Jump to ratings and reviews
Rate this book

பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

Rate this book
'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்தூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.

200 pages, Paperback

First published December 1, 2001

54 people are currently reading
536 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books230 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
111 (54%)
4 stars
71 (35%)
3 stars
14 (6%)
2 stars
4 (1%)
1 star
2 (<1%)
Displaying 1 - 30 of 30 reviews
Profile Image for Thirupathi Mani.
16 reviews3 followers
July 9, 2021
இந்த புத்தகத்தை படிக்கும் போது அடிக்கோடிட ஆரம்பித்தால் 80% மேல் அடிக்கோடிட வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அவ்வளவு தகவல்கள் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார் தொ. ப.
அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக கடந்து போகக்கூடிய (குறிப்பாக சாதிகள், பெண்கள், சிறு தெய்வங்கள் ) பலவற்றின் வரலாறுகளை சங்க இலக்கியம் வாயிலாகவும் கள ஆய்வின் வாயிலாகவும் மிக எளிமையாக எடுத்துரைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் தொ. ப🙏
நிச்சயம் ஒவ்வொரு தமிழரும் வாசிக்கப்படவேண்டிய புத்தகம்....
Profile Image for Vivek KuRa.
281 reviews52 followers
September 22, 2022
குறைந்தது 300 வரிகளையாவது என்னை அடிக்கோடிடவைத்து பிரமிப்புக்குள்ளாகிய மற்றும் ஒரு தொ.ப வின் நூல். அறியப்படாத , மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட ,மறைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட சமூக மரபுகளையும் தோண்டி எடுத்து நமக்கு தருகிறார் .மற்றும் , நாம் இன்று "இந்து மதம்" என்று அழைக்கும் ஒன்றின் அஸ்திவாரத்தையே தன் கள ஆய்வுகளின் மூலமாக கிடைத்த அசைக்க முடியாத ஆதரங்களினால் அசைத்துவிடுகிறார்.

பழம்தமிழரின் உணவுமுறை , உடை ,உறவுகள் ,சடங்குகள் , நம்பிக்கைகள் வியப்பு . இன்று இந்தியாவில் அனைவரையும் இந்துக்கள் என்ற பரந்த தூரிகையில் துலக்கும் (Broad Brushing & Stereotyping) முயற்சியில் இருப்போருக்கு இந்நூல் ஒரு சவாலாகவும் , விடை கோரும் ஒரு கேள்வித்தாளாக கண்டிப்பாக அமையும்.

திணிக்கப்பட்ட மாற்றங்களாலும் ,மாற்றி எழுதப்பட்ட வரலாற்றினாலும் காலப்போக்கில் எப்படி உண்மை , மனித பிரக்ஞையில் இருந்து மறைந்துவிடுகிறது என்ற ஆபத்தை இந்நூல் கண்டிப்பாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

கண்டிப்பாக படிக்கவேண்டிய மாற்று ஒரு தொ.ப வின் நூல்.
Profile Image for வானதி வானதி.
Author 35 books61 followers
April 9, 2024
மின்னங்காடியின் இந்த பதிப்பு மிகவும் அதிகமான சொற் பிழைகளுடனும், பல இடங்களில் பொருட் பிழைகளுடனும் இருக்கிறது. ஒரு நல்ல நூலை வாசிக்கும் அனுபவத்தை எல்லா விதங்களிலும் இது தடுக்கிறது.
புத்தகத்தை பொறுத்தவரை இது ஒரு அரிய பொக்கிஷம். இதில் தொ.ப பேசும் பல விஷயங்களை நாம் ஆச்சரியத்துடன் வாசிக்கிறோம். அருமையான புத்தகம்.
Profile Image for Sharavanan Kb.
35 reviews27 followers
February 2, 2021
தொ.பரமசிவனின் மறைவிற்கு பிரபலங்களின் இரங்கல் மூலம் அவர் யார் என்று அரிய ஆர்வம் வந்தது , கின்டில் புத்தக தேடலில் அவரின் நேர்காணல்களின் தொகுப்பு ஒன்று வாசிக்க கிடைக்க அதை சிறிது படித்த பின் அவரை பற்றி தெரிந்துகொள்ள யூடியூப் ல் தேடினேன் அவரின் நேரடி விடியோக்கள் மற்றும் அவரை பற்றிய பல கானொளிகளை அதில் காணமுடிந்தது , அதன் கருத்துக்கள் பகுதியில் என்னை போலவே பலரும் அவரின் மறைவிற்கு பிறகே அவரை தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவரை பற்றி அவருடன் மதுரையில் பேராசிரியராக பணியாற்றிய கு.ஞானசம்பந்தர் அவர்களின் ஒரு விடியோவில் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலின் சிறப்பை பற்றி கூறியிருந்தார் அதை தொடர்ந்து அந்த புத்தகத்தை தேடி படித்தேன்.

