வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது.உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத்தின் முன்பு வெளிப்படையாகப் பேசியதால் கிடைத்த எண். பலமிக்கவர்கள் தவறிழைக்கும்போது நமக்கென்ன என்று எல்லோரையும்போல் ஒதுங்கி நிற்காமல், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து நின்று இயங்கியதற்காக கிடைத்த எண். காவல்துறை, அரசியல், ஊடகம், நீதித்துறை வரை எதுவொன்றும் புனித அமைப்பு அல்ல; மக்களுக்காகப் பணியாற்றும் எவரும் கேள்விக்கு அப்பாற்பட்டவரல்
ஜூன் 2023இல் வெளிவந்த 150 பக்கங்களை கொண்ட புத்தகம். பல அரசியல் தலைவர்கள் தங்கள் சிறை அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளனர். அந்த வகையில் இப்புதகமே நமது முதல் வாசிப்பு.
நீதிமன்ற அவமதிப்பிற்காக 6 மாதம் சிறைத் தண்டனை பெற்ற ஊடகவியளாலர் சவுக்கு சங்கர், அவர் பெற்ற நீதிமன்ற தீர்ப்பு முதல், கடலூர் சிறைவாசம் 63 நாட்கள், அடுத்தடுத்து நான்கு வழக்குகள், அதன்பின் தனக்கு விடுதலை கிடைத்து வெளியே வந்தது வரை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இது அவரது இரண்டாவது சிறைவாசம் என்றாலும், மனதளவில் எப்படி தாக்குதல்களுக்கு உள்ளானார், உண்ணாவிரதம் இருந்து தனது உயிருக்கு கேடு வரும் நிலையில் சிறைத்துறை அவரது கோரிக்கைகளை நிறைவேற்றியது பற்றி, சிறையிலிருந்த போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்றவர்கள்(ஆனால் பெரும்பாலும் காதல் பிரச்சனை) பற்றி, சக கைதிகள் மற்றும் அங்குள்ள போலீசார்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி, சிறை நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் பற்றி, கடலூர் சிறை வளாகம் பற்றி என அனைத்து விடயங்களையும் தனது எழுத்தின் மூலம் கண்முன் நிறுத்தியுள்ளார் திரு சவுக்கு சங்கர் அவர்கள்.
அரச பயங்கரவாதம், அதன் அச்சுறுத்தல் என்பது எந்த காலத்திலும் மாறுபடுவதே இல்லை. அதிலும் பகத்சிங்கிற்கு ஆங்கிலேயே ஆட்சியில் நடக்காத கொடுமைகளும், இப்போது நடந்தேறி வருகிறது எனக் கூறப்படுகிறது.
அதிகாரம் கையிலிருந்தால், எதிர் கேள்வி கேட்பவனை எந்த அளவிற்கு வன்மம் கொண்டு அவன் மீது பாய்ந்து குதறும் என்பதை விளக்குவதாக இந்தச் சிறை அனுபவ புத்தகம் உணர்த்துகிறது.
சென்ற வருட(2023 ஜனவரி) சென்னை புத்தக கண்காட்சியில், சிறை கைதிகளுக்கு புத்தகங்களை பரிசளிக்க, சிறைத்துறை ஒரு ஸ்டால் வைத்திருந்தனர். இனி அது தொடருமானால், நாமும் சில புத்தகங்களை நம் பங்குக்கு அவர்களுக்கு அளிப்போம். ஏனெனில் கைதிகளும் மனிதர்களே!
