எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும்.
இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றில் அணையாது கிடக்கும் அந்த அனல்மீது நம் சமாளிப்புகளையும் வெட்டித்தர்க்கங்களையும் அள்ளிப் போட்டு மூடிவிடக்கூடாது.
அதற்கு அப்பால் இது முதல் உரிமைக்குரலின், ஒடுக்கும் வரலாற்றுக்கு எதிராக எழுந்த அடிமையின் முதல் முஷ்டியின் கதையும் கூட.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
ஜெயமோகனின் இந்தப்படைப்பு தமிழில் முக்கிய மைல்கல்... Ambedkar said casteism is a graded inequality. Here Jeyamohan uses the madras famine during British rule as a back drop and brings the atrocities against the lower castes by saying how the caste hierarchy works tirelessly to crush the depressed classes and thrives by helping the British government to exploit the the human resources. இங்கு வெள்ளையானை ஒரு குறியீடு மட்டும். மேலோட்டமாய்ப் பார்த்தால், உறைந்த பனிக்கட்டிகள். ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால், அது சற்றும் அசையாத சாதியம் தான். That is actually a fault line on the natural species just like albino elephant which never changes state and unmovable but helps it's masters to oppress the masses. Like an elephant it cannot be completely subdued by its master and when pushed can turn against it's master.
ஒரு பஞ்சம் எங்கிருந்து தொடங்குகிறது?. வறண்ட நிலத்தில் இருந்து? பொய்த்த வானத்தில் இருந்து? ஏமாற்றிய பருவநிலையில் இருந்து? இல்லை உண்மையில் பஞ்சம் அன்பற்ற ஒரு நெஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த நாவல் தமிழின் மகத்தான நாவல்களுள் ஒன்று.. தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட நீதியைப் பற்றி முகத்தில் அரைந்து சொல்கிறது..
இந்த நாவலில் ஒரு பகுதி வருகிறது எய்டன் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டுக்கு ஆண்ட்ரு என்கிற ஒரு இளைஞனுடனும் ஜோசப் என்கிற உள்ளூர் காரனுடனும் போகிற பகுதி. அந்த பகுதியை உங்களால் கண்ணீர் இல்லாமல் கடக்க முடியாது.. அதை படித்த இரவு உங்களால் உணவு உண்ணவும் உறங்கவும் முடிந்தது என்றால் நீங்கள் மிகப் பெரிய தைரியசாலிகள். யாரும் கேள்விப்பட்டிராத முதல் தொழிலாளர் போராட்டத்தை பதிவு செய்ததற்காகவே இந்த நாவல் வரலாற்றுச் சிறப்பு பெறுகிறது.. இதில் இருக்கும் கதாப்பாத்திரங்கள் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமானவை நான் ஆண்ட்ரூவாக இருந்திருக்கிறேன்.. காத்தவராயனாக முயற்சி செய்திருக்கிறேன்.. மிகவும் வருத்ததிற்கு உரிய விஷயம் நான் இப்போது ஏய்டனாக இருப்பது..
இதில் வரும் சாதியைப் பற்றிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. இந்த கருத்திற்கு வந்து சேர சாதி குறித்து நீண்ட வாசிப்பு தேவைப்படும்.ஆனால் அதை ஒரு வரியில் சொல்லி செல்கிறார் ஜெ.மோ.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஒரு ஐஸ் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது.
படிக்க படிக்க அந்தக் கால மெட்ராஸ் கே கூட்டி போகும் அளவுக்கான நேர்த்தியான எழுத்து நடை.
மதராஸ் பஞ்சம்-உரிமைக்கான எளிய மக்களின் போராட்டம்-காத்தவராயன் முன்னெடுப்பு -அதற்கு ஆங்கில அதிகாரியின் ஆதரவு. இன்று போல அன்றும் பார்ப்பணியத்தின் சாதி தீண்டாமையால் உரிமைகள் தடுக்கப் படும் பொழுது நிகழும் கலவரம்.
இந்தியாவின் சனாதன சாதி அமைப்பு எப்படி ஏழை மக்களைத் தீண்டாமைக் கொடுமை செய்தது அதை மாட்சிமை பொருந்திய மகாராணியின் அரசு எப்படி சுரண்டலுக்குப் பயன்படுத்தியது என்பதை சுற்றியே கதை நகரும்.
சாதிக் கொடுமையை விட வெள்ளையர்கள் பரவாயில்லை. அவர்கள் கொஞ்சம் கல்வியாவது கொடுத்து நவீன உலகுக்கு வழிகாட்டினார்கள். பல நல்ல ஆங்கில அதிகாரிகளும் இருக்கத்தான் செய்தார்கள்கதாநாயகன் ஏய்டனைப் போல. இதுவே திரு.ஜெயமோகன் சொல்ல விழைக்கிறார். அது உண்மையும் கூட.
" இங்கே எல்லாருமே யாருக்காவது உயர்சாதிதான். எல்லாருமே யாருக்காவது தீண்டப்படாத சாதியும்கூட"
Those who synergied despite the differences, ruled. And those who remained in disjunction were being ruled. "நாம் இந்த நாட்டில் உருவாக்கி வைத்திருக்கும் அதிகாரம் நம்முடைய விசுவாசிகளான இந்தக் கருப்பர்கள் மீது கட்டப்பட்டது. இவர்களின் பயத்தையும் சுயநலத்தையும் அற்பத்தனத்தையும் கொண்டு அதை நாம் இணைத்துக் கட்டியிருக்கிறோம்."
இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட முதல் தொழிற்சங்கப் போராட்டம் தலித் மக்களால் முன்னெடுக்கப்பட்டதையும் , 1876-1878 வரை Madras presidency-ல் நிலவிய உணவுப் பஞ்சத்தையும் மையமாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் புனைவு.
ஆங்கிலேய அடக்குமுறையையும் சுரண்டலையும் விட நம் சமூகத்தில் நிலவிய கடுமையான சாதியக் கட்டமைப்பும் தீண்டாமையும் எப்படி தலித் மக்களைப் பாதித்தது என்கிற உண்மையை உணர்த்தும் நாவல்.
அறத்தையும் மனிதத்தையும் தாண்டி நம் சமூகம் சாதியத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை இந்த நாவல் மூலமாகத் தெரிந்துகொள்ளும் போது அதே சமூகத்தின் அங்கமான நம்மை அவமானப்படவும் வெட்கப்படவும் வைக்கிறது.
இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் சாதிகளைக் கடந்த முன்னேறிய சமூகமாக நாம் இருக்கிறோமா என்கிற முக்கியமான கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் பஞ்சத்தால் அடிபட்டு ஒரு வேலை சோற்றுக்காக ஆங்கிலேயரிடம் கொத்தடிமைகளாக இருந்த காலகட்டத்தை விவரிக்கும் கருப்பு சரித்திரம்!
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது (தற்போதிருந்து 150 ஆண்டுகளுக்கு முந்தைய) மதராஸ் மாகாணத்தின் அடித்தட்டு மக்களின் நிலையயை மிக அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல். தமிழர்கள் மிகச்சிறந்த பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்குள்ளேயே உயர் சாதியினர் (செல்வச் செழிப்போடும் அதிகாரத்தோடும் உள்ளவர்கள்) தாழ்ந்த சாதி என்று ஒரு பகுதியினரை ஒதுக்கி வைக்கின்றனர். இரத்தம் சுண்ட அவர்கள் உழைத்த போதும் வாழ்வின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. பஞ்சம் என்று வந்த போதும் அதை வைத்து செல்வம் சுரண்டும் அரசு ஒரு பக்கம், சக மனிதர்கள் சாவதை ஒரு துயரமாகவே காணாத உயர் சாதி குடிமக்கள் ஒரு பக்கம். இவர்களுக்கிடையில் பஞ்சத்தால் சாகும் மக்களைப் பற்றி கவலை கொண்ட ஒரு பிரிட்டிஷ் காப்டனின் நிலையிலிருந்து காட்சிகளை விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜெயமோகன். சமீபத்தில் படித்ததில் மனத்தை பாதித்த ஒரு நூல். ஆசிரியர் முன்னுரையில் கூறுவது போல தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சுரண்டலுக்கும், கொடுமைகளுக்கும் நாமும் தார்மீக ரீதியில் பொறுப்பு எனும் போது நிச்சயம் மனம் குற்ற உணர்ச்சியடைகிறது.
