சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் (எ) ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார். ஏனெனில் காந்தளூர்ச் சாலை சேர நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நான்கு கல்வி கேந்திரங்களுள் ஒன்று. மேலும் பாண்டி நாட்டைக் கடந்து சேர நாட்டை அடைவதும் எளிதான செயலல்ல.
இந்தச் சிக்கலுக்கான விடைதேடி தனது ஆசிரியரான நாகப்பட்டினம் பதர திட்ட விஹாரையின் தலைவரான மஹா காசியப தேரரை தனது சுற்றத்தாருடன் சந்திக்கிறார் அருள்மொழிவர்மர். கேரள அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த தேரரின் ஆலோசனை மிகவும் நூதனமாக உள்ளது. இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விசித்திரமான விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை. தாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை இறுதியில் கண்டறியும் இந்த இரு இளைஞர்கள், தங்களுக்கிடப்பட்ட பணியில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்காகத் தங்களின் உயிரையே பணயம் வைத்தாக வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கின்றார்கள். கதாபாத்திரங்கள்
இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பண்டைய வர்மக்கலை மற்றும் கேரள களரிப்பயிற்று பற்றிய பல நுட்பமான விபரங்களும் சரித்திரத் தரவுகளும் கையாளப்பட்டுள்ளன.
Dr. Gokul Seshadri is the author of several works of historic fiction in Tamil based on the medieval history of South India. He is also a researcher, specializing in South Indian temple art and architecture.
A software architect by profession, Gokul started exploring his creative writing skills 20 years ago - with his first novel Rajakesari. This was followed by many other novels, short stories and articles. From 2010 onwards, he started pursuing academic studies in History with M.A. and M.Phil. degrees, followed by a doctoral research on Chola Ramayana sculptures. His novels are replete with intricate epigraphic, cultural, and historic references drawn from inscriptions, copper plate grants, literatures and living oral traditions. All of his books have been published by Palaniappa brothers. Also, from 2019 onwards, StoryTel India has been publishing his well known works as audiobooks.
முனைவர் கோகுல் சேஷாத்ரி தமிழில் பல வரலாற்றுப் புதினங்களை படைத்துள்ள எழுத்தாளர். கட்டுரையாளர். மற்றும் வரலாற்றாய்வாளர்.
மென்பொருள் துறையில் பணியாற்றும் இவர் வரலாற்றின் மேல் காதல் கொண்டு 2003ல் எழுதத் துவங்கினார். 2004ல் இணையத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இராஜகேசரி, தமிழ் இணைய உலகில் நேரடியாக வெளிவந்த முதல் வரலாற்றுப் புதினமாகும். தொடர்ந்து பைசாசம், சேர ர் கோட்டை, திருமாளிகை, உதயபானு உள்ளிட்ட பல நாவல்களைப் படைத்துள்ளார். 2010 முதல் தீவிரமான வரலாற்றாய்வில் ஈடுபட்டு சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது வரலாற்றாய்வின் தாக்கத்தை இவரது படைப்புக்களெங்கும் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளாகவும் இலக்கியத் தரவுகளாகவும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
2008 முதல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் இவரது புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் 2019 முதல் ஸ்டோரிடெல் நிறுவனம் இவரது படைப்புக்களை ஒலிப்புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகிறது.
சோழர்களை அதுவும் குறிப்பாக ராஜாரசோழனை பற்றி எழுதாமல் ஒரு தமிழ் எழுத்தாளனின் இலக்கிய கடமை முடியாதென்பதாகிவிட்ட இந்த காலத்தில் ஏற்கனவே ராஜகேசரி என்கிற அற்புத த்ரில்லர் தந்த எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி மீண்டும் ஒரு சோழர்கால த்ரில்லருடன் நம்மை சேரர் கோட்டையில் சந்திக்கிறார் . இந்த முறை இன்னும் ஆழமாக , நிறைய ஆராய்ச்சியுடன் நமக்கு தெரிந்த , பழக்கப்பட்ட பல கதாபாத்திரங்களுடன் நமக்கு அருகில் வருகிறார் எழுத்தாளர் . கோகுல் எழுதும் கதைகளின் வேகத்தை பற்றி சொல்லவே தேவையில்லை . நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி கூட தோற்கும் அவரின் வேகத்திற்கு வரலாற்று பின்புலமும் , கிளை கதைகளும் ஊக்கப்படுத்தி கொண்டே போக ஆரம்பிப்பதும் தெரியாமல் , முடிப்பதும் தெரியாமல் இரண்டாம் பாகத்திற்கான ஏக்கத்தை ஏற்படுத்தியபடி முதல் பாகம் முடிகிறது . சோழர்களின் பற்றிய வரலாற்று புதினங்களில் அதிகம் தொடப்படாத காந்தளூர் சாலை போர் பற்றி கதை அமைந்திருப்பது ரசிகர்களுக்கு விருந்தென்றே சொல்ல வேண்டும் . சோழர் வரலாற்று புதினங்களில் ஆர்வமுள்ளரவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம் இந்த புத்தகம் . தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இதை நான் பரிந்துரை செய்கிறேன் .