புத்தகத்திலிருந்து ... \ நீதிமன்றத்தோடு பயணிக்கும் போதெல்லாம் என் மனதில் தீராத ஏக்கம் ஒன்று உண்டு. நாம் வெறும் 10ஆம் வகுப்புதான் படித்திருக்கிறோம். ஒரு வேளை இளமையிலேயே வேலைக்கு செல்லாமல் இருந்திருந்தால் வழக்கறிஞர் ஆகி இருப்போமோ. /
\ சிறைக்கு வருவோர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரக் கடவுள் பக்தர்களாக மாறிவிடுவார்கள். சிறை சுவர்களெங்கும், கடவுள் பெயர்கள் உருவங்கள் வரையப்பட்டிருக்கும். சிறையில் 24 மணி நேரமும் வேலையே இல்லை என்பதால், அவர்கள் தங்கள் நேரத்தை கடவுளுக்குச் செலவழித்தால், கடவுள் சீக்கிரம் ஜாமீன் பெற்று தருவார் என்று நம்புகிறார்கள். /
\ 'ஒரு கைதி மூன்று நாளா பட்டினி கிடக்குறான் சார். அவன் உடல்நிலையை, அவன் உயிரைக் காப்பாத்தணும்னு ஒருத்தருக்கு கூட தோணல இல்ல? என்னை பத்தி தெரியாது சார் உங்களுக்கு. நீங்க சைக்காலஜிஸ்ட். புரிஞ்சுக்குவீங்க. ஒரு வார்த்தை 'மன்னிப்பு', கேக்கமுடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சி ஜெயில்ல வந்து இருக்கிற பைத்தியக்காரனைப் பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு பைத்தியக்காரன் நான். சாக பயப்படுவேன்னு நினைக்கிறீங்களா?' என்றேன். /
\ மனிதன் அச்சப்படுவது மரணத்துக்குத்தான், அதையே நான் ஏற்க துணிந்ததால் என் மனதுக்குள் கூடுதல் தைரியம் ஏற்பட்டிருந்ததை இந்த போராட்டத்தின் மற்றொரு வெற்றியாக நினைக்கிறே ன். /
\ திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எனக்குப் பெரும்பாலான திமுக தலைவர்கள் நெருக்கம். எப்போதும் எதிர்கட்சிகளோடு நெருக்கமாக பணியாற்றும் வழக்கம் இருப்பதால், எதிர்க்கட்சி தலைவர்கள் இயல்பாகவும், தந்திரோபாயக் காரணங்களுக்காகவும் நெருங்கி பழகுவர்.
அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கையில், 'ப்ரமோஷனோட உங்களுக்கு வீ.ஆர்.எஸ். வாங்கித் தர்றோம்' என்றார்கள்.
பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'சிறை செல்லும் சீமாட்டி' என்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 'முட்டாள் அரசு' என்று தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் அந்த 10 ஆண்டுகளில் என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுகவில் ஒருவருக்கும் தோன்றியதில்லை.
....
ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர்கள் நடவடிக்கையும் போக்கும் மாறிப்போனது. என்.ஆர்.இளங்கோ என்னை ஒரு சகோதரன் போலவே கருதி இன்று வரை நடந்து கொள்கிறார். ஆனால் இதர திமுகவினர்தான், என்னால் 10 ஆண்டுகள் பயன்பெற்ற திமுகவினர்தான், 31 ஆண்டுகள் அரசுப் பணியிலிருந்து என்னை எவ்விதப் பலன்களும் இன்றிப் பணி நீக்கம் செய்தனர். /
\ ஒரு கைதி ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை பெற்றோ, விசாரணைக் கைதியாகவோ இருக்கையில் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்வது ஃபார்மல் அரெஸ்ட் எனப்படும். /
\ 4 புதிய வழக்குகளில் கைதான் பின்னர் செல்லுக்கு வந்து சற்று நேரம் அமைதியாகப் படுத்திருந்தேன். எனது அறைக்குள் ஒரு கரப்பான் பூச்சி ஓடியது. அதை பார்த்ததும் என் மனதில் தோன்றியது.
'நீங்க தப்பு பண்ணிட்டீங்கடா. நீங்க என்னை கொன்னுருக்கணும். நான் கரப்பான் பூச்சி மாதிரி. செவ்வாய் கிரகத்துல கூட உயிரோட இருப்பேன். அவ்வளவு சீக்கிரம் உங்களால என்னை அழிக்க முடியாது. நான் பல மடங்கு விஸ்வரூபம் எடுக்கப் போகிறேன். உங்களால் என் விஸ்வரூபத்தைத் தாங்க முடியாது' என்பதே. /
\ பொதுவாக, சிறையில் பெரும்பாலான கைதிளுக்கு நீதிமன்றம் செல்வதென்றால் அவர்களுக்கு அது சந்தோஷம். முதல் காரணம், சிறையை விட்டு நான்கு மணி நேரமாவது வெளியே இருக்கலாம். வெளியுலகை பார்க்கலாம். அது மட்டுமல்லாமல், பணம் கொடுத்தால் காவலுக்கு வரும் காவல் துறையினர் நல்ல உணவு வாங்கித் தருவார்கள்; வீட்டாரிடம் போனில் பேச போனைக் கொடுப்பார்கள்; சிகரெட் வாங்கிக் கொடுப்பார்கள் என்று ஏற்கனவே நீதிமன்றம் சென்று வந்த கைதிகள் சொல்லியிருக்கிறார்கள். /
இது ஒரு Prison Bureaucracy critque. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை செல்லும் சங்கர், தன் அனுபவங்ளை பதிவிட்டிருக்கிரார்.