நான் படித்த முதல் ஆய்வு நூல் இது , ஒரு குறிப்பிட்ட வட்டதிற்குள் அடங்காமல் பரவலான தொன்மையான விஷயங்களை பற்றிய ஆழமான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

ஏர் பிடித்து வேளான்மை செய்ய தேக்கி வைத்திருக்கும் நீரே ஏரி, கன்னுக்கு எட்டிய வரை நீரிருக்கும் இடம் கன்மாய் , குளிக்க பயன்படும் நீருள்ள இடம் குளம், ஊர் மக்கள் நீர் தேவைக்கு பயன்படும் கினறு ஊரனி .

எள்ளில்லிருந்து பெறப்படும் நெய் எள் நெய் இதுவே நாளைடைவில் மறுவி எண்ணெய் என்றானது .

செக்கில்லிருந்து எண்ணெய் ஆட்டி விற்பவரை செக்கார் என்று அழைத்தனர் இதுவே பின்னர் செட்டியார் என்று மாறியது.

வேலைக்கு ஊதியமாக சம்பா நெல்லும் உப்பளத்திலிருந்து உப்பும் தரப்பட்டதால் சம்பளம் என்று பெயர் வந்தது . சோழர் காலத்தில் உப்பின் விலை நெல்லின் விலைக்கு நிகராக இருந்தது.

உரலும் உலைக்கையும் பயன்படுத்தும்போது தானியங்கள் கிழே சிந்தாமல் இருக்க அதன் அடியில் வைக்கும் ஒரு பாத்திரத்தின் பெயர்தான் குந்தானி .

தொழிற்சாலையிலிருந்து விடுபட்ட வசிப்பிடமே வீடு என்று அழைக்கபட்டது.

தம்முடைய அப்பன் என்பதை தம் அப்பன் என்று கூறுவது மருவி தகப்பன் என்றானது, தன் ஆய் தாயாகியது.

தன் அக்கா என்பது தமக்கையாகவும் , தன் ஐயன் என்பது தமையனாகவும் , தன் பின் பிறந்தவன் தம்பியாகவும் ஆனதாம்.

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பின்னுள்ள அர்த்தத்தை விவரிப்பதுடன் சிறு தெய்வ வழிப்பாடு , பெருந்தெய்வ வழிப்பாடு , தமிழகத்தில் புத்த, சமண வைனவ , சைவ மதங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி , பிராமணம் , பார்ப்பனர்கள், பறையர்கள், பள்ளர் , சக்கிலியர் போன்ற சாதிகள் கடந்து வந்த பாதைகள், ஒடுக்கபட்டோர் வாழ்க்கையில் மதங்கள் மற்றும் ஆலயங்கள் ஏற்படுத்திய தாக்கம், அழகர் கோவில் பற்றியும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பற்றியும், ஆண்டாள், மதுரை மீனாட்சி பற்றிய செய்திகள் என பலப்பல விஷயங்களை நாம் அறிய தந்திருக்கிறார் தொ.ப.