சக மனிதனை சமவுரிமையோடு நடத்துவோம். இனி வரும் சமுதாயத்தில�� ஏற்றத்தாழ்வை ஒழிப்போம். நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.
1870 களில் மதராஸில் நிகழ்ந்த பெரும் பஞ்சத்தைப்பற்றியும் , இந்த பஞ்சத்தை பயன்படுத்தி எப்படி ஆங்கிலேயர்களும் இந்திய உயர்சாதியினரும் பட்னி அகதிகளாய் தள்ளப்பட்ட தாழ்ந்த சாதி மக்களை கொஞ்சமும் மனிதாபமின்றி தங்கிள் தொழில் வளர்ச்சிக்காவும் , சுயலாபங்களுக்காவும் பயன்படுத்தி அவர்களின் உழைப்பை சுரண்டி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த நிகழ்ச்சிகளையும் மெட்ராஸில் இயங்கிவந்த Ice factory இல் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் நிகழ்த்திய வேலை நிறுத்தம் போன்றவற்றை மையப்படுத்தி இயற்றப்பட்டது இந்த புத்தகம்.
கங்காணி அடிமைமுறை , குறைந்த ஊதியும், ஒரு வேலை சோற்றுக்காக அதிக நேரம் வேலை பார்க்க சொல்லும் பணிச்சுமை , மோசமான பணிச்சூழல் , தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய எந்த ஒரு அடிப்படை உரிமையோ மரியாதையோ இன்றி விலங்குகள் போல அடித்தட்டு மக்கள் நடத்தப்பட்ட விதம் போன்றவற்றையும் இப்புத்தகம் விவரிக்கிறது.
ஒரு பக்கம் லட்சக்கணக்காய் மக்கள் பஞ்சத்தால் பட்னி கிடந்து நோய்வாய்பட்டு புண் பிடித்து, உடல் அழுகி, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் காய்ந்து வற்றிய முலைகொண்டு தன் குழந்தையின் பசியைபோக்கமுடியால் சாலையில் செல்லும் வண்டியின் பின் ஒரு துண்டு ரொட்டிக்காக ஓடும் தாய் , உண்ண எதுவும் கிடைக்காமல் கொத்து கொத்தாய் குடும்பங்கள் இறக்க மற்றொரு பக்கம் பசி என்ற ஒன்றை அறியாத ராஜபோக வாழ்க்கை வாழும் வெள்ளை துரைமார்கள் , சீமாட்டிகள் மாற்றும் உயர்சாதி இந்தியர்கள் இதுதான் அன்றை நிலைமை.
புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாய் வாசிக்கையில் தோன்றுவதெல்லாம ஒருத்தருக்கூடவா இந்த மக்கள் மேல் பரிதாபம் வரவில்லை ? இவர்களுக்கு கிடைத்தவற்றில் 1% ஆவது இந்த மக்களுக்கு கிடைத்தால் குடும்பத்தில் ஒருத்தரவாது உயிர்பிழைத்திருப்பார்கள் என்று தோன்றியது.
ஜெயமோகன் இந்த மக்களின் நிலைமையைப் பற்றி விவரிக்கும் போது நாம் வாழும் இந்த அழகான பூமியிலா இதுபோன்ற கொடுமையான வாழ்வும் இறப்பும் இந்த மக்கள் அனுபவித்தார்கள் என்று உள்ளம் பொங்குகிறது.
மனிதன் அத்தனையும் துறந்தால் அவனிடம் மிஞ்சி இருப்பது ஒன்று என்றால் அது மனிதாபிமானம் மட்டும்தான். இந்த மனிதாபிமானம் தான் மக்களை விலங்காக்காமல் உலகை அமைதியான வழியில் இயக்கச் செய்கிறது. மனிதனுக்கு ஒன்று என்றால் எந்த தேவனும் கரம் நீட்டமாட்டான் இன்னொறு சக மனிதன் வருவான்.
அதுபோன்றே இந்த பாவப்பட்ட மக்களுக்காக வெள்ளையர் தரப்பில் ஏய்டன் என்ற போலிஸ் அதிகாரியும் , இந்தியர் தரப்பில் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்து தன் மக்களுக்காக குரல் கொடுத்த காத்தவராயனும் ( அயோதிதாச பண்டிதர்) போராடுகிறார்கள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காக நீதி வாங்கி கொண்டுக்கவில்லை என்றாலும் பராவியில்லை அவர்களுக்காக குரலாவது கொடுக்கவேண்டும் அதைதான் ஏய்டனும் காத்தவராயனும் செய்தார்கள்.
Just stand up for people... Atleast be there for people...
குருரமான புத்தியையும் அடித்தட்டு மக்களை அடிமைகளாய் நடத்தும் விதம் மற்றும் அம்மகளை வளரவிடாமல் அவர்களுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கச்செய்யாமல் செய்த இந்திய உயர்சாதியினரை பார்க்கையில் வெள்ளையர்களே எவ்வளவோ மேல் என்று தோன்றும்.
உலக வரலாற்றில் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். நீதியுண்ர்ச்சியும் அவர்களை கைவிட்டதென்பதே நிஜ வரலாறு. இந்த வரலாற்றை நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Not a typical historical fiction. It discusses the politics, economics and the social factors which created great famines during 1870s in the British occupied India.
Really liked the well etched and strong characters of Aiden and Kaathavarayan. I didn't like the philosophical exploration of life with PB Shelly's poems though, I found them very lengthy and tedious. But the other arguments made by Jeyamohan about caste, equality and religion is very strong and compelling. I will never be able to look at Madras the same way before.
Overall a very good read. This is my first novel of Jeyamohan and has not disappointed me at all.
ஒரு புவியியல் பரப்பில் மழைப்பொழிவின் சராசரி அளவிற்க்கும், அங்கு வாழும் சமூகத்தின் பயிர் வேளாண்மை, நீர்நிலை மேலாண்மைக்கும் வருடந்தோறும் நடைபெறும் மல்லுக்கட்டுப் போர்தான் ‘வறட்சி’(Drought) என்கிறார் மைக் டேவிஸ் (Mike Davis). தனது (Late Victorian Holocaust) ‘பிற்கால விக்டோரிய அரசின் பாரிய இனப்படுகொலை’ என்னும் நூலில், அவர் மேலும் ,ஒரு முதலீட்டிய (Capitalism)சமூகத்தில் பெருந்துயர் நேரும் போது அதன் , எந்நிலையிலிருப்பவரும் பழியை அடுத்த அடுக்கிலிருப்பவர் மீது சுமத்தி குற்றத்திற்கு பொறுப்பேற்றகாமல் தப்பிக்க இயலும் என்கிறார். ஜெயமோகன் தனது ‘வெள்ளையானை’ என்கிற வரலாற்று நாவலின் மூலம், தக்காணப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட தாதுவருட வறட்சி காலத்தின் இரக்கமில்லாத களவிவரணைகளை புனைவின் துணைகொண்டு அனைத்து புலன்களையும் மொழிவழியாக நிரப்பிய அனுபவத்தினை தருகிறார். அக்கால சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி, அன்று நிகழ்ந்த மானுடப் பெருங்குற்றத்தின் பங்கினை அவரவர்களுக்கு பங்கிட்டுப் பொருத்திக் கொடுத்து காலத்தின்முன் கைவிலங்கிட்டு நிற்க வைக்கிறார்.
