இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.
முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.
புத்தகத்தின் பெயரை பார்த்து ராஜாக்களின் அந்தரங்க விஷயங்களை மட்டும் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மிகவும் சுவாரசியமாக தொய்வே இல்லாமல் 1000 பக்கங்கள்.
புத்தகத்தை படித்தால் தான் புரிகிறது. நம்மை சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல உள்ளூர் ராஜாக்களும் தான் என்று.
வீட்டு கடன், குடும்ப செலவுகள், இன்னபிற இத்யாதிகள் என்று அன்றாட வாழ்க்கையை வாழவே நாம் திண்டாடி கொண்டிருக்கும் வேளையில் இதை போன்ற புத்தகத்தை படித்தால் உங்கள் வயிற்றில் எரிமலையே வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அடடா ஒவ்வொரு ராஜாவும் தனக்கென தனி பாணியில் செலவு செய்திருக்கிறார்கள். உதாரணமாக பூபிந்தரை எடுத்து கொள்வோம். தனது சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் இயந்திரங்களாக இவர் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பயன்படுத்தினார் மக்களே. மற்றொரு ராஜாவோ மஜாவாக இருப்பதற்கென்று தனி ஸ்விம்மிங் பூல் கட்டினார். பிரத்யேகமான பளிங்கு கற்கள், சந்தன மரங்களாலான 20 படிக்கட்டுகள், ஒவ்வொரு படியிலும் 2 அழகிகள் வீதம் 40 பெண்கள். இன்னும் இதை போன்று ஏராள சுவாரசியங்கள் புத்தகமே நெடுகே.
புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது 1860 களில் ஒரு ராஜாவாக அடலீஸ்ட் ஒரு மந்திரியாவாச்சும் பிறந்திருக்கலாம் என்று ஏக்க பெருமூச்சு ஒன்றை கண்டிப்பாக வரவழைக்கும்.
எதிர்த்து வரும் பலம் கொண்ட யானையை ஒற்றை கையால் மல்லுகட்டுவதும் , குதிரையை ஒரே வெட்டால் வெட்டி வீழ்த்தவது போன்ற வரலாற்று புனைவுகள் ஒருபக்கம் இருக்கட்டும்..
இந்திய சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் எவை? அந்த சமஸ்தானங்கள் தோன்றியது எப்போது? அந்த சமஸ்தானத்தின் முதல் மன்னன் யார்? கடைசி மன்னன் யார்?அவன் செய்த வீரமான சேட்டைகள், பொழுதுபோக்குக்கு என்ன (செய்)(வார்)
சுதந்திரம் அடைந்த போது அவற்றின் நிலைமை என்ன?
இந்தியாவுடன் இணையும் ஒப்பந்த கையெழுத்து வாங்கியது எப்படி?
அது மட்டும் அல்ல..
இந்திய மன்னர்கள் ஆங்கிலேயர்க்கு செய்த தொண்டு என்ன? மன்னாசை க்கு ஆசைப்பட்டு தன் தலையில் மண்ணை வாரி போட்டுகொண்ட கதை என்ன? இதற்க்கு இடையில் சிக்கி மக்களின் நிலை யாது?
நமது பாடபுத்தகங்கள் நம்மை அடிமை படுத்தியது ஆங்கிலேயர்கள் என்று ஒரு பக்கத்தை மட்டுமே காட்டியுள்ளது.. இந்திய வரலாற்றின் இன்னொரு பக்கத்தை இங்கு காணலாம்.
நாட்டின் வளத்திற்க்காக வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி பல போராட்டங்கள் செய்து உழைத்தார்களா. ஆம். எல்லாம் செய்தார்கள் அந்தபுரத்தில்.
அகம் புறம் அந்தபுரம். வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வதில் இந்த நூல் முக்கிய பங்கு வகுகிறது . அவன் வீரன் சூரன் போரில் ஆயிரம் பேரை கொன்றன் என்று வரலாறு பேசுபவர்கள் இந்த நூலையும் படிக்க வேண்டும்.