அனைவரும் படிக்க வேண்டிய தகவல் களஞ்சியம் இந்த நூல்.
16 reviews
January 10, 2018
One of the must-read books to know about the reasons behind the certain customs among the Tamil people. Tho.Paa presented the book with detailed research about their practice which will help to understand the Tamil community roots.
Profile Image for Amara Bharathy.
46 reviews6 followers
August 17, 2020
தமிழர் அனைவரும் தம் வரலாறு அறிய கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்
252 reviews33 followers
December 18, 2022
புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
எழுத்தாளர் : தொ.பரமசிவன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 231
நூலங்காடி : Amazon

🔆அறியப்படாத தமிழகம் என்னும் புத்தகத்தில் வெளிவந்த கட்டுரைகள் உட்பட , இன்னும் புதிய கட்டுரைகளைக் கொண்டது இந்த பண்பாட்டு அசைவுகள் . நமது ஊரில் நாம் வழிபடும் தெய்வங்கள், எப்படி அந்த தெய்வங்கள் தோன்றியிருக்கும் என்பதை பற்றி இந்தக் கட்டுரைகளில் காணலாம் . சிவன் , விஷ்னு , மீனாட்சி முதலிய தெய்வங்கள் , முதலில் சிறு தெய்வங்களாக இருந்தவை தான் . எப்படி முதலாளித்துவம் அவர்களை பெருந்தெய்வங்களாக மாற்றியது எனத் தெரிந்து கொள்ளலாம் .

🔆சைவம் மற்றும் வைணவம் சமய நிறுவனங்கள் என்ன தான் ஆதிக்கம் செலுத்தினாலும் அடித்தள மக்களின் நம்பிக்கையை அவர்களால் அசைக்க முடியவில்லை . அதைத் தாண்டி நிற்கும் இரு கோயில்கள் : மீனாட்சி (சைவம் ) திருவரங்கம் (வைணவம்).

🔆சங்க இலக்கியத்தில் பறையர்கள், மதிக்கத்தக்க வகையில் இருந்திருக்கிறார்கள் . பிராமணர் வருகையினால் தான் அவர்கள் தூய்மை , தீர்டு என ஒதுக்கப்பட்டுவிட்டார்கள் .

🔆ஒரு சிறு தெய்வம் எந்த நிலத்தில் தோன்றுகிறதோ , அதற்கு உண்டான ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் . இன்னும் பல தகவல்களைக் கொண்டுள்ளது இந்த புத்தகம் . நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது .

🔆கல்வி, பொருளாதாரம் , அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் - அம்பேத்கர்.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Muthu.
27 reviews2 followers
September 14, 2021
தொ.ப உடைய கட்டுரைகள் படிக்கும்போது நம்ம வாழ்க்கையில மிகச் சாதாரணமாக கடந்து போகும் செயல்களுக்கு பின்பு இருக்கும் வரலாறு கூறும் போது ஒரு வாசகனாக வியப்பாக இருக்கிறது தமிழகத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பண்பாடுகள் பின்பு இருக்கும் அசைவுகளை மிகத் துல்லியமாகவும் கல்வெட்டுகள் மேற்கோள்கள் பல காட்டியும் எழுதி இருக்கிறார்.
Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
April 16, 2025
29/50
புத்தகம்: பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

தொ.ப புத்தகங்களுக்கு பொதுவான ஒரு விஷயம், நாம் காலம் காலமாக செய்து வரும் சடங்குகள் பழக்க வழக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புகள் கொண்டு,அவர் கள ஆய்வுகளில் கண்ட உண்மைகளைக் கொண்டு, உணர்ந்து கொண்ட காரணங்களைக் கொண்டு எளிமையாக விளக்குவது.

அதன் மூலம் ஏற்படும் புரிதல் நம் முன்னோர்கள் அவற்றை வகுத்ததற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

அறியப்படாத தமிழகம் தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இரு புத்தகங்களில் இடம்பெற்ற கட்டுரைகளோடு சில புதிய கட்டுரைகள் சேர்ந்து பதிக்கப்பட்டதே இந்த புத்தகம்.

“தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே !! ”

என்று முத்தி தரும் பொருளாக தமிழ்விடுதூது அழைக்கும் தமிழோடு புத்தகம் தொடங்குகிறது.

சுனை,காயம்,பொய்கை,ஊற்று,குட்டை,குளம்,ஊருணி,ஏரி,ஏத்தல்,கண்மாய் என்று நீர்நீலைகளுக்குத் தான் எத்தனை பெயரிட்டு தமிழன் அழைத்திருக்கிறான்? அதுவும் அதன் அர்த்தம் உணரும் போது தமிழின் அழகை எப்படி வியக்காமல் இருக்க முடியும்?