மாநில அரசு மற்றும் நீதித்துறை பல காரணங்களுக்காக சங்கரை முடக்க செயல்படும் போது, ஆச்சரியமூட்டும் வகையில் (in every turn) சில அரசு அதிகாரிகளும் பல பணியாளர்களும் தோள் கொடுக்கிரார்கள். காவல் மற்றும் சிறை துறை அதிகாரிகள்/பணியாளர்களும் மீது நாம் preconceived notions மாறும் அளவிற்க்கு அவர்களுடனான அனுபவங்களை பதிவிடுகிரார் சங்கர். இதுவே புத்தகத்தின் USP.
கேள்வி எண் 17182, சங்கரின் ஊழல்-ஊளவு-அரசியலின் அழுத்தமான (raw-வான?) political/social/bureaucratic அனுபவம்/கமெண்டரி போல இல்லாமல், ஒரு whistle blower-இன் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களாகவும் reactions-ஆகவும் நகர்கிரது.
Judicial fallibility, சிறை சீர் திருத்தம், destigmatization, சிறை பணியாளர் மனநிலை போன்ற அவசியமான டாப்பிக்ஸை சங்கர் கவர் செய்கிரார். சில பக்கங்கள் அவருக்கான branding முயற்சியோ என எனக்கு தோன்றியது.
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் சிக்கலில் இருக்கும் சிவாஜிக்கு எப்படி காவல் பணியாளர்களே உதவுகிரார்கள் என உயர் அதிகாரிகள் குழம்ப, "அவன் தான் ஊரெல்லம் ���ல்லது பண்ணி வெச்சுருக்கானே, எவனாது ஹெல்ப் பண்ணீரான்" என்ற டயாலாக் வருகிரது. சங்கர் தான் ஷங்கரின் சிவாஜியோ என்று யோசிக்க வைக்கும்படி இந்த புத்தகத்தின் narrative இருக்கிறது.
Whistleblower-journalist-convict- ex-policeman என்ற ஒரு nexus point-ல் இயங்கும் சங்கர் தன் சிறை அனுபவங்களை unique-ஆன கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிரார். And the book works in that way.
Trickle down behavior of corruption-ஐ புத்தகத்தின் ஒரு பகுதியில் சங்கரின் உயர் அதிகாரி விளக்குவது எனக்கு பிடித்த excerpt. அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைப பற்றி சங்கர் தன் உயர் அதிகாரியிடம கேட்கிரார். அதற்க்கு அந்த அதிகாரி, "சும்மா இருங்க சங்கர். அவன் ஏழை. அஞ்சும் பத்தும் வாங்குறான். அவனைப் புடிச்சி, சஸ்பெண்ட் பண்ணி வேலையைவிட்டுத் தூக்கிட்டா லஞ்சம் ஒழிஞ்சிருமா? அந்த ஹாஸ்பிட்டல்ல மருந்து வாங்குறதுல அதிகாரிங்க லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்களே; அங்க சர்ப்ரைஸ் செக் பண்ண விடுவாங்களா? நம்பதான் டீல் பண்ணோமே. ஹெல்த் செக்ரட்டரி இன்பசாகரன் வீட்டுல மருந்து கம்பெனிங்க குடுத்த 8 லட்ச ரூபா மாட்டுச்சா? அதையும் இன்கம்டாக்ஸ்தான் புடிச்சிச்சு. நாம புடிக்கல. ஆயாவும் வார்ட் பாயும் ஏதோ வயித்துப் பொழப்புக்கு வாங்குறாங்க. இதைப் பெரிசா பேசிக்கிட்டு..."
சவுக்கின் பேட்டியை போலவே இந்த புத்தகமும் ஒரு ரேலார் கோஸ்டர் ரைடு .சவுக்கு 2.0 மிகவும் சுவாரசியமான எழுத்து நடை மற்றும் கனிவான அணுகுமுறை . இது நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த அப்பேட் .