Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
இந்த நூலை தழுவி தான் இறைவி திரைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிந்து தான் இந்த நூலை வாசிக்க எடுத்தேன். மிக சிறிய நாவல். 92 பக்கங்கள் தான். 1 மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்க முடிந்தது. வாசித்த பின் தான் புரிந்தது, இறைவி திரைப்படம் இந்த கதையின் முழுத் தழுவல் இல்லை. திரைப்படத்தின் ஒரே ஒரு பகுதிதான் இந்த கதை. இந்நாவலை ‘பார்ட்லி இன்ஸ்பிரேஷனாக’ தான் கூற முடியும்.
குற்றவாளியாக சிறைக்குள் சென்றுவிட்டு திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைசாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியும் அழுத்தமாக முன் வைக்கிறது. சமீபத்தில் வாசித்த 2 சுஜாதா நாவல்கள் (இளமையிள் கொல், கம்ப்யூட்டர் கிராமம்) போலவே இந்த நாவலின் முடிவும் திருப்தியாக இல்லை. மனம் திருந்தி மனைவி பிள்ளையுடன் வாழ நினைப்பவன், துரோகம் பொறுக்காமல் பழைய கூட்டாளியை கொலை செய்து மீண்டும் குடும்பத்தை பிரிந்து சிறை செல்வது, என்ன விதமான முடிவு என்று புரியவில்லை.
A crisp story of treachery, love, forgiving, food for thought and killing! As perfect as Sujatha stories should be. Any person venturing into Tamil books for the first time, must definitely read this. Any person who is a seasoned reader, but has somehow overseen this, must read it at all costs.
சிறையிலிருந்து விடுபட்ட சோமு சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ எண்ணுகிறான். கஷ்டத்தில் வாழும் தன் மனைவியையும் தனது மகனையும் சந்திக்கிறான். மனைவி அவனை உற்சாகத்தோடு வரவேற்கிறாளா, குழந்தை அவனோடு ஒட்டுகிறதா, சமுதாயம் அவனது எண்ணத்தை நிறைவேற்றுகிறதா - இல்லை! அவனை சமூகம் நிராகரிக்கிறது. மனைவியை அபகரிக்கிறான் அவனது பழைய தோஸ்த். அவனைப் பழி வாங்கி மனநலம் பாதக்கப்பட்டு மீண்டும் சிறை செல்கிறான்.
சற்று சுஜாதாவின் வர்ணனைகளைச் சுவைப்போமே!
அந்தச் சிறிய வீடு சுஜாதாவின் அற்புத எழுத்துக்களால் நம் கண்முன்னே விரிகிறது.
“சின்ன அறையில் நடைவண்டி, லலிதா பார்மசியின் காலண்டர், ஒரு ஸ்டூல். அதில் போய் உட்கார்ந்தான். நாடாக்கட்டிலில் ஒழுங்காகச் சுற்றப்பட்டிருந்தது படுக்கை. முருகன் (சோமுவின் ஒரே குழந்தை) அவனைச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே அவனிடமிருந்து எவ்வளவு தள்ளி நிற்க முடியுமோ அவ்வளவு ஓரத்தில் நின்றான். மூலையில் ஒரு கெரசின் ஸ்டவ் இருந்தது. அதன் பக்கத்தில் பாத்திரங்கள் சுத்தமாகக் கவிழ்ந்திருந்தன. ஜன்னலில் ஓவல்டின் டப்பாவில் மண் நிரப்பி அதில் ஒரு செடி! ஒரு மலர். டப்பாவை நகர்த்தி விட்டு ஜன்னல், கதவைச் சாத்தினாள். அறைவாசல் கதவையும் சாத்தித் தாளிட்டாள்……”
“சர்க்கார் ஆபீஸுக்கு உள்ள அத்தனை குணாதிசயங்களும் இருந்தன. வீடு ஆபீஸாக மாற்றப்பட்டுக் கக்கூஸைக்கூட ரத்துசெய்துவிட்டு, அதில் ஃபைல்கள் குவிந்திருந்தன. ஒட்டடை அடிக்காத உத்தரம், புராதன நாற்காலி, மேஜைகள், முகத்தில் சிரிப்பே இல்லாத கிளார்க்குகளில் ஒருத்தர் சோமு நிரப்பியிருந்த ஃபாரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.”
“பொதுவாகக் கடைவீதியில் நடந்தான். எத்தனை கடைகள், எத்தனை பாத்திரங்கள், எத்தனை மருந்துகள், எத்தனை தையல் மெஷின்கள்.…….”
“கண்ணாடி கிளாஸ்களில் ரம் இருந்தது. பீங்கான் தட்டுகளில் பாதி கடித்த சிக்கன் இருந்தது.
ஒரு பக்கத்தில் ‘சிறுநீர் கழிக்கும் போது எரிகிறதா? அப்புறம் எவ்வளவு முக்கினாலும் இரண்டு கல்கங்கள்தான் வருகிறதா?’ என்ற கேட்டு, அவர்கள் அந்தரங்க சுத்தங்களையும் பிரம்ம சௌகரியங்களையும் சுட்டிக் காட்டி, நட்ட நடுவே பீங்கான் தட்டில் கரும்பச்சையில் ஜெல்லி போன்றிருந்த வஸ்துவைப் பேனாக் கத்தியால் வெட்டி, அதில் ஒரு துண்டம் உட்கொண்டால் வரப்போகும் இன்பங்களையும் சௌந்தர்யங்களையும் பட்டியல் இட்டுக்கொண்டிருந்தான் ஒரு மீசைக்கார வைத்தியர்.”
