R. N. Joe D'Cruz (ஜோ டி குருஸ்) is a Tamil writer, novelist and documentary film director from Tamil Nadu, India. He won the Sahitya Akademi award in 2013 in the Tamil language category for his novel Korkai.
Joe D'Cruz published a Tamil poetry compilation, Pulambazhkal, in 2004. His Sahitya Akademi award-winning novel Korkai was originally published in 2009 and prior to that his 2005 novel Aazhi Soozh Ulagu was awarded the Tamil Nadu state government literary award and Tamil Literary Garden award. Both his novels are based on history and the lives of Parathavar fishermen of Tamil Nadu. The first novel Aazhi Soozh Ulagu dealt with the lives of fishermen who used catamarans and their conversion to Christianity. The second novel titled Korkai refers to Korkai, an ancient port city ruled by Early Pandyan Kingdom. It documented 20th-century history of the people in the region. It is considered as a well-researched historical novel.
1933 ஆம் ஆண்டில் தொடங்கி 1985 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள "ஆமந்துறை" எனும் கடலோரக்கிராமத்தில் வாழ்ந்த மூன்று தலைமுறைப் பரதவர்களையும், கடலிலும் தரையிலும் அவர்களின் வாழ்வையும் அதன் பாடுகளையும் பேசும் நாவல். ஆழியின் ஆர்ப்பரிப்பில் துண்டு துண்டாகிய கட்டுமரத்தின் ஒரு பகுதியை உயிரின் ஆதாரமாக பற்றிப்பிடித்தபடியே ஆறு நாட்கள் கடலில் தவிக்கும் மூன்று தலைமுறையைச் சேர்ந்த கோத்ராப்பிள்ளை, சூசை, சிலுவை என்ற மூன்று "மெனக்கடன்காரர்களும்" கரை வந்து சேரமுன் நான் கடந்த காலத்துக்குள் சென்று ஆமந்துறையில் வாழ்ந்து, இந்த மூவருக்காகவும் கரைக்கடையில் தவிப்போடு காத்திருக்க தொடங்கினேன். ஒரு கடற்கிராமத்தின் வாழ்வை மொழியெனும் குறியீட்டினால் வாசகரின் அகமனதுக்குள் செலுத்தி, காட்சிப்படிமங்களாகவும் கற்பனைகளாகவும் விரித்து, மனதில் ஆழமானதோர் பாதிப்பை தந்து போகும் "ஆழி சூழ் உலகு". கடல் என்பது இதுவரை காலமும் கேளிக்கைக்கும், உல்லாசத்துக்கு என்று பார்த்து வியந்து மகிழ்ந்திருப்பேன். கடற்பயணங்களின் போது அமைதியாக தளம்பியபடி இருக்கும் அதன் மேற்பரப்பை தொடர்ந்து உற்று நோக்கும் போது மட்டும் அது ஏதோ கண்ணுக்கு தெரியாத, மனிதன் அறிந்துகொள்ள முடியாத ரகசியத்தை அது தனக்குள்ளே வைத்த்துக்கொண்டிருப்பதை உணர முடிந்திருக்கின்றது. இந்த நாவல் அந்த ரகசியங்கள் சிலவற்றின் முடிச்சவிழ்க்கும். ஆமந்துறை மாந்தரின் வாழ்வில் கடல் எவ்வளவு முக்கியமானதோ அது போல மதமும் அவர்களின் வாழ்வில் அதன் திசையை தீர்மானிப்பதில் பெரிய தாக்கத்தை செலுத்துகின்றது. பொருளாதார, அரசியல் சார்ந்த அவர்களின் தெரிவுகளை மதமே தீர்மானிக்கின்றதை, குமரிப்பெண் தெய்வத்தை வணங்கிய ஆதிப்பரதவர்களை கத்தோலிக்க விசுவாசத்துக்குள் ஈர்க்க அமலோற்பமாதாவை முதன்மைப்படுத்திய சுவாமியின் யுக்தியையும் நாவலில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்நாவலில் வரும் பெண்கள் கடலுக்கு ஒப்பானவர்கள். அள்ளிக்கொடுப்பதும் அலைக்கழிப்பதுமே