மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. குணசித்திரங்களும் சந்தர்ப்பச் சுழ்நிலைகளும் சம்பவங்களும் களன்களும் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளன. சங்கீத விஷயத்தின் மூலம் நாவலில் ஏற்படுகிற ஒரு ஆழம் உண்மையானதாக, உயர்வானதாக அமைந்துள்ளது. தஞ்சை ஜில்லாப் பேச்சுப் போக்கை, வாழ்ககைப் போக்கை அப்படியே, ஜானகிராமனுக்கே உரிய ஒரு திறமையுடன், தீட்டியிருக்கிறார். நாவலாகக் கட்டுக் கோப்பும் சிறப்பாகவே அமைந்து விட்டது.
இந்த நாவல் பற்றி இலக்கியத தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலஹீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள மோகமுள், தமிழில் நல்லதோர் சாதனை - பெரியதோர் சாதனை.
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
"உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன”
Wow. In a society that has different yardsticks for men and women - single events can set forth complicated spirals. An unavoidable cliche - I was fascinated by how this epic book by Thi.Ja is way ahead of it's time! But unlike "Amma Vanthal" it is not the shock value but the realness of the characters and emotions (even the smaller roles) that leave a mark.
Full disclosure - I tried watching the national award winning movie way back in college but it was too boring and I couldn't finish it. This audiobook production by Storytel - almost made me steal time to know the story of Babu and Yamuna.
We follow the story from mid 1930s till about 1950s. Set in the Brahmin settlement of Kumbakonam, the book paints the time in all it's beautiful detail and yet is a subtle snub to almost all the orthodoxy perceived about the community. The quirks of carnatic musicians, the prevalent practices and biases (Patriarchy without empowerment) and the idealistic rebels - a complete package of characters.
When we meet Babu the 20 year old student in Kumbakonam he is the perfect son, an idealistic youth who wants to make his family proud and fit in. When he starts helping Yamuna (aged 30) and her mother in time of their need there is almost a naive innocence in their interactions that borders on pure. Vaithi - his father, Rajam - his friend are fantastic strong characters who leave a strong impression on you.
When a young bride (Thangammal) of his old neighbour lusts after him and he yields in a moment of weakness - something in him breaks and he realised he loves only Yamuna. The scene where he runs away the next morning to see Yamuna and cry - the depth of writing is fantastic! Yamuna turns him down and when Babu blocks Thangammal away it leads to unforeseen consequences. Babu channelises his rejection and the shock in learning Carnatic music from his guru - another fantastic characterisation!
While the incident is almost never referred to, years roll on and the characters still meet on and off almost normally. When his guru passes away 10 years later, his life again loses focus and he takes up a job he doesn't like and moves to Chennai. Yamuna who is almost 40 also has been brought down onto her knees by life after turning down various old grooms and jamindars who want her to be kept woman. When their paths cross again - how they reinvent their lives forms the rest of the story.
The concept of lust as a positive driving force - new and yet not new. The writing never turns vulgar and while so much has been made out of the couple of pages, the book is equally a testimony to the power of music to heal.
The book handles so many more beautiful ideas that are never talked about or touching. Like the music of everyday things, like the responsibility of friendship, like how parents hope their freedom to be rewarded, like how pride defines good people too. There are many other smaller incidents which gave me goosebumps.
The book is a brilliant read and no wonder Thi.Ja is held in such high regard by many of the authors I admire. Thanks to Storytel for producing a very well narrated audiobook of the same.
அனுபவங்களின் விளைச்சலில் தத்துவங்கள் பிறக்கின்றன. எல்லாத் தத்துவங்களும் எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போக வேண்டிய அவசியமில்லை. கால வெள்ளத்தில் தத்துவங்கள் படித்தோ சிலது அனுபவித்தோ அறியப்பட்டுக் கொண்டே தானிருக்கிறது. முற்போக்கோடு தத்துவங்கள் முரண்பட்டு கொண்டேயிருக்கின்றன. தத்துவங்கள் தீர்வுகளைக் கொள்வதில்லை ஆனால் நியாயமான வாழ்க்கைக்கான சமாதானங்களை விதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன.
தத்துவங்களோடமைந்த எழுத்திற்கான உயிர்ப்பு, அதன் காலமும் அன்றைய வாழ்வியல் நடைமுறைகளும்தான் நிர்ணயிக்கின்றன. சிலவை காலத்திற்கொவ்வாதவையாகி நம்மிலிருந்து அகண்டு விடுகிறது..
தி.ஜா என அழைக்கப்படும் தி.ஜானகிராமனின் "மோகமுள் ". ளை வாசித்ததில் என்னுள் படர்ந்தது பிரமிப்பின் உச்சமே.
கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியில் (1955) எழுதப்பட்ட இப் புதினம் 21 ம் நூற்றாண்டின் கால் பகுதியில் வாழும் ஒரு வாசகனை சிலிர்க்கவோ பிரமிக்கவோ வைப்பதற்கான உயிர்ப்பை தி ஜா வின் முற்போக்கு எண்ணங்களே.
சில விமர்சனங்களை இணையத்தில் வாசித்த போது பொருந்தா காமம் எனச் சித்திரிப்பது எப்படி என்ற ஐயுறல் சாதாரணமாகவே தோன்றியது. இயற்கையில் மாற்றப்படாத நியதி ஆணுக்குப் பெண் அவ்வளவே. அதில் வயது வித்யாசம், அழகு இவையெல்லாம் சமூகத்தின் பார்வைக்கு போடும் போலித் தீனி தான். பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் வறட்டுப் பார்வைக்கும், பழங் கொள்கைகளுக்கும் ஒட்ட வாழ்ந்து சலித்து விடுகிறார்கள். காரணம் அங்கு அழகும், வயதும் இன்ன பிற இத்யாதிகள் யாவும் பிரதிநுதப்படுத்தபடுவதே.
இக்காலத்தில் வாசிக்கின்றவர்களுக்கு இதன் மொழி நடை மீது பெரிய தர்க்கத்தை ஏற்படுத்தலாம். இப் புதினம் வேண்டுமென்று வலிய அம்மொழி நடையில் எழுதப்படவில்லை என்பதே என் பார்வை. ஒவ்வொரு மொழிநடையும் அதற்குரிய அழகைப் பெற்றேயிருக்கின்றன. கதையின் களனையும், கதை மாந்தர்களையும் சார்ந்தே மொழி நடை பிரதானமாகிறது. எதற்கு எது தேவையோ அதற்கு அது தேவை அதுவே கள யாதார்த்த உரிமை.
கதைக்களன் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வாழ்ந்த பிராமண குடும்பங்களைச் சார்ந்தது. காலக்கட்டம் 1930 க்கும் 50 க்கும் இடையில் நடந்த உண்மைச் சார்ந்த புனைவுகளின் தொகுப்பு. அதில் கர்நாடக சங்கீதம் பிரதான இடத்தைப் பெற்று கதை முழுதும் மெல்லிசைப் போல படர்கிறது.
கதையின் நாயகனான பாபு குழந்தை பருவத்திலிருந்தே கர்நாடக சங்கீதத்தின் மீது ஆசை கொள்ளலும் அதனையொப்ப அவரின் அப்பா (வைத்தி) அவனின் ஆசைக்கு ஒத்த சுயநல கொள்கைகளை திணிக்காத பெரும் சுதந்திரத்தை வழங்கும் தாராளபாங்குமிக்க பாத்திரமாக வலம் வருகிறார். அவரின் பார்வை இன்றைய பெரும்பான்மை அப்பாக்களால் கூட பார்க்க முடியாத தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொருளில் இருக்கிறது.
முதியவரை மணந்த தங்கம்மாள் பாத்திரம் தன் வயதிற்கேற்ற உந்துதலால் பாபுவால் கவரப்படுவதும் தன் மோகத்தை தீர்க்க மேற்கொண்ட யுக்திகளும் அதன்பின் அவளின் மரணமும் பேரிளம்பருவத்தை தொட்ட பாபுவை நிலைத் தடுமாறச் செய்தாலும் பாபுவின் உள்ளுக்குள் அப்பாவின் உபதேசங்களும், நண்பனான ராஜிவின் உரையாடல்களும், குருவான ரங்கண்ணாவின் உபதேசங்களும் காப்பாகவே இருக்கிறது.
இந்த பாதுகாப்பு வளையங்கள் எல்லா இடங்களிலும் எடுபடுவதில்லை. சூழலும், சம்பவங்களும் அதை தீர்மானிப்பதோடு பாபுவும் தன்னிலை மாறி தாண்டிய சூழலும் நடப்பதுதான் கதை மேலும் நகரும் விதையாகிறது.
யமுனா என்ற நாயகியின் பாத்திரம் பொருந்தாத இரு வேறு (பிராமண, மராட்டியர்) சமூகத்தினிடையில் (( சுப்ரமண்ய ஐயர், பார்வதி ) (இரண்டாம் மனைவியாக ) )திருமண பந்தத்தில் பிறக்கிறது. நிலக்கிழாராக வாழும் சுப்ரமண்ய ஐயரின் திடீர் இறப்பும் அதன் பின் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேரும் படிப்படியான அடியின் வீழ்ச்சியில் வாழ்வே அற்றுப் போகும் யமுனாவின் வாழ்வில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு வித காரணத்தால் தடைப்பட்டு கொண்டிருக்க நாயகனான பாபுவின் நேச உணர்வை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இரு குடும்பத்திற்கிடையேயான அறுந்து போகாது பிணைப்பு, அகால சந்தர்ப்பத்தில் பாபுவின் மனதிலிருந்து வெளிப்படும் ஆசை யமுனாவை சோர்வடையச் செய்வதாலும் தன் முடிவை அறிவித்து விடுகிறாள்.
வளரிளம் பருவத்திலிருந்து பேரிளம் பருவத்திற்கு மாறும் பாபுவின் வேட்கை ஒருதலைக்காதலா, இல்லை உடல் சார்ந்த பிரச்சினையா என்ற கேள்விகளெல்லாம் கடந்து கதையின் ஏதோவொரு புள்ளியில் இருவரையும் தொடர்ந்து இணைத்து கொண்டே காலத்தையும் கடத்தி விடுகிறது.
காலம் முதிர்வதேயில்லை ஆனால் கதாபாத்திரங்கள் அடையும் மூப்பும் பக்குவமும் இழப்பும் எதிர்பார்ப்பும் இருவருக்குமிடையேயான முடிவுறாப் பந்தத்தை அறுபடாமல் கெட்டிப் படுத்துகிறதா அல்லது நைத்து விடுகிறதா என்ற புதிரோடு விடுகிறேன்.
காலம் காலமாக திருமண பந்தத்தின் மூலம் தான் பாலியல் பந்தம் சரி என்ற தவறான கலாச்சார ஒழுக்கை தி ஜாவின் கதாபாத்திரங்கள் மீறுவதும் அதுவே சங்கீத வாழ்வியலின் எவரும் காணாத உச்சத்தை அடையப் போகும் வாயிலின் சாவியாகப் போகிற கருதுகோளாவதும் அக்கால கொள்கை முரண்பாடுகளை தகர்ப்பதே நாவலின் அதீதம் .
தி ஜா வின் பாலியல் விவரிப்புகள் விரசமில்லாத புனைவின் நீந்தலில் நம்மை கடத்தி விடுவது எழுத்தாளுமையின் உச்சமே.
இன்றைய பாலியல் விவரிப்புகள் காட்டாற்று வெள்ளத்தை போல கரடு முரடாகவும், விரசமும் , வன்மத்தின் மீதுள்ள மோகத்தில் குறியீடுகளால் சாதிகளோடு கொச்சைப்படுத்தி திருப்தியடைந்து விடுகிறது. அம்மாதிரியான எழுத்தாளுமைகள் விருதின் உச்சத்தை அடைவது என்பது எழுதும் கலையின் போதாமை மட்டுமே.
கலையை நேசித்து உச்சத்தை தொட நினைக்கும் கதாபாத்திரத்தோடே அரைகுறை கலையும், அதை விற்றுக் காசாக்கும் வித்தையோடமைந்த அறிவின் எள்ளலும், குழந்தைத் திருமணம் அதைச் சார்ந்த சமூக பிரச்சினைகள், நிலப்பிரபுத்துவ, குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்ட காலத்தில் பெண்களின் நிலை, கலப்புத் திருமணமும் அது சார்ந்து நிகழும் சமூகப் பிரச்சினைகளோடே பயணிக்கிறது. இந்த சமூகப் பிரச்சினைகள் யாவும் அவர் காலத்தில் அவர் பார்த்த மனிதர்கள் அவர்களின் வாழ்வியல் முறைகளில் நடந்தேறிய நல்லதுகள் அவலங்கள் என உண்மைகளை, தனக்குரிய புனைவு களத்தில் ஒன்றையொன்று ஒட்டும் பாத்திரமாக மாற்றி இணைத்திருப்பதாக தி.ஜா வின் பின்னுரையில் அறிய முடிகிறது.
