Jump to ratings and reviews
Rate this book

தோட்டியின் மகன்

Rate this book
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது தோட்டியின் மகன். தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

176 pages, Paperback

First published January 1, 1947

167 people are currently reading
3361 people want to read

About the author

Thakazhi Sivasankara Pillai (Malayalam: തകഴി ശിവശങ്കര പിള്ള) (17 April 1912 - 10 April 1999) was a novelist and short story writer of Malayalam language. He is popularly known as Thakazhi, after his place of birth. He focused on the oppressed classes as the subject of his works, which are known for their attention to historic detail. He has written several novels and over 600 short stories. His most famous works are Kayar (Coir, 1978) and Chemmeen (Prawns, 1956; film adaptation, 1965). He was awarded India's highest literary award, the Jnanpith in 1984.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
563 (36%)
4 stars
620 (39%)
3 stars
266 (17%)
2 stars
64 (4%)
1 star
41 (2%)
Displaying 1 - 30 of 90 reviews
Profile Image for Umesh Kesavan.
451 reviews176 followers
November 9, 2019
Sundara Ramasamy's brilliant translation work of Thakazhi's novel on the lives of manual scavengers in Alleppey during the early decades of 20th century. The novel is striking in it's explicit language which makes privileged upper class readers (like me) squirm. Every character -be it Sudalaimuthu or Sundaram or Pichandi- leaves you with unforgettable pain. The novel also underlines the roots of communist politics in post-Independence Kerala. It has been decades since this novel was written but what was relevant in Kerala then is still relevant in other parts of our country showing how good literature transcends time and geography.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
November 27, 2022
Book 90 of 2022- தோட்டியின் மகன்
Author- தகழி சிவசங்கரப் பிள்ளை
Translated by- சுந்தர ராமசாமி

“உன் கழிவறையை நவீனப்படுத்தி விட்டால் அது பூஜை அறையாகிவிடுமா? மலம் அள்ளும் தொழிலாளிகளின் கைகளில் ஒரு உறையை மாட்டிவிடுவதன் மூலம் அத்தொழிலின் இழிந்த தன்மையை துடைக்க முடியாது.”

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்றும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. அங்கங்கே நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. 1947-இல் இதை எதிர்த்து ஒரு விதை விதைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய தாக்கம் பல மாற்றங்களை அமைக்க ஏதுவாய் இருந்தது. அது தான் இந்த மலையாள நாவல்-“தோட்டியின் மகன்”. மலையாள இலக்கிய உலகையே திரும்பி பார்க்கச் செய்த,மனதை பதைபதைக்கும் புதினம் இது.

“தோட்டிகள்” என்றால் “மலம் அள்ளும் தொழிலாளிகள்”. சுடலைமுத்து,அவன் தந்தை,அவன் மகன் என மூன்று தலைமுறைகளை சுற்றி தான் இந்த கதை நகரும். சுடலைமுத்து-அவனின் தாத்தா,அவனின் தந்தை-என அனைவருமே தோட்டிகள் தான். சுடலைமுத்துவின் ஒரே ஆசை-அவனது மகன் “தோட்டி”யாக கூடாது என்பது தான். அதற்காக அவன் என்னவெல்லாம் செய்கிறான்,அவன் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதை.

இவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கொடுமைகளும்,அவலங்களும் மிக கொடுமையானது.கழிவறையிலிருந்து முடை நாற்றம் எடுக்கும் போது தான்-இவர்களுக்கு தோட்டிகளின் நினைப்பே வரும்-இப்படியான வரிகள் மனதை மிகவும் பாதிக்கிறது. சமூகத்தில் எல்லாம் முன்னேறினாலும் தோட்டிகள் பரம்பரை மட்டும் தோட்டிகளாகவே இருக்க வேண்டும். அந்த காலத்தில் அவர்களுக்கு சமூகத்தில் எல்லாமே மறுக்கப்பட்டிருக்கிறது-கல்வி,மரியாதை,உரிமை என சகலமும். அவர்களுக்கென ஒரு அந்தஸ்து இல்லை. இவை எல்லாவற்றையும் இந்த கதையில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். சில வரிகள் உடலை நடுங்க வைக்கிறது.

இன்று இதற்காக இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு அது பயன்பாட்டிலும் உள்ளது. ஆனால்,அது கண்டுபிடிக்கப் படும் வரை அவர்கள் வாழ்க்கை எப்படி கொடூரமாக இருந்தது என்பதை இதை படித்தால் உணர முடியும்.

Big Boss நிகழ்ச்சியில் கமல் சொல்லியிருப்பார்,”கடவுளை நினைக்கறது உங்க இஷ்டம்.மனிதனை நினைக்க வேண்டியது நம் கடமை.” அதன் ஆழ்ந்த கருத்து இதை படிக்கும்போது இன்னும் புரிகிறது.

தன் குழந்தை என்ன ஆக வேண்டும்,எப்படிப் பட்ட பெயர் சூட்ட வேண்டும் என்றெல்லாம் இந்த சமுதாயம் தோட்டிகள் மீது திணித்திருக்கிறது. தன் பரம்பரையில் யாருமே தோட்டி ஆக கூடாது என அவர்கள் எண்ணுவதில் தான் தவறேது?
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews23 followers
November 14, 2021
நாட்டில் நடக்கும் அரச பயங்கரவாதத்துக்கு சாதிய ஒடுக்குமுறைக்கும் கண் மூடி கிடக்கும் பொது சமூகம் சில கலைப்படைப்பு பேசும் ஒடுக்கப்பட்டோர் இன்னல்களை கண்டு கண்ணீர் வடிக்கும். அதில் சில போலியாகவும், அந்த நேர வடிகாலாகவும் இருப்பினும் அந்த கலைப்படைப்புகள் உசுப்பும் மனசாட்சிகள் அனேகம் உண்டு. அவற்றுள் ஒன்று தான் தோட்டியின் மகன்.

பிறப்பிலேயே மலம் அள்ளும் தொழிலை ஒரு சாதிக்கு என நேர்ந்து விட்டு அவர்களை exploit செய்து வாழ்ந்த இந்த சமூகத்தை பற்றி முன்னரே அறிந்திருந்தாலும் தோட்டியின் மகன் என்னை அசைத்து விட்டது. தோட்டியின் மகன் தோட்டிதானே என்ற சுடலை-வள்ளியின் தவிப்பு, மோகன் என்று ஒரு பெயர் வைத்ததற்கு ஒரு தோட்டி சந்திக்கும் ஏளனம், வேறொரு பெற்றோர் பேரை கொடுத்து பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் சமூக அவலம், தோட்டியை தீட்டென கருதினாலும் அவர் உழைப்பினால் உண்டாகும் பணத்தை தீட்டென கருதாத ஆதிக்கசாதி மனநிலை என முழு புத்தகமும் நம்மை உலுக்கும்.

இன்றைய வசதுசாரிகளிடம் ஒரு தந்திரம் உண்டு. துப்புரவு பணியாளர்களின் பாதம் கழுவுவது, தொழிலை போற்றி புனிதப்படுத்துவது அந்த தொழில் அந்த சமூகத்திடமே தங்க செய்யும் யுக்தி. சங்கம் அமைத்து பலன்கள் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதில் இருந்து வெளிவர உதவுவதே சங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என்று சுடலையின் வாயிலாக யோசிக்க வைத்திருக்கிறார்கள்.

பேசும் பொருள் கனமானதினாலோ என்னவோ மொழிபெயர்ப்பு எனக்கு குறையாக படவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த வழக்கு என்று ஏற்று கொள்ள வேண்டியது தான். ஏதோ சுந்தர ராமசாமியாக இருக்க போய் விட்டு விட்டார்கள். தோட்டிகள் சமூகத்திலிருந்தே ஒருத்தர் எழுதியிருப்பார் என்றால் இலக்கிய விமர்சர்கள் பாய்ந்திருப்பார்கள்.

இதெல்லாம் அந்த காலம் இப்பெல்லாம் யார் சாதி பாக்குறா என்று ஒரு கூட்டம் வரும். துப்புரவு செய்ய போய் விஷ வாயு தாக்கி இறந்தார்களே இரண்டு தோழர்கள் அந்த செய்தியை அவர்கள் முன் தூக்கி வீசுங்கள்.
Profile Image for Vigneswara Prabhu.
465 reviews40 followers
June 25, 2022
Thottiyude Makan (Son of a Scavenger) deals with the lives of those sanitation workers in the city of Alappuzha, Kerala, during the independence period. It was a time when caste and class system was prevalent and where one was born would determine every aspect of your life, from the job which you had to undertake, the neighborhood which you had to live in, the people who you could and couldn’t mingle with, who you would marry, and even how you would be allowed to die, and be buried after death.

It was a viciously perpetuating cycle, as after your death, your children and their children would carry the same stamp and would forever be branded by it.