கடல். கடலோடு ஒரு பரதவனின் பாடு எதுவோ அதுவே தரையிலும் அவனுக்கு. மேரி, தோக்களத்தா, எஸ்கலின், சூசானா, வசந்தா, அன்னம்மா, மயிலாடியாள், சுந்தரி டீச்சர், செலின், ரோஸம்மா, வசந்தமாளிகை என்று ஒவ்வொரு பெண்ணும் ஆழியின் ஒவ்வொரு கூறுகள். காதலனின் வெற்றியில் மோனநிலையடைந்தவள் அவன் சாவிலும் மோனத்தின் உச்சத்தை காண்கின்ற பெண்மையின் வீச்சு மிக நுட்பமாக பிரதிபலிக்கும். "வத்தக்குளம்" போல கடலிருக்கு என்று மரத்தை இறக்கியவனை கரைசேர்க்காமல் தனக்குள் சங்கமமாக்கும் ஆங்கார ஆழியது. என்னைப் பொறுத்தவரை ஆண்கள் வெறும் கருவிகளாகவே இந்நாவலில் தென்படுவார்கள். நாவலை நகர்த்துவது பெண்ணென்ற கடல் தான். காட்சி சித்தரிப்புகள் இந்நாவலின் இன்னொரு அற்புதம். கடலின் கீழே கரும்பச்சை நிறத்தில் வெள்ளைப்புள்ளிகளோடு தென்படும் வரிப்புலியன், கூடவே வரும் அதன் ஜோடி, எகிறிக்குதிக்கும் ஓங்கல்கள், மரத்தை முதுகில் ஏற்றும் ராட்ஷச மச்சம் என்று தொம்மந்திரையின் "சுறாப்பாறு" பற்றிய விபரிப்பு ஒரு கடல் சாகாசத்துக்கு ஒப்பானது. அது போல, 1964 ஆம் ஆண்டின் தனுஷ்கோடி புயல், புயலில் சிக்கிய "இண்டோ- சிலோன் எக்ஸ்பிரஸ்" தனுஷ்கோடி பியரில் இருந்து கடலில் மூழ்கும் சம்பவம் இன்னொரு உதாரணம். நான்கு நாட்களில் வாசித்து முடித்தாலும் இந்த நாவல் தந்த அனுபவம் காலத்துக்கும் முடிந்து போகாது. மனம் முழுதும் ஆழியின் பேரிரைச்சல்.
A gripping tale of the life of seafarers of South Tamilnadu
A very unique narration: starting from two different points in time that converge as the novel progresses, and giving close-up glimpses into the lives & struggles of fisherfolk living along the southern coast of Tamilnadu. The breathtaking beauty n ruthlessness of the sea ripples into their lives too. The many stories told in local language gives an intense n intimate reading experience.
முதல் பத்து பக்கம் தாண்டுவது மிக மிக கடினம். ஜோ டி க்ரூஸின் attached vocabulary உதவியுடன் தான் கரை சேர முடிந்தது. எல்லோருடைய வாழ்வினிலிலும் நடக்க கூடியதை இது மீனவர்/பரதவர்களின் சூழலில் பேசுகிறது
இரை, இணை, இறை தேடும் மீனவமக்களின் மூன்றுதலைமுறைவாழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது 'ஆழி சூழ் உலகு'. தூத்துக்குடிவட்டாரவழக்கென்ன அன்னியமா எனத்தொடங்கினால், வட்டாரச்சொற்களுக்குத்தனியாக விளக்கப்பட்டியலே தந்திருந்ததைப்பார்த்து திகைத்தேன். உள்ளே செல்லச்செல்ல கதைமாந்தர்களின் மொழிநடை நம்மேல் அப்பிக்கொள்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே நான் கேட்டிருக்கிற 'தூ** குடி' போன்ற வசைச்சொற்கள், ஈழத்தமிழுடன் நெருங்கிய தொடர்புடைய சில தொடர்கள் போன்றவற்றையும் காணமுடிகிறது. சில ஆண்டுகள் ஆமந்துறையில் போய் இருந்த நினைப்பைத்தருகிறது. கதைமாந்தர்களின் எண்ணம், செயல்கள், வன்மம், அச்சம், துயரம் போன்றவற்றைச் செவிட்டலறைந்தாற்போலக்காட்டி படிப்பவரின் மனதை அலைக்கழிக்கிறது. இதனூடே அப்பகுதிமக்களின் நம்பிக்கைகளும், கலவையாக உருவாகிக்கொண்டிருக்கும் ஓர் இடைநிலைசமயமும் புலப்படுகின்றன.
