ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்... அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் தந்தை நேசக்குமாரன் தன் வரலாற்றை ஒரு சிறையிலிருந்து எழுதுவதாக அமைகிறது.
Shobasakthi lives in France. He is a Sri Lankan Tamil refugee and a former LTTE child-soldier. He has published two novels, a collection of short stories, three plays and many essays. His first novel, translated in English as Gorilla, was published to immense acclaim. For the last twenty years, he has worked as a dishwasher, cook, supermarket shelver, room boy, construction worker and street sweeper, among other things. He blogs at www.satiyakadatasi.com.
தமிழ் ஈழ பின்னணி கொண்டு நான் வாசிக்கும் முதல் நாவல் என்று சொல்லாம். நாவல்கள் என்ன செய்யும்? நம்மை ஒரு உலகில் சஞ்சரிக்க செய்து, அதனூடே நம்மை ஆட்படுத்தும். இந்நாவல் பல உன்மை சம்பவங்களின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாருவிற்க்கு பிறகு நான் இரசித்த நான் லீனியர் எழுத்து இது.
நாவல் முடிந்த பின்பு மனதின் ஆழம் வரை வலி வேரூன்றி இருந்தது, ஏன் இந்த போர் , சமய பற்றோ, சாதியோ ஒரு சாமானியன் மீது எவ்வாறெல்லாம் பாய்கிறது, வன்மம் எங்குமே விறவிருக்கிறது. துரோகம், குரோதம் மனிதனின் ஆகச் சிறந்த எதிரி.
மனித எச்சங்களை தான் சுமந்து கொண்டு திறிகிறோம். ஈழம் சார்ந்து எத்தனை அரசியல், ஆனால் சாமானியன் செத்து மடிவதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இக்குறு நாவலை வாசிக்க நேர்ந்தது ஒரு விபத்து. விபத்தின் மூலமே ஒரு புத்தகப் பிரியன் ஆகிவிட்டேன். நான் இலங்கையன் என்பதால் இப்புத்தகத்தின் கருவினால் ஈர்க்கப்பட்டேனோ என்னவோ தெரியவில்லை !
இருப்பினும் சினிமாக்களில் மட்டும் நான் கண்ட நான் லீனியர் திரைக்கதையை ஒரு புத்தகத்தின் மூலம் உணர்ந்தது இதுவே முதல் முறை.
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து இறுதிப் பக்கம் வரையில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை , ஈழப்போராட்டம் மட்டுமன்றி கடைசி பக்கத்தில் இருந்த முடிவில்லாத ஒரு திருப்பமும் கதைசொல்லி ஷோபாசக்தியின் ரசிகன் ஆக்கி விட்டது 🖤
தமிழீழம் பற்றிய நூல்களை படிக்க வேண்டும் என்கிற முனைப்பில் வெகு நாட்களாய் தேடிக் கொண்டிருந்த போது, ஜெயமோகனின் ஈழம் சார்ந்த கட்டுரைகளில் ஷோபா சக்தி என்னும் எழுத்தாளர் எனக்கு அறிமுகம் ஆனார். பிறகு, இவரது " சுண்டி வீரன் " மற்றும் " BOx " என்னும் நூல்களை வாங்க ஆசைப்பட்டு " ம் " என்னும் தலைப்பிலும் மற்றும் ஒரு சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்; அவளது தந்தை ஒரு போராளியாய் என்ன செய்ய போகிறார் ? என்ற மூலக்கதையில் ஈர்க்கப்பட்டு வாங்கி விட்டேன்.
கதை சொல்லியாக; நான் தேர்ந்தெடுத்து வாங்கும் நூல்கள் என்னை திருப்தி படுத்தியே தான் இருக்கிறது. இதுவும் கூட அப்படிதான், நேரான பாணியில் இல்லாமல் NonLinear முறையில் கூறி; முடிவில் ஏன் ? எதற்கு ? இப்படி என யோசிக்க வைத்து அமைதியில் முடிந்தது. இதில் கூறப்பட்டுள்ள; எது புனைவு, எது வரலாற்றுப் பின்னணியில் இருக்கிறது, எது பயங்கரவாதத்தின் உண்மை என படித்து முடித்த கையோடு தனியே நம்மை தேடவும் வைத்து விடுகிறார். வெலிக்கடை படுகொலை, மட்டக்களப்பு சிறை உடைப்பு போன்ற சம்பவங்கள் எல்லாம் பரப்பப்பூட்டுவதை தாண்டி அதனோடு ஈடுபடுத்தி நகராது மனதில் பதிந்து விடுகிறது. நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கொடுமைகளுக்கு நடுவில் வரும் இந்த வேலைக்கார சிறுவன் இராசேந்திரன் போராளி ஆன கதை, பின்; மாய்ந்த கதை என இந்த பகுதி என்னை மிகவும் பாதித்த பகுதி. கண்முன்னே அச்சிறுவனின் சடலம் மிதந்தது போல ஒர் உணர்வு.
சில பிடித்தமான வரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால்;
" இருட்டுக்குள் வெள்ளைப் புள்ளிகளாக அவர்கள் சிறையின் நான்கு திசைகளிலும் பரவினர் " சிறுபான்மையினராய் தெரிந்தாலும் இவர்கள் ஒற்றுமையில் ஏனோ, பெரும்பான்மையினரே !!
படகிலே பயணம் செய்து கொண்டு உரையாடுகிறார்கள்; " ஆறு மறுபடியும் இருண்டபோது நான் விடுதலையை அதன் முழு அர்த்தத்தோடு அனுபவித்தேன் " " என்னால் கேட்கமுடிகிறது, மீன் பாடுகிறது " " சுதந்திரம், புதியவாழ்வு, புத்துணர்ச்சி "
ஒரு வாசிப்பைவிட, நீண்ட நாளுக்கு பிறகு மறுமுறை இதை கண்டிப்பாய் வாசித்தால் இன்னும் சற்று புரிதல் ஏற்படாம் !!
சமீபத்தில் நீலம் இலக்கிய இதழில் வெளியான மூமின் என்ற சிறுகதை மீண்டும் ஷோபாசக்தியின் படைப்புகளை வாசிக்க தூண்டியது. இப்புதினம் ஒரு போராளியின் சிறைக்குறிப்புகளின் ஊடே ஈழப்போரின் கருப்புப்பக்கங்களான கருப்பு ஜூலை மற்றும் இன்ன பிற சுவடுகளையும் கடந்து செல்கிறது. ஆனால் என்னால் இப்புதினத்தின் மையக்கரு கண்ணடைய இயலவில்லை.இச்சா தந்த தாக்கம் இதில் இல்லை.
ஆசிரியரின் கதை நாயகர்கள் உயிருடன் வந்து போகிறார்கள். ஒரு போரில் உயிர் எந்தளவு கீழ்த்தனமாக நடத்தப்படுகின்றது என்பதும்.இதனால் எத்தனை கதைகள் உலகறியாமல் மறைக்கப்படுகிறது.
"ம்" அப்பறம்... போர்க்களப் புரிதல்கள், நிஜப் புனைவுகள், நிதானமிழக்க வைக்கும் தமிழ் சகோதரர்களின் உயிரிழப்புக்களும்,படுக்கொலைகளும். சொந்த பூமியிலேயே வேற்றுக் கருத்துக் கொண்ட சக இன சகோதர்களால் அரங்கேற்றப்படும் பழிவாங்கல்கள் என்று தன் கதை வாசிப்பவர் மனோநிலையில் நினைவுத் தழும்பு ஏற்படுமாறு "ம்" நாவலை ஆக்கி உள்ளார் ஷோபா சக்தி. கதை ஐரோப்பாவில் வாழும் ஒரு அகதியின் மகளான நிறமி என்ற சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணம் யாரென்ற கேள்விக்கு விடை தேடும் படலமாக துவங்குகிறது.கதைப் போக்கு முழுவதுமாக நிறமியின் தந்தை நேசகுமார��ின் சுயசரிதை அவரின் வாழ்வியல் வடுக்கள் பற்றி எதார்த்தமாகவும் வேகமான மொழி நடையிலும் நகர்கிறது.வேகமான மொழி நடை வாசகர்களை கதையோடு உறவாட வைக்கிறது. நேசகுமாரனை பொருத்தமட்டில் தனது இளம் வயதில் அவனது அப்பா அவரின் கனவுகளை மகனின் தலையிலேற்றி பாதிரியார் கல்வியை கற்க கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கிறார்.அவனோ இயக்க பிரச்சாரங்களால் கவரப்பட்டு தன் முழு நேர இலக்காக புரட்சியை ஆக்கிக் கொள்கிறான்.தன் புரட்சி இயக்கத்தின் இலங்கைக்குரிய தலைமை இறக்க தன்னுடைய புரட்சி இயக்கத்தின் நடைமுறைகளை அறியாத நேசகுமாரன் தவறான செயல் யுக்திகளை அரங்கேற்றி பொலிசாரிடம் மாட்டிக் கொள்கிறான் பின் அடி தாங்க முடியாமல் தன இயக்க தோழமைகளை காட்டியும் கொடுக்கிறான்.பின் போலிசாரிடமிருந்து பனாங்கொடுவ இராணுவா முகாமில் அடைக்க படுகிறான். பிறகு வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டமை,பாரிய தமிழின சுத்திகரிப்பிலிருந்து உயிர் தப்பியமை,சிறையுடைத்து சுதந்திர காற்றை சுவசித்தமை மீதிக்கதை.பிறகு நடந்தவையே இந்த நாவலுக்கு கருவாக அமைந்த நிறமியின்(நேசகுமரனின் மகள் ) கர்ப்பத்துக்கான கேள்வி, அதுவே நாவலின் தொடக்கமும்.அதற்கான விடையே இந்த நாவலின் இறுதி அத்தியாயம். எவ்வாறிருப்பினும் ஒரு தமிழ் போராளியின் வாழ்வியல் வடுக்களை கூற வேண்டுமென்றால் அவரிலிருந்தே கருவை உருவாக்கி இருக்கலாம்.ஆனால் ஒரு சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணத்தை தேட நேசகுமாரனை பகடையாக்கி அவரைப் பற்றியே முழுவதும் பேசுதல் என்பது கதைக்கும் கருவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையோ என்று தோண வைக்கிறது.இது நடந்து செல்ல வேண்டிய இடத்திக்கு விமானத்தில் சென்றது போல தலையைச் சுற்றி மூக்கை தொடுதல் உணர்வையே ஏற்படுத்துகிறது. கதையின் முதல் மற்றும் நடுப்பாதி என்பவை ஜெட் வேகத்தில் சென்றாலும் கதையின் கிளைமெக்ஸ் அன்ன நடை தான் போடுகிறது. அவர் கதை ஆரம்பிக்க முன் கூறிய யாத்திரகமம் 14:11(எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டு வந்தீர்) இன் ஆழத்தை கதை முடிவிலே பதிய வைத்து விடுகிறார். ஆனால் என்னால் எல்லாம் இந்த மனிதரை போல் ஒரே கோட்டில் தான் வளர்ந்த சூழலை சாடியும் ஆதரித்தும் விமர்சிக்க முடியாது.அற்புதத் திறமை...