The sanitation worker, a scavenger or Thotti (തോട്ടി) as they are called, works for the Municipal Corporation, governmental agency. In a time when public sanitation facilities and waste disposal networks such as sewers/ septic tanks were unheard of, they were the cleaners of society.

Each Thotti was responsible for a locality in the city, where in they would go from door to door, to the latrine pits, and scoop up the human excrement that is collected in them. In addition they were also responsible for cleaning up the streets, as well as disposing of the rotting bodies of street animals and the occasional vagrant, beggar and those outside society.

The job of a Scavenger is a crucial one; if they stop working even for one day, the civilized world would start stinking up, literally. And all the high society gentlemen and rich madams would not even have a chance to answer nature’s call with decency. Not that their work is envious in any way. What sort of commitment, strength of will or rather desperation would force someone who works covered in putridness 24/7, to breathe it in, eat, drink and sleep surrounded by it, one cannot say. After a while, no matter how much you clean, that smell of the latrine, or the excrement, of putrefaction refuses to leave your body, as if it has become part of you.

Our story focuses on a slum full of such scavengers, their lives, challenges, and how the established system is all entrenched in exploiting them, and keeping them from advancement. Chudala Muthu (ചുടലമുത്തു), son of Ishukkumuthu ഇശുക്കുമുത്തു, the lifelong scavenger had just buried his father in the same corporation waste yard, where they dumped the city’s collective shit & trash. Looking at the prospect of continuing his father’s job for sustenance, Muthu vowed to escape from the shackles of his birth and class, making sure that at least his son would be free of this putrid stench, and be able to live a better life. But conspiring against him, are the establishment, society, his peers and environment, and the very lineage of his forefathers. How far can Muthu go, to escape this life, and the stench that emanates from it.

As the years go by, Muthu is a man obsessed with money, and with living a life which doesn't reflect the truth of his life. He makes his wife wear the best clothes, builds a good home unlike the tattered huts of the other scavengers. He so far as goes on to forbid his son Mohanan from interacting with his peers, sending him to a good school so that he might be away from their, as they sees it, disgusting lifestyle. But the stench follows them even when they try to run away.

The society, the establishment, their bosses, peers, even the birds and bees seem to remind Muthu that he had only changed one set of clothes for another; but the pith of his existence, the one mired in excrement, remains.

But amidst the struggles and revolutions of humans, nature has plans of her own; one which disregard the transient and ultimately meaningless human dreams and aspirations. Plague strikes the land, and wipes the slate clean. After the pestilence, death and decay, a new dawn emerges. A new clan of scavengers have taken up residence where the previous generation had lived and perished; ripe for exploitation. And so the cycle continues.
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
December 7, 2023
மிக முக்கியமான புத்தகம். என்னை மிகவும் பாதித்து விட்டது. அவசியம் வாசியுங்கள்.
Profile Image for Gorab.
843 reviews153 followers
September 23, 2024
#bookreview
Thottiyude Makan by Thakazhi Sivasankara Pillai
Translated from the Malayalam by R.E. Asher as Scavenger's Son

Enticed by the magical writing, this is the third book I've picked from this author, followed by Unchaste and Chemmeen.
Written in 1947, featuring the coastal backwaters of Alleppey, this is the story of the oppressed untouchable community of the scavengers.

Our protagonist, Chudalamattu is one such sanitation worker, who wants to save his upcoming generations from this vicious circle. Whether he succeeds? Find out!

What i loved:
1. The beginning. Hooked right from page one.
2. The devastating death. Gruesome details.
3. Diverse emotions - stigma, grit, shame, determination, devotion.
4. All events and narration to the point.
5. Reminiscent of Chemmeen - esp the chapter on newly weds.

Overall:
Simple language, small chapters, linear plot, impactful theme. Great translation. Recommended.
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
January 6, 2024
சோளகர் தொட்டி நாவலிற்குப் பிறகு மனதை கசக்கி பிழிந்த நாவல். நாவலின் காலம் மலையாளத்தில் 1947 இந்தியாவின் சுதந்திரமான ஆண்டில் வெளிவந்திருக்கிறது. இந்தியாவை அடிமைப்படுத்திய நாகரீக சமூகமெனும் ஆங்கிலேயர்கள் படிப்பை கொடுத்தான், நாகரீகத்தை கொடுத்தான் என்ற புனைவுருவாக்க வரலாறு இருந்தாலும் மிகப் பெரிய மலம் அள்ளும் சமூகத்தை உருவாக்கி இந்திய விடுதலையான போது அதை அப்படியே கடத்தி விட்டிருந்தது.

இந்த நாவலை பேசும் முன் அந்த சமூகத்தையும், அவர்கள் செய்த அந்த பணியையும் நேரில் கண்ட உயிர் சாட்சியான தலைமுறையிலிருந்து வந்திருக்கிறேன்.

80 களில் 8 வயதாக இருக்கும் போது இந்த மாதிரியான கழிப்பறை பயன்படுத்தும் படியாகவே நகரங்கள் இருந்தது. அதில் திராவிட பெரியாரிய கம்யூனிச மண்களும் விலக்கல்ல.

அப்போது எங்கள் இடத்தில் அந்த பணியை செய்தவர்கள் மூவருமே பெண்கள். மாராக்கா, லட்சுமி, இன்னொரு பெயர் நினைவில் இல்லை. ஏன் பெயர்கள் கூட நினைவிலிருக்கிறது என்று நினைப்பதாக நினைக்கிறேன். ஆம் அவர்கள் எங்கள் வீட்டு வாசலில் தான் ஓய்வெடுப்பார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அங்கே ஓர் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். 11 மணி வரை வேலை அதன் பிறகு சிறிய உறக்கம் மதிய உணவு உண்ட பிறகு அவர்கள் கிளம்பி விடுவார்கள்.

கதையில் வருவது போல மிகவும் தீண்டத்தகாதவர்களாய் பார்த்த ஞாபகம் இல்லை. அத்துனை அருவருப்பான வேலை தான். அவாகள் செய்தார்கள் சில நேரம் திட்டிக் கொண்டே செய்தார்கள். அவர்கள விடுமறையோ போராட்டமோ செய்த நேரம் நரகல் நிரம்பி வழியும் நகர மெங்கும்.

இக் கொடுமையான அநீதி 90களின் பிற்காலத்தில் படிப்படியாக நீக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மலத்தை தூய்மை படுத்தும் தொழிலானது 2013 வரை இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளிலிருந்து அசிங்கம் செய்யும் அசுத்தத்தை மனிதர்கள் மூலம்தான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்றும் மலக்குழியில் இறங்கி மரணச் செய்திகளை படித்து கொண்டிருக்கிறோம்.

இப்படியான சமூக ஒடுக்கு முறை எப்போதிருந்து தொடங்கப் பட்டது என்ற வரையறையை சுடலைமுத்துவின் அறியாமையைப் பயன்படுத்தி ஆசிரியர் மறைத்திருப்பதாகவே என் தோணல். வாசித்தப் பிறகான என் அனுபவம் நிச்சயம் இது நாள் வரை வந்த அரசாங்கங்கள், நான், நீங்கள் எல்லாரும் சேர்ந்தே இச்சமூகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து வந்திருக்கிறோம் என்பதே.

அடுத்ததாக இக்கதையின் இறுதியில் ஏற்படும் இடதுசாரிகளின் ஆதிக்கம் தோட்டிகளுக்கு வழங்கிய சமூக நீதியானது முழுச் சம்பளம் மட்டும்தான் அதைத் தாண்டி அவர்களுக்கும் பெரிய மாற்றம் வேண்டும் என்ற எண்ணமில்லை என்பதே.

தோட்டியின் மகன் தோட்டியின் மகனாகவே தான் இருக்க வேண்டுமா என்ற சுடலைமுத்து வின் ஆதங்கத்திற்கு செவிசாய்க்கும் மானிடப் பிறவிகள் தோன்றிவிட்டார்களா என்ன?

2024 ல் என் மனது சொல்லும் வெட்கமான பதில் இல்லை என்பதே.

தமிழ் நடை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கும் தொய்வில்லை. இந்நாவலை ஒரு சமூக வட்டத்திற்குள் என்னால் தள்ள முடியவில்லை.

பாரதம் சுதந்திரம் காண்பதற்கு முன்பாக

தேசப்பிதாவின் பார்வையிலிருந்து

“I may not be born again but if it happens, I will like to be born into a family
of scavengers, so that I may relieve them of the inhuman, unhealthy, and
hateful practice of carrying night soil.”

-Mahatma Gandhi.
Profile Image for Ashique Majeed.
82 reviews12 followers
August 28, 2017
തോട്ടിയുടെ മകൻ തോട്ടി ആയിരിക്കണം എന്നു നിശ്ചയിച്ചതാരാണ്? തോട്ടിയുടെ മകന് മോഹനൻ എന്നു പേരിടാൻ പാടില്ലെന്ന് നിശ്ചയിച്ചതാരാണ്? തോട്ടിയുടെ മകന് വിദ്യാഭ്യാസം പാടില്ലെന്ന് നിശ്ചയിച്ചതാരാണ്? തോട്ടി എന്നും തോട്ടി ആയിരിക്കേണ്ടത് മറ്റാരുടെയോ ആവശ്യമായിരുന്നു. കാരണം തോട്ടികൾ ഇല്ലാതായാൽ തങ്ങളുടെ മലം ആര് കോരും? കക്കൂസുകൾ ആര് വൃത്തിയാക്കും?