கடலுக்கு இத்தனை பெயரா என்று வியந்திருந்தேன். நூலைப்படிக்கையில்தான் ஒரு கடலாடியின் வாழ்வில் கடலைப்பற்றிய நுண்ணறிவு எத்தனை ஆழமாகவுள்ளது என்றும் அதன் வெளிப்பாடுதான் இத்தனை சொற்களுமென அறியமுடிந்தது. கட்டுமரம்முறிந்து கத்தைப்பிடித்து மிதந்துகொண்டிருக்கும்போது மேற்பரப்பும் சில அடிகளுக்குக்கீழேயும் வெம்மையும்-குளிருமாக திடீரென மாறுவதை உணர்ந்து இருநீவாடுகள் இணைகின்றன, விரைவில் சுழல்வரும் எனக்கணிக்கும் சூசையின் பட்டறிவுபோல எத்தனை செய்திகள் நமது வட்டாரங்களில் பொதிந்து கிடக்கின்றனவோ?
கடலைப்பற்றியும் நெய்தற்திணைவாழ்வின் ஒருபகுதியையும் நன்கு அறியமுடிந்தது. இனி தோப்பில் மீரான், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன் போன்றோரின் ஆக்கங்களையும் படித்தால் அந்தத்திணையின் கடல், உப்பு, மீன், பனை, கருப்பட்டி முதலிய பனைபொருள், தென்னை, கள், எண்ணை, புஞ்சை, கைத்தறி போன்ற பல கோணங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
ஒருநாவலுக்கான எவ்வித யோசனையும், முன் தயாரிப்பும் இல்லாமல் தமிழினி வசந்தகுமார் கேட்டு கொண்டதன் பேரில் தன் நாவலை எழுத ஆரம்பித்ததாக ஜோ.டி.குருஸ் குறித்து ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆழி சூழ் உலகின் மீதான் ஆகப்பெரிய ஆச்சரியம் இதுவே. ஒருநாவல் எழுதுவதென்பது சாதாரண விஷயமில்லை. அசாதாரணமான காரியம். சொல்வந்த விஷயத்தை செய்நேர்த்தியோடு, சுவாரசியத்தோடு, தொடர்புடைய விஷயங்களை எவ்விதத்திலும் குழப்பாமல், எவ்விதமான உணர்வுச் சிக்கலுக்கும் பிற உணர��வுகளுக்கும் இடம் கொடுக்காமல் கதை சொல்வதென்பது மிகப்பெரிய விஷயம். பெரும்பாலான எழுத்தாளர்கள் தோற்றுப்போவது இவ்விஷயங்களில் தான். கூடவே முதல்முறையாக நாவல் எழுதுபவர்களுக்கு 'எண்ணத்த எழுதி எண்ணத்த கிழிச்சு' என்ற மனநிலை வந்துவிட்டால் அவ்வளவுதான் எத்தனை அதிமுக்கியமான படைப்பு என்றாலும் உருவாவதற்கு முன்பே அழிந்து போயிருக்கும். அப்படியில்லையென்றால் கடமைக்கு எழுதிமுடிக்கபட்டு வாசகனை வந்தடையும். பல்வேறு படிநிலைகளைக் கடந்தே ஒரு எழுத்தாளன் படைப்பாளி ஆகின்றான். அந்தக் கணம் மிக முக்கியமானது. அழகானது. கவித்துவமானது.
Modern day Tamil epic. First few pages of this shocked me due to it's Kanyakumari/ Thirunelveli/Thoothukudi slang of Tamil in spite of it having a dictionary. Anyway, as you read, you get used to it. And once you get used to it the author's might is visible. Brilliant portrayal of the "Parathavarkal" is the fishermen caste(Converted Christians. The nature of the people, nature of the Sea, nature of the bishop's, fathers is brilliantly observed and thus a masterpiece. Must read, of course.
