இப்புத்தகத்தின் தொகுப்பிலுள்ள இரு நாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை. ஒரு கதை நகரத்திலும் மலைத்தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைகளிலுமே இறை நம்பிக்கையும் அதை வெளிக்காட்டும் விதங்களும் முக்கியமானதாக உள்ளது. மனித வாழ்க்கை என்பது மிக வினோதமான ஒன்றாக இருப்பதை நடுநிலையோடு நாம் யோசிக்கும் போது உணரலாம்.
தங்க திரிசூலம் ::::: *********** கடவுளுக்கு சக்தி இருக்கோ இல்லையோ ஆனால் துரோகத்தால் மனம் உடைந்து கஷ்டப்பட்டு விடும் சாபம் சம்மந்தப்பட்டவர்களைப் பழிவாங்காமல் விடாது. அந்த எண்ண அலைகள் காற்றில் உலாவி கொண்டு தான் இருக்கும் பழிவாங்கும் வரை.
கஜேந்திரனின் தந்தை மற்றும் சித்தப்பாவின் சாவு மோசமான விபத்தால் நிகழ்ந்தது அதுவும் சூலம் மாதிரி மூன்று கம்பிகளால் உடம்பில் நுழைந்து இருக்கும். அந்த குடும்பத்திற்கு அப்படி ஒரு சாபக்கேடு என்று சொல்கிறார் அவனின் அம்மா.
படித்து முடித்து வேலைக்கும் செல்லும் கஜேந்திரனுக்கு அவ்வளவாகக் கடவுள் நம்பிக்கை கிடையாது. வேலைக்கு வந்த முதல் நாளே அங்கே இருக்கும் மரத்தில் பால் வடிந்ததாகச் சொல்லி சூலம் வைத்ததைப் பார்த்து நக்கல் செய்ய இரெண்டாம் நாள் அங்கே வந்த பெண்ணுக்கு சாமி பிடித்து அந்தச் சூலத்தை எடுத்து குத்திவிடுகிறாள். கஜேந்திரன் ஹாஸ்பிடலில் இருக்க அவனின் அம்மா அந்தச் சூலத்திடம் மகனுக்காக மன்னிப்பு கேட்டவுடன் பிழைத்துக் கொள்கிறான்.
உடம்பு குணமாகி வந்தவுடன் திரும்பவும் அந்தச் சூலத்தை அங்கிருந்து அகற்ற... வேறு ஒருவன் மூலம் திரும்ப அந்த சூலத்தால் குத்தப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறான். இந்த முறை இவன் பிழைக்க மாட்டான் என்று அவனின் அம்மாவே சொல்கிறார், அதற்கு ஒரு கடந்த காலம்.
ஊரில் பெரிய ஆளான கஜேந்திரனின் தாத்தா... அந்த ஊரில் உள்ள சக்திவாய்ந்த அம்மன் கோவிலுக்கு வேறு ஒருவர் கொடுக்கும் தங்கசூலத்தைத் திருடி அங்கே செம்புவால் தான் செய்ததை வைக்கிறார் காரணம் சூலம் கொடுத்தவரை அந்த ஊர் மக்கள் பெரிய மனிதராகப் புகழ்வதைப் பொறுக்கமுடியாமல். அந்தப் பழி கோவில் பூசாரி மேல் விழுகிறது அதனால் இறந்துவிடுகிறார்.. அவர் மனைவி இந்தக் குடும்பத்திற்குச் சாபம் கொடுத்துக் கோவில் முன்னால் இருக்கும் திருசூலத்தில் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.
அந்தச் சாபத்தின் விளைவாக இவனின் தாத்தா, அப்பா & சித்தப்பா அனைவரும் சூலம் உடம்பில் பாய்ந்தது போல இறக்கின்றனர். இப்பொழுது கஜேந்திரனும் ஹாஸ்பிடலில். இவனின் அம்மா வீட்டில் இருக்கும் அந்தச் சூலத்தை விற்று வாங்கிய தங்க கட்டிகளை அந்தப் பூசாரி எந்த ஆற்றில் உயிரைவிட்டாரோ அங்கேயே போட்டு வேண்டிக்கொள்ள இங்கே கண் முழிக்கிறான் கஜேந்திரன்.