നിലനിന്നിരുന്ന അല്ലെങ്കിൽ ഇപ്പോളും ചിലരുടെ മനസ്സിൽ നിലനിൽക്കുന്ന സാമൂഹിക അനാചാരത്തെ തുറന്നുകാണിക്കുന്ന രചന. പണിയുടെയും ജാതിയുടെയും അടിസ്ഥാനത്തിൽ സമൂഹത്തിൽ അതിർവരമ്പുകൾ കെട്ടിത്തിരിച്ചു അവർ ഒരിക്കലും ഉയർന്നു വരരുത് എന്നു നടിച്ച ഒരു ജനവിഭാഗം ഇവിടെ ജീവിച്ചിരുന്നു, അതിനിടയിൽ ഞങ്ങൾ തൊട്ടികളാണ് തോട്ടികളായിത്തന്നെ ജീവിക്കേണ്ടവരാണെന്നു വിശ്വസിക്കുന്ന അധസ്ഥിത വിഭാഗക്കാരും. ഒരുമിച്ചു നിന്നു അവർ അവരുടെ അവകാശങ്ങൾ ചോദിച്ചു വാങ്ങുമ്പോൾ മേലാള ജനതക്ക് അതു ഇഷ്ടപ്പെടുകയില്ല.

തന്നെപ്പോലെ തന്റെ മകനും തോട്ടിയാകരുത് എന്ന ഉദ്ദേശത്തോടെ മാത്രം ജീവിക്കുന്ന ചുടലമുത്തു. ജീവിതകാലം മുഴുവൻ അയാൾ ആ ഉദ്ദേശത്തോടെ മാത്രമാണ് ജീവിച്ചത്, അതിനു വേണ്ടി മാത്രമാണ് കഷ്ടപ്പെട്ടത്. പക്ഷെ തോട്ടികളെ സൃഷ്ടിക്കുന്നത് തോട്ടികളല്ല എന്ന സത്യം ചടുലമുത്തു മനസ്സിലാക്കുന്നില്ല, പക്ഷെ ചാടുലമുത്തുവിന്റെ മകൻ അവന്റെ ജീവിതത്തിൽ നിന്നും അതു പടിച്ചെടുക്കുന്നുണ്ട്.

തോട്ടിയും പുലയനും പറയനുമെല്ലാം സമൂഹത്തിന്റെ മുന്നേകിടയിലേക്ക് വരുന്നത് പല മലാളന്മാർക്കും ഇപ്പോളും ഉൾക്കൊള്ളുവാൻ സാധിച്ചിട്ടില്ല. അടച്ചിട്ട മുറികളിൽ തങ്ങളുടെ പുതിയ തലമുറയൊടു പഴയ നഷ്ടപ്രതാപത്തിന്റെ കഥകൾ അവർ അയവറുക്കുന്നുണ്ടാകും, "ആ അവനില്ലേ, അവന്റെ മുത്തശ്ശൻ നമ്മുടെ വീട്ടിൽ മലം കോരാൻ വന്നിട്ടുണ്ട്, ഇന്നിപ്പോ സർക്കാർ ജോലിയൊക്കെ കിട്ടി കാശയപ്പോൾ അവനൊക്കെ അഹങ്കാരം" എന്നു പറയുന്നുണ്ടാകും.
99 reviews
February 21, 2021
சுடலைமுத்து ஒரு மலம் அள்ளும் தொழிலாளி ,  அவனது வாழ்வின் ஒரே குறிக்கோள் தன் மகனை படிக்கவைத்து வேறு ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பது. எந்த நிலையாலும் அவனது மகன் மலம் அள்ளும் ��ொழிலாளி ஆக கூடாது.  சுடலைமுத்து அவனது குறிக்கோளை அடைந்தன ? 
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
January 9, 2022
தூய்மை பணியாளர்களுக்கு சில நாட்களுக்கு முன் நாம் பெரும் மதிப்பளித்தோம் காரணம் கொரோனா காலத்தில் அவர்கள் செய்த பெரும்பணி, தற்போது மூன்றாவது அலை வந்துவிட்டது இந்த மரியாதை மேலும் தொடரக்கூடும் ஆனால் கொரோனாவிற்கு முன்பு அல்லது கொரோனா இல்லாமல்போன பின் இந்த மரியாதையும் மதிப்பும் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்குமா?

அவர்களுக்கு நாம் அளிக்கும் இந்த மரியாதையெல்லாம் தற்காலிகமானதுதான். அப்படி கேரளாவில் ஓர் பகுதியில் தோட்டிகள் எவ்வாறு வாழ்ந்தனர், அவர்கள் எவ்வாறு ஏளனப்படுத்தபட்டனர் ஏமாற்றப்பட்டனர் என்பதை கூறியிருக்கிறார் தகழி சிவசங்கரன் அவர்கள்.இந்த கதையில் தூய்மை பணியாளர்களை யாரும் மதிப்பதில்லை, அவர்களை அதிகார வர்கத்தினர் ஏமாற்றுகின்றனர், பொது மக்கள் அவமானபடுத்துகின்றனர், தோட்டியின் குழந்தைகள் பள்ளிகளில் ஆசிரியர்களாலும், சக மாணவர்களாலும் ஒதுக்கப்படுகிறார்கள், அடிமைகளை போல நடத்தபடுகின்றனர்.

ஒரு தோட்டி தன் மகன் சுடலைமுத்துவை அவன் விருப்பமின்றி தோட்டி ஆக்குகிறான் சுடலைமுத்து இந்த தோட்டி வாழ்க்கையிலிருந்து வெளிவர நினைக்கிறான் தன் மகன் மோகன் தோட்டியாக கூடாது அவனுக்கு தோட்டியென்றால் என்னவென்றே தெரியக்கூடாது என்று பெரும்முயற்சி எடுக்கிறான், இதற்காக அவன் அவனை சார்ந்த சிலரையே ஏமாற்றுகிறான், அதிகாரிகளால் ஏமாறுகிறான் .

கொரோனா போன்ற பெரும்தொற்றுக்கள் பல வருடங்களுக்கு ஒருமுறை தோன்றிக்கொண்டேதான் இருக்கும் போல இப்போது கொரோனா போலவே அக்காலத்தில் வைசூரி , காலரா என்று தொற்று நோய்கள் உருவாகி பெருகுகிறது திரையரங்குகள் , தொழிற்சாலைகள், கடைகள் மூடப்படுகின்றன கொத்துகொத்தாக மக்கள் மடிகின்றனர் , அதை படிக்கும்போது இரண்டாம் அலை ஞாபகத்தில் வந்தது , மூன்றாவது அலையில் உயிரிழப்பு இல்லாமல் இருக்க வேண்டும் விரைவில் அலைகள் ஓயட்டும். 

ஆனால் இந்த நாவலில் பெருந்தொற்று காலத்தில் யாரும் தோட்டிகளை கவனிக்கவில்லை அவர்களில் சுடலைமுத்து மற்றும் அவன் மனைவி உட்பட பலர் சாகிறார்கள், சுடலை மகன் மோகன் தோட்டியாக மாறுகிறான், ஆனால் அவன் தந்தையின் அடிமைபுத்தி அவனிடம் இல்லை அவன் அதிகாரிகளின் ஏமாற்றுதனத்தை ஏற்றுகொள்வதில்லை, புரட்சி செய்கிறான் , தன் அப்பாவை ஏமாற்றிய அதிகாரியை பழி வாங்குகிறான் அவனை நம்பி அவன் பின் தோட்டிகள் நிற்பதாக முடிகிறது.

இந்த காலத்தில் இவர்களின் வாழ்க்கை ஓரளவு முன்னேறி இருக்கலாம் அதுவும் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக ஆனால் சமூகத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பானது ஒன்றும் சொல்லிகொள்ளும் அளவில் இல்லை என்றே தோன்றுகிறது. 

நாம் வாழும் இடத்தை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றும் அரும் செயலை தோட்டிகளே செய்கின்றனர் குப்பைகள் அள்ளமாலும், கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமலும் இருந்தால் என்னவாகும் நம் நிலைமை, ஒரு நாயோ, பெருச்சாளியோ ரோட்டில் செத்து கிடந்தால் நம்மால் மூக்கை மூடி போகதான் முடிகிறது துப்பரவு பணியாளர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினால்தான் இயல்பு நிலை திரும்புகிறது. பெருந்தொற்று காலத்தில்தான் இவர்களின் அருமை நமக்கு தெரிகிறது பெருமையாக பேசுகிறோம் ஆனால் இவர்கள் எந்நாளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற உணர்வு மட்டும் நம்மில் பலருக்கு எப்போதும் வருவதில்லை.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
November 20, 2021
மலம் அள்ளும் தொழிலாளிகளுக்கு இந்த சமூகம் சூட்டிய பெயர் தோட்டிகள்.