காலம் கடந்தும் மோகமுள் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆணிவேர் போலியான கலாச்சார ஒழுங்கை மீறுவது என்பது மட்டுமல்ல அதற்குரிய கதாப்பாத்திரங்களின் தனித்துவம் கொண்ட காத்திரமான நேர்மையான வெளிப்படுத்தலே. இறுதியாக, வாசிப்பில் மோகமுள் குத்துவதில்லை.
A real take on lust. A normal Tamil saying goes like this: The lust remains just for thirty days. But in this novel Janakiraman questions that. Lust can remain even for years.
No spoilers. I read this book in 90's during my college days. It took me sometime (first 200 pages read) to get used to the period mentioned in this book (1930/1940). Next 400 pages I have thoroughly enjoyed reading this book. In fact when it was near to end, I wanted this book as a never ending one. It's a wonderful read. And no "they lived happily ever after" ending :). It just covers a period of life incidents of the main characters.... Highly recommended. Regards, Mahesh kumar
மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று பாரதி இரண்டு வரிகளில் சொன்னதை 700 பக்கங்களில் சொல்கிறார் தி.ஜா, அதுவும் வெளுத்து வாங்கும் நடை வடிவத்தில்! சமுதாயக் கோட்பாடுகளை சவால் செய்வதில் தான் இந்த எழுத்தாளர்களுக்கு எவ்வளவு திருப்தி! இக்கோட்பாடுகளில் அகப்படாத எண்ணங்களை முக்காடு போட்டு தான் சிந்திக்க வேண்டும். சிந்தித்ததோடு மட்டும் இலாமல், இவைகளுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து, பிறகு எழுத்து வடிவம் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மாதிரி நாவல்கள் ஒரு சமூகத்தின் முற்போக்கு முதிர்ச்சியை கணக்கிடும் ஒரு அளவுகோலாக இருப்பது என்னவோ பூரண சத்தியம். அவ்விதத்தில் 'மோக முள்' சுயேச்சையாக வெற்றி பெறுகிறது.
பாபு ஒரு தீவிரமான ரசிகன். தான் ரசிப்பபவை தன்வசமிருக்க அமைதியாகக் குட்டிக்கர்நம் அடிக்கும் இயல்பலகு கொள்ளும் அளவிற்கு அவனே அறியாத ஒரு தீவிரத்தனம் . அவனை விட 10-12 வயது மூத்த யமுணவை ரசிக்கிறான். மோகம் கொள்கிறான். சங்கீதத்தை சிறுவயதில் ரசிக்கிறான். அவன் கட்டுக்குள் கொண்டு வர பிரம்மப்பிராயர்தம் செய்கிறான். சமுதாயம் போடும் வேலி, தனக்குத் தான் போட்டுக்கொள்ளும் வேலி இவற்றிலிருந்து ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்டு, தான் ரசிக்கும் வஸ்துக்களை எப்படி அடைகிறான் என்பதே மோக முள் .
பெண் பிள்ளை என்றாள் கலியாணம் தான் பிறவிப் பயனோ? என்றிருக்கும் யமுனா ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்விக்குறி. தி.ஜா அவளைப் பற்றி பெரிதாக விழிம்பவில்லை. பாபுவின் கண்கள் மூலமாகவும், அவள் தாயார் பார்வதியின் பரிமாற்ற நிலை மூலமாகத்தான் யமுனா வைப் பற்றி யூகிக்கமுடிகிறது. இவள் எப்படிப் பட்டவள் என்ற ஆர்வம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.. இவளுக்கும் கனவுகள் இருந்தனாவா? இவள் காதலைப் பற்றி என்ன நினைத்தாள்? இவளுக்கு வாழ்க்கையைப் பற்றின கருத்துக்கள் இருந்தனவோ? அல்லது இவள் ஒரு மனிதாபிமானம் உள்ள ஒரு நல்ல ஜடம் மட்டும் தானா ? தங்கம்மாள் கதையில் வரும் நேரம் சொச்சம் என்றாலும் அவள் கதாபாத்திரத்தின் தாக்கு வலிமையோ ராட்சத்தனம். வறுமையால் விலங்கிடப்படும் அவளின் நிலமை, இல்லாததை இருக்க முடியாததை நினைத்து ஏங்கி அவள் தற்கொலை செய்யும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது . அதுமட்டுமிலாமல் காதல் என்ற பேச்சுக்கே இக் கதையில் இடமில்லை. மோகம் தான் காதலோ..அல்லது மோகத்தின் வாயிலாக எழும் பரிவு தான் காதலோ என்றும் விளங்கவில்லை. காதல் அப்படித்தான் போல. ஆசிரியர் விளக்கியிருக்கலாம்.
பொதுஜனத்தின் பயித்தியக்காரத்தனமான கலா ரசனையைப் உதறித்தள்ளிவிட்டு, தொன்றுதொட்டு வந்த சங்கீதத்தின் நலன் கருதி சங்கீதம் பாடும் ரங்கண்ணாவின் கதாபாத்திரம் மிகவும் பாதிக்கிறது. இப்பாக்கியவாங்களைப் பொதுஜனம் அலட்சியப்படுத்துவது சமூகத்தின் மூடத்தனம் என்று தி.ஜா வும் ஆமோதிப்பது ஏனோ மனசைக் குளிர் விக்கிறது. இந்நாவலைப் படித்த பிறகு சஹித்ய அகாதெமி மீது எனக்கிருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது என்று தான் நினைக்கிறேன். :D
முதன் முதலாக தி. ஜா வை படிக்கிறேன்...என்ன அருமையான எழுத்து நடை.... சிறுது கூட தோய்வில்லை...... பாபு போன்ற ஒரு கதாபாத்திரத்தை கதை நாயகனாக வைத்து கதை சொன்ன விதம்...அவன் நேசிக்கும் யமுனா, ராஜு, ரங்கன்னா போன்றவர்களின் மேன்மையின் மூலம் பாபுவின் பல கீழ்தனங்களை காட்டிய விதம்....ஒரு கதாபாத்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல்.
இந்த வருடத்தின் க்ளாசிக் வாசிப்பு. அந்நாளைய கும்பகோணம், பாபநாசம், சென்னை என்று ஊர் சுற்றி வந்த மாதிரி இருக்கிறது.