பின்னர் தமிழர் உணவுகள் மற்றும் அதை சார்ந்த நம்பிக்கைகளை விளக்குகிறார்.
உறவுகளின் பெயர் விளக்கங்கள் அருமை !!

தாய்மாமன் முறைக்கு கொடுக்கும் முக்கியத்துக்கான காரணங்கள் என்று வாசிக்க வாசிக்க எத்தனை எளிமையான விஷயங்களாக கருதும் ஒவ்வொறு முறைமைகளுக்கும் பின்னும் இருக்கும் குடும்ப அரசியல் புலப்படுகிறது.

தைப்பூசம், தீபாவளி, விநாயகர் வழிபாடு குறித்த அவர் கண்ணோட்டம் இதுவரை நான் வாசித்த அவர் புத்தகங்கள் அனைத்திலும் வருகிறது.

பௌத்த மத எச்சங்கள், சமணப் பள்ளிகள் குறித்து வாசிக்கையில் பள்ளி, கல்லூரி போன்றவற்றை வார்த்தைகள் தோன்றிய விதத்தையும் காரணத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சாதிய கோட்பாடுகளின் அவரின் விளக்கம் நம் சமூகத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களின் மூலத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமிழர்களுக்கு உதவிய வெள்ளையர்கள் பலரைக் குறித்தும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழாக்கமாக்கப்பட்ட ஆங்கிலப் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூடிய தகவல்களோடு, ஊர்ப்புறம் இருக்கும் சாயர்புரம்,மில்லர் புரம் ,கேம்பலாபாத் போன்ற பெயர்கள் வந்த காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

கருப்பு நிறம் குறித்த சமூகக் கண்ணோட்டம் மாற்றம் குறித்த தகவல்களோடு விசயநகரப் பேரரசின் எழுச்சி காலமும் அதன் தாக்கம் இன்றுவரை நம் பண்டிகைகள் பலவற்றில் இருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள் குறித்த தகவல்கள் வாசிக்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது ‌. அழகர் கோவில் குறித்து தகவல்கள், அது சார்ந்த விசேஷங்களின் விளக்கங்கள் வாசிக்க புதிதாக இருந்தது.

சைவம் வைணவம் குறித்து தகவல்கள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அந்த பகுதியை ஏனோதானோ என்று கடந்தேன். மதுரைக்கோவில் அரிசன ஆலயப் பிரவேசம் குறித்து முதல் முறையாக வாசிக்கிறேன்.

வழக்கம் போல தொ.ப புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது நிறைய விஷயங்கள் புதிதாக அறிந்து கொண்ட திருப்தியை இந்த புத்தகமும் தருகிறது.

இந்த வருடத்தில் நான் வாசிக்கும் ஐந்தாவது தொ.பவின் புத்தகம் இது‌. அவர் புத்தகங்களில் சில தகவல்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்பதையும் புரிந்து கொண்டேன்.
Profile Image for Siva Prasath T R.
78 reviews4 followers
October 13, 2020
கட்டுரைகளை எடுத்துக்கொண்டால் , சில சாட்சியங்களை மட்டுமே மையமாகக்கொண்டு,பெரும்பாலும் ஆசிரியர்களின் கருத்தை ஒத்தே அமையும். ஆனால் பண்பாட்டு அசைவுகள், நீண்ட நெடிய ஆராய்ச்சிகளை செய்து, அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், பாமரனும் புரிந்து கொள்ளும்வண்ணம் ஆதாரங்களுடன் (புனையப்பட்டது அல்ல) "நிறுவப்பட்ட" ஓர் சிறந்த படைப்பு. தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று நாம் பெருமையாக மார்தட்டி கொள்ளும் பண்பாடுகள், உண்மையில் நம்முடையதுதானா? இல்லை. அவை என்றும் நிலையானவையே அன்று, அவை கால ஓட்டத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, பொருளாதாரத்திற்கு ஏற்ப பெரும்பாலும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது என்பதே பண்பாட்டு அசைவுகள்.
இப்பொழுதுமே, நாம் பயன்படுத்தும் சொற்கள் தமிழ் சொற்களா அல்லது வேறு மொழிகளில் கலப்பா? என்னும் ஐயம் நம்முள் இயற்கையாகவே தோன்றுகிறது. சிலர் அதனை குறிப்பிட்டு கூறும்போது நம்மையறியாது தனித் தமிழில் உரையாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. பிறமொழி கலப்புகள் இருந்தாலும், பலமொழிகளின் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகளையும் தாண்டி எதிர்த்து, போராடி சிம்மசொப்பனமாக நின்று, இன்றும் அதன் இலக்கணம் குன்றாது,ஒப்பற்ற தனித்துவத்துடன் "தமிழ்" மொழி விளங்கி வருகிறது.

