வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள் தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும் சூழலாலும் விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொள்கிற, விட்டுக்கொடுக்கிற ஒரு எளிய திறந்த மனத்தைக் காப்பாற்றிச் செல்ல முடியமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும். -வண்ணதாசன்
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
தான் செய்ததவறை மன்னிக்க ஒரு உயிர் இருந்தால் எப்படி இருக்கும். அந்த மன்னிப்பு அவனுக்கு தந்த ஆறுதல் என் என்று சொல்வது..
மனுஷா மனுஷா தான்
சிறுகசிறுக
தான் வாழ்நாள் முழுவதும் சிறுகசிறுக சேமித்த நம்பிக்கையேன்னும் பொக்கிஷத்தை ஒரு செயல் கொண்று புதைத்து விடுகிறது. மலையப்பன் நானும் நீங்களுமாக இல்லாமல் இருப்பதே மேல.
பெண்கள் கூடி பேசும் வீட்டில் ஒரு பொது வெளி
சேவலுக்கு என்றெ ஒரு மதில் சுவர்.
அப்பன் இருந்த போது இருந்த செடிகளும் , பறவைகளும்
நம்மை இந்த வாழ்வின் மீது பேர் ஆனந்தம் கொள்ள செய்யும்!!
இந்த வகை எழுத்து எனக்கு ரொம்பப் புதியது. முதல் இலக்கிய ரக வாசிப்பென்றுகூட சொல்லலாம். வண்ணதாசன் அண்ணாச்சி சொல்லியிருந்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிற மனிதர்களும் அவர்கள் ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களுமே இந்த ‘மனுஷா மனுஷா’...! நகர வாழ்க்கைக்குக் பழக்கப்பட்டவர்கள் இம்மாதிரியான உறவுகளையும் நேசங்களையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.எனக்கு சில இடங்களில் கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது.இன்னும் நிறைய வாசிப்பனுபவம் வேண்டுமென நினைக்கின்றேன்.