இந்தியத் துணைக்கண்டத்தில், 1876 முதல் 1878 வரையான வருடங்களில் மழைப்பொழிவு விகிதத்தின் மிகவும் குறைவான அளவு என்பது முன்பு பலமுறை நிகழ்ந்த வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் தாதுவருடப் பஞ்ச காலத்தில், அன்று பிரிட்டீஷ் இந்தியாவில் வாழ்ந்த 5.5 மில்லியன் மக்கள் இறந்து அழிந்தார்கள். இது பிரிட்டீஷ் தீவுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து தீவுகளில் அன்றிருந்த மொத்தமக்களும் கூட்டாக இறப்பதற்குச் சமம். பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னரான இந்தியாவின் பெரு, குறு மன்னராட்சியின் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வறட்சி தாங்கும் அமைப்புகள் உருவாகி நிலைத்திருந்தன. இவைகளே பருவமழை பொய்த்ததன் மோசமான விளைவுகளை காலங்காலமாக தாங்கி மக்களை காத்தன. நூற்றாண்டுகளாக பேணப்பட்ட பஞ்சம் தாங்கி அமைப்புகளை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தங்கள் முதலீட்டிய வரிவிதிப்பு என்றும் மாபெரும் ஊசி கொண்டு மொத்தமாக உறிஞ்சி எடுத்து சக்கையாக்கி விட்டதன் விளைவுதான் இந்த பெரும் எண்ணிக்கையான உயிரிழப்புகள்.
மதராசப்பட்டிணத்திலிருந்து சில மைல் தொலைவில் செங்கல்பட்டிலும், கர்ணுலிலும், மைசூரிலும் மாதங்களாக மாவுச்சக்கரை கிடைக்காமல், உதடுகள் உரிக்கப்பட்டு, வெறிநாய்களின் ஊன் உண்ணப்பட்ட வாயால் கவ்வப்பட்டு ,மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நிலத்தின் உ���ைமை அடுக்கில் அடித்தளத்தில் இருந்த பறையர் இன மக்கள். அதே நேரத்தில், பிரிட்டீஷாரின் கொடை எனக் கொண்டாடப்படும் ரயில் இருப்பு தடங்களில், நீராவி இயந்திரத்தால் இழுக்கப்பட்ட மேல்பக்கம் திறந்த இரும்புப் பெட்டிகளில், கடைநுனி கிராமப் பகுதியிலும் வரியிட்டு பெற்ற தானியங்களை ஆழாக்கு கூட விடாமல் துடைத்தெடுத்து சென்னை , விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு கடத்தினார்கள். பிரிட்டீஷாருடன் அதிகாரத்தில் சமரசத்தில் இருந்த உள்நாட்டு நாயுடு, செட்டி , அய்யங்கார் உயர்சாதி மாட்டு வண்டிகளில் முரட்டு மறவர்களின் குத்தீட்டிகளின் காவலுட���் சிற்றூர்களிலிருந்தும் இந்த தானிய மூட்டைகள் ரயில் நிலையங்களுக்கு கடத்தப்பட்டது.
ஒருபுறம் இது ஆணா, பெண்ணா, முதிர்ந்ததா, குழந்தையா எனப் பிரித்திறியமுடியாமல் சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் செத்தழிந்து சடலங்களாக, மறுபுறம் பிரட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் வெறி கொண்ட ஆக்கிரப்பு போட்டிக்காக எகிப்திலும், மத்திய ஆசியாவிலும் போர்க்களத்தில் நின்ற போர் வீரங்களின் வருங்கால தேவைக்காக, துறைமுங்களில் மூட்டைமூட்டையாக தானியங்கள் காத்திருந்தன. புதியதாக ஊக வணிகத்தில் நுழைந்த இறங்கிய உள்ளூர் உயர்சாதி முதலாளிகள், பிரிட்டீஷாரின் மற்றொரு கொடையான தந்தி தொழில்நுட்பம் மூலம் தானிய விலைத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்துகொண்டனர். தானிய விலைகள் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒரே விலையாக நிலைநிறுத்தி வைத்து ஏழைகளுக்கு எட்டாதபடி பதுக்கினார்கள். பஞ்சத்தின் கோரப்பசியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இரக்கமில்லாமல் அதிமடங்காக கூட்டியதன் பாவத்தில் இவர்களும் பங்கு பெற்றார்கள். ஒரு சிலர் தங்கள் வெற்றிலைப் பெட்டியில் வைரங்களைப் பதிக்கும் அளவிற்கு லாபம் ஈட்டி னார்கள்.
வெள்ளையானை நாவலின் முதன்மைப்பாத்திரமான ஏய்டன் பைர்ன் அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர். மாட்சிமை பொருந்திய பிரிட்டீஷ் பேரரசியின் அதிகாரத்திற்குட்பட்ட சென்னைப்பட்டிணத்தின் ஒரு படைப்பிரிவுக்கு கேப்டனாக இருப்பவர். தன் உள்ளார்ந்த நீதியுணர்ச்சியால் மாற்ற முடியாத இந்தியப் புறச்சூழலில் புழங்கியவர். தன் மனதின் காட்டுத்தீ ஓய்ந்து அடங்காத தருணங்களில் ஷெல்லியின் கவிதைவரிகளுடன் விஸ்கி நிரம்பிய கோப்பைகளுக்குள் தன்னைத் தொலைக்க முயலுபவர். ஏய்டன் தனது சொந்த அயர்லாந்து மண்ணின் நினைவுகளால் அலைகழிக்கப்படுகிறார். பிரிட்டீஷாரின் அதிகாரத்திற்கு விசுவாசமாக இருந்தாலும் ஐஸ் ஹவுஸில் இறந்த ஒடுக்கபப்பட்ட அடித்தள மக்களுக்கு நீதி பெற்றுத்தர முயல்கிறார். ஒரு இக்கட்டான மனம் பிறழ்ந்த கட்டத்தில் அவர்களின் போராட்டத்தையே இயந்திர துப்பாக்கி கொண்டு கலைக்க அதிகாரத்தின் கருவிகிறார். அந்த நினைவிலிருந்து தன்னை மீட்க மரிஸாவினை அணுகமுடியாததால், தன் கபாலத்தை துப்பாக்கி குண்டால் உடைத்து Khorne என்னும் பாகன் போர் (Pagan god for destruction and bloodshed) தெய்வத்திற்கு அர்பணிக்க முயல்கிறார். செங்கல்பட்டு சென்று பஞ்சத்தை ஆவணப்படுத்த முயன்று முடிவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை சுவருக்குள் நீதி கேட்டு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெளியேறுகிறார். சதுப்பு நீர் பின் கதுப்பில் குடிசையில் தொண்டுக் கிழவி கொடுத்த நுங்கின் பரிவினால் உளம் உடைந்து தத்தளிக்கிறார். இவ்வாறு ஏழு தலைகள் கொண்டு சிந்தித்து குழம்பி இயங்கும் வெள்ளைக் குதிரைபோல இந்த ஏய்டன் பைர்ன் எனக்குத் தோன்றுகிறார்.
