வழக்கு விசாரணையின்போது கருணாநிதியின் பொதுக்கூட்டப் பேச்சு அட்சரம் பிசகாமல் பதிவுசெய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தனது பேச்சின் அச்சுப் பிரதியை வாங்கிப் படித்துப் பார்த்து வியப்படைந்த கருணாநிதியிடம், “இது நீங்கள் பேசியதுதானே?” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்க, “மனசாட்சிப்படி உண்மைதான். அது நான் பேசிய பேச்சுதான்” என்று பதிலளித்தார். பிறகு தனது பேச்சைக் குறிப்பெடுத்தது யார் என்று தெரிந்துகொண்ட கருணாநிதி, அந்த அலுவலரின் பெயரை மனதுக்குள் குறித்துக்கொண்டார்.பிறகு 1967 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும், பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்ற கையோடு, தனக்கான உதவியாளராக அந்த ரகசியக் குறிப்பு அலுவலரைத் தேடிப்பிடித்துச் சேர