ஒரு சுவாரஸ்யமான தலைப்பில் எழுதப்பட்ட இந்த நாவலின் கதை மனதை பதைப்பதைக்கும் உண்மை நிகழ்வுகளின் ஊடே பயணிக்கிறது.
ஒரு கொடூரமான போர்களத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையும் அதிலிருந்து ஒரு போராளி ஆதிக்க பலத்தின் பிடியில் எப்படி நசுக்க படுகிறான் என்பதையும் இந்த கதையின் மூலம் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் சோபா சக்தி. இது மாதிரியான பலதரப்பட்ட கதைகளை உலகம் 'ம்' கொட்டி கேட்டு கொண்டு மட்டும் தான் இருக்கிறது என்பதை ஒரு குமறலாகவே பதிக்கபட்டிருக்கிறது .
ஆரம்பத்தில் இருந்து நிறமி என்ற தன் மகளின் கதையாக எழுத தொடங்கி முடிவில் வக்கிரமான ஒரு தந்தையாக தோன்றும் நாயகனை எப்படிப்பட்ட மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும். அவன் வாழ்வின் முழுதும் தொடர்ந்த சித்திரவதைகளும் கொடுமைகளும் அவனுக்கு அது போன்றதொரு மனப் பிறழ்வை ஏற்படுத்தி இருக்கும் என்று மட்டும் தான் என்னால் யோசிக்க முடிந்தது. முடிவு குழப்பமானதாய் இருந்தது.
கதை ஸ்ரீலங்காவின் ஒரு கடலோர கிராமத்தில் தொடங்குகிறது. ஒரு போராளியாக வாழ்கையை தொடங்கும் நாயகன்(?) போராட்டக் களத்தில் தோற்று எதிரிகளிடத்தில் சிக்கி கொண்டு அடையும் சித்ரவதைகளையும், கதை பயணிக்கும் திசையில் காணும் கொடூரங்களையும் இயல்பான எழுத்துக்களால் பதிவேற்றி இருக்கிறார். முற்றிலுமே அந்த நாட்டில் எங்கோ யாரோ ஒருவருக்கு இது போன்ற கொடுமைகள் நடந்திருக்கும் சாத்தியங்கள் இருப்பதால் இக்கதையில் வரும் சம்பங்களை வெறும் கற்பனைகளாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் கதையாக நினைத்தாலே பதறும் மனம், இவைகளை உண்மை நிகழ்வாக நினைக்கக் கூட முடியவில்லை.
இது அந்த நிலவாழ் மக்களின் போர்க்கால வாழ்கை நிலையை உணர்த்தும் அருமையான புத்தகம்.
ചിതറി കിടക്കുന്ന ചിന്തകൾ. ഓരോ പാരഗ്രാഫിനും തലക്കെട്ടുമായി വരുന്ന ആഖ്യാനരീതി ആദ്യം കല്ലുകടി തോന്നുമെങ്കിലും സത്യത്തിൽ അക്ഷരങ്ങൾ മാത്രം ചേർത്തെഴുതുന്ന കലാപ-രാഷ്ട്രിയ-ക്രൂര അവസ്ഥകളിലെക്ക് വഴുതി വീഴുമ്പോൾ അവ വായിക്കാവുന്ന, വായിച്ച് പേടിക്കാവുന്ന ഒരു പുസ്തകമാവുന്നു. ഓരോ തലക്കെട്ടുകളും പറഞ്ഞ ഓരോ സംഭവവും ദുസ്വപ്നമായി പോലും വരല്ലെയെന്ന് ആഗ്രഹിച്ചുപോവും.