இக்கட்டுரைகளில் கூறப்பட்ட சில விடயங்கள், நாம் ஏற்கனவே அறிந்துதானோ? என்பதைப்போல தோன்றினாலும், அவற்றைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு மிகத்தெளிவாக விளக்கியுள்ளதால், இன்னும் தெளிவு பிறக்கின்றது. நாம் யாரும் சற்றும் பொருட்படுத்தாத பொருட்களை,செய்திகளை எடுத்துக்கொண்டு அதன் வரலாறு, பண்பாட்டு அசைவுகளை அலசி ஆராய்ந்து அளித்துள்ளமை சிறப்பு. நவநாகரீக உலகத்தில்,ஒற்றை பண்பாட்டை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நாம், அதில் உள்ள சூழ்ச்சிகளையும் அரசியலையும் பற்றி அறிந்து கொள்ள, நமது பண்பாட்டின் பன்முகத் தன்மையினையும் , நம் தமிழ் மக்களின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்றையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது. பக்தி இலக்கியங்கள், "நாட்டின் ஒருமைப்பாட்டையன்றி பன்முகத்தன்மையினைதான் வழிமொழிகின்றன". அப்புரிதல் மூலம், ஆற்று நீரைப்போல ஓர் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன். தமிழர்களின் வாழ்வியல், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், நெறிகள்,சாதிய சமய கோட்பாடுகள் என அனைத்தையும் அலசி ஆராய்ந்துள்ளார்.இறுதியில், பொதுவான விளக்கங்களையும் அளித்து, அதனை சமகால நடைமுறையுடன் ஒப்பிட்டு, அதனுடன் உதாரணங்களையும் இணைத்துள்ளதால், எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழர்கள் அனைவரும் இப்புத்தகத்தினை வாசித்து, புரிந்து, தெளிந்து நடந்து கொள்ள வேண்டும்.அதுவே நம் தமிழர்களின் மாண்பினையும் பன்முகத் தன்மையினையும் காக்கும் நெறியாகும், வழியாகும்.
Profile Image for Renya Ragavi.
37 reviews4 followers
August 17, 2022
முகநூலில் சிலரின் பதிவுகளின் மூலம்தான் ஆசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் அறிமுகமானார்‌. அந்த சிறு கட்டூரை படித்தவுடனேயே எனக்கு அவரின் நூல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் தூண்டியது. அந்த அளவு அவரின் எழுத்தும் அவர் எடுத்துக்கொண்ட subject ம் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்‌.

"தெய்வங்களும் சமூக மரபுகளும்" & "அறியப்படாத தமிழகம்" ஆகிய நூல்களின் ஒரு தொகுப்பாகவே பண்பாட்டு அசைவுகள் என்னும் இந்நூல்.

தமிழன் தமிழன் என்ற பெருமை பேசும் பலருக்கும் உண்மையான தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் தெரிவதில்லை அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுமில்லை..எது உண்மை என்று ஆராயாமல் முன்னோர்கள் சொன்னார்கள் அவர்கள் சொன்னார்கள் என்று பல முட்டால்தனங்களை நாம் பின்பற்றிவருவது கவலைக்குறியது.

ஆனால் இதுபோன்ற ஆய்வு நூல்களை படிக்கும்போது காலப்போக்கில் பல படையெடுப்புகளாலும் பல இனங்களின் குடியேற்றத்தாலும் நாம் எவ்வாறேல்லாம் மாற்றப்பட்டுள்ளோம் நம் பழக்கவழக்கங்கள் எவ்வாறேல்லாம் மாற்றமடைந்துள்ளது நம் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் சாட்சியுடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது‌.