தோட்டிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் தோட்டிகளாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும். நாகரீகமான பெயர் வைத்துக் கொண்டால், ஏளனம் செய்யப்படுவார்கள். அவர்களின் உண்மையான கூலி அவர்களுக்கே தெரியாமல் சுரண்டப்படுவார்கள். சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று கனவு கண்டால்; அதிகார வர்க்கத்தால் அது நைச்சியமாக முடக்கப்படும்.

தோட்டிகள் இல்லாவிட்டால் ஊரே நாறிவிடும் என்றபோதிலும் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.
Profile Image for Kavin Selva.
47 reviews1 follower
April 5, 2025
ஒரு தோட்டியின் (மலம் அகற்றும்) மகன், மீண்டும் தோட்டியகத்தானாகவே ஆக வேண்டுமா?"

இந்த ஒரு கேள்வி, இந்த நாவலை முன்னோக்கி செலுத்துகிறது.


---

இங்கு நாம் 'கழிவு' என நினைக்கும் எல்லாம் மாயமாக ஆகாயத்தில் மறைந்து போவதில்லை. அதே இரத்தமும் சதையும்கொண்ட இன்னொரு மனிதன் அதில் கை வைக்க வேண்டி இருக்கிறான்.

ஒரு கல்வி கற்ற சமூகம், தனது சுய நலத்திற்காக, ஒரு சாரர் மக்களை வறுமையின் மீதே முடியாத வட்டத்தில் வைத்து, அதையே பசைபோல சுற்றி, 'ஜாதி' எனும் பெரும் சுமையை ஏற்றி, கொன்று, குவிக்கிறது.

தனக்குப் பிறந்த மகன், தொட்டியாக கூடாதே என்று, தந்தை முயற்சிக்கும் இடங்களில், சகல வசதியுடனும் உள்ள ஒவ்வொரு மனிதனையும் உலகம் உலுக்கும்...

நீ உன் மகனைச் சிறப்பாக வளர்க்கும்போது கூடவே உனக்குப் பிறக்காத இன்னொரு மகன் அங்கு இழி தொழில் செய்கிறான். அதைப் இழி தொழில் எனப் பெயர் வைத்ததே நீதான்.

---

என்னால் வலியை உணர முடிந்தது, எதும் மாற்ற முடியுமா என்று தெரியவில்லை இல்லை என் மனம் ஏற்க மறுக்கவில்லை?
நானும் இந்த சமுதாயத்தில் ஒருவன் மட்டுமே..

---

Wonderful translation by sundara ramasamy (su ra)
Profile Image for Jerry Jose.
379 reviews63 followers
February 8, 2017
According to my father, Thakazhy writes history, and one must approach his work with reference to the socioeconomic structure prevailed during that time period. But even with this at my disposal, I found the novel extremely depressing to digest.

I can’t help but notice the romantic sentiment, the so called upper class associate with the oppressed, whose life they are often too convinced to have fully understood, and morally obliged to portray; but in the process of establishing so, end up giving them the latter pessimistic mind-set of their own. This novel isn’t much different, which more or less happens in a late feudalistic society, at Alappuzha, where protagonist is forced to replace his father as the municipality scavenger, following his death, thanks to the caste system. Novel follows his dreams and yearning to get off this protracted family profession so that at least his son won’t be a Thotti, colloquial term for the prole. I was disgusted by the very first 20 pages, which would have been the stalemate, If not for an arduous train journey. But as the story progressed, I started to appreciate the book, feel for the characters and their helplessness in bigotry, only to have it all destroyed by the end.

This is a classic example of those depressing works, that we are often forced to read as part of curriculum or peer pressure, which venerates tragedy as the most significant characteristic of good literature. And to this reader, Thottiyude Makan felt a little blunt, passive and pretentious for the cause.
Profile Image for Shihab Perumpulliyil.
67 reviews11 followers
July 21, 2015
Before I reading the first page I had the clear idea what Pillai going to deal with, and the nature of characters, society and whole, after I reaching the fifty pages i realised that I getting the same experience of Vellappokkathil (which was the only one story I read before From Pillai) . Pillai's extremely enthusiastic narrative caliber told the story of Chudala Muthu, Ishaka Muthu, Palani. Their struggles, poverty, neglects of the society. All he brilliantly created, but when the novel turns In to another part where Chudala Muthu tries to save his child from their custom it creates some cliche, I feel the perfection is missing and Pillai forget how to make a big impact at the end, I felt he was eager to do that. After all society needs this good topic and I respect his effort, but it could have been better. "Not Great but Good "
Profile Image for MJV.
92 reviews39 followers
September 18, 2020
1974ல் தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் ச��ந்தரராமசாமி அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகம். இப்போதும் தகழி அவர்கள் இந்த புத்தகத்தில் பேசிய தர்க்கங்கள் பொருந்தி போவது, மானுடத்தில் நிலைத்து நிற்கும் சாபம். எத்தனைப் பெரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், சக மனிதன் - சக மனிதனின் மலத்தை சுத்தப்படுத்தும் வரை, இங்கு மார்தட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் புத்தகம்.

இசக்கிமுத்து, சவரிமுத்து, பிச்சாண்டி, பழனி, சுடலைமுத்து, சுந்தரம், போன்ற பெயர்களைத் தாண்டி வேறு பெயர்களைக் கூட வைக்க முடியாத அவல நிலை இருந்திருக்கின்றது. இன்றும் கூட இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. தோட்டியாக பிறந்த காரணத்தைக் காட்டியே உணர்விற்கு சுவர்கள் அமைக்கப்பெற்று, உணவிற்கு தடை விதிக்கப் பெற்று, கையில் பணம் இருக்கவே கூடாது என்பதற்காக பல தடைக்கற்கள் இவர்களது அன்றாட வாழ்க்���ையில் இருக்கிறது. இந்த புத்தகத்தின் பக்கங்கள் கடக்க கடக்க, நாம் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறோம் என்றும், நாம் துன்பமென்றும், இயலாமை என்றும் வருந்துவதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும் நன்றாகப் புலப்படுகிறது.

உடலின் கழிவை மூக்கின் துவாரங்கள் வெறுப்பது உடல்கூறு சார்ந்த இயற்கை.அதை சுத்தப்படுத்தும் மக்களை, மனிதர்களாகவே பார்க்க மறுப்பதும் அவர்களை அடியோடு வெறுப்பதும் மிகப்பெரிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு. மனித வாழ்வியலின் மிகப்பெரிய முரண். ஒரு தோட்டி தன குழந்தையை, தோட்டியாய் வளர்க்க மறுத்து, அதற்கான படிநிலைகளை எப்படி கடக்கிறார் என்பதும், இந்த உலகம் அவரின் எண்ணத்திற்கு எப்படியெல்லாம், வேரை அழிக்கும் கொதி நீராய் மாறுகிறது என்பதை விளக்கும் கதை.

என்ன பெரிய விளக்கங்கள் கொடுப்பினும், எவ்வளவு குறும்படங்கள் வரினும், இதை எழுதும், படிக்கின்ற நீங்களும் எல்லோருமே அவர்களின் வதைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருப்போமோ என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. ஏன், எப்படி, எதற்கு என்ற கேள்வி நிலைகளே மிஞ்சி நிற்கிறது. இன்றும் கூட இதற்கென கருவிகள் இருக்கின்றனவா என்பதும், அப்படிக் கருவிகள் இருப்பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பு எவ்வாறு வழங்கப்பட்டு அவர்களும் அவர்களின் வாழ்க்கை நிலை நகர்வும் எப்படி உள்ளன என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை ஆகின்றன.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளும், அல்லது வழி வழியாக செய்கின்ற தொழில்களை அவரவரையே செய்ய வைக்கும் உத்திகளுமே, தோட்டிகளை ஒரு சமூகக் கோரத்தின் பிடியில் நிறுத்தி வைப்பதாய் எண்ணுகிறேன். நினைத்த பெயரைக் கூட குழந்தைக்கு வைக்க முடியாத வாழ்க்கையின் பெயரை என்னவென்று சொல்வது?

சரி, கதைக்குள் செல்வோம். இசக்கிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாத தருவாயில் அவரது மகன் அவரின் தோட்டி வேலையை ஏற்றுக் கொள்ளும் நிலை வருகிறது. சுடலைமுத்துவுக்கு எப்போதும் பெரிய ஈர்ப்போ விருப்பமோ இருந்ததில்லை. இசக்கிமுத்துவின் உடல்நிலையின் தீவிரமும், அவருக்கு உணவு கொடுக்க வேண்டிய சூழலும் சேர்ந்து சுடலைமுத்துவை - வாலி மற்றும் அதன் வழியையும் சுமக்க செய்கிறது.

