Book 11 of 2024- பந்தயப்புறா
Author- பாலகுமாரன்
“மனிதன் கண்டு பிடித்த ஆயுதங்களில் மிகக் கொடூரமான ஆயுதம் வார்த்தைதான்.”
மாதம் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை தொடங்கி போன மாதம் நான் படித்த புத்தகம் தான் இது.
செல்வியை பற்றிய கதை இது. அவளுக்கு மூன்று அண்ணன்கள்,சிறு வயதிலே தாய் தந்தை இறந்ததால் அண்ணன்கள் தான் எல்லாம். பெரிய அண்ணன்,அண்ணியோடு தான் செல்வி வளர்கிறாள். அண்ணிக்கு திடீரென உடலில் ஒரு பிரச்னை, குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் அறிவிக்க, அண்ணியின் தவிப்பு செல்வியின் மீது கோவமாய் மாறுகிறது. இது ஒரு புறம்! அவர்களின் எதிர் வீட்டில் அந்த கணவன் மனைவியை அநாகரிகமாய் நடத்தும் விதம்..இப்படியான சூழலில் தான் செல்விக்கு திருமணம் வேண்டாம்,படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவள் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதை.
இதில் எந்த கதாபாத்திரத்தையும் இவர் தான் நல்லவர்,இவர் தான் கெட்டவர் என சொல்லவே முடியாது. சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கிறது.”அகல்யா” புத்தகம் படித்தப்பின் எல்லாருக்குள்ளும் இருக்கும் கேள்வி தான் இந்த புத்தகத்தின் தொடக்கம். “சிவசு” போன்ற ஆண்கள் நிஜத்தில் உண்டா என யோசித்து, தான் சந்திக்கும் எல்லா ஆண்களிலும் சிவசுவைத் தான் தேடுகிறாள். இந்த குடும்பத்தில்,பெண் ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? ஏன் வண்டி ஓட்டக்கூடாது எனத் தொடங்கி அத்தனை தடைகளையும் தாண்டி, அவள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி பல பெண்களுக்கும் ஊக்கமளிக்கும். கதை விறுவிறுப்பாக நகர்கிறது.இந்த புத்தகம் எழுதப்பட்ட நாளில் இது way ahead of time என்பதில் சந்தேகமில்லை. சாதி,மதம்,இனம்,பால்,சமுதாய வேறுபாடு என எல்லாவற்றையும் ஒரு கதையில் உள்ளடக்கியிருக்கிறார் பாலகுமாரன்.
இதை படிக்கும் எல்லாருக்குமே சிறகு விரித்து கனவுகளை நோக்கி பறக்க ஆசை எழும்!