அயோத்திதாச பண்டிதர் , காத்தவராயன் என்கிற இளைஞராக இந்த நாவலின் இரண்டாவது முதன்மைப் பாத்திரமாக வருகிறார். முதலில் தன்னை வைணவராக ஏய்டனிடம் அறிமுகப்படுத்திக் கொள்பவர் முடிவில் நுங்கு கிழவியின் பரிவினாலும், முரகரி அய்யங்கார் போன்ற உயர்சாதியினரிடம் வாதிட்டுப் போராடித் தோல்வி கண்டபிறகு முடிவில் பௌத்தத்திற்கு மதம் மாறுகிறார். முகமறியா ஐஸ் ஹவுஸ் தொழிலாளிகளைத் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பயிற்சி கொடுப்பது. கடலின் ஓசையை அடக்கிய சங்கின் ஒலி போல, ஏய்டனின் நீதியுணர்ச்சியை தூண்டி, பஞ்சக் காட்சிகளை காண்பதற்கும், பிரிட்டீஷ் கவர்னருடன் உரையாடும் அறச்செயலினை நோக்கியும் உந்துகிறார். பெரும் கப்பல் போன்ற ஒரு சமுகத்தின் இயக்கத்தின் போக்கை தான் ஒரு சிறிய பறவை என்றறிந்தும் வாய்ப்பமையும் போதெல்லாம் எத்தனத்துடன் அதன் திசையை மாற்ற முயல்கிறார்.
இந்த நாவலின் மிகப்பெரிய பலம், மனத்தினை வருத்திப் பிசகாமல், கடந்து செல்லவே முடியாத பஞ்ச கால சூழலின் இரக்கமில்லா விவரிப்புதான்.
ஒரு நாளைக்கு சராசரியாக இருபதாயிரம் பிணங்கள் விழுகின்றன.
பஞ்சம் ஒரு காட்டுத் தீ போல, மலை மலையாக உணவைக் கொட்டினால் மட்டும்தான் அணையும்.
உடலின் ஒட்டுமொத்த திரவத்தையையும் சதையையும் உறிஞ்சி எடுத்துவிட்டதைப் போன்ற உருவம்.
எலும்புகள் மீது ஓடும் நரம்புகள் புடைத்து தெரிந்தன்
மொத்த சாலையே கரிய புழுக்கூட்டங்கள் அடர்ந்து நெளியும் சிவந்த மாமிசத்துண்டு போலத் தெரிந்தது.
ரொட்டி கீழே விழுந்ததும் அந்தப் பகுதியில் மானுட உடல்களினாலான கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்தது.
என்கிறார் ஜெயமோகன்.
என் வாசிப்பில் அந்தப் பகுதிதான் கதையின் மையம். கதையின் மொத்த முதல்பகுதியும் செங்கல்பட்டிற்கு ஏய்டன் செல்லும் அந்த பயணம் நோக்கி குவிகிறது. அதன் பின், ஏய்டன் விழிவழியாக கதை சென்னைப்பட்டிணம், ஐஸ்ஹவுஸ் போராட்டம் என விரிகிறது.
காத்தவராயன் ஒருமுறை
‘இதோ இந்தக்குழந்தைகளில் முக்கால்வாசி இன்னும் இரண்டே மாதத்தில் இறந்து விடும். கடவுளுக்கு கருணை இருந்து அப்படி எஞ்சும் குழந்தைகள் எவை என்று மட்டும் இப்போதே காட்டிவிட்டால், அவற்றிற்கு மட்டும் சோறுபோட்டு வளர்க்கலாம். எஞ்சியவற்றை பட்டினி போட்டே சாக விட்டுவிடலாம். தங்குபவை வலுவான குழந்தைகளாக இருக்குமல்லவா? என்கிறார்.
நூற்றாண்டுகளாக நிலத்தில் அடிமைபோல வாழ்ந்து , வன்முறை அறியாத, குழுவாக இயங்கவும் முடியாத மக்களின் இறப்பினை அப்பட்டமாக விவரிக்கிறார். பஞ்சத்தின் முதல்காட்சியை அமலத்துளி பட்ட புழுபோல, ஏய்டன் கண்டபிறகு, தன் உறைந்து போன காலினை வெட்டி எடுத்து நகர எத்தனிக்கும் தருணமும், அந்த உதடு உரியப்பட்டு இறப்பின் விளிம்பிலுருக்கும் பெண்ணின் ‘தொர தொர’ என்கிற ஒலியும் என்றும் என் நினைவிலிருந்து அழியப்போவதில்லை.
இந்த நாவலின் மற்றொரு பலம், இதன் வலுவான உவமைகள். இவைகள் கண்முன் நிகழும் அனுபவம் எனத் தருவதைத் தாண்டி, புலனடுக்களைக் கடந்து உணரும் அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த உவமை சொற்றொடர்களை மட்டும் வெட்டியெடுத்து தனியே பக்கங்களாக அடுக்கினால், அதுவே 150 பக்கத்திற்கான புத்தகமாக வந்துவிடும் போல.
சேவகம் செய்யும் கறுப்பர்கள் அவர்கள் சுயநலம் பாதிக்கப்படும்போது மாறாத பணிவிற்குள் காட்டும் உறுதியான எதிர்ப்பு. வெண்ணைக்குள் ஒளிந்திருக்கும் மீன் முள்போல தொண்டையில் குத்துவது.
மாபெரும் வெள்ளைத்துணி ஒன்று காற்றில் பறந்திறங்கி படிந்தது போல கடற்கரை இருந்தது.
அவர்களின் கண்களைப் பார்த்தான். அழுகிய மட்கிய திராட்சை விழிகள்
அவன் உடல் ஒரு இறுகிய முஷ்டி போல அவன் முன்னால் நின்றது
மரிஸா சிரிப்பது கையை பொத்தி, மீன்விழுங்கி பறவை போலிருந்தது
புதருக்குள் புறாமுட்டை கிடப்பது போல கண்கள்
ஏய்டனின் விழிக்கோணம் வழியாக விரிவாகும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளிருக்கும் மதராசப்பட்டிணம் இந்த பஞ்சக்காட்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. பெர்ஜூயன் துப்பாக்கியும் ( ferguson rifle) , ஸ்னைடர் என்பீல்டு துப்பாக்கியும் (sniter enfied gun) ஏந்திய சிப்பாய்கள். புதிய தொழில்நுட்பமான நிலக்கரி வாயு மூலம் எரியூட்டப்படும் எரிவாயு விளக்குகள் (Gas lamps) . Abbot-Downing Company யால் சீமாட்டிகளுக்காக செந்திறத்தில் பளகளக்கும் ஸ்லெட்ஜ் கோச்சு வண்டிகள். தோதகத்தி மரத்தினால் செய்யப்பட்ட மாபெரும் கட்டிடக் கதவுகள் என செல்வம் நிரம்பித் ததும்பி செங்குதம் வழியாக வெளியேறும் மலம் போல ஆபாசமாக வழிகிறது.
இந்து புராணத்தின்படி சாகாவரம் தரும் அமிர்தத்தினைப் பெற எத்தனித்து, பாற்க்கடலினை தேவர்களும் அசுரர்களும் கூட்டிசைந்து கடையும் போது எழுந்தவைகள்தான், ஐராவதம் என்றும் வெள்ளையானையும், உச்சேஸ்வா என்னும் ஏழுதலை வெள்ளைக் குதிரையும், வெள்ளைச் சங்கும். ஜெயமோகனின் இந்த நாவலில் பிரிட்டீஷ் தீவிலிருந்து வந்த வெள்ளைத்தேவர்களும், இந்த மண்ணில் உயர்சாதி அசுரர்களும் சேர்ந்து அவரவர்கள் லாபத்திற்காக இந்த நாட்டினைச் சுரண்டிய முதலீட்டிய சமூகத்தில் தோன்றியவைகள்தான் கனடாவின் நியூஇங்கிலாந்து ஏரியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ‘வெள்ளையானையும்’ . அயர்லாந்திலிருந்து இராணுவ வீரனாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஷெல்லி பித்தனான ஏய்டன் பைர்ன் எனும் ஏழுதலை உச்சேஸ்வா குதிரை, திருமாலின் குறியீடாகவும், பௌத்தத்தின் அஷ்டமங்களத்தின் ஒன்றான சங்கினை அயோத்திதாசர் என்னும் காத்தவராயன் எனவும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. ஏகாதிபத்தியத்தின், முதலீட்டியத்தின் பேராசை என்னும் ஆலகால விஷத்தை துளிவிடாமல் பருகி லட்சக்கணக்கில் முகமில்லாமல் புழுக்கூட்டம்போல இந்த மண்ணில் இறந்து மட்கி அழிந்த அடித்தள பறையர் இனமக்கள்தான் நீலகண்டர்கள் போலும். அவர்களுக்கு என் காலங்கடந்த அஞ்சலியும் வணக்கங்களும்.