இந்நூலிலும் பல அறியப்படாத கேள்விப்படாத தகவல்களும் பல பழக்கவழக்கங்களின் பின் உள்ள காரணங்களையும் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளது ஆச்சரியத்தை மட்டுமின்றி பல வகைகளில் தமிழர்கள் எவ்வளவு முன்னோடியாக உள்ளனர் என்பது தெரிகிறது‌.

தமிழர்களின் மொழி வளமை , வாழ்வு முறை , வீட்டு அமைப்பு , உறவு முறை , சிறுதெய்வங்கள் வழிபாடு , பேச்சு வழக்கு , கோயில் அமைப்பு என‌ பலவற்றையும் இந்நூல் தகுந்த ஆய்வு முடிவுகளுடனும் , சான்றுகளுடனும் முன்வைக்கிறது.

அனைவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய ஒரு நூல் இது..
Profile Image for Srikumaran Ramu.
13 reviews
August 8, 2024
தேதி: 08/08/2024
புத்தகம்: பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர்: தொ. பரமசிவன்
வெளியீடு: ஶ்ரீ செண்பகா பதிப்பகம்

ஐயா தொ.பரமசிவன் அவர்கள் 1995 இல் எழுதிய 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' மற்றும் 1997 எழுதிய 'அறியப்படாத தமிழகம்' எனும் இரு நூல்களையும் இணைத்து 'பண்பாட்டு அசைவுகள்' எனும் நூலை வெளியிட்டார்.

நம் தமிழ்ச் சமூகம் என்பது எவ்வாறு தோன்றி பரிணமித்து, பின் சமயங்களாகவும், மதங்களாகவும் வளர்ச்சிப் பெற்று வந்தது என்பதனை வியக்கும் படியாக எழுதியுள்ளார் தொ.ப.

'அறியப்படாத தமிழகம்' என்ற நூலில் உள்ள கட்டுரைகள் நம் அன்றாட வாழ்வில் எளிதாக கடந்து போகும் பொருள்களும் நிகழ்வுகளும் எப்படி ஒரு சமூகத்தின் வரலாற்றையே தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்பதை விளங்கச்செய்கிறார்.

'தெய்வங்களும் சமூக மரபுகளும்' என்ற பிரிவு கடவுள், மதம், சமயம் ஆகியவை எவ்வாறு உருப்பெற்றன என்பதை விளக்குகிறது. தமிழர்களுக்கே உரித்தான நாட்டார் தெய்வங்களையும் வரலாற்றையும் மறந்து (அல்லது மறக்கடிக்கப்பட்டு) இன்று பெருந்தெய்வங்களே நமது தெய்வங்களாக எண்ணிக்கொண்டு உள்ளோம் என்பதை உணரச்செய்கிறது இப்புத்தகம்.

அழகர்கோயில் பற்றியும் கள்ளழகருக்குப் பின் இருக்கும் சாதிய வரலாறும் நம்மை வியக்கவைக்கின்றன. தமிழகத்தில் ஒரு சமயத்தில் பரவலாக இருந்த‌ சமணம், பௌத்தம் ஆகியவற்றின் வீழ்ச்சியும் சைவம், வைணவம் போன்ற பெருஞ்சமயங்களின் வளர்ச்சி பற்றியும் நாம் அறிந்திராத பல அறிய வரலாற்றை இப்புத்தகம் நமக்கு பரிசளிக்கிறது.

தொ.ப எனும் போற்றப்பட வேண்டிய தமிழ் அறிஞரை நினைவு கூர்த்து பெருமை கொள்வோம்!
Profile Image for Sivasankaran.
60 reviews8 followers
December 9, 2019
பொதுவாகவே கட்டுரை நூல்கள் என்றாலே தகவல்கள் தழும்ப தழும்ப நிறைந்து வழியும், மிகவும் ருசிக்கும்படி. அதிலும் இது ஆராய்ச்சி செய்து இதுதான் என நிறுவப்பட்ட நூல்.