அன்றைக்கு சுடலைமுத்து யோசித்து எடுத்த முடிவு, தன் மகன் ஒரு தோட்டியாக வாழக்கூடாது என்பதுதான். ஆனால் அந்த முடிவு எடுத்த அன்றோ அதற்கு பிறகான தருணங்களிலோ, ஒரு தோட்டியின் மகன், தோட்டியாகவே இருக்கின்ற வாழ்க்கையினை தான் இந்த சமூகம் திணிக்கும் என்று அறிந்திருக்கவில்லை. நாசித்துவாரங்கள் தொடங்கி பெரும்பாலும் அனைத்தையும் இழந்திடும் வாழ்க்கை தான் ஒரு தோட்டியின் வாழ்க்கை.

சில இடங்களில் சுடலைமுத்து, இந்த சமூகத்தின் மேல் வர்க்கங்கள் என்று தாங்களே நினைத்துக்கொண்டும், பிரகடனம் செய்தும் வாழும் மனிதர்களிடம் நடத்தும் அல்லது நடத்த நினைக்கும் உரையாடல்கள் அனைத்தும் சவுக்கடிகள் தாம்.என்னால் ஏன் சகமனிதனின் வாழ்வு, அவர்களின் உணவு, உடை ஆகியவற்றிற்கே கூட ஏங்கும் படியான வாழ்க்கை ஏன் என்ற கேள்விகள் சுடலைமுத்துவை துளைத்தெடுக்கின்றன.

உண்மையில் பார்க்கப்போனால் அதற்கான விடை கிடைத்ததா? அல்லது எப்படி மாறியது வாழ்க்கை என்பதே கதை. இதில் வருகின்ற வள்ளி, சேர்மன், ஓவர்சீயர் கேசவப்பிள்ளை, சுந்தரம், பிச்சாண்டி - இவர்கள் அனைவரும் சுடலைமுத்துவின் வாழ்க்கையை எப்படி ஆட்டி வைக்கிறார்கள் என்ற புள்ளியில் நகர்கிறது கதை. இந்த புத்தகத்தின் முகப்பில் இருக்கும் தோட்டியின் முகத்தினை உற்று நோக்குங்கள். அது சொல்லும் அவர்களின் வாழ்க்கையின் இழப்பையும், சோகங்களையும்...

புத்தகத்தின் ஆரம்பத்தில் சில பக்கங்கள் நமக்கு கடத்தும் வலியே, புத்தகம் முழுதும் பயணிக்கிறது. சுடலைமுத்துவின் தகப்பன் இறந்து விட்டார். அவரை புதைக்க இல்லாததால் அல்லது மகா கணம் பொருந்திய சமூகம் இடம் தராததால், மலக்கிடங்கின் முன்னால் இருக்கும் ஒரு பெரிய மரத்தின் அடியில் புதைக்கப்படுகிறார் இசக்கிமுத்து. அதன் பின்னர் நாய்களால் குதறப்பட்ட நிலையில் வெளியில் இழுப்படுகிறார் இசக்கிமுத்து.

"வாசல் பக்கம் போன போது ஏதோ சகிக்க முடியாத அழுகல் நாற்றம் அவன் மூக்கைத் துளைத்தது.

அந்த மாமரத்தின் அடிமூட்டில் அழுகிப்போன சிவந்த நிறப்பொருள் ஒன்று கிடக்கிறது. அவ்விடத்தில் நிலம் தாறுமாறாகக் கிளறப்பட்டு மண் விரவிக்கிடக்கிறது. மற்ற தோட்டிகள் சற்று தூரத்தில் நின்றபடி அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுடலைமுத்து சாக்கடையை தாண்டி குதித்து அங்கு சென்றான்.

இசக்கிமுத்துவின் பிணத்தை நாய்கள் பிராண்டி இழுத்து மண்ணுக்கு வெளியே தள்ளியிருந்தன. முகத்தையும், கழுத்தையும் கடித்து இழுத்திருந்தன. கண்கள் திறந்து கொண்டிருப்பது போல தோற்றமளித்தன. அந்தக் கண்கள் சுடலைமுத்துவைப் பார்க்கின்றன. ஒரு நீல நிறத் திரவம் பிணத்தின் கண்களிலிருந்து வடிகிறது.

பிச்சாண்டி, சுடலைமுத்துவின் கைகளைப் பிடித்து இழுத்து வந்தான். பிணத்தைக் குழியினுள் புதைத்து விட்டால் அத்துடன் துக்கமும் சிறிது புதையுண்டது போலத்தானே? ஆனால் தோட்டிக்கு அந்த நிம்மதிக் கூட கிடையாது. அதற்கும் ஒரு தடை. பிணம் அழுகிக் குளுகுளுத்திருப்பதை மீண்டும் அவன் பார்க்க வேண்டும்."

இப்படி இறப்பிலும், இறந்த பின்னரும் தோட்டியின் வாழ்க்கை சமூகத்துடன் கலக்கவே முடியாத பிறழ்நிலை கதை முழுதும் இருக்கின்றது. வள்ளியைத் திருமணம் செய்த உடன் சுடலைமுத்து சொன்னது, வள்ளியை எந்த தோட்டிகளோடும் பேசாமல் இரு என்றுதான். நாட்கள் செல்ல செல்ல வள்ளிக்கு இப்படி ஒரு கூண்டின் வாழ்க்கை மெல்ல வெறுக்க ஆரம்பித்தது. வெடிக்க ஆரம்பித்தாள். சுடலைமுத்து தன் நோக்கத்தை அடைய வள்ளி தடையாக, பெருந்தடையாக இருப்பதை உணர ஆரம்பித்திருந்தான்.

பெரும்பாலான நேரங்களில், இது போன்ற சச்சரவுகளில் வரும் பொதுவான கேள்வி, சுடலைமுத்துவிடம் வந்தது.

"அப்படியான, வேற ஆள பார்த்து வெச்சிருக்கியா?"

"அப்பிடி நான் சொன்னேனா?"
"அவளை இங்க கொண்டாந்து வெச்சிக்க"

வள்ளியின் தாக்குதல் கடுமையானது; ஆற்றல் நிறைந்தது. அவள் அழுதாள்; நெஞ்சில் அடித்துக் கொண்டாள். பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது அவளுக்கு...

"சுடலைமுத்து தோற்றுப்போனான். படுதோல்வி அடைந்தான். அவளின்றி அவனால் வாழ முடியாது. அவள் அவனது தவிரிக்க முடியாத தேவை என்பதை அவன் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. வள்ளி அவன், அந்த பலவீனத்தை நன்கு தெரிந்து கொண்டாள்."

இப்படி பல்வேறான சிரமங்களைத் தாண்டி சுடலைமுத்துவின் வாழ்க்கை அந்தக் கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.இப்படி நகரும் போது, வைசூரி என்ற கொள்ளை நோய் அவர்கள் குடியிருப்பு பகுதியில் பரவ ஆரம்பித்திருந்தது. ஏழைகளின் சாவுக்கணக்கு எங்கேயும் குறித்து வைத்துக்கொள்ளப்படுவதில்லை. அந்த வைசூரியின் பங்குக்கு, பல குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டனர். முழு வீச்சில் தோட்டிகள் வாழும் இடத்தை வைசூரி சிதறடித்துக் கொண்டிருந்தது. பல குடும்பங்கள் அழிந்தன. சுடலைமுத்து வேறு இடம் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

"சுந்தரத்தின் மூத்த குழந்தை, கடைசிக்கு குழந்தையை இடுப்பில் தாங்கிக் கொண்டு தெரு வழியே அலைவதை இப்போது பார்க்கலாம். மற்ற மூன்று குழந்தைகளும் பின் தொடர்கின்றன. சில தினங்களில் அந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றாக குறைந்தது. இன்னும் சில தினங்கள் ஓடி மறைந்தன. இப்போது மூத்தக்குழந்தையி���் இடுப்புச்சுமை ஒழிந்துவிட்டது. மற்றவர்களும் சின்னாபின்னமாகப் பிரிந்து போய்விட்டன. கடைத்திண்ணைகளிலும், வீதியோரங்களிலும் அழிந்து போன அந்தக் குடும்பத்தின் மிச்ச சொச்சங்களைப் பார்க்கலாம்."

சுடலைமுத்துவுக்கும் வள்ளிக்கும் பிறந்த குழந்தைக்கு "மோகன்" என்று பெயரிட்டு மகிழ்கின்றனர். தான் சுத்தம் செய்ய செல்லும் வீடுகளில், சுடலைமுத்து தன் மகனின் பெயரை கூறி சிலாகிக்கிறா���். சரி சிலாகிக்க எத்தனிக்கிறார். அவ்வளவு எளிதா என்ன? இந்த சமூகத்தின் அடியிலும் அடிமட்டத்தை தன் உறைவிடமாக கொண்டுள்ளதாக சமூகம் பார்த்த சுடலைமுத்து என்ற தோட்டியின் மகன் பெயர் மோகன்... கடைசி வரை யாரும் ஒப்புக்கொள்ளவே முடியாமல் போனது தான் இந்த சமூகத்தின் சாபம்.

