அரசியல் என்பதே நம் சமூகத்தில் சாக்கடைதான். கல்வியில் விளையாட்டில் வேலை செய்யும் இடங்களில் சாப்பாட்டில் என அனைத்திலும் அரசியல் என பொதுவாகச் சொல்வதுண்டு இங்கு அரசியல் எனப் பொருட்படுத்துவது "சூழ்ச்சி" என்பதே. பொது இடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது டீ கடை பதாகைகளில் எழுதி வைத்த சட்டம். அரசியல் பேசுபவர்களை விட அரசியலில் அக்கறை காட்டாதவர்களுக்கே "நல்ல பிள்ளை" அந்தஸ்து வழங்கப்படும். ஏன் நம் மக்களின் உள்ளங்களில் அரசியலுக்கு இந்த தரை குறைவான இடம். அரசியல் பேசக் கூடாது என்பது பொதுமக்களின் விருப்பமா அல்லது பெரு முதலாளிகள் பலம், பதவி படைத்தோர் காலம் காலமாகப் பொதுமக்களை அரசியல் அறிவை பெறவிடாமல் தடுத்து தங்களின் சுரண்டலுக்கு ஏதுவாக இந்த சமூகத்தைக் கட்டமைக்கிறார்களா? என்ற மிக முக்கியமான கேள்வியை இந்த புத்தகத்தில் எழுப்பி அதை மனித வரலாற்றின் அரசியல் பாதையைச் சுருக்கமாகச் சொல்லி இந்த கேள்விக்கான பதிலை நமக்கு விவரிக்கிறார் நூல் ஆசிரியர். அரசியல் என்பது வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப் போடுவது மட்டும் அல்ல. நிர்வாகம், ராணுவம், காவல்துறை, சிறைச்சாலை, நீதி என இவை அனைத்தும் அடங்கியது அரசியல் என அரசியல் பற்றிய அடிப்படை விசயங்களைப் படிப்பவர்க்குத் இந்த நூல் தெளிவு படுத்துகிறது. 48 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த சிறு நூல் படிப்பதற்கு எளிதாகவும், நம் உரிமைக்கு, சுதந்திரத்திற்கு, சமத்துவத்திற்கு அரசியல் அறிவு எவ்வளவு அடிப்படையானது என்று உணர்த்த முற்படுகிறது.
அரசியலே சாக்கடை, நல்லவர்கள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள், வசதியிருந்தால்தான் அரசியலில் ஈடுபட முடியும், அரசியலில் எல்லாம் சகஜம், யாராலும் அரசியலை சுத்தபடுத்த முடியாது. இது போன்ற வாதங்கள் எப்போதும் காற்றில் உலவுகின்றன. எதார்த்தம் போலவும், உண்மை போலவும் தோற்றம் தரும், இத்தகைய கருத்துக்கள் எங்கிருந்து பிறக்கின்றன? இவை தற்செயலாக தோன்றிய கருத்துக்களா? பெருவாரியான ஏழை, எளிய மக்களை அரசியலிலிருந்து விலக்கிக் வைத்து அரசியல் அற்றவர்களாக மாற்றும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதி இத்தகைய வாதங்கள் என்பதை எளிமையாகவும், ஆனித்தரமாகவும் நிறுவிகிறது இப்புத்தகம். யார் வேண்டுமானலும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் அமைந்துள்ளது இச்சிறு நூல்.
அரசியலை பற்றி முழுமையாக அறியாமல், நமக்கு எதுக்கு வம்பு என்று இதுவரை நீங்கள் அரசியலிடம் விலகி இருந்திருந்தால், "அரசியல் எனக்கு புடிக்கும்" என்று உங்களை சொல்ல வைக்கும் இந்த புத்தகம்!.
ஆதி காலத்தில் மனிதன் இனக்குழுவாக வாழ்ந்தது முதல் தனி குடும்பங்களாக வாழும் இன்று வரை அரசியல் எப்படி உருவானது வலது சாரி இடது சாரி அரசுக்கள் எப்படி உருவானது. அவ்விரு அரசுகள் மூலம் யாரு பயனடைகிறார்கள்? எந்த அரசு நம் நாட்டுக்கு முக்கியம். வலதா? இடதா? நாம் ஏன் அரசியல் பற்றி பேசவேண்டும்? என எளிய தமிழிலில் எடுத்துரைக்கிறார் ஆசிரயர்.
A good introduction of what is politics? Politics is part of every citizen's life. So we cannot stay away from it. All we can do is to raise voice against oppressors, government.
We dont need to do politics, but we must learn politics !
அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் இப்புத்தகம் அமைந்துள்ளது.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :
1. நமக்கு எதுக்கு வம்பு? 2. விதவிதமாய் அரசுகள் - ஆட்சிகள். 3. இடதும் வலதும். 4. அரசு பிறந்த கதை. 5. தமிழக அரசு. 6. மக்களாட்சி என்னும் திரைக்குப் பின்னால். 7. ஆளும் கட்சிகளும் அந்தர் பல்டிகளும். 8. சோசலிச அரசு எப்படி இருக்கும்? 9. கலாச்சார அரசியலும் கலாச்சாரத்தின் அரசியலும். 10. ஆகவே.....
இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு பெரிய ஆழ்கடலே மறைந்திருக்கிறது.
அரசியலைப் பற்றி தெரிந்து கொண்டால் நம் சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் பின்னால் இருக்கும் உண்மையை நம்மால் புரிந்து கொள்ள இயலும், அந்த வகையில் இந்த புத்தகமும் ஒரு பெரிய ஊன்றுகோலாக அமைகிறது.
அரசியலே சாக்கடை, நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள், இதுபோன்ற பேச்சுக்கள் நாம் எப்போதும் கேட்டிருப்போம், இத்தகைய பேச்சுக்கள் எங்கு இருந்து பிறக்கின்றன? பெருவாரியான எளிய மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைத்து, அரசியலற்றவர்களாக மாற்றுவதின் ஒரு பகுதி தான் இந்த பேச்சுக்கள் என்பதை மிகவும் எளிமையாகச் சொல்லக்கூடிய ஒரு புத்தகம் தான் “அரசியல் எனக்குப் பிடிக்கும்” ச. தமிழ்செல்வன் எழுதிய இந்த புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று இருக்கிறது என்பது ஆச்சரியமானதாக இருக்க முடியாது. https://kumaresanselvaraj.in/arasiyal...