பாஷாண லிங்கம் ::::::: ************* விஷத்திற்கு விஷமே மருந்து என்பது போலப் பாஷாணமாகிய விஷம் ஒன்பதும் கலந்து உருவாக்கிய லிங்கம் அரிய பெரும் சக்திகள் கொண்ட பொக்கிஷம்.அதனால் தான் சித்தர்கள் வழிப்பாட்டில் பாஷாண லிங்கம் முக்கியத்துவம் பெருகிறது.
மருந்தே இல்லாத நோய்க்கு ஆட்படும் சிறுபெண் பவித்ரா. அவளின் ரணவேதனையைப் பொறுக்கமுடியாத பெற்றோர் குடும்பத்துடன் தற்கொலை செய்யப் பஞ்சாமிர்தத்தில் விஷம் கலந்து சாப்பிட்ட பிறகும் எதுவும் ஆகாமல் பவித்ரா பழையபடி சுறு சுறுப்பாக மாறுகிறாள். டாக்டரிடம் காண்பிக்கும் போது விஷத்தையே முறியடிக்கும் சக்தி அந்தப் பஞ்சாமிர்தத்துக்கு இருக்கு என்று சொல்லி அதை கொடுத்தவரை அழைத்து வரச்சொல்கிறார். அவரைத் தேடி செல்லும் போது சதுரகிரி மலைக்குச் சென்றதாகக் கேள்விபட்டு அங்கே செல்கிறான் பவித்ராவின் அப்பா ஆனந்தன்.
ஜோசியர் சொன்னதைக் கேட்டு வாய் பேசமுடியாத தன் மகளைக் கூட்டிக்கொண்டு சதுரகிரி மலைக்குச் செல்லும் அதிகேசவன். அங்கே இருக்கும் திருடனுடைய வழிக்காட்டுதலால் மலையில் இருக்கும் கோவிலுக்குப் போகும் போது தன் மகள் மேல் ஆசைப்பட்ட அத்திருடனால் பாறையில் இருந்து ஒரு படுகுழியில் தள்ளப்படுகிறார். அவர் விழும் இடம் தான் பாஷாண லிங்கம் இருக்கும் தடாகம்.
திருடனிடம் தப்பித்து ஒடிவருபவள் ஆனந்தனால் காப்பாற்றப்படுகிறாள் .தன் மகளைக் காப்பாற்றும் மருந்தை அடைய வேண்டும் என்றால் சுயநலம் இல்லாத எண்ணம் வேண்டும் என்று சித்தரால் அறிவுறுத்தப்படுகிறது. அங்கிருக்கும் சித்தர்களே அந்தப் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முயற்சிக்கும் போது ஆனந்தனுடன் சேர்ந்து பாறையில் இருந்து குதித்துவிடுகிறாள். ஏற்கனவே ஆதிகேசவன் குதித்த அதே தடாகம் தான் அது. .ஊமை பெண்ணும் விழுந்த வேகத்தில் அங்கே இருந்த தண்ணீரை குடித்த பிறகு தந்தையிடம் பேசுகிறாள்.
பாஷாண லிங்கத்தைத் தொட்டுச் செல்லும் அந்தத் தண்ணீர் தான் பவித்ராவிற்கு மருந்து என்று தெரிந்து அதை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றான் ஆனந்தன். மனிதர்கள் அடிக்கடி வந்து தொல்லை செய்வதால் சித்தர்கள் முடிவெடுத்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடப்பது மாதிரி நடிக்க... இதை ஆனந்தன் வெளியே சொன்னால் வரும் கூட்டம் குறையும் என்பது அவர்கள் கணக்கு.
சக உயிரிடம் காழ்ப்புணர்ச்சியோட வாழ்ந்து கொண்டு கடவுளை தேடி போவதில் பயன் இல்லை.
The curse of the Trident kills the male members of a family due to the wrong doings of their grandfather against the deity & temple of their village. Superbly written Supernatural / Fantasy / Drama story with emotions and devotions well captured.