"தோட்டியின் மகன் பெயர் "மோகன்" என்று கேட்டதும் வக்கீலின் மனைவி வாய் விட்டு சிரித்தாள். 'குப்' என்று வெளிப்பட்ட சிரிப்பு சுடலைமுத்துவுக்குப் பைத்தியக்கார பட்டம் சூட்டியதோடு நிற்கவில்லை. அவனை நடுங்க வைத்தது. ஸ்தம்பிக்க செய்தது. வக்கீல் மனைவியின் அந்த நையாண்டி சிரிப்பில் பரிகாசம் மட்டுமிருக்கவில்லை. அம்மாதிரிப் பெயர் வைக்கத் தோட்டிக்கு உரிமை இல்லை என்ற தொனியும் கலந்திருந்தது."

மோகன் வளர வளர எதுவுமே சுலபமாக இல்லை. சுடலைமுத்துவின் கனவிற்கான அடித்தளம் மெல்ல மெல்ல எழும்பியிருக்கவில்லை. மிக வேகமாக எல்லா திசைகளிலிருந்தும் புயல் வந்து அடித்து தூளாக்கிக் கொண்டே இருந்தது. படிக்கின்ற நமக்குக் கூட, அட ஏன்பா கொஞ்சமாவது நல்லது நடக்காத என்ற எண்ணம் மேலெழும்புவது உண்மையே. இப்படிப் பலவற்றைக் கடந்து மோகன் என்னவாக நின்றார் என்பதுவும், சுடலைமுத்துவின் கணவிற்காக 'என்னவெல்லாம்' மாறியது அல்லது சுடலைமுத்துவால் மாற்றப்பட்டது என்பதுதான் மீதமுள்ள கதைக்களம். "தோட்டியின் மகன்" என்ற இப்புத்தகம் திறந்து காண்பிக்கும் வழிகளும், வலிகளும் ஏராளம். படித்துப்பாருங்கள்...
4 reviews8 followers
November 30, 2021
മൂക്കുമുട്ടെ തിന്ന് കക്കൂസുകൾ നിറക്കുന്ന മേലാളൻമാരുടെ മലം കോ രിക്കടത്തി അവരുടെ ജീവിതം കൂടുതൽ സുഖ പ്രദമാക്കുന്ന തോട്ടിക്ക് വിശപ്പകറ്റാൻ കിട്ടുന്നത് മലം പോലെത്തന്നെ അറപ്പോടെ ഏമാൻമാരുടെ വീട്ടിൽ നിന്നും അവർ പുറന്തള്ളുന്ന പഴങ്കഞ്ഞിയും എച്ചിലുമാണ്..

തോട്ടിപ്പണി ചെയ്യുന്ന വീടുകളിൽ നിന്നും ഇങ്ങനെ കിട്ടുന്നതെല്ലാം ഒരു കലത്തിലാക്കി
മലം നിറച്ച വീപ്പക്ക് മുകളിൽ തന്നെ വെക്കുന്നു.. ജോലി പൂർത്തിയാക്കി കുടിലിലെത്തി കുടുംബത്തോടൊപ്പം ഇത് പങ്കിട്ടു കഴിക്കുന്നു... ഇങ്ങനെയായിരുന്നു തോട്ടിയുടെ ജീവിതം..

ഇത്തരത്തിൽ ജീവിതകാലം മുഴുവനും തോട്ടിപ്പണി ചെയ്ത ഇശ്ക് മുത്തു മരിച്ചത് ഒരിറ്റ് പഴങ്കഞ്ഞി വെള്ളം പോലും കുടിക്കാൻ കിട്ടാതെ പട്ടിണി കിടന്നാണ്...
പണമില്ലാത്തിനാൽ അയാളുടെ ശവം ശരിയായി മറവുചെയ്യാൻ കഴിഞ്ഞില്ല..
അതിനാൽ മൂന്നാംനാൾ അത് പട്ടികൾ മാന്തി പുറത്തിട്ടു..
എങ്കിലും തന്റെ മകൻ തോട്ടിയാക ണമെന്ന് തന്നെയായിരുന്നു ഇശ് ക്ക് മുത്തുവിന്റെ ആഗ്രഹം.. മരിക്കുന്നതിന് മുൻപ് ആകെയുള്ള സമ്പാദ്യമായ മമ്മട്ടി യും പാട്ടയും ഈശ്ക്ക് മുത്തു മകനായ ചുടലമുത്തുവിന് സമ്മാനിച്ചു... അതോടെ ചുടലമുത്തു തോട്ടിയായി...

പിതാവിനെപ്പോലെയായിരുന്നില്ല ചുടലമുത്തു.. അയാൾ തോ ട്ടിപ്പണി യെ വെറുത്തു... തന്റെ അനന്ത രതലമുറകൾ ഒരിക്കലും തോട്ടികളാവരുതെന്നു അയാൾക്ക്‌ നിർബന്ധമുണ്ടായിരുന്നു...
അതിനായി തോ ട്ടി ക്കോളനിയിലെ എല്ലാവരിൽ നിന്നും അയാൾ അകന്നുനിന്നു..
ജോലിക്ക് പോകുന്ന വീടുകളിലെ മേലാളന്മാരുടെ രീതികൾ കണ്ടു പഠി ക്കുകയും അത് ജീവിതത്തിൽ പകർത്തുകയും ചെയ്തു..അതുകൊണ്ടായിരിക്കാം അയാളുടെ മനസ്സിലെ കരുണ വറ്റിപ്പോയിരുന്നു.

ഒരു കുഞ്ഞു ജനിച്ചപ്പോൾ ചുടലമുത്തു അവനെ തോ ട്ടികൾക്കില്ലാത്ത 'മോഹനൻ ' എന്ന പേരിട്ടു വിളിച്ചു.. തോ ട്ടിപ്പണി ചെയ്യുന്ന കൈകൾ കൊണ്ട് കുഞ്ഞിനെ എടുക്കുകയോ ലാളി ക്കുകയോ ചെയ്തില്ല..
കുഞ്ഞ് തന്നെ അച്ഛനെന്നു വിളിക്കുന്നത്‌ വിലക്കി.. തന്റെ മകൻ തോ ട്ടിയാകരുതെന്നു
മാത്രമല്ല തോട്ടിയുടെ മകനായി വളരരുതെ ന്നും അയാൾ ഉറച്ചു..
തോ ട്ടിക്കുഞ്ഞുങ്ങളിൽ നിന്നും അവനെ അകറ്റുകയും മേലാളൻ മാരുടെ കുഞ്ഞുങ്ങളെപ്പോലെ സ്കൂളിൽ ചേർത്ത് പഠിപ്പിക്കുകയും ചെയ്തു..

എങ്കിലും അനിവാര്യമായതു സംഭവിച്ചു..
തോ ട്ടിക്കോളനിയിൽ കോളറപടർന്നപ്പോൾ
പലരുടേ യും കൂട്ടത്തിൽ ചുടലമുത്തുവും ഭാര്യയും മരിച്ചു.. അനാഥനായ മോഹനൻ തെരുവിലേ ക്കിറങ്ങി.. അവന് കൂട്ടുകാരായി കിട്ടിയത് അവനെപ്പോലെതന്നെ അനാഥരായ തോ ട്ടിക്കുട്ടി കളെയായിരുന്നു..
അവരെപ്പോലെ മോഹനനും ഒരു തോട്ടിയായി.. തോട്ടിയുടെ മകൻ മറ്റെന്താവാനാണ്...

മനുഷ്യനോ മൃഗമോ അല്ലാതെ എല്ലാവരാലും വെറുക്കപ്പെട്ട് കഴിഞ്ഞിരുന്ന ഒരു വിഭാഗത്തിന്റെ ജീവിതം ഇരുളിൽ നിന്നും വെളിച്ച ത്തിലേക്ക് പകർത്തിവെച്ചു എന്നതാണ് ഈ കൃതിയുടെ പ്രത്യേകത..
Profile Image for Renya Ragavi.
37 reviews4 followers
March 26, 2023
தோட்டியின் மகன்

தோட்டி என்றால் மலம் அள்ளும் ( துப்புரவு) தொழிலாளர் என்று பொருள்.

1947 ல் இயற்றிய இந்த நாவல் தோட்டிகளின் வாழ்வு பற்றியது.

தலைமுறை தலைமுறையாக தோட்டி வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்து ஒரு மகன் எதிர்பாராத தனது அப்பாவின் மரணத்தால் தோட்டி வேலைக்கு தள்ளப்படுகிறான். இத்தனை நாளும் சமூகத்தில் ஒரு தோட்டிக்கு இருக்கும் இடத்தை அறியாத அவன் ஒரு தோட்டி ஆனப்பின் ஒரு தோட்டி எப்படியெல்லாம் நடத்தப்படுகிறான் சமூகம் அவனை எப்படியெல்லாம் நடத்துகிறது என்பதை சுடலைமுத்து என்னும் தோட்டியின் வாழ்வு வழியே நூலாசிரியர் நமக்கு காண்பிக்கிறார்.