இயக்குனா் கார்த்திக் சுப்புராஜ் அவா்களின் இயக்கத்தில் வெளிவந்த இறைவி, தரமான சம்பவமாக இ௫ந்தது இறுதியில் எஸ். ஜே. சூர்யா வினி ஆண், நெடில், பெண் குறில், என்றும் கூறும் போது மொத்தமாக இ௫ந்த கண்ணீ௫ம் வெளிவந்தது. நம் கண்ணில் இவ்வளவு கண்ணீர் இ௫ந்ததோ! என்ற ஆச்சிாியத்தோடு.. சுஜாதாவின் ஜன்னல் மலர் கீழே வ௫ம் போது. மெய்சிலிா்த்து கூகுள் பக்கம் வந்து தேடியதில் மகிழ்ச்சியோடு, காத்து பதிவு செய்கிறேன்.
this is my first tamil short story..crisp and engaging...could have added 1 more star to the rating but the negativity in these 78 pages is too damn high...life is colorful why don't people write about it..; still a great read..
ஒரு சிறிய கதை. சிறைப்பறவையாக இருக்கும் ஒருவன் தண்டனை முடிந்து வெளியே வருகிறான். திருந்தி வாழ நினைக்கும் அவனை சமூகம் மறுபடியும் தவறு செய்ய தூண்டி மீண்டும் சிறைப்பாவையாக மாற்றுகிறது.
இரும்புப் பெட்டிகளை லாவகமாக உடைப்பது சோமுவுக்குக் கை வந்த கலை. ஒரு முறை போலீசிடம் மாட்டிகொண்டு ஜெயிலுக்குச் செல்கிறான். சிறையில் இருக்கும் மூடத்தனங்களையும் வஞ்சத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஹோமோ செக்க்ஷுவாலிட்டியையும் சந்தித்தாகி விட்டது. இந்த ஒரு அனுபவம் ஜென்மங்களுக்குப் போதும், இனி சிறை மறுபடி வேண்டாம் என்று முடிவு செய்கிறான். நன்னடத்தைக் காரணமாக மூன்று மாதங்கள் முன்னமே வெளியே வருகிறான். சிறையில் தன்னை வந்து சந்திக்காத, ஒரு லெட்டர் கூட போடாத தன் மனைவி மீனாவையும் பெயர் என்னவென்றே தெரியாத தன் மகனையும் தேடி அலைகிறான். இவன் சிறையில் இருந்த காலத்தில் கைக்குழந்தையுடன் மீனா எப்படி கஷ்டப்பட்டிருப்பாள் என்று மனதில் நொந்துக் கொண்டே அலைகிறான். கடைசியில் தன் பழைய கூட்டாளியான ஜகனிடமிருந்து மீனாவின் விலாசத்தைத் தெரிந்துக் கொள்கிறான்.
மீனாவைப் பார்க்கிறான். அவனைக் கண்டதும் பயந்து நடுங்கி மீனாவின் பின்னால் ஒழிந்துக் கொண்ட தன் மகன் முருகனைப் பார்க்கின்றான். மனம் பதைபதைக்கிறது. மீனாவின் பேச்சில் வெறுப்பும் அலட்சியமும் தெரிகிறது. தன்னையே நொந்துக் கொள்கிறான். ஏதேனும் ஒரு தொழில் செய்து நன்றாக சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
எம்ப்லோய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் லஞ்சம் கொடுக்க மறுத்துப் போராடும் போதும், தன் பழைய தொழிலுக்குத் தன் கூட்டாளிகள் கூப்பிடும் போது 'இனி அந்த வாழ்க்கையே எனக்கு வேணாம்'ன்னு திடமாகச் சொல்லும் போதும், சிறு பெண் தமிழரசியிடம் தவறாக நடக்க எண்ணி அதை அடுத்த விநாடியே தவறு என்று நினைத்து தன் மனதை மாற்றிக்கொள்ளும் போதும், பல தினங்களுக்குப் பிறகு பார்த்த தன் மீனாவை தொட முயற்சிக்கும் போதும், 'அப்பா' என்று தன்னை அழைக்கும்படி தன் குழந்தையை கெஞ்சும் போதும் ஜெயிலுக்குச் சென்று திருந்தி வாழ நினைக்கும் ஒருவனது மனப் போராட்டங்களையும், இந்த சமுதாயம் அவனுக்குத் தரும் நெருக்கடிகளையும் மிகவும் துல்லியமாக நமக்குக் காட்டுகிறார் சுஜாதா.
This book, said to be an inspiration behind a recently released movie, is penned down by Sujatha.
I found the narration to be brilliant and very much aiding a colorful visualisation of the story. The characters are well plotted and the varied shades of emotions that they go through is nicely written.
Story seems predictable and nothing out-of-ordinary or spell-binding.
In all it is an engaging read for all those who are in the look out for captivating narrations.
ஒருவன் திருந்தி வாழ நினைத்தும் அவனது கடந்த காலம் நிழல் போல ஒட்டிக்கொண்டு வருகிறது. மீண்டும் மீண்டும் அதை உதர முயற்ச்சிக்கிறான், கதை செல்ல அதன் உள்ளேயே மூழ்கிவிடுகிறான். 'இறைவி' படம் இதன் தாக்கத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிந்து தான் இதை படித்தேன். அதன் பெண்ணியம் இதிலும் உண்டு, வேறு வடிவத்தில்!