www.scribd.com சென்று தமிழ் புத்தகங்களை எப்போதாவது தேடுவேன். சுதந்திரத்திற்கு முன்னாடி எழுதின நாவல் என்று இந்நாவலை பற்றி குறிப்பிட்டிருந்ததால் தரவிறக்கம் செய்தேன். நாவலின் பின் அட்டையிலும், எஸ்.வி.வியை பற்றி 1940ல் ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதையும் படித்ததும் இந்நாவல் படித்தே தீரவேண்டும் என்று படிக்க ஆரம்பித்தேன்.
கதாநாயகனுக்கு படிப்பு மட்டும் வெகு தூரம். அதை வைத்து அப்பா, மாமா, அவரின் பெண் மட்டம் தட்ட, படிப்பு மீது வெறுப்பு வராமல் ஒரு வைராக்கியத்தோடு படிக்க ஆரம்பிக்கிறார். சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண், அந்த ஊரிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மாமன் மகள் என்று இம்மூவரில் யாரை கதாநாயகன் கை பிடிக்கிறார் என்று நீண்ட நெடுந்தொடருக்கான கதையாக சொல்லியிருக்கிறார்.
எடக்கு மடக்கான உரையாடல்களை தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.