Jump to ratings and reviews
Rate this book

டால்ஸ்டாய் சிறுகதைகள்

Rate this book

Unknown Binding

1 person is currently reading
7 people want to read

About the author

Leo Tolstoy

8,039 books28.7k followers
Lev Nikolayevich Tolstoy (Russian: Лев Николаевич Толстой; most appropriately used Liev Tolstoy; commonly Leo Tolstoy in Anglophone countries) was a Russian writer who primarily wrote novels and short stories. Later in life, he also wrote plays and essays. His two most famous works, the novels War and Peace and Anna Karenina, are acknowledged as two of the greatest novels of all time and a pinnacle of realist fiction. Many consider Tolstoy to have been one of the world's greatest novelists. Tolstoy is equally known for his complicated and paradoxical persona and for his extreme moralistic and ascetic views, which he adopted after a moral crisis and spiritual awakening in the 1870s, after which he also became noted as a moral thinker and social reformer.

His literal interpretation of the ethical teachings of Jesus, centering on the Sermon on the Mount, caused him in later life to become a fervent Christian anarchist and anarcho-pacifist. His ideas on nonviolent resistance, expressed in such works as The Kingdom of God Is Within You, were to have a profound impact on such pivotal twentieth-century figures as Mohandas Gandhi and Martin Luther King, Jr.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
0 (0%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Ahmed Yahya Ayyaz.
28 reviews1 follower
March 25, 2021
டால்ஸ்டாய் - சிறுகதைகள் புத்தக விமர்சனம்

தமிழ் எழுத்துலகில் தனித்த அடையாளத்தோடு பயணிக்கிற எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்திலும், பேச்சிலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்தான் டால்ஸ்டாயும், ரஷ்ய இலக்கியங்களும். அப்படித்தான் நான் ரஷ்ய இலக்கியங்களை பற்றி தெரியத் தொடங்கினேன். அதிலும் லியோ டால்ஸ்டாயின் புத்தகங்களை படிக்க விரும்பிய சமயத்தில் ஏதெச்சையாக ஒரு பல் பொருள் அங்காடியில் வீட்டு மளிகை பொருட்களை வாங்கச் சென்றபோது கவனித்த, பார்த்தவுடனையே வாங்கிய புத்தகம் தான் டால்ஸ்டாயின் சிறுகதைகள்.

இப்புத்தகத்தில் கிட்டத்தட்ட ஏழு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான பாத்திரங்களை , கதைக் களத்தை தாங்கியுள்ளன. மனிதர்களது சந்தோஷத்தை, கொண்டாட்டங்களை, குதூகலத்தை பேசும் கதைகளிலிருந்து இவரது கதைகள் மாறுபடுகின்றன. மனிதர்களது அவலங்களை, சமூகத்தால் நிற்கதியாக்கப்பட் பாலியல் தொழிலாளியுடைய வாழ்க்கையில் உள்ள அவமானங்களை, மரணத்தின் விழிம்பில் இருக்கும் மனிதரகள் பேசும் ரணத்தை, ஏதுமற்ற மனிதர்களிடம் காட்டும் தேவதைகளின் பரிவை, புள்ளி வைத்து பிறந்ததற்காகவே காதலை, காமத்தை, இயல்பை, ஒன்றுகூடலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குதிரையின் ஏக்கப் பெருமூச்சினை , சூதும், மதுவும் தரும் போதையில் வீழ்ந்தவர்களை, நிலத்திற்காக ஏங்கி ஏங்கி ஆசையோடு மடிந்தவர்களை என இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது.

தொலைந்து போன ஒரு தந்தை பல வருடங்களுக்கு பிறகு திரும்பிய பின் அவரின் மகன் குழந்தை தொழிலாளியாக ஒரு மதுபானக் கடையில் முடை நாற்றங்களுக்கு மத்தியில் அசிங்கமும், அவமானமும் நிறைந்த அங்கே வயிற்றுக்காக பணி செய்வதை பார்த்தால் எப்படி இருக்கும்..?? அதைவிட கொடுமைதான் ஒரு விபச்சார விடுதியில் எல்லாவற்றையும் பருகத் தருகிற பாலியல் தொழிலாளியான தனது தங்கையின் நிலையை பார்த்த டக்லஸுக்கும் இருந்திருக்க வேண்டும். அவலங்களில் கிஞ்சிற்றும் பங்கேற்காத அரக்கர்களால் நிறைந்ததுதான் இந்த மனித சமூகம். சுயநலப் போதையில் முற்றிலும் தள்ளாடும் நிலையின் அவலத்தை டால்ஸ்டாய் எழுத்தாக்கியிருக்கிறார்.

இந்த தொகுப்பில் புள்ளிக் குதிரை என்றொரு கதை வரும். பறவைகளின் காதலை பற்றி படித்திருக்கிறேன், கோழிக்கும் பூனைக்குமான காதலைப் பற்றி கூட எஸ்ரா எழுதிவிட்டார். பூனைக் காதல்கள், நாய்களின் காதல், யானைக் காதல்கள், மாடுகளின் காதல்கள் என ஓரளவு புனைவுகளிலும், படங்களிலும் பார்த்துவிட்டோம். ஆனால் குதிரையின் காதல் குறித்தும், அதன் அவலங்கள் குறித்தும், அது சந்திக்கிற மனிதர்கள், அதன் விசுவாசம், அதன் சரசங்கள், அவற்றின் புலம்பல்கள், சின்ன சின்ன எதார்த்தங்களை நீண்ட கதையாக டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். குதிரைகளை பற்றி சிந்திக்கும் மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குதிரைகள் இருக்காது ஆனால் எண்ணங்களில் அவை நிறைந்திருக்கும். தாங்கள் பயணப்படும்போதெல்லாம் அதனை அழைத்துக் கொள்வர், தாங்கள் தனிமைப்படும்போது அவற்றின் முதுகில் அமர்ந்து கொள்வர், அமைதியைத் தேடி அவை உங்களை அழைத்துச் செல்லும். உங்களது அவலங்களை அவை தெரிந்து கொள்ளும், உங்கள் உடலில் அவை உரசும், முடிந்தால் நாவால் உங்களை நக்கி தனது அன்பை பொழியும். அந்த குதிரைகளின் உலகத்திற்கு டால்ஸ்டாய் உங்களை நிச்சயம் கூட்டிச் செல்வார்.

ரஷ்ய இலக்கியப் புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர் லியோ டால்ட்ஸ்டாய். அவரது கதைகள் தனித்துவமானவை, புதிய வாசர்களுக்கு கதைத் தளங்களும், பாத்திரங்களின் பெயர்களும் பிடிபட கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். காலப்போக்கில் அவை பழகிவிடும். டால்ஸ்டாயின் கதைகள் அவ்வளவு ஆழமும், வலிகளும், எதார்த்தங்களும் நிறைந்தவை என்றால் அது மிகையல்ல.

புத்தகம் : டால்ஸ்டாயின் சிறுகதைகள்
ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
பக்கம் : 144
விலை : ₹90
பதிப்பகம் : ஆப்பிள் புக்ஸ் பப்ளிகேஷன்

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.