காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தகைய அரவம் ஏதுமின்றி வீதி பூராவிலுமே மௌனம் மண்டிக் கிடந்ததை வீதியை அணுகியதுமே இளையபாண்டியன் கவனித்தானானாலும், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமலேயே முகப்பு வீட்டை அடைந்தான். அந்த முகப்பு வீட்டின் அந்த காரமும் அசப்தமும் அவனுக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளறிவிட்டதன் விளைவாக, அவன் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முதல் கட்டைத் தாண்டி இரண்டாவது கட்டுக்கு வந்தவன், அங்கிருந்த விபரீத நிலையை எதிர்பார்க்கவில்லை. அந்த இரண்டாவது கட்டிலும் பூர்ண இருட்டடித்துக் கிடந்தாலும் இளைய பாண்டியன&#
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
Very disappointed. The story just hangs at one point. There is no satisfaction in reading this book. Thought there is a nilamangai part-2.. but there is no such book.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் தனது மூத்த மகனான சுந்தரபாண்டியனைப் புறக்கணித்து விட்டு இளைய மகனான வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகின்றான்.இதனால் வெகுண்ட சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றியதோடு நில்லாமல் தம்பியையும் கொன்றுவிடத் துடிக்கின்றான். ஆபத்திற் சிக்கிய வீரபாண்டியன் நிலமங்கை மற்றும் ஜமால்தீன் உதவியுடன் எப்படி ஆபத்திலிருந்து தப்புகின்றான் என்பது தான் கதை. இந்நாவலும் சாண்டில்யனின் வழமையான மசாலாக்களுடன் சுவாரசியமான முறையில் நகர்நதாலும் பாத்திரப்படைப்பில் பல ஓட்டைகளைக் காணக்கூடியதாய் இருந்தது.மிக முக்கியமாக வீரபாண்டியனின் பாத்திரப்படைப்பு. மாலிக்காபூரை முறியடிக்கவல்ல வீரமும் அறிவும் மிக்கவன் என்று கூறப்படும் வீரபாண்டியன் வீரவதாளப்பட்டாளத்திலிருந்து நிலமங்கை வந்து காப்பாற்றும் வரை தன்னைச் சுற்றி நடக்கும் சதியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பேந்தப்பேந்த முழிப்பதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிலமங்கையை நம்பியிருப்பதும் பொருத்தமானதாக இல்லை. நிலமங்கை நாவலில் அறிமுகமானதற்கு பிற்பாடு வீரபாண்டியனின் கதாபாத்திரம் மன்மோகன் சிங் போல மாறிவிடுகின்றது.நிலமங்கை கதாபாத்திரம் பல இடங்களில் மலைஅரசியை ஞாபகப்படுத்துகின்றது. நடக்கும் சதியைப் பற்றி முன்பே அறிந்துகொண்ட/ஊகித்த நிலமங்கையோ விக்கிரம பாண்டியரோ குலோத்துங்கனை ஏன் எச்சரிக்கவில்லை என்பதை சாண்டில்யன் தான் சொல்ல வேண்டும்.நிலமங்கையை அனுப்பியது யார் என்பதை அவ்வளவு இரகசியமாக வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சத்தியமாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. விக்கிரம பாண்டியரின் திட்டங்கள் என்ன? சுந்தர பாண்டியன் என்ன ஆனான்? வீர பாண்டியனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தராமல் அரைகுறையாக நிலமங்கையின் திருமணத்துடன் நாவலுக்கு சுபம் போட்டிருப்பது எரிச்சலைத் தந்தது. மொத்ததில்என்னை அதிகம் ஏமாற்றிய சாண்டிலயனின் நாவல்களில் இதுவும் ஒன்று.
அரியணை சண்டையில் இரத்த பாசத்திற்கு மதிப்பு என்பதே கிடையாது.
பாண்டிய மன்னன் பட்டத்து ராணியின் மகன் சுந்தரபாண்டியனை விட்டு விட்டு ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனை இளவரசனாக்கியதால் பகைமை எழுந்து மன்னனையே கொலை செய்யத் தூண்டியதுடன் வீரபாண்டியனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது சிற்றப்பனால் காக்கப்படுகிறான்.
வீரபாண்டியனை காப்பாற்ற அவனுக்குச் சிறுவயதிலே முடிவான பெண் நிலமங்கையை அவனின் சிற்றப்பன் அனுப்பி வைக்கிறார்.அதற்கேற்ப அவளும் செயலாற்றித் தன் நோக்கத்தை முடித்து வைக்கிறாள்.