தன்னை விட வயது அதிகம் உள்ள பெண்ணை காதலிப்பதை இன்றைய சமூகமே ஆங்காங்கே தான் ஏற்று கொண்டு வருகிறது. ஆனால் இந்த புத்தகம் வெளிவந்த 1960-70 காலக்கட்டத்தில் எழுத்தாளருக்கு எப்படி தோன்றியது என்பதே ஆச்சரியம்தான். க்ளாசிக் என்பதற்கு மிகவும் தகுதியான நூல். இப்படிப்பட்ட உறவை முகம் சுளிக்க வைக்காமல் மிகவும் உணர்வுபூர்வமாக வாசகனுக்கு கடத்துகிறார்.
வாசகர்கள் அனைவரும் வைத்தியை தங்கள் தந்தையாக, யமுனாவை தங்கள் காதலியாக, ரங்கண்ணாவை குருவாக நினைத்திருப்பார்கள்.
இந்த புத்தகத்தை நான் படிக்க தொடங்கி ஒரு வருட காலமாகியும், இன்னும் என்னால் இதை முடிக்க முடியவில்லை..ஒவ்வொரு முறை இந்த புத்தகம் எடுக்கும் போதும் இந்த முறை முடிக்க வேண்டும் என்றுதான் எடுப்பேன்.. ஏனோ தொடரவே முடிவதில்லை.. தொடக்கத்தில் என்னவோ, கும்பகோணம் காபி, கோவில்கள், மல்லிகை பூ, யமுனாவின் பாதம், பாபுவின் மோகம், சங்கீதம் என்று அழகாகத்தான் இருந்தது கதையின் போக்கு.. பிறகு கதை ஏனோ புளித்துவிட்டது.. திடீர் மகிழ்ச்சி���ள், தீரா வருத்தங்கள், தவிர்க்க முடியா கடமைகள் என்று வந்த போதும், பிடித்த புத்தகத்தை இடைவெளி விட்டு தொடர்வது, என் வாழ்க்கையில் இயல்பு தான்.. அனால், இந்த புத்தகம் என் கவனத்தை எப்போதுமே ஈர்த்ததில்லை, இந்த கதை என்னை கவரவே இல்லை, ஆசிரியர் சொல்லும் விதமோ வள வளவென்று இருப்பது போலத்தான் தோன்றும்.. சொல்ல வந்ததை சொல்லுங்களேன் என்பது போன்ற பொறுமையற்ற நிலை ஏற்படும்.. இந்த நிலைக்கு நான் க��ரணமா, புத்தகம் காரணமா தெரியவில்லை.. வருங்காலத்தில் இந்த புத்தகத்தை எடுத்தால் (ஒருவேளை எடுத்தால்), வேறு வித உணர்வு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
Spectacular is the word! Even without much knowledge about formal classical music, I could read layers of meaning and depth through Thi.Ja's amazing portrayal and narration in this novel. It flows smoothly like the river Cauvery of yore. All characters were very memorable, the incidents and feelings very believable, the net result very wonderful.
I saw the film adaptation of T.Janakiraman's 'Moga Mull' ('Thorn of Desire') sometime back and liked it very much. I've wanted to watch this film for a long time, but couldn't find it before. After watching the film, I thought that I should read the book. The book is long at around 650+ pages and I'd tried reading it before and had given up after a few pages. So I tried again. This time I persisted and finished reading it yesterday.
'Moga Mull' is a love story. It is an older woman – younger man love story. It was written in the 1950s, and so for its time it was unusual and rebellious. It is also a story about music, devotion, teachers, friendship, and desire. It is very beautiful. The relationship between the two main characters Babu and Yamuna is very beautifully depicted. The friendship between Babu and his friend Rajam is also beautifully depicted. Loved these three characters but also loved most of the characters in the book, like Babu's dad, Babu's music teacher for whom music is a spiritual experience like meditation, Yamuna's mother who is such a beautiful person, the young woman next door who falls in love with Babu, the famous musician Ramu who befriends Babu and acknowledges his talent, the disciple of Babu's music teacher who is devoted to him, the old couple who become Babu's landlords later in the story, the woman who runs a foundation and who helps Yamuna – I loved these and many other characters. There were too many of them to describe here. There were no 100% good and 100% bad characters here. Nearly all of them were complex, flawed, beautiful human beings.
The whole story is filled with Indian classical Carnatic music and even if we are not familiar with the technical aspects of it, the book immerses us in it and we experience the highs that we feel in a concert. T.Janakiraman's deep knowledge of classical music shines throughout the book.
Now, the important question. Which was better, the book or the movie? What were the differences between them? I saw the movie first and I loved it, but I think the book was better. There is more space in the book to explore the relationships between different characters, to feature long conversations, to have long descriptions and philosophical musings. But having said that, the movie was wonderful and it was very well made. There were many minor and some major changes in the screenplay, but in general, the movie was faithful to the book. The movie ends with an important, dramatic scene, but in the book there are 70 more pages and much happens in those pages. Babu's friend Rajam is a minor character in the movie, but in the book he plays an important role. Also the musician Ramu plays a very minor role in the movie, and he is not really a nice guy, but in the book he is fascinating and complex. But I'm not a purist and these are all minor quibbles. The movie is wonderful and it is a great adaptation of the book. From what I know, the movie wasn't released in the theatres when it first came out, and it was screened probably only at film festivals and it won many awards.
I loved reading 'Moga Mull' and watching the film adaptation. It is one of the great classics of 20th century Tamil literature, and I'm glad I finally got to read it. I'm happy that I didn't read it when I was younger and I'm glad I read it now, because my reading taste is more evolved now and I could understand and appreciate it better now.
Have you read 'Moga Mull' or watched its film adaptation? What do you think about them?
மோகமுள் - தலைப்பே மனதை கொத்திக்கொண்டு பறந்துவிடுகிறது.
வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்வது, Living Together நடைமுறைகளை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் இந்த காலகட்டத்திலேயே இப்புத்தகம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால்; முதல் பிரசுரம் வெளியான 1964-ஆம் ஆண்டு கடுமையான தாக்கத்தையும் சர்ச்சைகளையும் உருவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
யமுனா மீது பாபு காதலில் விழுந்ததில் வியப்பேதுமில்லை; படிக்கும் நம்மையே யமுனா கவர்ந்துகொண்டு விடுகிறாள். அவள் அழகு, வயது, உரைநடை எல்லாமே நம்மை வசீகரிக்கிறது.
தஞ்சாவூர், கும்பகோணம் வாசகர்களுக்கு மனதிற்கு நெருக்கமான புத்தகமாக மோகமுள் கண்டிப்பாக இருக்கும்.