அதுமட்டுமின்றி படிப்பறிவில்லாமல் போனாலும் தனது பகுத்தறிவினாலும் மனிதாபிமானத்தினாலும் தனக்கு உண்டாகும் பல கேள்விகளையும் , ஆசைகளையும் , நியாயத்தையும் சுடலைமுத்து பல இடங்கிளில் முதலாலி வர்க்கத்துக்கு எதிராகவும் மக்களை என்றும் அடிமையாய் தங்களுக்கு கீழ் பணிவிடை செய்ய கட்டுப்பாடுடன் வைத்திருக்கும் கூட்டத்திற்க்கு எதிராகவும் பல சூழ்நிலையின் மூலம் பல குற்றச்சாட்டுகளை தனது எண்ணங்கள் மூலம் முன்வைக்கிறான்.

ஒரு தோட்டியின் வாழ்வு அவ்வளவு எளிதல்ல என்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.என் தனிப்பட வாழ்க்கையிலே பல துப்புரவு தொழிலாளர்கள் என் கண்முன்னே அழுதும் புலம்பியும் பார்த்து இருக்கிறேன். "இப்படி அசிங்கபடுத்தி வைக்கிறிங்களே இதெல்லாம் நாங்கதன சுத்தப்படுத்தனும் நாங்க மனிசங்கில்லையா எனக்கு நாராதா எனக்கு அருவெருப்பு இருக்காதா..என்னாலா இதையெல்லாம் அள்ளிப்போட்டு நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியல . என் சாபாடும் நாறுர வாட வருது" என்று மார்பில் அடித்துக்கொண்டு புலம்பிக்கொள்ளும் பல பேரை நான் பார்த்து எதுவும் செய்யமுடியாமல் நின்றிருக்கிறேன்.

இங்கேயும் அதே கதைதான் ஒரு தோட்டியாக தினம் தினம் தான் அனுபவிக்கும் அசிங்கத்தையும் அவமானத்தையும் தனது மகனும் அனுபவிக்கக்கூடாது என்று என்னும் ஒரு தந்தைதான் சுடலைமுத்து.

எப்படியாவது தன்னோடு இந்த தோட்டி தொழிலுக்கு முடிவு கட்டவேண்டும் என என்னி தனது வாழ்க்கை திட்டங்களை தனது குழந்தையின் மூலம் நிறைவேற துடிக்கிறான்.

ஒரு தோட்டியின் குழந்தையாக தனது மகனை வளர்க்காமல் பெரிய வீட்டு பிள்ளை போல் அவனை சுத்தமாக தாயும் தந்தையும் வைக்கிறார்கள்..தோட்டிகள் யாரும் தங்களின் பிள்ளைகளுக்கு வைக்காத ஒரு பெயரை தனது மகனுக்கு அந்த தகப்பன் வைக்கிறான் . அதுமட்டுமின்றி தோட்டி மகனுக்கு இப்படி ஒரு பெயரா ? இவனப்பாத்தா தோட்டி புள்ள மாதிரி தெர���யல பெரியவீட்டு புள்ள மாதிரி இருக்கான் என்று ஊரார் பேச்சுக்கு ஆளாகியும். ஒரு தோட்டியின் மகனை பள்ளியில் சேர்க்க அவர் படும் பாட்டையும் , தான் தோட்டி என்று தனது மகனுக்கு தெரியாமல் வளர்க்கும் அந்த தந்தை அவனைத் தூக்கி கொஞ்சாமல் முத்தமிடாமல் தான் அனுபவிக்கும் வேதனைகளையும் இதில் நாம் காணலாம்.

பள்ளியில் சேர்ந்த தனது மகனின் அருகில் அமர பிடிக்காமல் மற்ற மாணவர்கள் மூக்கை பொத்திக்கு கொண்டு ஓடுவார்கள் காரணம் அவன் ஒரு தோட்டியின் மகன் . இதை அறியாத அந்த பிள்ளை தனது அம்மாவிடம் "மா நான் தினமும் நல்ல சட்ட போட்டாலும் ஏன்மா எல்லரும் என்ன பாத்ததும் மூக்கை பொத்திட்டு போறாங்க" என்று கேட்கும் குழந்தைக்கு தெரியவா போகிறது இது தன் வாழ்வில் என்றும் மாறாமல் பின்தொடரப்போகும் துர்நாற்றமென்று..

இப்படி பாடுபட்டு பள்ளியில் சேர்ந்த அந்த தோட்டியின் மகன் என்ன ஆனான்?அவனோடு அந்த தோட்டி தொழில் முடிவு பெற்றதா இல்லையா என்பதுதான் தோட்டியின் மகன் என்னும் இந்த நாவல்.

இதற்க்கு முன் பாஷாசிங் எழுதிய " தவிர்க்கப்பட்டவர்கள் " என்னும் நூலை படித்திருக்கிறேன் .அதில் இதுபோல இந்தியா முழுக்க இருக்கும் மலம் அள்ளும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் இன்னல்கள் அரசாங்கமும் இந்த சமூகமூம் அவர்களுக்கு செய்தவை , சுகாதரமற்ற முறையில் இத்தொழிலை செய்வதனால் அவர்கள் எப்படியெல்லாம் நோய்வாய் பட்டு இறக்கிறார்கள் என்று மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருப்பார். அதுபோலவே மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றி திவ்யபாரதி "கக்கூஸ்" என்னும் ஒரு ஆவனப்படத்தை இயக்கி இருப்பார்..நம் வாழ்வில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத இந்த மிக முக்கியமான மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கும் நடக்கும் அந்நியாயங்களையும் தெரிந்துக்கொள்ள நிச்சயம் நான் மேற்கூறிய இரண்டையும் படிக்க/காண வேண்டும்..

மிகவும் திடமான மனம் கொண்டவர்களே அந்த ஆவணப்படத்தை பார்க்க இயலும் .

தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி

#renyaragavi
Profile Image for Aquib Jamal.
7 reviews34 followers
June 7, 2015
1930 കളിലെ കീഴാളജീവിതം രേഖപ്പെടുത്തുകയാണ് കഥാകാരൻ ചെയ്യുന്നത്. അവരുടെ ജീവിതത്തിന്റെ അനിശ്ചിതത്വവും കീഴാളരോട് സമൂഹം വച്ച് പുലർത്തിയിരുന്ന മനോഭാവവും ഓരോ ദുരന്തങ്ങളും അവരെ എപ്രകാരം ഉന്മൂലനം ചെയ്തുവെന്നും എങ്ങനെ പുതിയവർ അവരെ പുനർപ്രതിനിധാനം ചെയ്തു എന്നും വ്യക്തമായി ഈ കൃതിയിൽ നിന്ന് മനസിലാക്കാൻ സാധിക്കും. എപ്രകാരം അവർ ചാപ്പ കുത്തി തഴയപ്പെട്ടു എന്നും സമൂഹത്തിന്റെ മുഖ്യദാരയിൽ നിന്നും ഒഴിച്ച് നിർത്തപ്പെട്ടു എന്നും കൃതി നമ്മോട് പറയുന്നു.ഇടതുപക്ഷ മുന്നെറ്റങ്ങൾ ഇവരുടെ ജീവിത രാതിയിൽ വരുത്തിയ സ്വാധീനവും അതുവഴിയുണ്ടായ പുരോഗതിയും പുസ്തകത്തിന്റെ അവസാന ഭാഗം പ്രതിപാദിക്കുന്നു. അതോടൊപ്പം അവയ്ക്ക് കഥാകാരൻ ആശംസയും അർപ്പിക്കുന്നു.
217 reviews77 followers
January 22, 2018
Another necessary book, an insight into the scavenger community, and the feelings of being forever tainted and smelling permanently of the refuse they clear.