எனக்கு தெரிந்த வரையில், தமிழில் வரலாற்று புதினங்களுக்கு கல்கி, சாண்டில்யன் தான் என்கிற என் எண்ணம் தவறு மட்டுமில்லை, இவர்களுக்கு இடையில் நான் என்று கோகுல் சேஷாத்ரி இடம் பிடித்துவிட்டார். சேரர் கோட்டை என்ற தலைப்பினால் சேரர்கள் பற்றியது என்று நினைத்திருந்தேன். ஆனால் சோழர்களை பற்றியது. அதுவும் தமிழர்களின் தலை சிறந்த அரசர்களில் ஒருவரான இராஜராஜரின் காலத்தை பற்றிய விறுவிறுப்பான இந்த நாவல்களை தமிழ் நாடு வந்ததும் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.
#197 Book 38 of 2023-சேரர் கோட்டை பாகம் 1 Author- கோகுல் சேஷாத்ரி
“வாழ்க்கை நம் கண்களின் முன்னர் இந்தக் கணத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அது இறந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை.நிகழ் காலத்தில் இருக்கிறது.”
“இராஜகேசரி”யை முடித்த கையோடு இதை படிக்கத் தொடங்கினேன்.அதிவேக ரயில் பயணம் முடிந்தது போல் உள்ளது!அத்தனை விறுவிறுப்பான கதைக்களம்.சுவாரஸ்யமூட்டும் வரலாற்றுத் தகவல்கள் என ஒரு தரமான படைப்பு இது.
“சேரர் கோட்டை”தலைப்பை பார்த்து இது சேரர்கள் பற்றிய புத்தகம் என நினைத்தேன்.ஆனால்,இது இராஜ இராஜ சோழன் சேர நாட்டை சேர்ந்த காந்தளூர் சாலையில் நடத்திய போர் பற்றிய கதை இது. ஆதித்த கரிகாலனின் கொலைக்கும் காந்தளூர் சாலைக்கும் என்ன தொடர்பு?பாண்டிய நாடும் சேர நாடும் சேர்ந்து சோழருக்கு எதிராக தீட்டிய சதி திட்டம் என்ன?சேர அரசின் அரசியல் நுணுக்கம் தெரிந்த தேரரின் ஆலோசனைப் படி போருக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் இருவரான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை.
சோழ நாட்டை பற்றி மட்டும் இல்லாமல் சேர,பாண்டிய நாட்டைப் பற்றியும் இதில் நிறைய தகவல்கள் இருக்கின்றன.கதையின் போக்கையும் யார் அந்த மர்ம நபர் என்று யூகித்த படியும் வெகு வேகமாக நகர்கிறது கதைக்களம்.இது நிஐ வாழ்வில்/சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இதன் பெரிய பலம்.அந்த ஒற்றன் இறுதியில் என்ன ஆனான்?சோழரை வீழ்த்த துடிக்கும் அந்த தலைவர் யார்?என பல கேள்விகளோடு இந்த பாகம் முடிகிறது. கிபி 900இல் நடந்த சம்பவத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கோகுல்.
சேர சோழ பாண்டியர் என மூவரின் அரசியல் முறைகளையுமே இதில் நன்றாக புரிந்துக் கொள்ளலாம்.பல கிளை கதைகள்,வரலாற்று தகவல்கள் என எடுத்த புத்தகத்தை கீழேவைக்க இயலாதபடி செய்யும் இந்த புத்தகம்.
Cherar Kottai is a historical novel set during the early years of Emperor Raja raja cholan's rule, revolving around the Kandalur Salai conquest. It is a prequel to Rajakesari and few of the characters from Rajakesari appear here as well. The story is narrated from 4 viewpoints. 1st is about the travels and adventures of Paraman Malapadiyar and Kamban Maniyanar. 2nd is about the Pandyas. 3rd is about the head of the Kandalur Salai, Thirunarayana Pattathiri and his brothers. 4th is about the Emperor and his main officials. The author's description of the 4 sea ports, namely Vizhinjam, Nagapattinam, Thondi and Korkai, brings them to life in our minds. I was especially impressed with the description of Nagapattinam. The story is well paced with enough twists and turns to keep us hooked. There are 5 or 6 mysteries which are unanswered and expected to be addressed in the 2nd part like: 1. Who is the thanai thalaivar? 2. Who is devanaga pandithar? 3. What is the secret that Thirunarayana Pattathiri wanted to reveal to his brother? 4. What happened to Kurukadi Chellakilaar in the competition? 5. What is that the Emperor will ask the business men in return for giving soldiers to safeguard their ship? Overall a good read like Rajakesari. Have eagerly started reading the 2nd part now and keeping my fingers crossed to check if my hunches are correct about the answer to some of the mysteries.
The story is set around 988 CE, three years after Rajaraja I takes over the Chola throne. The Pandias, having been defeated by the Cholas in war, have retreated to the south, where they are trying to regroup and capture Madurai again. But that is the least of the Chola emperor's concerns. By then, it was apparent that some political bigwigs from the Chera kingdom were directly responsible for the death of his brother (and heir apparent), Adithya Karikalan. These forces are from the family that runs the Kandalur salai, one of the four big salais (university) in Kerala, training students in the martial art forms of ancient and medieval Kerala. Can the Cholas lay siege to a place of learning, or will the chieftains of the Chera kingdom allow them to do so? There also seem to be some internal enemies to take care of before they could start an invasion.
The author, Mr. Gokul Seshadri, has traveled extensively to do his research for the book. The story revolves around real events that unfolded in the aftermath of the death of Adithya Karikalan (based on various evidence, which is mentioned as footnotes), with the help of a few fictionalized characters.
Unfortunately, a translation is not yet available.