விறுவிறுப்பான கதையமைப்புடன் பயணிக்கிறது இப்புத்தகம், ஆனால், என்னால் அதை தொடர்ந்து படிக்க இயலவில்லை...
சோகமே உருவானது. துக்கம் தொண்டையை அடைத்தது.
தாங்க முடியாத துன்பத்தை, நமது முன்னோர்கள் தாங்கி நடந்து சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தபோது, மனம் சின்னம் சின்னமாக விழுந்தது.
சிப்பாய் கலகத்தின் பிற்பாடு நிகழ்ந்த கதை இது. நெஞ்சை உருக்கும் சக மனிதர்கள் ஏளனமாக நடத்தப்பட்ட நாட்கள், சாதி வெறி பிடித்த காலக் கட்டம் – இவை அனைத்தும், எழுத்து வடிவில் உயிர் பெற்று நிற்கின்றன
வணிகத்திலும் ஆட்சி அதிகார கோட்பாடுகளிலும் சாதியும் சுரண்டலும் எல்லைகளற்று புரையோடியிருப்பதை பஞ்சம் சார்ந்து நடந்தேறிய நிகழ்வுகளின் வாயிலாக மனதை உருக்கி உரைக்கச் செய்கிறது.
உண்மையில் எது வெள்ளையானையாக உவமைப்பெற்றிருக்கிறது? எவை எவையால் வெள்ளையானை உரு பெற்றிருக்கிறது?
தேசங்களையும் வரலாறுகளையும் வெவ்வேறு வெள்ளையானைக்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் அமைத்தும் அழித்தும் மாற்றியும் இருக்கிறதெனில், இன்று நம்மிடையில் உலாவும் வெள்ளையானை எது? சிந்திக்கத் தூண்டுகிறது 'வெள்ளையானை'.
“.......வெளியே இருந்து வந்த நமக்குத்தான் இது ஒரு பிரமாண்டமான அமைப்பு. இங்கிருப்பவர்களுக்கு ஒருபோதும் இது ஒட்டுமொத்தமாகக் கண்ணில்படுவதேயில்லை. இவர்கள் தங்கள் நிலப்பகுதி சார்ந்து, வாழ்விடம் சார்ந்து, மொழிசார்ந்து, இனம் சார்ந்து, சாதி சார்ந்து பல்லாயிரக்கணக்கான சிறிய குழுக்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். குழுவுக்குள் குழுக்கள். அந்தக் குழுக்களுக்குள் மேலும் சிறு குழுக்கள். ஒருவன் தான் வாழும் சிறு குழுவுக்கு அப்பால் எதையுமே தெரிந்து கொள்வதில்லை....” -நாவலில் இருந்து-
1800களின் இறுதிக் கால் நூற்றாண்டு காலத்தில் தென் இந்தியாவில் பரவிய கடும் பஞ்சத்தையும், அதற்கான காரணங்களையும், முதன்முதலாக ஒடுக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும் இவற்றுக்கெல்லம் அடிமூலமான சாதியத்தையும் கொஞ்சம் புனைவு கலந்து அலசுகிறது இந்த வெள்ளையானை...
I am hitting myself, as why I have not touched Jeyamohan's work for this long. Of Course part to do with current Tamil lit esp the political ones, as its filled with hatred on for another, and am not ready to get muddy with it, which perhaps starts from Marimalai Adigal. This author is out of ordinary.
Ok, coming to the book, not the regular historical fiction, where the beauty of the lady is described for pages,or sexul intercourse put in vividly. Very strong narration, very strong characters. He takes a part of history and gets into dam good detailing. It deals with Madras Famine, and characters around it, which took part of it. First protest of Dalit's as a union, and there are many first which are being handled. Philosophy part of the author can get bit tedious, and you can easily skip it, if you want. On a whole, nicely written piece of history, which is easily brushed aside.
Have you ever wondered, why does the Mass by Tamil churches, borrows so heavily on Sanskrit rather than on proper Tamil, and sometimes it has left me wondered, as to weather I have attended a Tamil one. For starters, words like : Prasangam, Devan, Jabam, Thuthi, Viswasam, Sharanam, gyanam, veda ( which is comfortably used to denote bible). I never believed it when my sister said it, that most of the words are from Vaishnavism, but now I have got leads to it from this book. Untouchability, entry inside the temple, St. Ramanuja, Srivaishnavam, partonsier of Vaishnavam esp Naidus or Nayaks and the conversion to Christianity and still now, stigma of dalit Christian( caste tagged along, even after they have left the religion due to one) and them becoming a pastor in any other churches, has some shades of grey, I suppose, which am yet to uncover.
For me, this book is a new leash of light to some of the unexplored parts of history, which are easily painted black and white, and my search starts there in.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் கொத்து கொத்தாக இறந்து போன மக்களின் வரலாற்றையும், சாதியும் அதிகாரமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது திணித்த அநீதிகளையும் பேசுகிறது நாவல். நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
நாவலின் பெயரை நண்பர் ஒருவரின் பதிவில் முதலில் பார்த்ததும் “அடர்ந்தகாடு... அதில் நிறைய யானைகள்.. ஒன்று மட்டும் கொம்பன் போல வெள்ளை யானை...” இப்படியாக என் கற்பனை குதிரையை ஓட்டிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு நம் கதைசொல்லி பவா செல்லதுரை'யின் பெருங்கதையாடலில் எதேச்சையாக வெள்ளை யானை காதில் விழ கவனம் சிதறாமல் கேட்கத் தூண்டியது.. அப்போது நம் கற்பனை குதிரை தவறான பாதையில் ஓடியிருப்பது தெரிந்துவிட்டது. ஏனெனில் நாவலின் கரு நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆர்வ மிகுதியால் முதலில் சொன்ன அதே நண்பரிடம் புத்தகத்தை இரவல் பெற்று படிக்கத்தொடங்கினேன். 