பாபுவுக்கு யமுனா மேல் ஏற்பட்ட தெய்வீகக் காதலை நாகரீகமாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஜானகி அவர்களின் எழுத்து நடை.
அந்தக் கால கும்பகோணத்துக்கும் மெட்ராஸ்க்கும் அழைத்துச் செல்லும் இந்தக் கதை.
நாவலின் இடைப் பகுதியில் சிறு அளவில் விறுவிறுப்பு குறைந்திருந்தாலும் கதையின் முடிவில் விறுவிறுப்பு அதிகரித்து, ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவுடன் முடிவது மோகமுள் நாவலின் வெற்றி.
தி ஜா வின் கதைகள் அனைத்தும் மனிதர்களின் மென் உணர்வுகளை தொட்டுச் செல்லும்... மோகமுள் நாவல் அத்தனை நெருக்கமாகக் காரணம் கதையும் கதாபாத்திர வடிவமைப்பும் மட்டும் அல்ல... கதைவழியே ஆங்காங்கே தொட்டுப் போகிற மனிதரின் மென்உணர்வுகள் தாம்.
மோகமுள் நாவல் மறைந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களால் 1956ல் எழுதப்பட்டது. முதல் பதிப்பு வெளியாகிஇன்றுடன் 60 ஆண்டுகளாகியும், காலத்தால் அழியாவண்ணம் தமிழ் புத்தகவாசிகளிடத்தில் ஒரு செவ்வியல் புதினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995ல் திரு. ராஜ ஞானசேகரன் அவர்கள் இந்நாவலைத் தழுவி திரைப்படமாக வெளியிட்டார், ஆனால் வணிக ரீதியாக இப்படம் வெற்றியடையவில்லை.
இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் பல ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. எனது 10ம் அகவையில் தூர்தர்ஷனில் இத்திரைப்படத்தைப் பார்த்ததாக ஞாபகம். கதை வாசிப்பிலிருக்கும் சுவாரசியத்தைத் திரைப்படத்தில் கொண்டுவர முடியவில்லை என்ற நிசப்தனமான உண்மை படம் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.
கதையின் மையக்கரு –
``மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு''
முதிரா இளைஞன் முதிர் கன்னி மேல் ஈடுபாடு கொண்டு, அவளை அடைய முற்படுவதும், அதன்பின் எழும் தவிப்பின் தொடர்ச்சியாக அவள் மீது விளையும் மோகம் (பொருந்தாக் காமம்) பற்றியதாகும். மோகத்தை மட்டுமே முன்னிருத்தாமல், நாயகனின் இலட்சியமான கர்நாடக சங்கீதத்தையும் முன்னிருத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.
அன்றைய சமூக கோட்பாடுகள், நடைமுறைப் பழக்கவழக்கங்களை எதிர்த்து முற்போக்கானக் கருத்தை தன் இயல்பான நடையில் ஆசிரியர் முன்னிருத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்க்கு உரியது. நாவல் வெளிவந்த காலகட்டத்தில் பல்வேறான எதிர்மறை விமர்சனங்களை நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.
கதையின் காலம் தோராயமாக சுதந்திரத்திற்கு முன்பானதாகக் (1930-1950) கொள்ளலாம். கதை சுழலும் இடம் தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்த கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள பகுதியுமாகும் (இப்பகுதி சோழர்காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டது).
கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் எனக்கு அதிகம் பரிட்சையமானதாக இல்லை, அதனால் தொடக்கத்தில் சிறிது தடுமாற்றமும் சலிப்பும் உருவானது. ஒரு கட்டத்தில் நாவலை மூடி வைத்துவிடலாமா என்ற எண்ணமும் எழுந்தது. எனினும் தி.ஜா அவர்களின் எழுத்து நடையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் தொடர்ந்து வாசிக்க முற்பட்டேன். முதல் 100-120 பக்கத்தில் தோன்றிய சிரமம், மெல்ல மெல்ல குறைந்து, நானும் கதையுடன் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினேன்.
கதையின் நாயகன் பாபு கர்நாடக இசையில் ஆர்வமிக்க 20 வயது அந்தணர்குல வாலிபன், நாயகி யமுனா மராட்��ிய வம்சாவழியில் தோன்றி பின்னாளில் தஞ்சையை உரைவிடமாக்கி வாழும் மராட்டிய-தமிழ்க் குடும்பப் பெண் ஆவாள்.
கதையில் பல்வேறு மாந்தர்கள் வந்து சென்றாலும், நம் கண் முன் மறையாமல் நிற்பது – ரங்கண்ணா, தங்கம்மா, வைத்தி, ராஜம், பார்வதி மற்றும் பாலூர் ராமு என்ற கதாபாத்திரங்களே! கதை முழுவதும் பாபுவின் பார்வையில் வருவதால், கதையில் வரும் மாந்தர்களின் இயல்பும் அவர்களின் ம��ப்போக்கும் பாபுவின் சிந்தனை ஓட்டத்தினூடே பார்க்கப்படுகிறது.
தன் சிறுவயதிலிருந்தே யமுனாவுடன் பழகிவரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளை தெய்வத்தின் உருவமாகக் கொள்கிறான். யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருவெடுக்கிறது.
கும்பகோணத்தில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு சமயத்தில் பக்கத்து வீட்டு கிழவனின்இரண்டாந்தாரமாக வரும் இளம் மனைவி தங்கம்மாவுடன் சமய சந்தர்ப்பத்தால்கூடிவிடுகிறான். பின்னர் தவறிழைத்து விட்டதாக எண்ணி வாடும் அந்நேரத்தில் தான் யமுனா மீதான காதல் அவனுக்குப் புலனாகிறது. அடுத்த நாளே நடந்த உண்மைகளை யமுனாவிடம் எடுத்துரைத்து, அவளுக்கு தான் துரோகம் இழைத்து விட்டதாகக் கூறுகின்றான். ஆனால் யமுனா தங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தைக்காரணம் காட்டி அவனை ஒதுக்கிவிடுகிறாள்.
இச்சூழலில் தங்கம்மாவும் தற்கொலை செய்துவிட தன்னுள் எழும் குற்றவுணர்வின் காரணமாக தன்னை அழித்துக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறான். தான் செய்வது தவறு என்பதை உணர்ந்தாலும், யமுனாவை தன் நினைவிலிருந்து அகற்ற இயலாமல் தவித்து வாடுகிறான்.
