genre-இல் அதிக புத்தகங்கள் படிக்க மாட்டேன். அதில் ஒரு சில authors exception. அதில் சுஜாதாவும் ஒன்று. சுஜாதாவின் கதைகள் மற்றும் தகவல் சார்ந்த எழுத்துக்கள் இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். சுஜாதா என்ற பெயர் இருந்தாலே போதும்,எந்த புத்தகத்தையும் வாசிப்பேன்.அவரது எழுத்துக்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு, ஈர்ப்பு,ஆர்வம் மிக அதிகம்.
"கற்பனைக்கும் அப்லால்" என்பது சுஜாதாவின் மிகப் பிரபலமான அறிவியல் நூல்களில் ஒன்று. இந்த நூலில், சுஜாதா அறிவியல் மற்றும் மனிதகுலத்தின் பல்வேறு அசாதாரணமான மற்றும் சுவாரஸ்யமான கேள்விகளை எதிர்கொண்டு, அவற்றிற்கு அறிவியல் மற்றும் தத்துவத்தால் விளக்கமளிக்கிறார். உலகின் உருவாக்கம், மனித வாழ்வின் தோற்றம், கடவுளின் இருப்பு போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளின் பதிலை அவருடைய தனித்துவமான எழுத்து பாணியில் பதிலளிக்கிறார்.
நம்மில் பலருக்கு பள்ளியில் அறிவியல் பாடம் கடினமாக இருந்திருக்கலாம்.அதற்குக் காரணம் அறிவியல் கடினமானது என்பது அல்ல, அது சொல்லி கொடுக்கப்பட்ட விதம் தான் காரணம்.பள்ளியில் நான் இயற்பியல் பாடத்தை வெறுத்தேன்,ஆனால் சுஜாதாவால் நான் இயற்பியலை விரும்ப ஆரம்பித்தேன். கற்றல் எவ்வாறு விருப்பமாக மாறுகிறது என்பதே முக்கியம். இந்த புத்தகம் அதைக் குறிப்பிடுகிறது. உலகம் எவ்வாறு உருவானது, மனிதர்கள் எவ்வாறு பிறந்தார்கள், கடவுள் உண்டா, நாம் வாழும் உலகைப் பற்றிய அற்புதமான கேள்விகள் அனைத்தையும் மிகவும் சுவாரஸ்யமான முறையில் விவரிக்கிறார் சுஜாதா.
சுஜாதா 2002-ஆம் ஆண்டிலேயே 'வீட்டில் இருந்து வேலை' (work from home) பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இன்று நடைமுறையில் பார்க்கும் பல விஷயங்கள் சுஜாதா அவரது புத்தகங்களில் முன்பே கூறிவிட்டார்.அவர் ஒரு முன்னோடி! இந்த படைப்பு எல்லாருக்கும் எளிதாகப் புரியக்கூடியது. எல்லாரையும் ஆர்வமாக விரும்பி படிக்கவும் தூண்டும். அறிவியலுக்கான தேடலை விதைக்கும்.
The concepts described in the book are way ahead of time and the way he explained things are very easy to understand and opens a whole new world to the readers.
Universe, Galaxies , work from Home options everything are predicted
Writer Sujatha nevers ceases to amaze me with his writings on many subjects that includes science, philosophy, religion, literature, humour etc. It is no wonder why the Tamil readers miss him so much. He had the magic of simplifying complex science concepts that laymen can understand easily. This book is one such work. Read it and be amazed!
பூமியில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய, ஆயிரமாயிரம் பள்ளிகள், ஆசிரியர்கள் அல்லது நண்பர்கள் செய்ய முடியாததை செய்யும் ஒரே ஒரு புத்தகம். சுஜாதாவுக்கு கோடி கோடி நன்றிகள்.
சுஜாதா எழுதிய முதல் முழவதும் அருவியில் சார்ந்த புத்தகம்.
25 அற்புதமான அறிவியல் கட்டுரைகளை கொண்டது.
நாம் எடுத்தவுடன் பிக் பங் தியரி பற்றியெல்லாம் பேசினால் புத்தகத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் என்று நன்கு நம்மக்களை பற்றி தெரிந்ததால் .. வாயை பிளக்கும் மனித அறிவியலை பற்றி பேசிவிட்டு, அறிவியலின் வெளிச்சத்தை ஆசையாக மேலும் கேட்கவும் படிக்கவும் தூண்டுகிறார்.
சொன்னது போல உலகம் எப்பிடி தோன்றியது முதல் மனிதன் தொட்டு அடுத்த 50 ஆண்டுகள் அறிவியல் உலகம் எப்படி உருமாறி இருக்கும் என ஆழமான அறிவை வழங்கியிருக்கிறது புத்தகம்.