#ஆழி_சூழ்_உலகு புத்தகம் மூன்று தலைமுறைகளையும் அந்ததந்த தலைமுறைகளுக்குள் நடக்கும் மாறுபாடல்களையும் பரதவ இன மக்களின் வாழ்வியல் முறைகளையும் பதிவுசெய்வதாக உள்ளது முக்கியமாக பரதவர் எப்படி கிருஸ்த்துவ மதங்களுக்கு மாறுகிறார்கள் என்பதெல்லாம் மிக எதார்த்தமாக பதிவுச்செய்யப்படுகிறது..பல குறியீடுகளுடன் பல அம்மக்கள் சார்ந்த அரசியலையும் வாழ்வியலையும் நாவலாக வடிவமைத்ததெல்லாம் சிலிர்ப்புட்டுவதாக உள்ளது.. முதலில் நாவலை படிக்க மிக மிக கடினமாகவே உள்ளது அதற்கு காரணம் நாவல் அம்மக்களின் மொழியிலையே பதிவுச்செய்யப்படுகிறது இந்நாவலை படிக்க ஆரம்பிக்கும் முன் புத்தகத்தின் கடைசியில் இரண்டு பக்கங்களில் வழக்காறு மொழிகளின் பொருள் மற்றும் தலைமுறைகளின் விவரிப்புகள் தரப்பட்டுள்ளது அதை வாசித்து மனதில் நிறுத்திவிட்டு நாவலை தொடங்கலாம்..என்னை இந்த நாவல் கவர்வதற்கு முக்கிய காரணம் கடலும் கடல்சார்ந்த வியப்புகளும் என்னில் இன்றளவும் இருந்துக்கொண்டே உள்ளது அதனாலும் என் முக நூல் நண்பர் Siva Sankaran அவர்களின் நூல் விமர்சனமும் முக்கிய காரணம் இன்னுமொரு காரணம் மரியான் படமும் கடல் படமும் இந்த இருப்படங்களிலும் ஜோ.டி.குரூஸ் அவர்களின் வசனம் அந்த வார்த்தைகளில் உள்ள ஈர்ப்பு..
இந்த நாவலை நாம் படித்து முடித்தபிறகு நமக்குள் இருக்கும் மீனவர்கள் கடலோர கிராம மக்களின் மீது இருக்கும் அத்தனை கருத்துக்களும் சுக்குநூறாக போகும் அவர்களுடனே நாமும் வாழும் ஒரு ஸ்லாகிப்புத் தன்மை நாம் நம் சுயத்தை மறந்து அவர்களுடன் சுறா பாறைக்கு சுறா வேட்டைக்கு செல்வோம்... இந்த ஒட்டுமொத்த உலகத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கை வகிக்கிறது கடல் சார்ந்த பொருளாதாரங்கள்...
இங்கு என் தட்டில் நான் சுறா புட்டு, நெத்திலி பொரியல்,சங்கரா,பாறை,மத்தி,கடம்பா போன்ற சுவையான உணவை உண்ணும் வேலையில் அங்கு அதை அறுவடை செய்த மீனவனின் நிலை மிக மோசமானது...அவர்களின் வாழ்வியலை அவர்களுடனே பரிமாரிக்கொள்ள இந்த நாவல் மிக முக்கியமானது...
எந்த ஒரு முடிவையும் நோக்கிப்போகாத கதைகளம் வாசிக்க மிக சுவையாக சங்கரா மீனின் சுவையை ஒத்ததாக உள்ளது...
இந்த நாவலின் பல பதில்கள் கடல்சார்ந்து நமக்கு கிடைக்கிறது..
It offers a great cross-sectional view of a few generations of fishing community of the seaside village of aamanthurai, the changes over the years impacting the village and its residents. Some changes are gradual, which the author hints at through the dialogues, while some changes and sudden and shocking. The dialogues between the characters, especially youngsters in the novel is a terrific achievement. Much enjoyable. The characterization of kaagu saamiyar, the noble Christian priest who serves the village for most part of his life is amazingly delivered. He is an epitome of goodness and sacrifice, till he breaths his last.
Am amazing novel with so many intricacies and unique lifestyle of southern fishermen lucidly written. It spans across 3 generations and I could really feel the sea water gushing through my face half way through the novel. The dilemmas and grey shades of the characters and the void it provides the readers to fill is what makes a novel classic and this one certainly is.
எனக்கு ஏற்கனவே பரதவர்களின் வாழ்வியலும், பண்பும் பற்றி அறிய பேராவலாய் இருந்ததால் இது எனக்கு, இது சம்பந்தமான முதல் நாவல். ஆதலால் எனக்குள் ஒரு பூரிப்பும், ஆசையும் இருந்தது இந்நாவலை படிக்கும் போது.
பெரியாளு, சூசை, சிலுவை இந்த மூன்று பேரையும் வைத்து மூன்று தலைமுறைக்கான வாழ்வியல் களத்தையும், கிட்டதட்ட அறுபது ஆண்டு கால வரலாற்றையும்; நான் எதிர்பார்த்த அந்த வட்டார பேச்சிலையே பல நுணுக்கங்களை ஒன்றுசேர்த்து பிரமிக்க வைத்துவிட்டார்.
