கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் பொழுது தன் பிறப்பின் ரகசியம் தெரிகிறது. ஆனாலும் துரியோதனன் பக்கம் நின்று தன் சகோதர்ர்களான பாண்டவருக்கு எதிராக போர் புரிகிறான். கிருஷ்ணரின் சூழ்ச்சியால் போரில் இறக்கிறான். ஆனால் கர்ணனின் கதை என்ன? கேளுங்கள் இந்த ஒலிப்புத்தகத்தை.
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
Balakumaran's Karnanin Kadhai is one of the many takes on POV for Mahabharatha. However, what sets this apart is it ascertains a cosmic significance for the entire war to rid the world of Kshatriyas. This was a new take.
I liked the way the book took Surya's view point to decide to fight on the other side of Krishna (not against) and the known stories of loyalty. It also gave a peek into how he turned the Anga kingdom into a prosperous place by his karma.
The disadvantage of the foregone conclusion is evident in some of the episodes. Like when Duryodan asks Karna for his advice, the son of Surya is adviced to allow the war to happen - which glorifies Karna. Also weird was the portrayal of Duryodan himself whom Karnan seems to admire in the beginning and later feels constrained around him.
This is a one man show - beautifully written nonetheless.
இந்திய துணைக்கண்டத்தில், புராணங்களில் இது போன்றதொரு நட்பு வேறெங்கும் விவரிக்கப்பட்டதில்லை. கர்ணன் துரியனின் நட்பு செஞ்சோற்று கடனால் ஏற்பட்டதன்று. இந்த நட்பு அதிகம் போற்றப்படாமல் போய் விட்டது. இருவரும் அதிர்ஷ்டமில்லாதவர்கள். கர்ணனின் ஆற்றலும், துரியனின் அன்பான குணமும் கடைசிவரை பாராட்டு பெறாமல் போய்விட்டன. துரியோதனனும் கர்ணனும் தத்தமது நட்பையே தர்மமாய் கொண்டவர்கள். கர்ணனில்லா துரியனை கற்பனை செய்து பார்ப்பதும் கொடூரமாய் உள்ளது !
தான் தானம் செய்ய முதல் விதையென துரியனையே கைக்காட்டுகிறான் கர்ணன். அன்று பெரும் அரங்கில் அதிரதன் தன்னை பெருமையோடு "கர்ணா" என்று ஆரத்தழுவிய நேரத்தில் "இவன் தேரோட்டியின் மகனா" என்று ஏற்பட்ட சலனத்திற்கு இடையே கர்ணனை ஆதரித்தவன் துரியனாவான். கர்ணனுக்கு அங்க தேசத்தை தானமளித்து பெரும் அரசியல் சிக்கலுள் சிக்கினான். அணிகள் உருவாயின. நிர்ணயிக்கப்பட்டது குருஷேத்திரத்திர்க்கான களம். பானுமதியோடு கர்ணன் சொக்கட்டான் ஆடுகையில், துரியனை கண்ட பானுமதி மரியாதை செலுத்த எழுந்து திரும்ப, தோல்வியை மறைக்க அவள் செல்வதாய் எண்ணி பானுமதியின் மார்பை மறைத்திருந்த முத்துச்சரத்தை கர்ணன் வெடுக்கென பிடித்திழுக்க, அது அறுந்து முத்துக்கள் சிதற, எதேச்சையாய் உள்நுழைந்தும் "எடுக்கவா கோர்க்கவா ?" என்று இருவர் மேலும் நம்பிக்கையை வெளிப்படுத்தியவன் துரியன். மரணம் தன்னை நெருங்கும் என்னும் நிலையிலும் ஒருவர் மற்றவரை விடவில்லை. நூறு சகோதரர்களும் மடிவர் என்று தெரிந்தும் கர்ணனின் சொல் கேட்டு போரில் இறங்கினான் துரியன். பாண்டவர்கள் சகோதரர்கள் என்றறிந்தும், தான் மடிய போவது சாஸ்வதம் என்று அறிந்தும் சேனையை வழி நடத்தினான் கர்ணன்.
கர்ணனின் கணைகள் துரியனுக்காகவே அம்பிலிருந்து புறப்பட்டன. துரியனின் சேனையில் அவனுக்காக போரிட்ட ஒரே வீரன் என்று கர்ணனை மட்டுமே காட்ட முடியும். பூமி தாயோடு சூரியன் கொண்ட நட்பே உயிர்களுக்கு பிரதானம். கர்ணனும் நட்பில் சோரம் போகவில்லை. "செஞ்சோற்று கடன்" என்ற சொற்தொடர்கள் கர்ணனையே வாழ்வுள்ளவரை நினைவுக்கூற வைக்கும் ! _/\_
Though most of the things in the book are know things, but the presentation is good. The philosophy that rides around the book and portraying the importance of Karna in Mahabharata war is the take away of the book.