தமிழ் மொழியைப் பற்றியும், உணவு, ஆடை, நம்பிக்கை, பழக்கங்கள் என இன்னும் நிறையவற்றை பற்றியும் தொகுத்து வழங்கியுள்ளார். படிப்பவர்களுக்கு விழுந்துவிட்டது போல தோன்றும்; ஏனென்றால், நாம் யார்? என்று நாம் அடிக்கடி யோசிப்து உண்டு. அது, மனரீதியான குழப்பங்கள் நிறைந்த பயணங்கள்.
ஆனால், இப்பன்முக சூழலில், இச்சமுதாய வளர்ப்பில் நாம் யார்? என்ற வகையான சிந்தனை எழுகையில் உண்மையில் அது ஒரு விழிப்பு தான்.

தொ.பா முன்னுரையில்,
" இன்று உலகமயமாக்கம் மிகப்பெரிய பண்பாட்டு நெருக்கடியினை நமக்கு உருவாக்கியுள்ளது. அதனை, நாம் முழுமையாக உணர்ந்தபாடில்லை. ஒற்றைப் பண்பாட்டை உருவாக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பண்பாட்டின் பன்மியத் தன்மையினை உணர்வதும் பேணுவதுமே வழி துறைகளாக அமையும் என்று நான் நம்புகிறேன். "

பௌத்தம், சமணம் எனத் தொடங்கி சிறுதெய்வம், பெருதெய்வம் என வீழ்ச்சியும், கைப்பற்றலையும் பற்றி விரிவாக விளக்கி; இன்னும் சொல்லப்போனால், ' பார்ப்பான் ' வேறு, ' பார்ப்பார் ' வேறு என தமிழில் உள்ள பல சொற்களின் அர்த்தங்களை நிறவுவது சுவை மிகுந்தது.
நல்ல புத்தகம் படித்த மனநிறைவுடன்..,
கட்டாயம் படித்து விடுங்கள் !!
Profile Image for Saravan Prabu.
28 reviews
August 16, 2019
இன்றைய அரசும் அதிகாரமும் நம் பன்முகத்தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மரபு, ஒரே கலாச்சாரம் என்று நிறுவ முயன்று கொண்டிருக்கும் பொழுது, சரியான நேரத்தில் இந்த புத்தகத்தை படித்த மண நிறைவு.

பௌத்தம், சமணம் தமிழுக்கு ஆற்றிய பங்கு, சைவம் மற்றும் வைணவம் தன்னை நிலைநிறுத்த நாட்டார் மரபியிலிடம் வாங்கிய கடன், நம் அன்றாட வாழ்க்கையில், சடங்குகளில், சம்பிரதாயங்களில் பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் சின்ன சின்ன காரியங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் பண்பாட்டு எச்சங்கள், மதுரை அழகர் வரலாறு என ஆசிரியர் தெறிக்கவிடுகிறார். நான் விரும்பி, விரைவாக படித்து முடித்தேன். தொ.ப வின் மற்ற புத்தகங்களையும் தேட ஆரம்பித்தும்விட்டேன்.

'தமிழனாய் இருந்தால் படிங்கள்' என்று அடைமொழிக்கு ஏற்ற புத்தகம். அய்யா தொ. ப விற்கு வணக்கங்கள் 🙏🙏
3 reviews
January 19, 2023
பண்பாட்டு அசைவுகள்..

இந்த புத்தகம் சரியான நேரத்தில் வாசிக்க பட்டு,பரவலாக்க பட்டிருந்தால் இன்று சாய்பாபா போன்ற வடக்கு சாமியார்களுக்கு வியாழ கிழமை சுண்டல் மாலை போட வேண்டிய நிலை தமிழர்களுக்கு வந்திருக்காது.

மரபு தெரியாதவன் மூட நம்பிக்கை என்றான். மூட நம்பிக்கை என்றவன் பின்பற்ற தவறினான்.

நாம் தொலைத்த மரபின் எச்சங்களை தன் கட்டுரைகள் மூலம் தேடி தருகிறார் பெரிய வாத்தியார் தொ.பரமசிவன் அவர்கள்.


இந்த புத்தகத்தில் நான் வியந்தது தொ.ப அவர்களின் மேற்கோள்கள்.

