What do you think?

அந்தமான் நாயக்கர்
வெள்ளை அரசை எதிர்த்து நடந்த் கொடிப் போராட்டத்தின்
போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறிக்கட்டிவிடுகிறான். அதன் பிறகு நடந்ததைச் சொல்லுகிறது இக்கதை.

144 pages, Paperback
First published May 1, 1995
About the author
கி. ராஜநாராயணன்
63 books184 followersகி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.
Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
July 19, 2017
கோபல்ல கிராமத்தை கதைக்களமாக வைத்து எழுதப்பட்ட மூன்றாவது நாவல்.இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்வதாக கதை எழுதப்பட்டிருப்பதால் முதலிரு நாவல்களிலும் பார்க்க கிராமியப் பண்புகள் குறைந்து முற்போக்கு இலக்கிய அம்சங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. அடிமைத்தனத்தை ஒழிக்காது வெறுமனே ஆட்சியாளரை மாற்றிய "சுதந்திரத்தின்" அர்த்தமற்ற தன்மையையும் துரோகத்தையும் மையக்கருக்களாக கொண்டு இயல்பாகவும் அழகாகவும் கதைசொல்லியிருக்கிறார் கி.ரா
October 11, 2023
கி.ராவின் கதைகள் தரும் தண்மை மனதைக் கட்டியணைத்துக் கட்டிப்போடக் கூடியது. அப்படிப்பட்ட ஒரு பாங்கு இந்தக் கதையின்வழியும் நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.
வெள்ளைத் துரைமாரிடம் விடுதலை பெற்றதெல்லாம் கறுப்புத் துரைமாரிடம் மிதிபடத்தானா எனும் காட்டமான கேள்வியைப் பதிவு செய்கிறது இந்நூல். நீதியென்ற பெயரில் இழைக்கப்படும் அநீதித்தீயின் வெம்மையை மழையில்லாக் கரிசல் நிலத்து மக்கள் வாழ்வின் வழி பார்க்கையில் உளங்கொதிக்கிறது.
இப்படி அரசியல் அல்லாது தனிமனித நம்பிக்கை மோசங்களையும் சொல்லி நம்பிக்கை மோசத்தின் கொடுமையைப் பேசுகிறது இப்படைப்பு.
கிராவின் தண்மை இல்லாதுபோயின் மனதை நொறுக்கியேயிருக்கும் இக்கதை கொண்டுள்ள வலி.
போகிறபோக்கில் பெரும் அரசியல் உண்மைகளைப் பதிவு செய்கிறார் கிரா. "அரசாங்கம் மாறிச்சு, அதிகாரிகள் மாறலியே" "வெள்ளை அரசுக்கு இருந்த கருணை கூட இந்த அரசுக்கு இல்லையே!" "அந்தமான் சிறையில் கூட அடித்துவிட்டு தண்ணீர் கொடுத்தார்களே!" "ஆங்கிலேயன் போய்ட்டான் ஆனா ஆங்கிலம் இன்னும் போகலியே" "தனக்காக தன் தரப்பு வாதத்தை வாதிடும் வழக்குரைஞர்களை கருநாடக இசைக்கச்சேரி பார்ப்பது போல மாறி மாறி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் வழக்கு தொடுத்தோர். வழக்குரைஞர் யார்க்கும் புரியாத ஆங்கிலத்தில் வாதாடியதால்." எனும் வரிகளே அதற்குச் சான்று.
விரலக்காவின் கதை சுமக்கும் வலி சொல்லி மாளாதது.
இப்படியெல்லாம் நம்பிக்கை மோசம் செய்வோர் நன்றாக இருப்பதில்லை என்பதையே கரிசல் மண்ணின் மணத்துடன் சொல்கிறது இந்தக்கதை. அம்மண் சில நேரங்களில் மணம் கமழ்க்கிறது சில நேரங்களில் வெம்மை நெடியை வீசுகிறது.

October 31, 2024
#8thbook #8Mar2024 #Madhu_ReadingChallenge2024
கோபால்ல கிராமத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட 3 வது நாவல். கி. ரா அவர்களுக்கே உரிதான கரிசல் காட்டில் உள்ள மக்களின் கதை இது.
தான் பல வருடங்களாக விசுவாசமாக வேலை பார்த்த முதலாளியின் துரோகத்தால் தன் இளமை காலத்தை இழந்த அழகிரி நாயக்கர் எப்படி அந்தமான் நாயக்கரா் ஆனார், ஒரு குற்றமும் செய்யாத, தனக்கென சில அரசியல் கருத்துகளை கொண்ட அந்தமான் நாயக்கரை எதற்காக சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்துக் கொன்று போடுகிறது என்பதே இக்கதை.
இப்புத்தகத்தின் மையப்புள்ளி "நம்பிக்கை துரோகமும் "
கதையில் வரும் "விறலாக்கா "கிளை கதையும் நம்பிக்கை துரோகத்தை பற்றியே பேசுகிறது.
நாயக்கரின் சொல்லாத காதல் கதை - வெங்கடம்மா அற்புதமான உணர்வு.
கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய கதை.
#madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge
#readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders

October 17, 2013
அந்தமான் நாயக்கர், கோபல்ல கிராமம் முன்றாம் பக்கம் என்று சொல்லலாம் அதே போல் கதை சொல்லும் விதம், அதே போல் கதை, அனால இது அந்தமான் நாயக்கர் என ஒரு தனி மனிதரை சுற்றிப் ஒரு கிராமம்தில் நடக்கும் சமுக போராட்டத்தின் கதை. ஏற்கெனவே படித்ததுபோல் இருந்தாலும்கூட கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதும் விதம் அவை மறக்க தோன்றுகிறது.
Currently Reading
January 6, 2016want to read
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews