அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் மு.கருணாநிதி. அன்று தொடங்கி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். என்றாலும், அவர் முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது குறித்து ஆச்சரியமூட்டும் செய்திகளும் அதிர்ச்சியூட்டும் விமர்சனங்களும் பரபரப்பான புகார்களும் இன்னமும் தொடர்கின்றன.கட்சியின் மூத்த தலைவர்களை எல்லாம் முந்திக்கொண்டு முதலமைச்சராகிவிட்டார் என்பது தொடங்கி எம்ஜிஆரின் ஆதரவைப் பெற்றே கருணாநிதி முதலமைச்சரானார் என்பது வரை பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.உண்மையில், அண்ணா மரணத்துக்குப் பிறகு திமுகவுக்கு உள்ளும் புறமும் என்ன நடந்தது? மூ