சங்க இலக்கியம்,பக்தி இலக்கியம், ஆய்வு நூல்கள் எதையும் விட்டு வைக்க வில்லை. தமிழர்கள் படித்து நம் மரபுகளை மீட்டு கொள்வது அவசியம்.
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
May 23, 2021
Got to know about this book thro Professor/Orator/Actor G. Gnanasambandam. If anyone is interested in knowing about Cultural traits, lifestyle, religion, customs, the caste system of the Tamil world especially in Tamil Nadu, this book is a must-read. He had written the book from an academic perspective with well-researched facts and references. If anyone reads it without any prejudice, this book will definitely surprise you. Highly recommended.
Profile Image for சலூன் கடைக்காரன் .
44 reviews2 followers
April 18, 2022
தொ.பரமசிவன் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இவ்வளவு பெரிய ஆய்வாளர் என்று எனக்கு தெரியாது. பண்பாட்டு அசைவுகள் உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள்,உடை, உறவு முறை, உறவுப் பெயர்கள், மதம் போன்ற தினசரி நம்மோடு தொடர்புடைய சாதாரண விடயங்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பற்றி பேசுகிறது. சைவம், வைணவம் போன்ற நிறுவன மயமாக்கப் பட்ட பெரிய மதங்கள் தமிழகத்தில் நாட்டார் வழக்கங்களுக்கு ஏற்ப எவ்வாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது என்பதைச் சொல்லுகிறது.ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களுக்குப் பின்னால் உள்ள வரலாறும் படிக்க மிக ஆர்வமாக இருக்கிறது. மனித இனங்களின் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் குறிப்பாக தமிழினத்தின் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
September 25, 2022
அறியப்படாத தமிழகத்தின் தொடர்ச்சி இது. அறியப்படாத தமிழகம் வாங்க நினைப்பவர்கள் இதை வாங்கி கொள்ளுங்கள். அதில் உள்ள அனைத்து கட்டுரைகளும் இதிலும் இருக்கும். அதனுடன் சேர்த்து மேலும் 80 பக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
Profile Image for Muthukumar.
22 reviews1 follower
October 16, 2022
நம் வாழ்வில் கடைபிடிக்கும் / கடைப்பிடித்துக் கொண்டிருந்த நிறைய சடங்கு சம்பிரதாயங்களை, மதங்களை, கடவுள்களை, உணவை, உறவுகளை பற்றி பேசும் மிக அற்புதமான புத்தகம். நிறைய கள ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்ட இந்த புத்தகம் ஒரு அற்புதமான தகவல் களஞ்சியம்.
1 review
Want to read
March 13, 2021
Panpattu asaivukal -tho.mu.paramasivan - readers spoke very high of this book. want to read
Profile Image for Bas Karan.
11 reviews
May 11, 2021
பார்ப்பனியத்தை வேரறுப்போம். தமிழர் வரலாறு.
5 reviews
April 29, 2015
'பண்பாட்டு அசைவுகள்' இந்து சமயம் மற்றும் தமிழ் மரபின் பழகிய முகங்களை புதிய பார்வையில் நமக்கு அளிக்கிறது. தொ. பரமசிவத்தின் ஆராய்ச்சி பின்புலமும், அரசியல் காரணிகள் சார்ந்த தெளிவும் இத்தொகுப்பிற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
Profile Image for Micheal.
21 reviews32 followers
June 24, 2015
the antiquity of tamil culture is well exhibited in this small book in a extensive way ..
history and the real tradition of the tamil people especially the customs which still prevail today is well cited and the work of the author should be appreciated..
Profile Image for Karmegam.
14 reviews3 followers
February 22, 2015
sad I could give only 5 stars... few chapters should be made mandate in Tamil nadu's curriculum... thanks Tho. Pa sir for clearing a lot of doubt I had in my mind abt Tamil culture...
Profile Image for Mani Bharathi Ravi.
4 reviews1 follower
April 25, 2016
A good compilation of research essays which helps in peek into how habits, tradition and culture emerged into life of Tamilians.
1 review
April 1, 2019
A must read for tamil culture enthusiasts, reveals a story behind day-to-day things.
Displaying 1 - 30 of 30 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.