424 பக்கங்கள்.. அதிகபட்சம் 3 நாட்களில் படித்து முடித்திருக்கலாம். ஆனால், முதன்முறையாக என் மகன்களோடு இந்த புத்தகத்தை படித்ததால் இதை படித்து முடிக்க ஒரு மாதமாகிவிட்டது. என் மகன்களுக்கு கதை புரியவில்லை. ஆனாலும் வெள்ளை யானை என்ற நாவலின் பெயர் பரிட்சயமாகிவிட்டது. சரி நாவலுக்குள் செல்வோம்... இங்கே வெள்ளை யானை என்பது சிங்காரச் சென்னையின் முக்கிய பகுதியாம் ஐஸ் ஹவுஸின் இருண்டகதை.. வெள்ளை நிறப் பனிக்கட்டிகளின் கதை... அங்கே முக்கால் நிர்வாணத்துடனும், உடலில் புண்களுடனும் வேலை செய்��� அடிமைக்கூட்டத்தின் கதை... அந்த வெள்ளைப்பனியில் உறைந்து அழிந்த பல கூலிகளின் கதை... வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தியதால் அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். அவர்களில் மேம்பட்ட மனசாட்சியும், பண்பாடும் நிறைந்தவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு சாட்சி தான் “ஏய்டன்”. ஏய்டன் என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞன் வசதி குறைவான குடும்பச் சூழலிலிருந்து வளர்ந்து படிப்படியாக உயர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பாளராகப் பதவி வகிக்கிறான். அப்படி அவன் பொறுப்பில் இருக்கும் மதராசின் ஒரு பகுதியில் தாழ்ந்த சாதியைச் சார்ந்த ஒரு தம்பதியினரை நீலமேகம் என்ற உயர் சாதியை சார்ந்தவன் சவுக்கால் அடித்து வெளுக்கிறான். பிரிட்டிஷ் வழக்கப்படி யாரையும் சவுக்கால் அடிப்பது தவறான செயல். ஆனால் அப்படிப்பட்ட செயலை குதிரையில் வலம் வரும்போது நேரடியாக பார்த்தது���் ஏய்டன் நீலமேகத்தை கண்டிக்கிறான். உன்னிடம் அடி வாங்கிய அந்த ஏழைகளை தொட்டு தூக்கு என்கிறான். ஆனால் நீலமேகம் ஏய்டனின் ஆணையை மீறி தன்னுடைய சாதி கௌரவமே முக்கியம் என்று தொட மறுக்கிறான். இங்கிருந்து தொடங்குகிறது நாவல். அந்த தம்பதியினர் சவரி ராயனும், அவன் மனைவியும் தான்... எதேச்சையாக நம் வீட்டின் ஃப்ரிட்ஜை திறக்கும் போது கூட சட்டென்று வீசும் குளிர் காற்றில் சவரியும், அவன் மனைவியும் ஐஸ்ஹவுஸ் கூலிகளும் கண்முன் வந்து செல்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைத்ததா? அவர்கள் என்ன ஆனார்கள்? இதில் ஏய்டனின் பங்கு எத்தகையது? இதுவே நாவலின் மிச்சக்கதை. ஏய்டன், துரை சாமி, நீலமேகம், காத்தவராயன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, சாமி, ஜோசப், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ், என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த நாவலை நச்சென்று நகர்த்திச் செல்கின்றனர். என் போன்ற பலதரப்பட்ட மனிதர்களின் மனநிலையை ஆங்காங்கே தட்டி எழுப்பிவிடுவது நாவலின் தனி அம்சம். “நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.” – அயர்லாந்தில் அடிமைப்பட்டு வளர்ந்த ஏய்டனின் மனநிலை. “ஒரு தீண்டப்படாத தொழிலாளி கொல்லப்பட்டதற்கு விசாரணை வரும் என்றால் என்னுடைய நிர்வாக ஊழியர்கள் மனம் தளர்வார்கள்.” – ஐஸ்ஹவுஸில் பொறுப்பாளராக இருக்கும் பார்மரின் மனநிலை. “ஒரு மனிதன் இன்னொருவன் முன் அந்த அளவு சிறுமையும், தாழ்மையும் கொண்டு நிற்பதை அவன் கண்டதே இல்லை.” – காத்தவராயன் அய்யங்காரிடம் கெஞ்சுவதைப் பார்க்கும்போது ஏய்டனின் மனநிலை. “அச்சத்தால் மட்டும்தான் இந்தப் பெரும் கூட்டத்தை நாங்கள் ஆட்சி செய்கிறோம். அந்த அச்சம் அகன்றால் நாங்கள் இதன்மேல் அமர்ந்திருக்க முடியாது. இதோ இந்த எதிர்ப்பு சாதாரண விஷயம் அல்ல. மேல்சாதியையும் அரசாங்கத்தையும் எதிர்க்க முடியும் என்று இவர்கள் முதல்முறையாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது வனவிலங்குக்கு முதல் ரத்த ருசியைக் காட்டுவது போல. இதை இப்படியே விட்டால் பின் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இது உடனடியாக நசுக்கப்பட வேண்டும்.” – மனிதர்களை மனிதர்களாக எண்ணாமல் விலங்குகளாக எண்ணி வேலை வாங்கிவிட்டு கசக்கி எரியும் அய்யங்காரின் மனநிலை.
பாலா படம் போல இந்த நாவலுக்கும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இல்லை. ஆனாலும், ஆங்கிலேயனாக இருந்தாலும் சரி, நம்ம ஆளாக இருந்தாலும் சரி, பதவியில் இருக்கும் ஒருவன் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் நேர்மை தான் முக்கியம் என்று மனசாட்சியோடு பணியாற்றினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்/விமர்சிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாவலின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். -ப. மோகனா அய்யாதுரை.
1870ல் நிகழ்ந்த தக்காணப் பெரும் பஞ்சத்தை (Great Famine of Deccan) மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சக்திவாய்ந்த படைப்பு இது. அயர்லாந்து வேட்டுவர் குடும்பத்தில் பிறந்த எய்டன், ஆங்கிலேய அரசு அதிகாரியாக சென்னைப்பட்டணத்திற்கு வருகிறான். அவன் காலடி எடுத்து வைக்கும் நேரமே பஞ்சத்தின் கரும்புயல் இந்தியாவின் தெற்கைப் சூழ்ந்து கொண்டிருந்தது.
கிராமங்களை விட்டு பசியில் வாடிய மக்கள் வேலை தேடி கூட்டம் கூட்டமாக சென்னையை நோக்கி நடக்கிறார்கள். ஆனால் அந்தப் பாதை அவர்களுக்கு வாழ்க்கைப் பாதையல்ல — மண்ணில் விழுந்து மடியும் புற்றீசல்கள் போல், பட்டினியும் நோயும் அவர்கள் உயிர்களை காவு வாங்குகின்றன. எப்படியோ உயிர்தப்பி சென்னையை அடைந்தவர்கள் கங்காணிகளாலும் அரசு அதிகாரிகளாலும் இன்னும்ப் பிழியப்படுகிறார்கள். வேலை செய்ய மறுத்தால் பாயும் கசையடி… மறுக்கும் உரிமையே மரணதண்டனையாக மாறும் கொடுமையான காலம்.
இந்த அநீதியின் மத்தியில் நின்ற எய்டன், ஒரு கணத்தில் பதறுகிறான்; அடுத்த கணத்தில் வெகுண்டெழுகிறான். பஞ்சத்தில் மெலிந்து போகும் மக்களைக் காப்பாற்றவும், அதிகாரத்தின் பெயரில் அத்துமீறும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அவன் செய்யும் முயற்சிகள் கதைக்கு உருக்கத்தையும் துடிப்பையும் தருகின்றன. இதே காலகட்டத்தில் ஆங்கிலேய இந்தியா காணும் முதல் தொழிலாளர் போராட்டம் வெடிப்பதும் கதையை வரலாற்றின் இரத்தத்தில் எழுதப்பட்டு நிற்கும் சிற்பமாக ஆக்குகிறது.
ஆங்கில அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்ட புதினங்கள் அரிது. ஆனால் இங்கே, இந்தியாவையும் இந்தியர்களையும் உண்மையாகப் புரிந்துகொள்ள விரும்பும் எய்டனின் குழப்பமான உள்ளத்தை ஆசிரியர் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். “ஆங்கிலேயர்கள் வராவிட்டால் நாம் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்போம்”, “கிறிஸ்துவம் இல்லையெனில் இந்தியர்களுக்கு படிப்பறிவு வந்திருக்காது” போன்ற காலம் கடந்த வாதங்களை, எய்டன் – காத்தவராயன், எய்டன் – பாதிரியார் பிரென்னன் இடையேயான உரையாடல்கள் தூள்தூளாக நொறுக்கி எறிகின்றன.
