அரு. ராமநாதன் தமிழக எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் மற்றும் திரைவசன கர்த்தா ஆவார். ரதிப்பிரியா, கு. ந. ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதினார்.
வாழ்க்கைச் சுருக்கம் அரு.ராமநாதன் சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். இவரது முதல் படைப்பு இவரது 18 வயதில் எழுதப்பட்ட சம்சார சாகரம். 1000ம் முறை மேடையேறிய "ராஜராஜ சோழன்" என்கிற நாடகத்தை 1945ம் ஆண்டு டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய போட்டிக்கு அனுப்பினார். இது முதல்பரிசு பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. பெரும் விவாதத்தை எழுப்பிய "காதல்" என்கிற இதழை 1947இல் உருவாக்கி பிரசுரித்தார். இவர் எழுதிய முதல் சிறுகதை ‘கோழிப் பந்தயம்’ .தொடர்ந்து அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் என்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புதினம் ‘அசோகன் காதலி’. இவரது உன்னதமான படைப்பாக கருதப்படும் "வீரபாண்டியன் மனைவி" பத்திரிக்கையில் ஏழு ஆண்டுகளாக தொடராக வந்தது. மூன்று பாகங்களில் பின்னர் நூலாக வெளிவந்தது.
இவர் எழுதிய நாடகங்கள்: 'வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘. ராஜராஜ சோழன் திரைப்படம் உட்பட ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
அரு.ராமநாதன் 1974-இல் மறைந்தார்.
படைப்புகள் அசோகன் காதலி வீரபாண்டியன் மனைவி அறுபது மூவர் கதைகள் குண்டு மல்லிகை போதிசத்துவர் கதைகள் மதன காமராஜன் கதைகள் ராஜராஜ சோழன் விநாயகர் புராணம் காலத்தால் அழியாத காதல் விக்கிரமாதித்தன் கதைகள் கிளியோபாட்ரா சுந்தரரின் பக்தியும் காதலும் வெற்றிவேல் வீரத்தேவன் வேதாளம் சொன்ன கதைகள் பழையனூர் நீலி
வரலாற்றில் பெயர் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இப்புத்தகத்தில் வரும் வீரபாண்டியருக்கு இல்லையென்றால்... இப்புத்தகமே இல்லை...
வீரபாண்டியன் மனைவியை-விட காத்தவராயன் மனைவியை நினைத்து மனம் வருந்துகிறது...
ஒவ்வொரு புத்தகத்தினையும் வாசிக்கும் காலங்களில் நம் வாழ்வில் நிகழ்ந்த இன்ப துன்ப நிகழ்வுகளை அப்புத்தகத்தினிலேயே புதைத்து வைத்துவிடுவோம்... மீண்டும் அப்புத்தகத்தை தீண்டும் பொழுதோ திறக்கும் பொழுதோ அந்நிகழ்வுகள் நம் நினைவில் தோன்றி மறைவது இயல்பு...
அதுபோல் இப்புத்தகம் என் வாழ்வில் நிகழ்ந்த பல துன்ப நிகழ்வுகளை நினைவாக சுமந்து செல்கிறது... இப்புத்தகம் போன்றே அதற்கும் (நினைவுகள்) பக்கங்கள் அதிகம்...
Really a different version of historical fiction with strong political messages...only character we will remaind even after few years will be Mr.Jenanathan. In many areas story is moving very slowly and so many repeated dialogues will make u feel bit boring... Very interesting fact is, it is a historic fiction with very very less hero worship.
வீரபாண்டியன் மனைவி என்ற தலைப்பை பார்த்தவுடன் பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த சோழனால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட வீரபாண்டியனின் மனைவியின் கதையாக இருக்கலாம் என்று நினைத்து தான் வாங்கினேன். ஆனால் இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெறும் கதை.
வீரபாண்டியன் புரிந்துவரும் ஆட்சியே குலோத்துங்க சோழனின் தந்தை இரண்டாம் ராஜாதி ராஜ சோழனால் வழங்கப்பட்டது என்பதை மறந்து இலங்கையுடன் வீரபாண்டியன் கொண்ட நட்புறவும், அதே போல வீரபாண்டியனின் மனைவியான சேர தேசத்து இளவரசியை குலோத்துங்கன் பெண் கேட்டு மறுத்து வீரபாண்டியனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்ததுமான இரண்டு முக்கிய காரணங்களால் பாண்டிய நாட்டின் மீது குலோத்துங்க சோழன் போர் புரிகிறான்.
இதே காலத்தில் தான் கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழில் மொழில்பெயர்த்து "கம்பராமாயணம்" என்ற பெயரில் சோழனின் ஆட்சிக்குட்பட்ட திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அரங்கேற்றம் செய்கிறார். அதனால் அரு. ராமநாதனும் இந்த கதையை ராமாயணத்தை ஒட்டியே கொண்டு செல்கிறார்.
கதை: வீரபாண்டியனின் ஆட்சி காலத்தில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னனும் மதுரை ஆட்சியை கைப்பற்ற நினைத்து சோழனின் உதவியுடன் போர் புரிந்து வீரபாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றுகின்றான். இதில் வீரபாண்டியனின் மகன் ஒருவன் இறந்து விடுகிறான். வீரபாண்டியன் மனைவியை சிறைபிடித்து கொடுமை செய்கின்றனர் சோழர்களும் விக்கிரம பாண்டியனும். இதில் வீரபாண்டியன் தன் மனைவியை எப்படி மீட்டெடுக்கிறான் என்பது தான் மொத்த கதையும்.
அரசியல் பற்றிய உரையாடகள் அதிகம் ஈர்க்கக்கூடியவை. முக்கியமாக சோழனிடம் ஒற்றர் படை தலைவனாக இருக்கும் பல்லவ இளவல் ஜனநாதன் எனும் கதாபாத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறைகள் என்றால் அளவிற்கு அதிகமாக உரையாடல்கள் தினிக்கப்பட்டுள்ளதும், அதிலும் பல திரும்ப திரும்ப இடம்பெறுவதும் படிக்கும் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கின்றன.. பொறுமை இருந்தால் படிக்கலாம்.
சிறந்த புதினம் என்று சொல்வதற்கில்லை. ஆயினும், மன்னனையும் அவனது மிகைப்படுத்தப்பட்ட வீர தீரங்களை பற்றியே துதிபாடும் மற்ற வரலாற்று புதினங்களிலிருந்து வேறுபட்டு மக்களின் கண்ணோட்டத்தில் விரியும் நூல்.
பாத்திரங்கள் பேசும் அரசியில் கருத்துக்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. மாறுபட்ட வரலாற்று வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்நூல்.
A Nice book with a great story. Loved the portrait of Jananathan, a man of wit and talent. The book gives a clear and depth understanding of politics and nevertheless bravery and love.