Balakumaran sir had his touch in the book while describing the internal feelings of Karna while he finds our the real reason for his birth. The fact on why Kauravas was hated and things around Pandavas being celebrated + it is only if both sides are equal in some means there is possibility of such big an event is well explained in the book.
It is not the number of people who increase the weightage on earth, but the number of unethical , arrogant people out numbering and making others vulnerable or powerless that increases weight on earth, and only in such instance equilibrium tries to get back through different means is well explained. This could well be connected with current occurring and situation.
Go for the book, you will like it if you are fan of balakumaran sir. For others u will have a different presentation of situation of Mahabharata war.
#373 Book 44 of 2025- கர்ணனின் கதை Author- பாலகுமாரன்
“கர்ணன்” திரைப்படத்தால் இந்த கதாபாத்திரத்தின் மீது ஒரு காதல் வந்தது. “கர்ணன்” என்றால் இன்று வரை நினைவில் வருவதும்,”சிவாஜி கனேசன்” தான். அதற்கு பிறகு வாசித்த மகாபாரத புத்தகம் எல்லாவற்றிலும் நான் கண்டது சிவாஜியை தான்! இப்படி ரசித்த கதாபாத்திரத்தை நான் ரசிக்கும் எழுத்தாளர் “பாலகுமாரனின்” எழுத்தின் மூலம் வாசிப்பது அத்தனை சுகம்!
இந்த புத்தகம் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை, அவர் பார்வையிலிருந்து சொல்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர் சந்தித்த ஒவ்வொரு அனுபவத்தையும், கண்ணீரும் பெருமையும் கலந்து விவரிக்கிறார் பாலகுமாரன். கர்ணன் யாருக்கும் உரியவன் அல்லாமல், எப்போதும் தனிமையில் இருந்தான்,ஆனால்..அன்பும் நட்பும் நம்பிக்கையும் விட்டுவிடாதவன் என்பதைக் கதையின் வழியே மிக ஆழமாக உணர முடிகிறது.
பாலகுமாரனின் எழுத்தில் கர்ணன் இன்னும் மேன்மை அடைகிறார் என்றே சொல்லலாம். கர்ணனின் உள்ளுணர்வுகளை அவர் சாதாரண மனிதனாக நாமே உணரக்கூடிய அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் போதே “இந்த பாத்திரம் எவ்வளவு அநியாயத்தைச் சந்தித்தான்!” என்று மனம் வலிக்கிறது. அதே சமயம், அவரது பெருமை, தாராளம், தியாகம் அனைத்தும் நம்மை வியக்க வைக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்தது, கர்ணன் எப்போதும் தனது அடையாளத்தைத் தேடிக்கொண்டிருந்தான் என்ற கோணத்தில் எழுதப்பட்டிருப்பது. இதுவரை வாசிக்காத ஒரு கோணம்.தன் பிறப்பின் ரகசியம் அவனைத் துரத்தினாலும், கௌரவர்களுக்கு வைத்திருந்த நட்பு அவனை உயிரை கொடுக்க வைத்தது. இது நமக்கு தெரிந்த கதை என்றாலும் இது சொல்லப்பட்டிருக்கும் விதம் புதிது.
மொத்தத்தில், “கர்ணனின் கதை” கர்ணனை இன்னும் ஆழமாக உணர வைக்கிறது. பாலகுமாரனின் பாணியில் அது ஒரு காவியத்தை நம் மனதுக்குள் நெருக்கமாக கொண்டு வருகிறது. மகாபாரதம் படித்தவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம். கர்ணனைப் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு அருமையான அனுபவம்.
நல்வாழ்வுக்கு தேவையான பண்புகள் கர்ணன் எனும் பாத்திரத்தில் மிகுந்து கிடப்பதை எண்ணி மெய் சிலிர்க்கிறது. நன்றி மறவாதிருத்தலை தன் உயிரினும் மேலாய் நினைத்த கர்ணன் தானம் கேட்பது இந்திரர் தானென்று அறிந்தும் கவசத்தையும் குண்டலங்களையும் சற்றும் ச்சிந்தியாது இரத்தம் சிந்த அறுத்துக் கொடையளித்த கர்ணன் துரியோதனன் செய்பவை அல்லாது துரியனின் நட்பையே தன் தர்மமாய் எண்ணிய கர்ணன் குந்தி பாண்டவர் பக்கம் வரும்படி அழைத்தும் துரியனை விட்டுத்தராத கர்ணன் ஒரு மகத்தான பாத்திரமாவான். பூபாரம் நீங்க சமத்துவம் ஓங்க பாரதப் போர் நடக்கிறதெனும் விளக்கம் அருமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் படித்தாலும் மகாபாரதம் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தை வாழ்வின் மேல் ஒரு புதிய பார்வையை மனதில் விதைக்க வல்லது என்று நிரூபிக்கிறது இந்தப் புத்தகம்.