யமுனாவின் நிராகரிப்பால் ஏக்கமும் வலியும் அவனை இசை மீது பற்று கொள்ளச் செய்கிறது. பின் ரங்கண்ணா என்னும் இசைப் பயிற்றுவரிடம் சேர்ந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான். பின்னாளில் குருவிற்கு இஷ்டமான சிஷ்யனாகிறான். ஒரு நேரத்தில் தன் குருவும் இறந்துவிட, மனமுடைந்து நிற்கும் பாபு யமுனாவின் மீதுள்ள தவிப்பின் காரணமாக தன் உயிர்நாதமாக விளங்கிய இசைக்கலையையும் தொடர முடியாமல் வெறுக்கத் தொடங்குகிறான்.
ரங்கண்ணாவின் இறப்பிற்குப் பின்பு மெட்ராசில் பணிபுரிந்து வரும் பாபு, மூன்று வருடங்களுக்குப் பிறகு யமுனாவைச் சந்திப்பதும், வறுமையின் காரணமாக அவள் தன் இளமைப் பொலிவை இழந்து நிற்பதைக் காண்கிறான். இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு மலைக்கிறாள்.
இதுவரை யாருக்கும் பயன்படாத தன் இளமையை, இத்தனை காலம் தனக்காகஎவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுக்க விழைகிறாள். இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று கேட்பதுடன், பாபுவிடம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். இதனை மறுக்கும் பாபு, தான் முன்னர் சொல்லியது போல்அவளோடு நிரந்தரமாக வாழ நினைக்கிறான்.
நாவலின் முடிவில் இவர்களிரும் இணைவார்களாக? பாபுவின் இசைக் கலை மேன்மேலும் சிறப்புறுமா என்பதைக் கூறி முற்றுப் பெறுகிறது.
கதை மாந்தர்களுள் தங்கம்மாவின் பாத்திரப்படைப்பு மிகவும் சுவாரசியமானது.பாபுவின் மீதான தன்னுடைய (கள்ளக்) காதலுக்காக தன் உயிரை விடுகிறாள். தங்கம்மா பாபுவின் மீது கொண்டிருந்த காதலுக்கும், பாபு யமுனாவின் மீது கொண்டிருந்த காதலுக்கும் அதிக வித்தியாசமில்லால் இருந்தாலும்,தங்கம்மாவின் காதலில் அழுத்தமும், மரபை மீறிய காமமும் இருப்பதை உணர முடிகிறது. கிழவருக்குக் கட்டி வைக்கப்பட்டு, சரீர சுகம் பெறாமல் அவள் உள்ளம் அனல் மீது விழுந்தப் பனித்துளியைப் போல் தவிக்கிறது.
அதேபோல நல்லொழுக்கத்துடன் வளரும் மாந்தர் காலச் சுழற்சியில் சிக்கி, போதிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறி உடல் இச்சைக்கு பலியாவதைக் கூறுகிறார்.
ஆசிரியர் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அன்றைய சமூகத்தில் புரையோடியிருந்த பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்;
1. ஆண்களின் பலதார மணம்
2. பெண்ணுக்குப் போதிய சுதந்திரம் வழங்காமல், வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கும் வழக்கம்
3. குழந்தைத் திருமணம்
4. கலப்பு மணமும், பின்வரும் பிரச்சனைகளும்
5. தகுந்த நேரத்தில் திருமணமாகாத பெண்களின் நிலை, இரண்டாம் தாரமாக தள்ளப்படும் சூழல்
6. முதியவன் இளம்பெண்ணை மணத்தல்
7. பெண்ணுரிமை மறுக்கப்பட்டு ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் பெண் வாழ்தல்
8. பொருந்தாக் காமம்
வாசிப்பின் முடிவில் பரவசமடைந்தது முற்றிலும் உண்மை. நம்மிலிருக்கும் அந்தரங்கக் கதவுகளை மீண்டுமொரு முறைத் தட்டிப் பார்த்ததாகத் தோன்றுகிறது. கதையின் ஏதேனும் ஒரு பகுதியில் நம்மை நாமே நிலைக்கண்ணாடி முன்னிறுத்திப் பார்த்தது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. யமுனாவின் இயல்பை பாபுவின் பார்வையில் கண்டதால், அவளின் உண்மையான குணாதிசயத்தை அறிய முடியவில்லை என்ற ஏக்கம் எழுகிறது.
நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது - குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு), பாபு-ராஜம் (நட்பு), பாபு-யமுனா (காதல்), பாபு-ரங்கண்ணா (குரு சிஷ்யன் உறவு), பாபு-சங்கு (சகோதர உறவு). அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகச் தோன்றுகிறது.
ஒரு நிலையில் பாபுவிற்கு யமுனா அடையக்கூடியவளாகவும், அடைய முடியாதவளாகவும் நிறுத்தி, மோகத்திற்குரியதாக விளங்கும் அவளின் உடல் தான் வணங்கும் தெய்வத்தின் சொரூபமாய் விளங்குவதாக வேற்றுமைப் படுத்தியுள்ளார். இப்படி இருவேறு எல்லைகளுக்கு மத்தியில் அவன் உள்ளம் அகப்பட்டுச் சிக்கித் தவிப்பதை இதை விட சிறப்பாகக் கூற முடியாது என்று தோன்றுகிறது.
மாந்தர்களின் அக உலகையும், அதிலிருக்கும் சிக்கல்களையும் தனது இயல்பான பாணியில் நடை பிறலாமல் சித்தரித்துள்ளது தமிழ்ப் புதினங்களுக்குப் புதிதாக இருந்திருக்கும்.
Okay.The story is a very simple one.A boy who is who come to study in collage away from home, a son of a singer, a passionate youngster , and he does with his life.It all becomes more sensible ,complicated and difficult when he meets his past love and passion-a past that he did dare to become involved with. There is no nothingness in this story. It is a youthful, well handled,realistic story of young boy who is struggling between his passion,love,boyish feelings and society.Unlike some other T.J. novels I have READ it does not working by the perspective ,well there is certainly a social opinions told in young man's point of view but the story does not move in a way to prove it but to portray the hollowness of it.It is about a man whose world starts to fall apart when he cannot choose side between the reality,his feelings,his father,his feelings and himself-he who bound by the social opinions to his inner self.When he did overcome by his feelings and who becomes hurt when he cannot feel himself as a man from a world whose control and his beliefs he thought was eternal.Yet in this this story the world which fell apart does not become black or blocked but more clear and beautiful and clear.
A well written ,promising compelling read. WELL DONE As I SAID THIS IS NOT PLOT OR GENERALIZED PERSPECTIVE.IT IS ABOUT TRUTH, REALITY AND A FAILURE OF IT.
