ஆண் - பெண் ஈர்ப்பு இயற்கையானது. இரு மனங்கள் திருமண பந்தத்தில் இணைந்த பின்பும், பலருக்கும் ஒரு தடுமாற்றம் வர்றதும் இயற்கையே. ஆனா அந்த தடுமாற்றத்துக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பது தான் பல திருமணங்களின் முடிவைத் தீர்மானிக்கின்ற ஒரு விஷயம். அனாமிகா ஷ்யாமோட childhood sweetheart. நிகில் மல்ஹோத்ரா அனாமிகா பிரமிப்பும், மரியாதையும் கலந்து பார்க்கும் அவளது role model & boss. தெளிந்த நீரோடை போன்ற அனுவின் வாழ்க்கையில், நிகில் நிகழ்த்திய அனர்த்தனம் என்ன? அனு அதில் இருந்து மீண்டு வந்தாளா என்பதே இந்தக் கதை.