நாவலில் முக்கியமாய் நான் மறவாதிருப்பது, யான் இன்றும் சென்று வரக்கூடிய தனுஷ்கோடிக்கு அன்றைய காலகட்டத்தில் இரயில் பயணமும், பேரலையின் தாக்குதலும் நடந்திருக்கிறது என்பதை வாசிக்கும் போது கண்முன் கற்பனை அலை அலையாய் ஒடியது; ஒரு அழியாக காட்சியாய் போனது மனதில் பதிந்தது. இதன் அழிவு, புலம்பெயர்ந்த தமிழர்கள் என போராட்டங்களை, வாழ்க்கைப்பாடுகளை பல வழிகளில் நாம் உணரமுடிகளிறு. இடையிடையே வரும் திராவிட கட்சிகளின் அன்றைய போராட்டத்தின் வெளிப்படும் அதன் தாக்கமும் சிந்திக்க தூண்டுபவை.
ஆமந்துறை என்னும் ஊரில் பேய்பிடித்து ஆடுபவர்களின் வார்த்தைகளும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும் என்னை திகைத்து நிற்க வைக்கும் இடங்களாக இருக்கின்றன. காகு சாமியாரின் நற்செயல்களும், ஊர்மக்களின் தேவை உணரந்து செயல்புரியும் குணமும் பெரும் பாதிப்பை உண்டாக்க கூடியவை, அதே சமயத்தில், இன்றளவில் நான் பார்க்கும் சாமியார்களின் நடவடிக்கைகளை நினைத்து ஏளனமும், சிந்தனையும் அரும்ப தூண்டுகிறது.
இன்னும் இந்த மக்கள் நம்புகிற வேதங்களை தாண்டி குமரியம்மனைப் பற்றி வரும் வரிகள், ' குமரி அம்மன் யாருன்னு நெனக்க? எல, அவ நம்ம பரத்தி. நம்ம காவல் தெய்வம். ' காலம் கடந்தும் இன்னும் கூட குமரி���ம்மனை, கடலை வணங்கி தான் வருகிறார்கள்.
கடலோரத்தில் மதம் மாற்றமோ, மத உணர்வோ இந்த இரண்டும் போர்ச்சுக்கீசியர்களின் ஆனதே. அதுவும், ஒரு உதவிக்கு நன்றி கடனாக நாங்கள் மாற்றப்பட்டோம் என ஊர்மக்கள் கூறுவது பல சிந்தனைகள் ஆழமாக முன்னிறுத்துகிறது.
சுருக்கமாக, இதில் ஒரு ஊரில் வாழும் அனைத்து மனிதர்களின் அன்பும், காமமும், தியாகமும், வீழ்ச்சியும், மலர்ச்சியும் என அந்த வட்டார வழக்கு, வரலாறு, தொன்மங்கள் என பலவற்றை ஒன்றுசேர வாசித்து முடித்தும் ' நானும் கூட வாழ்ந்திருக்கிறேன் ' என நினைக்கும் படி பெரும் தாக்கத்தை உருவாக்கி விடுகிறது.
யான் அதிகமாய் இதில் ரசித்தவை; சிக்கலான உறவுகளின் வெளிப்பாடு முடிவு, அது தான் காமம். ஒரு தலைமுறையில் வெளிப்பட்ட விடயம், மூன்று தலைமுறையாய் பாவமாக அல்லது புண்ணியம் தேடும் விதமாக அமைந்திருப்பது அந்த மனிதர்களின் குணாதிசயங்களை இன்னும் அழகு படுத்துகிறது.
என்னால் மறக்க முடியாத உறவாய் இனி இருக்கும் என்றால், அது சூசைக்கும், சிலுவைக்குமான உறவு. பெரும் கேள்வியாய் இது என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இறுதியாக, காகு சாமியாரின் வார்த்தைகள், " கோத்ரா, இந்த உலகத்துல எல்லாத்தையும் விட மிஞ்சின சக்தி தியாகத்துக்குத்தாம் உண்டு. எல்லாரும் இந்த மாய உலகுல சேக்குறாம். நீ மறு உலகுல சேக்குற. ஆசிர்வாதமா இருப்ப. "
இந்நாவலை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் அமைதியுடன் இவருடைய மற்றொரு நாவல் " கொற்கை " வாங்கி வாசித்து இன்னும் அழகாய் புலம்புவேன் என உறுதியளிக்கிறேன்.
காத்திருப்பதும் நன்மையே, சில நல்ல நூல்களுக்காக.
This entire review has been hidden because of spoilers.