Some have accused the writer of narrating the story from a place of privilege, but I found it eye-opening that we once treated (and continue to treat) fellow human beings with such contempt and disregard for their dignity. As one reads more on the subject by writers from within the community, I suppose we will correct this book's biases in our minds.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews26 followers
September 21, 2020
சுந்தர ராமசாமி அவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் தகழி சிவசங்கரன் அவர்களின் எழுத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட சிறந்த புதினம்.
அனைவரும் வாசிக்க வேண்டிய புதினம்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
February 27, 2023
இசக்கி உடல்நலன் சரியில்லாததால் தன் மகன் சுடலைமுத்துக்கு தன் தோட்டி(துப்புரவு) வேலையை வழங்க ஏப்பாடுசெய்துவிட்டு உயிரிழக்கிறார். பல அனுபவப் பாடங்களை தோட்டி வேலை சுடலைக்கு கற்று தருகிறது. தனக்கு பின் வரும் தனது சந்ததி இனி தோட்டி வேலை செய்யக் கூடாது என முடிவெடுக்கிறான் அதை நிறைவேற்ற பணத்தை சேமிக்கப் பழகிறான், கள் குடிப்பதில்லை, அதிகாரிகளின் கையாளாகிறான், தன்னுடன் வேலை செய்யபவர்களுக்கு துரோகமிழைக்கிறான், வள்ளியை மணமுடிக்கிறான், குழந்தைக்கு மோகன் என்ற உயர் சாதி பெயர் வைக்கிறான், தன் மகன் மோகனை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறான், மகன் மோகன் நான் தோட்டி வேலை செய்கிறேன் என்பதை அறிய வேண்டாம் என நினைக்கிறான் இறுதியாக அந்த வேலைக்கு முழுக்கு போட்டுவுட்டு மயான காவலாளியாக வேலை செய்கிறான் அங்கே தொழுநோய் பிடித்து மண்ணோடு மண்ணாகிறான். வள்ளியும் தொழுநோய் பிடித்து மரணிக்க மகன் மோகன் அனாதையாகிறான் இறுதியில் அவனும் தோட்டி வேலைக்கு செல்கிறான்.
கீழ் சாதிகள் அதிகாரத்தின் அடிமைகள் அவர்கள் அறிவை வளர்த்துக்கொண்டு முன்னேறி அதிகாரத்தில் அமரும்வரை அடிமைத்தனம் ஒழியாது என்பதே தோட்டி நாவலின் மையக்கரு -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Karthick.
369 reviews120 followers
February 1, 2021
Thottiyin magan (Scavenger's son) is story of three generation of Oppressed community - cleaners of night soil.

isakimuthu without idendity, suppressed.
Sudalaimuthu, son of Isakimuthi died with his dream unfulfilled.
Mohan, Son of Isakimuthu fought to assert his dignity and justice.

This novel - a portrayal of Untouchable's life, poisonous effect of caste system.
Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
November 24, 2023
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை

இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறா, இப்பல்லாம் எங்கெங்க தீண்டாமை இருக்கு, இட ஒதுக்கிடலாம் பொருளாதார அடிப்படையில் கொடுக்கணும், ஜாதில என்னங்க மேல் ஜாதி, கீழ் ஜாதி - ஜாதி என்றது ஒரு அடையாளம் அத பெயருக்கு பின்னால போட்கிறதுல என்னங்க பிரச்சனை இருக்கு இப்படியான எல்லா கேள்விகளுக்கும் தோட்டியின் மகன் பதில் கொடுக்கும்னு தான் நினைக்கிறேன்.

முதலில் யார் இந்த தோட்டி, மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு இந்த சமூகம் சூட்டிய பெயர் தான் தோட்டி.

தோட்டியான இசக்கிமுத்துவின் உடல்நல குறைவுக்கு பிறகு வாளியும்,மண்வெட்டியுடனும் சுடலைமுத்துவும் விருப்பமே இல்லாமல் தோட்டியாக்கபடுகிறான். அப்போது சுடலைமுத்து எடுத்த ஒரே முடிவு தன் மகன் ஒரு போதும் தோட்டியாக கூடாது என்பது தான். அதற்கான பெரும் முயற்சிகளும், சில சூழ்ச்சிகளும் கூட செய்கிறான் சுடலைமுத்து.

தோட்டியின் மகன் தோட்டியாக மாறமல் இருப்பது என்ன அவ்வளவு எளிதா? இல்லை அதை தான் இந்த சமூகமும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளுமா? இங்கு தோட்டிகளுக்கென்றே தனியாக, எழுதப்படாத எவ்வளவு விதிமுறைகள்.

▪️பிணத்தை குழிக்குள் புதைத்து விட்டால் துக்கமும் கொஞ்சம் புதையுண்டது போலத்தான், ஆனால் தோட்டிக்கு அந்த நிம்மதிகூட கிடையாது.

▪️கழிவறையில் முடை நாற்றம் வரும் போது மட்டுமே தோட்டியின் இருப்பு இச்சமுகத்திற்கு தேவை.

▪️மலக்குழிக்குள் இறங்கி வேலை செய்தாலும் தோட்டியின் உடம்பில் பன்னீர் வாசனை வர வேண்டும் இல்லையேல் மூக்கை பொத்திக் கொண்டு வசைபாட ஆரம்பித்துவிடும்.

▪️தோட்டி தீண்டத்தகாதவன், ஆனால் அவனது பணத்தை மட்டும் பல்லிலித்து சுரண்டிக் கொள்ளும்.

▪️தோட்டியின் மகனுக்கு செல்ல பெயர் வைக்க கூட சமுகத்தின் பார்வையில் அனுமதி இல்லை. அதை மீறி ஆசையாய் வைத்தாலும் ஏளனம் செய்து நகைத்து காட்டும் மேல்தட்டு வர்க்கம்.

▪️தோட்டியின் மகன் சக மாணவர்களோடு கல்வி கற்க அனுமதி இல்லை, என்னதான் பாராட்டி, சீராட்டி புது உடை உடுத்தி பள்ளிக்கு அனுப்பினாலும் தோட்டியின் மகனும் நாறுவான், தோட்டியின் மகனுக்கு இயல்பிலேயே படிப்பும் ஏறாது - காரணம் அவன் அப்பன் ஒரு தோட்டி.

▪️இதெல்லாம் தாண்டி காலரா, வைசூரி போன்ற தொற்று நோய்களின் தீவிரம் வேறு.

இப்படி எப்படியாவது வளர்ந்து விட நினைக்கிற, அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை ஆவது மாற்றி விட வேண்டும் என ஏதேதோ வழிகளில் போராடுற ஒரு சமுகத்தை தீண்டாமையாலும், கேலிகளாலும், உழைப்பு மற்றும் ஊதிய சுரண்டல்களாலும், எழுந்து நிக்கிற ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாகவே - தோட்டியின் மகனும் தோட்டி தான் என்பதை முகத்தில் அறைந்தார் போல் அறைந்து காட்டி உணர்த்துகிறது - இந்த பாழாப்போன சமுகம். இதையெல்லாம் மீறி கடைசியில் தோட்டியின் மகனுக்கு என்ன தான் ஆனது??

தோட்டிகள், தோட்டியாக இருப்பதற்கு ஏதேதோ சொற்ப காரணங்களை சொல்லி சமாளிக்கிற இந்த சமுகம், தொழில்நுட்பங்கள் வளர்ந்த விட்ட இந்த வேலையிலும் மலம் அள்ளும் உபகரணங்கள் உபயோகத்தில் இருக்கிற இந்த வேலையிலும் கூட தோட்டிகளும், தோட்டியின் மகன்களும் தோட்டியாக மட்டுமே இருப்பதற்கு - சாதி மலம் மூளையில் ஏறிப்போன வெறிபிடித்த மனிதர்களை விட வேறென்ன பெரிய காரணம் இருக்க முடியும்.
Profile Image for Firosh Raja.
11 reviews
July 11, 2018
a story of a professional society in the background of a city. no one cares somebody simply vanished from the society. the story of the mindset of people. the story of the prevailing feudalism in the mind of people. the story of ambition and determination.story of destiny...
Profile Image for Krishna.
60 reviews8 followers
March 16, 2016
தோட்டியின் மகன்..நிச்சயம் தமிழில் ஆகச் சிறந்த மொழி பெயர்ப்புகளில் ஒன்று. ஆலப்புலையின் தோட்டிகளின் சூழலியலையும், வாழ்வியலையும், சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் மன இடர்களையும்,சமூகம் அவர்களுக்கு தர மறுக்கும் உரிமைகளையும் தீர எடுத்துரைக்கும் நாவல். இது ஆலப்புலை தோட்டிகளின் பிரச்சனையாக மட்டுமே இருந்திருக்க முடியாது. இருப்பின், தொடராக வெளிவந்து 50 ஆண்டுகளுக்குப் பின் நாவலுரு பெற்ற போதும் அதன் வீரியத்தை எங்கோ அமர்ந்து ஏதோ காலத்தில் வாசிக்கும் என்னுள்ளும் கிளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? சமூக அவலங்களை கவனிக்கும் ஆசிரியர் தனி மனித உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் விட்டு வைக்கவில்லை. ஆசை,பேராசை,பழி உணர்ச்சி,அர்ப்பணிப்பு,காதல்,ஊடல்,வஞ்சம்,செய்நன்றி மறத்தல்,மரணிக்கும் தருவாயில் தீரக்க தரிசனம் ஆகிய அனைத்தையும் நாவலில் பதிவு செய்திருக்கிறார்..
Profile Image for Anejana.C.
88 reviews
January 28, 2016
Felt the tale was etched from surface. Than bringing in a real imprint the tale I felt wavered through a passive tone, trying to sound genuine.
Profile Image for Harish.
170 reviews11 followers
November 6, 2017
Shocking...a slap on our conscience.
Displaying 1 - 30 of 90 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.