பஞ்சத்தில் மனிதர்கள் சாம்பலாகிக் கிடக்கும் காட்சிகள், அவர்கள் உயிருக்கு போராடும் துடிப்பு — இவை வாசகரின் உள்ளத்தை உண்மையிலேயே நடுங்கச் செய்கின்றன. செயற்கையாகவும் அலட்சியத்தாலும் ஏற்பட்ட இந்தப் பஞ்சம், அதேநேரத்தில் நடக்கும் அரசின் கேளிக்கை விருந்துகளும் தானிய ஏற்றுமதியும் நம்முள் ஆங்கிலேய ஆட்சியைப் பற்றி அடங்காத வெறுப்பை எழுப்புகின்றன.
அடுத்த முறை ஒரு சிறுகவள உணவையும் வீணாக்க நினைக்கும் போது, இந்தப் புத்தகமும் அந்த வரலாற்று காயமும் மனத்தில் பளிச்செனத் தோன்றினால் — அது இந்த நூலுக்கும் அதன் ஆசிரியருக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
வெள்ளை யானை 1876-1878ஆம் வருடங்களில் சென்னை மாகாணத்தை உலுக்கிய மாபெரும் தாதுவருஷ பஞ்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். அயர்லாந்தை சேர்ந்த ஏய்டன் பைர்ன் என்ற இளைஞன் பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னையின் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். அவன்தான் பஞ்சத்தின் அவலங்களை நேரில் கண்டு பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறான். அதற்காக சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பயணம் மேற்கொள்ளும்போது வழியில் அவன் பார்க்கும் பஞ்சத்தின் கோர முகத்தைகண்டு மனமுடைந்து போகிறான். ஐஸ்ஹவுஸ்ல் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைபற்றி நாவலில் வரும் வரிகள் இவை
"நாங்கள் போராடியிருக்கிறோம். எங்களால் போராட முடிகிறது. இப்போதைக்கு அதுதான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்த மண்ணில் இன்னும் நூறு ஆண்டுகாலம் நடக்கப்போகும் பெரும் போராட்டங்களின் முதல் அசைவு நிகழ்ந்திருக்கிறது. அது எங்களுக்குப் போதும்”
வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள் அது எப்படி ஒடுக்கப்பட்டது. மக்கள் ஏன் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது நாவல். பஞ்சத்திற்கான முக்கிய காரணம் இங்கு விளையும் உணவு தானியங்களை ஆங்கில அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்திற்கும் அதன் காலணி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இதனால் உள்ளூர் அடித்தட்டு மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். வியாபாரிகளும் இதுதான் சமயமென்று தானியங்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்க்கின்றனர். எனவே ஒருவேளை உணவுக்காக மக்கள் சொற்ப கூலிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் தங்கள் உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்காக ஆங்கிலேய அரசாங்கம் பக்கிங்ஹாம் கால்வாய் தோண்டும் வேலையை துவக்குகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பஞ்சத்தில் மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் செத்து மடிகின்றனர் எனவே அவர்களுக்கு வேலை கொடுக்கவும் அவர்கள் பசியை போக்கவும் இத்திட்டத்தை செயல் படுத்துகிறோம் என்கிறார்கள். ஆனால் உண்மையான காரணம் இந்த நேரத்தில்தான் மிகக்குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதுதான். பிரிட்டிஷ் ஆட்சியின் அவலத்தையும் சாதி கொடுமைகளின் கோர முகத்தையும் தோலுரித்து காட்டுகிறது நாவல். நிச்சயம் படிக்கவேண்டிய நாவல். Recommended.
19-ஆம் நூற்றான்ன்டின் இறுதியில் (1876-78) இந்தியா சந்தித்த பஞ்சத்தின் போது சென்னையை சுற்றி நிகழ்ந்த மனித பேரழிவுகளின் பின்னணியில், சென்னையில் பணிபுரியும் அயர்லாந்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியின் மனபோராட்டங்களும், அவர் சந்திக்கும் மனிதர்களுடன் நடந்த உரையாடலும், சென்னை ஐஸ்ஹவுஸ்-ல் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையும் அவர்களின் போராட்டமுமே கதைப் போக்கு.
இயற்கையின் வறட்சி, ஆங்கில அரசின் சுரண்டலும் இந்திய சாதி பிரிவமைப்பும் கூட்டாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த அநீதியாக சித்தரிக்கப்படுகிறது.
இந்தியாவின் 25 % சதவிகித மக்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
மனித அழிவின் வர்ணனைகள் பேரிறைச்சலாக இருந்தாலும், ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது. உண்மை அதை விட கொடூரமாகவே இருந்திருக்கும்.
பஞ்சத்திற்கும் உணவுத் தட்டுப்பாட்டிற்குமான காரணங்கள் இன்னும் விரிவாக விளக்கப்பட்டிருக்கலாம். வள்ளலார், மற்ற இந்தியர்களின் பங்களிப்பை குறிப்பிடாதது ஒரு குறையாக தெரிந்தாலும், மறக்கப்பட்ட ஒரு நிகழ்வை நினைவு படுத்தியதற்காக ஜெயமோகனைப் பாராட்டலாம்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நாம் பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்கள் மூலமாக அறிந்துக் கொள்ளாதது விந்தைதான்.
இவை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள வலையில் தேடிய போது ஒரு ஆங்கில புத்தகத்தின் சில பகுதிகள் கிடைத்தது. ஆங்கில ஆசிரியரின் தகவல்கள் ஜெயமோகனின் சொற்களை விட கடுமையாகவே இருக்கின்றது.
Late Victorian Holocausts El Niño Famines and the Making of the Third World By MIKE DAVIS
வெள்ளையர் காலத்தில் ஏற்படுத்திய செயற்கை பஞ்சத்தைப் பற்றி பேசுகிறது இப்புதினம்.அந்த பஞ்ச காலத்தில் நம் நாட்டவர் எவ்வாறு நடந்து கொண்டார்கள் குறிப்பாக சாதியின் பெயரைச் சொல்லி எப்படி நடந்து கொண்டார்கள் என்பது பற்றி தீவிரமாகப் பேசுகிறது.பஞ்சங்கள் பெரும்பாலும் இயற்கையாக உருவாவதில்லை தனி நபர்களின் பேராசையினாலே உருவாகிறது. வெள்ளையர்கள் இந்தியாவிலிருந்து அளவுக்கு அதிகமான தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படுகிறது. அதனால் மக்கள் மலிவு விலைக் கூலித் தொழிலாளர்களாக ஆகின்றனர்.ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை, அவர்கள் வாழும் பகுதி ஆகியவற்றைப் படிக்கும் பொழுது மனம் வருந்துகிறது.பஞ்சத்தைப் பற்றிய விவரிப்புகள் மனதில் காட்சியாக விரியும் பொழுது மனம் அது உண்மையில் நடந்தது என்பதை நம்ப மறுக்கிறது.நாம் இவ்வளவு கீழ்மையாக இருந்திருக்கிறோமா?. அவ்வளவு பெரிய கூட்டம் உயிர் போகும் பசியிலும் உணவை அடித்துப் பிடுங்க வேண்டும் என்று ஏன் அவர்களுக்குத் தோனறவில்லை கடைசி வரை உணவுக்காக இறைஞ்சியே இறக்கிறார்கள். இறக்கப் போகிற கடைசி நேரப் பசி எவ்வாறு இருக்கும்?. அப்போது கூட மிகையாக உள்ள உணவுகளை எடுக்க அவர்கள் பயந்தார்கள் என்றால் அந்த பயங்கள் எத்தனை தலைமுறைகளாக அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும்.சாதி மாபெரும் மக்கள் கூட்டத்தை உதிரிகளாக்குகிறது.மக்கள் பசியால் சாகும் பொழுது அது பிறவிப் பலன் என்று சொல்லும் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது.கடுமையான சூழலிலும் கருப்பன் போன்ற தன்னலமற்ற தலைவன் போராட வரும் பொழுது மக்கள் அவன் பின்னால் நிற்கின்றனர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தியரான முரஹரி அய்யங்கார் தடுக்க நினைப்பதை அதிகாரத்தில் இருக்கும் வெள்ளையரான எய்டனாலும்,பார்மராலும் கொடுக்க முடியவில்லை.வரலாறு நெடுகிலும் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டவர்களை வைத்தே இன்னொரு மக்களை ஒடுக்குகிறார்கள்.மரிஸா போன்ற ஆங்கிலோ இந்திய பெண்களின் நிலைமையும் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையை எய்டன் அருமையாக விளக்குகிறார்.அது இன்று வரை தொடர்ந்து தான் வருத்தத்துக்குரிய உண்மை.காத்தவராயன், கருப்பன்,எய்டனுக்கு நுங்கு தரும் கிழவி ஆகியோர் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட மிக பெரிய பஞ்சம்.. இந்திய மக்கள் தொகையில் குறிப்பாக சென்னை மாகாணத்தில் 5 யில் ஒரு பங்கு பேர் பட்னியாலும் நோயாலும் இறந்துப்போனார்கள்..