F-A-N-T-A-S-T-I-C. Finally completed this classic which runs over 800 pages. Really liked the Janakiraman's style and the way he took us through the few years in the life of Babu and Yamuna.
Mohamul is a sort of coming-of-age story about Babu and the people who played an important part in his life. It's set in 1930-1940s Kumbakonam, Papanasam and Thanjavur region. The novel is fairly long (663 pages) and describes in so much detail how day to day life was, the festivities, the family dynamics, social issues and most importantly the finer aspects of learning music. Ultimately Babu discovers his life mission and takes steps to be the best in music the way he wants to be and the ending was heartwarming.
Personally I totally loved reading the book. As someone who spent summer holidays and early parts of my career around Thanjavur district the novel was a treasure trove of information. It took me to a time and place that was as serene as the Cauvery that flows around Kumbakonam. It revived nostalgia and brought plenty of childhood memories about the divine temple town. As someone who is in the same age as Babu was at the end of story I could relate to the problems he was facing in his life. Overall there was a feel-good aspect to the story.
1950 களின் கும்பகோணம், தஞ்சாவூர் , பாபநாசம்,சென்னை என்று பல தரப்பட்ட மணிதர்களுடன் சிறிது நாட்கள் வாழ்ந்து வந்தது போன்று இருந்தது இந்த நாவலை வாசித்து முடித்தபோது.
பாபு, யமுனா, ராஜம்,வைத்தி, ரங்கன்னா , பார்வதி , ராமு,தங்கம்மா இப்படி பட்டியலிட்டால் இந்த நாவலில் வரும் அனைவரது பெயரையும் என்னால் கூறி விட முடியும் அந்த அளவு ஒன்றி படித்துமுடித்தேன்.
மிக பழைமையான, பிரபலமான வெளிவந்த நாள் முதல் தற்போது வரை பலராலும் படிக்கபட்டு , பாராட்டபட்டு , விமர்சிக்கபட்டு , படமாகவும் எடுக்கபட்ட நாவல் இது.
மணிதர்களின் பலம்,பலவீனம், கோபம்,பகை,பெருமை,சிறுமை, மகிழ்ச்சி, வருத்தம், செழிப்பு,வறுமை,காமம்,ஞானம் என அனைத்தையும் பல கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு காட்டியிருக்கிறார் தி.ஜானகிராமன் அவர்கள்.
காலம்கடந்து வாசித்தாலும் இப்போதும் ரசிக்க வைக்கிறது இந்த புத்தகம் 👌👌👌
Reading this Novel is my life time Goal & Achievement
This novel is ahead of its time. Even today this characters cannot be recognized by this sick society.
ThiJa is a man who had different vision and idea about the life.He had the guts to write the fact of life. He had proven that life is different than the so called rules and barriers of the society.
சிலவற்றை சொல்லி புரியவைக்க முடியாது. அனுபவித்தால் தான் அதன் இன்பம் கிடைக்கும்.
மோக முள் என்னை குத்தவே இல்லை. மயில் இறகாய் என் நெஞ்சை வருடிவிட்டு சென்றது. இரு வாரங்கள் பாபுவுடன் நான் வாழ்ந்து உள்ளேன் (நூலை படித்த காலம்). ஆனால் இந்த வாழ்வு என் மனதில் நீங்கா இருக்கும் என்பது திண்ணம்.
இருநூற்றி நாப்பத்தெட்டு எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழியில் அந்த எழுத்துக்களை பயன்படுத்தி எத்தனையோ லட்சம் வார்த்தைகளை உருவாக்கலாம் . அத்தனை வார்த்தைகளையும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்தி கோடிக்கணக்கான வாக்கியங்களை உருவாக்கலாம் . அப்படி உருவாக்கப்படும் வாக்கியங்களில் சில வாக்கியங்கள் கவிதைகளாக , கதைகளாக புத்தகங்களில் இடம்பிடிக்கும் , பாடல் வரிகளாக , உரையாடல் வரிகளாக வெள்ளித்திரையில் மின்னும் , சில வரிகள் வரலாற்றையே மாற்றும் , இன்னும் சில வரிகள் சொல்லவேண்டியவர்களின் மனதிலிருந்து சாதரணமாக வந்து கேட்பவரின் மனதை கொல்லும் , எப்படி பார்த்தாலும் வாக்கியங்களின் சக்தி என்பது அது அமையும் பொருட்டிலே உள்ளது . அப்படி வாக்கியங்களை அமைக்கும் வித்தையடைந்தவர்கள் சிலரே . அந்த சிலருள் சிறப்பானவர் ஜானகிராமன் . நாவலை படிக்கும் போதே மெல்லிய ராகம் பின்னனியில் கேட்டுக்கொண்டே இருப்பது போன்று ஒரு உணர்வு நமக்கு இருக்கிறது (என்ன ராகம் என்றெல்லாம் கேட்காதீர்கள் ).மோகமமுள் நாவலை பொறுத்தவரை அது ஒரு யாரும் எழுதாத கதையோ , புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உரைநடையோ , கற்பனையோ , கலையோ என்றெல்லாம் இல்லை . உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் உங்க தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவனின் கதை அது . அப்படியிருந்தும் இந்த நாவல் இத்தனை அற்புதமாக இருப்பதற்கு காரணம் என்பது ஆசிரியரின் வித்தை மட்டும் தான் . நாவலை தர்க்க முறையில் கூட அணுகமுடியாது அளவு புனிதமாக இருப்பது என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது . நாவலின் கதாபாத்திரங்கள் எதுவும் இதிகாச தன்மையுடன் சமூகத்தில் தனித்தோ , அல்லது சமூகத்தின் உச்சாடனத்தில் இருப்பது போன்றோ இல்லாமல் இருப்பதே ஒரு தனி சிறப்பு (ரெங்கன்னா கதாபாத்திரம் இதிகாச தன்மையுடன் இருந்தாலும் அதற்கும் ஒரு முடிவு இருக்கும் ) . என்னுடைய இத்தனை வருட வாசிப்பனுபவத்தில் கலையை மையமாக கொண்ட ஒரு நாவல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான போட்டியோ , பொறாமையோ , அகங்காரமோ , பழிவாங்களோ இல்லாமல் இருக்கும் நாவல் இது தான் . அதே மாதிரி கலையை மோகத்துடனோ , போகத்துடனோ தொடர்பில்லாமல் அர்ப்பணிப்பும் அதன் மேல் இருக்கும் ஆர்வத்தை பற்றி பேசுகிறது என்பது இன்னொரு தனி சிறப்பு (போகமும் , மோகமும் இல்லாத கலை ஏது என்பது இன்னொரு நாளைக்கான விவாதம் . ) மோகமுள் என்கிறஇந்த தமிழ் நாவலை(மொழிபெயர்த்தால் கண்டிப்பாக நாவலின் அடிநாதம் கெட்டுவிடும் )தமிழ் வாசகனாகிய நீங்கள் இது வரைபடிக்காமல் இருந்தால் பாவம் செய்தவர்கள் நீங்கள் என்று எடுத்து கொள்ளுங்கள் , பார்த்தவுடன் படிக்க ஆரம்பித்தால் தங்களின் புண்ணிய கணக்கை அனுப்பிவைக்க தொடங்கிவிட்டிர்கள் என்பது பொருள் . இன்னும் ஆயிரம் மடங்கு பேசப்படவேண்டிய நாவல் இன்னும் லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படவேண்டிய நாவல் இன்னும் கோடிபேரின் கைகளுக்கு செல்ல வேண்டிய நாவல் இந்த மோகமுள் .
“உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார ஸ்ருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ��தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.”
“என் ஞாபகங்கள், ஆசைகள்,நப்பாசைகள்,நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ,பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாற வேண்டும் என்று விரும்பினேனோ எல்லாமாக சேர்ந்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறேன்” என்று கதையின் பின்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார். 1950 களின் கும்பகோணம்,பாபநாசம்,தஞ்சாவூர்,சென்னையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். 3 இரவில் இதை படித்து முடித்தேன்,ஆனால் நெடு நாட்கள் இதனோடு பயணித்த ஒரு இணக்கம்.
பாபு தன்னைவிட பத்து வயது மூத்தவளான யமுனாவின் மீது மோகம் கொள்கிறான். இதற்கு எதிராக எப்போதும் போல நம் சமுதாயக் கோட்பாடுகள். ஆனால் அது மட்டுமல்ல கதை! காதல்-இசை, தந்தை மகன் உறவு,நட்பு,சகோதர வாஞ்சை,குரு பக்தி,இசை தேடல்,காமத் தேடல் என பல நுண் கதைகள். இவை எல்லாவற்றையும் மீட்டும் இசையாக மோகம்.ந��ன் எதிர்பாராத முடிவு தான்,அது காலத்தின் வெற்றியா? யமுனாவின் நேர்மைக்கான வெற்றியா? பாபுவின் மன உறுதிக்கான வெற்றியா? இசையின் வெற்றியா?மோகத்தின் வெற்றியா?என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.என்னை பொருத்த வரையில் இது தி.ஜாவின் வெற்றியே!!
"காதல்","இசை" என்ற இரு ஆழ்கடலில் நம்மை நீந்த விடுகிறார். சமுதாய கோட்பாடுகளாக வரும் தடைகளை கடந்து கரை சேருமிடத்தில் காதலும் இருக்கும், இசையும் இருக்கும்!
பாபுவிற்கு தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணிடம் ஒரு "Crush". பொதுவாக ஆசிரியர் ஜானகிராமனுக்கு மனிதனின் மென்னுணர்வுகளை தொட்டுச்செல்லும் கதையமைப்பில் ஆர்வமுண்டு. என் முதல் வரி கொச்சையாக இருக்கக்காண்வீர். நீங்கள் அப்படி நினைத்தால் just imagine, ஆசிரியர் இதை 800 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார். இதை அவர் தெரிந்தே செய்கிறார். ஏனென்றால் எந்த இடத்திலும் இக்கதையை காதலோடு பொறுத்தவில்லை. மோகத்தை மையமாய் கொண்ட கதை இது. மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று பாரதி இரண்டு வரிகளில் சொன்னதை 800 பக்கங்களில் சொல்கிறார் ஆசிரியர். பெண் பிள்ளை என்றாள் கலியாணம் தான் பிறவிப் பயனோ? என்றிருக்கும் யமுனா ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்விக்குறியாய் இருக்கிறாள். அப்படியே 40 வயதும் கல்யாணம் ஆகாமலே கழிந்துவிடுகிறது. இடையில் சோற்றுப்பிரச்சனைவேறு. சூழ்நிலை கைதியாய் இருக்கும் யமுனா, அதை பயன்படுத்திக்கொள்ள தயங்காத பாலு என்று கதை ஒரு average மனிதனின் சுபாவம் சொட்ட அமைந்துள்ளது. 1930 இல் இருந்த மெட்ராஸ், கும்பகோணம், மற்றும் தஞ்சை நகரை கண்முன்னே காட்டும் ஆசிரியர் சில நேரங்களில் பாமர சங்கீத ரசிகர்களை முட்டாள் என label குத்தி உண்மையான கர்நாடக சங்கீதத்தை கர்நாடகமாக lecture கொடுக்கிறார். மொத்தத்தில் பாபுவோடு travel செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.
இசை, கதை நகர்வில் ஒரு மாபெரும் பங்கு வகிக்கின்றது. திஜா நிச்சயமாக இசை ஞானம் உள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இசைக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். ஒவ்வொருமுறை பாபு மனதின் கட்டுப்பாடு இழக்கும்போது இசை அவனை எப்படியோ கரைச்சேர்த்து காக்கிறது, உணரவைக்கிறது என்பதை அருமையாக எழுதியிருக்கிறார்.
திருமணங்களில் வயது இடைவெளி என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது இன்று. ஒருவேளை திஜா இன்று இருந்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பாரோ என்னவோ. ஆனால் அனைவரும் யோசிக்க மறக்கின்ற அல்லது கலந்துபேசாத ஒரு கருவொன்றை விட்டுச் சென்றிருக்கிறார் - Sexuality. ஒரு வயதுவரைத்தான் பெண்களுக்கு அது கிளுகிளுப்பை கொடுக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படியல்ல. திஜா இதை மேலும் explore செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாரோ என்னமோ. ஒருவேளை அக்காலத்தில் இவ்வளவு எழுதுவதே புரட்சிகரமான ஒன்று, இதற்க்கு மேலே எழுதினால் ban செய்துவிடுவான்கள் என்று விட்டுவிட்டாரோ?
கதையின் நாயகி, யமுனாவின் பாத்திரத்தோடு வெகுவாக ஒப்பிட்டுக்கொள்ளமுடிகிறது என்னால். ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்திருக்கிற பெண்ணாகவோ இல்லை வியாபாரம் செய்யும் பெண்ணாகவோ இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.