நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகா மில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கி யிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
இலக்கியம் கலந்த மற்றுமொரு த்ரில்லர். காதல், ஆக்ஷன், தத்துவம், ராணுவம் என பல கலவை. தலைப்பு பாதி புத்தகம் படித்ததும் கதையை ஊகிக்க வைக்கிறது. நல்ல திருப்பங்கள்.
நன்றாக கதை தொடங்குகிறது. ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் அலுப்பை தருகின்றன. பொரும்பாலான உரையாடல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி இருக்கின்றார். கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் தான் இந்த புத்தகத்தை படிக்க முடியும்.
ஒரு திரைப்படத்தின் நோக்கத்துக்காக படைக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக, தெளிவான ராணுவ நடவடிக்கைகளைச் சுற்றி நகரும் கதை, காதலை சொல்ல ஆரம்பித்தவுடன் ஒரு திரைக்கதையின் செயற்கைத்தனம் அப்பிக்கொள்கிறது. களத்தைச்சொல்லும் புதினமாக இல்லாமல், திரைகதையாய் மிளிறக்கூடும். அதுவே சமீப காலமாக திரைப்படங்களில் பணியாற்றிவரும் ஜெயமோகனின் நோக்கமாகவே இருக்கக்கூடும். ஏனோ சிறுகதைகளில் ஈரம் நிறைந்த நிகழ்வுகளால் மின்னும் வாசிப்பு அனுபவம், அவர் எழுதும் சில நெடுங்கதைகளில் வெறும் அலங்கார தோரணமாய் செயற்கையாக, வலிந்து திணித்ததாய் தோன்றுவது, தவிர்க்க இயலவில்லை...
அது மட்டுமல்ல அதரபழசான ஒரு வரி கதை. இராணுவ வீரனும், வடகிழக்கில் கிளர்ச்சியிலீடுபடும் குழு தலைவனது மகளுக்குமான காதல்தான் கதை.
நெல்லையப்பன் தன்னை சார்ந்தவற்களால் வஞ்சிக்கப்படும் போதும், காதலியை மறக்கமாட்டேன் என்று சொல்லவில்லை, மறக்க முடியாது என களங்கும்போது வெறும் வார்த்தைகளைக் கொண்டு அத்தனை வலியையும் உணர்வுகளையும் நம்முள் செலுத்திவிடுகிறார் ஜெயமோகன்.
நெல்லையப்பனாகவே ஒரு சில மணி நேரங்கள் அழ வைத்து, மதூக மலரை நுகரவைத்து, ஜுவாலாவை நினைத்து ஏங்கி வைத்துவிட்டார் ஜெயமோகன்.
சுஜாதாவின் புத்தகங்கள் விறுவிறுப்பாகவும் informative ஆகவும் இருக்கின்றன ஆனால உணர்வுர்பூர்வமாக இருப்பதில்லை, அது இலக்கியமுமில்லை என ஜெயமோகன் கூறியது இந்த கதைமுடிக்கும் பொழுது நினைவிற்கும் வந்தது..
An emotionally riveting novel. Fast paced. The author has done ' some ' study about the army and their ways. However the novels feels like a hastily written one. Certain twists in the novel are not convincing at all. After finishing the novel it feels like having seen an emotional drama.