இந்த பஞ்சத்திற்கு காரணம் பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனி முக்கிய பங்குவகிக்கிறது..
பிரிட்டிஷ் அரசு நினைத்திருந்தால் இந்த பெரும் பஞ்சத்தை தவிர்த்தர்க்க முடியும்..
ஆனால் அப்படி செய்யவில்லை.. அதற்க்கு ஓர் முக்கிய காரணம் நம் மக்கள் தான்...
நம் நாட்டில் இருந்த ஜாதி பாகுபாடும் தீண்டாமையயும் தான்.. அவன் கீழ் ஜாதி அவன் கீழ தான் இருக்கணும் என் முன்னாடி நிற்க கூடாது, நடக்க கூடாது, தோள்ல துண்டு போட கூடாது, வெள்ள துணி உடுத்த கூடாது என கட்டுப்பாடுகள்.
ஏய்டன் என்ற அயர்லண்ட் நாட்டை சேர்ந்த காவல் அதிகாரி பிரிட்டிஷ் அரசுக்காக வேலை செய்ய இந்தியா வருகிறார். ஐஸ் தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களை சாட்டையால் அடிக்கும் காட்சியை பார்க்கிறார்..
அதை விசாரிக்கயில் அங்கு மக்கள் அடிமைகளாக வேலை செய்வது தெரியவந்தது.. மேலும் சாட்டையால் அடி வாங்கிய தொழிலாளர்களை தேடி அவர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார். அங்கு நிலவும் பஞ்சத்தை பார்க்கிறார்..
இந்த பஞ்சத்தை பிரிட்டிஷ் அரசு நினைத்தால் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அதற்கான ��றிக்கையை தயார்செய்கிறார்.
பசியில் இருப்பவன் உப்பில்லா உணவை சாப்பிடுவது போல் தான் முதல் 200 250 பக்கங்கள் எனக்கு இந்த புத்தகத்தில் சென்றது முக்கியமாக இந்த புத்தகத்தில் இது ஒரு வர்ணனைகள் என் பொறுமையை சோதித்தது ஒரு கட்டத்தில் இது கோபத்தை உண்டு பண்ணியது ஒரு அற்புதமான கதையை சரியாக படிக்க முடியவில்லையே என்ற ஒரு சோகம் எனக்குள் இருந்தது இருந்தாலும் தமிழில் முக்கியமாக வாசிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று புத்தகம். இன்று நான் சகஜமாக செல்லக்கூடிய சென்னை மாநகரத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்குமா என்று நினைத்து பார்க்கும் பொழுது இன்று நாம் பரவாயில்லை என்று தோன்றுகிறது ஆனால் இன்னும் எதுவும் மாறவில்லை என்றும் தோன்றுகிறது இதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஏய்டன்ஒரு விபச்சாரப் பெண்ணும் வண்டியில் செல்லும்போது இருக்கக்கூடிய உரையாடல் மிகவும் அற்புதமாக இருக்கும் சொல்லப்போனால் இந்த புத்தகத்தை 390 பக்கங்களில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இதன் விமர்சனத்தை எழுதுகிறேன் ஏனோ தெரியவில்லை இந்த மருந்து எனக்குள் கசக்கி முழுகிகின்றேன்
STRICTLY FOR ADULTS....But let me try defining adults
Adults are just not 5.5 inches or above in height. Adults are just not physically capable of copulation to make babies.. Adults are just not capable of earning money..
Adults are - who can feel the palpability of others emotions, irrespective of their skin color, their religion or caste, their social status, their financial status..
In this story, set in Chennai at the backdrop of great famine, traverses through the eyes and emotions of a British soldier with the "famous" ICEHOUSE [ still called by same name] as a pivotal point around which strong, stinking, yet unavoidable issues are inextricably wound to make us cringe in shame.
GO FOR IT.. if you can face the truth which will blow hot on your face in every word...
It is a powerful tale about the famine (specifically the Great Madras Famine), its devastating effects, the surrounding politics, and the sheer cruelty-both of the British and, shockingly, of Indians that sometimes surpassed that of the colonizers. The novel explores the deep inner conflict within people: those who try to do good but fail, or whose efforts are rendered utterly meaningless. My god... what a story!
It's a narrative that taught me about a significant part of our history that isn't often discussed, with some passages making my head spin with the sheer weight of their subject matter. This is an absolutely essential story that everyone in India (especially Tamil Nadu) should read and learn about.
தமிழ்நாட்டில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டம். பிரிட்டிஷ் அரசின் உலகை பிடிக்கும் ஆவேசத்தால் செய்த மிக மிஞ்சிய கொள்ளையால் உருவாக்கப்பட்ட செயற்கை பஞ்சத்தில் , பிரிட்டிஷ் நிர்வாகம், பிராமின்கள் , மற்ற மேல் ஜாதி இந்துக்கள் என்று அனைவராலும் கைவிடப்பட்ட தலித்துகளிடம் உருவான முதல் எழுச்சியை சொல்லும் நாவல். அது எப்படி முற்றிலும் அடித்து ஒதுக்கப்பட்டது என்ற சித்திரம்.
பறையர் அயோத்தி தாச பண்டிதர் காத்தவராயன் என்ற கதாபாத்திரம் மூலம் நம்மிடம் மழுங்கி போன அறவுணர்சியையும் நீதியுணர்சியையும் சுட்டிக்காட்டும் இடம் அனைத்துமே ஜெயமோகன் மாஸ்டர் என்பதை நிரூபிப்பவை.
I re-read this on a holiday. I knew it is a heart-sinking novel, still, I felt like carrying this on a holiday! When you wander in an unknown terrain this is the hook that connects you to your homeland... I felt something like this while reading it there. You always wish to escape from the current situation/place and you go on a trip and at the same time, you hold that hook tightly that links you back! The complexity of the human mind.
This is not a book review, but my reasons for the re-read!
The book Vellali Yaanai (White Elephant) by Jeyamohan, is an eye opener. The Ice House in Madras, as the name suggests, brought in a single ship load of ice bars from overseas to trade for seven ship loads of goods. Very interestingly informative. Jeyakanthan, a renound writer, says in his book Sindhaiyil Aayiram kadavul ezhuga (Rise our Saviour) of Jeyamohan.
இது வெளிவந்த உடனே வாங்கி படிச்சேன். இது வரலாற்று புதினமா இல்லை இது ஜெயமோகன் சினிமாக்குள்ள வர தன்னை நிருபிக்க கோலிவுட் ஸ்டைல்ல எழுதப்பட்ட மசாலா கதை. படிச்சு பாருங்க நல்லா பொழுது போகும் மூளைக்கு வெளியே இல்லை