நான் சிறு வயதில் இருந்து வாசித்து இரசித்த கதைகளில் ஒன்று மஹாபாரதம். எத்தனையோ பதிப்பகங்களினால் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பரிமாணங்களில் இக்கதையை வாசித்தும் ஒவ்வொரு முறையும் முதல் முறையாய் உணர வைக்கும் ஓர் சிறந்த படைப்பு. அதில் ஒரு பாத்திரமான கர்ணணை மையப்படுத்தி பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட நாவல் இது. கர்ணன்; பாரதக்கதையில் கிருஷ்ணரை அடுத்து நான் விரும்பும் கதாபாத்திரம். சாதாரண மகாபாரதத்தின் ஓட்டத்தை தாண்டி இவனது கதையை கூறுகையில் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. கதை நகர்வு தொய்வில்லாமல் இருப்பினும் கதாபாத்திரங்களின் வலுவிழந்ந தன்மை கதையின் சுவாரசியத்தை குறைப்பது போன்றதொரு உணர்வு. உள்ளதை உள்ளபடி சொல்லுவதோடு இடைச்செருகலாய் எழுத்தாளரின் பாத்திரங்கள் மீதான எண்ணப்பாடு ஆங்காங்கே வெளிப்படுத்தவில்லை என்பது வாசகியாய் என்னுடைய ஆதங்கம். கர்ணனின் கதை; அறிந்த கதை புதிய எழுத்து. ⭐️⭐️⭐️
For me, Karnan is the most interesting character after Shikandi of course.
I love the way Balakumaran written Karnan. Karnan is one of the conflicted character because of his birth, upbringing, education, most importantly caste. Balakumaran used the cast dynamic so well.
There is no reason for pity in suffering but when comes to cast hierarchy. It's completely unfair game.
P.S. Justice is not same for everyone but it is try to be equal to everyone. It's a very fresh perspective to Karnan from the words of Balakumaran.
மகாபாரதம் நாம் அனைவரும் அறிந்த ஒரு மாபெரும் இதிகாசம். ஆனால் கர்ணனைப் பற்றி புராணங்களில் விரிவாக பேசப்பட்டதாக உணர முடியாது. பாலகுமாரன் அவர்களின் எழுத்தில், கர்ணனின் பார்வை (perspective) நமக்கு ஆழமாக வெளிப்படுகிறது.
பூமாதேவி சூரியனிடம், “என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்” என்று கேட்கிறாள்.
சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்த மகன்தான் கர்ணன். குந்தி தேவி, ஒரு ரிஷி கூறிய மந்திரத்தை “இது வேலை செய்யுமா?” என்று சோதிக்க நினைத்ததின் விளைவாகவே அந்தக் குழந்தை பிறக்கிறது.
இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், கர்ணனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ஒரு மனிதன் எவ்வாறு உணர்வான் என்பதை கர்ணனின் பார்வையிலிருந்து நமக்கு அழகாக புரியவைக்கிறார் பாலகுமாரன்.
என் அம்மாவின் மிகவும் பிடித்த எழுத்தாளர் இவர். என் சிறுவயதில், அவர் எழுதிய புத்தகங்களை அம்மா வாசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக உடையார் நூலை அவர் வாசித்த காட்சிகள் இன்னும் நினைவில் உள்ளது.
இப்போது அவர் எனக்கும் மிகவும் விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவராகி விட்டார். அவருடைய எழுத்துகளை மேலும் மேலும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
I have read many a times about Karna from various books and authors and was curious to know what Balakumaran sir had to say of My superhero. In a way it was a disappointing that the book was exact text of the Tamil movie on Karnan the scenes even dialogues to large extent. There is nothing new for folks who have watched the movie.
It is really awesome to read the history of great warriors. That too about "Kodai Vallal" the great Karnan. First time read about Karnan and hus greatness.
An Excellent Story about the Great character Karnan of Mahabharata. The author throws more light on the positive aspects of the character Karnan. He explains certain thing in the way that nobody would have evert thought of. Even though one would have read about Mahabharata war many a times, reading about from the angle of one great character such as Kartnann, throws enormous light on our little knowledge. This story is written in a wonderful manne with due authenticity towards certain philosophies. Very enjoyable !
Different perspective of Karnan and his handling of emotions. Absolutely mesmerizing and a good read. It reveals that we are not the one to drive and we are being driven.
This book overall explained about Mahabharatham, and karnan.. the birth of karnan explained very well ... Not in depth.. but written in good way.... not finished well.....தர்மம் தலைகாக்கும்