புத்தகம்: சொல்வழிப் பயணம்
எழுத்தாளர்: பவா செல்லத்துரை
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 183
நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023
விலை: 250
💫 சமூக வலைத்தளங்களில் தனது கதைச் சொல்லும் திறமையினாலும், ஜோக்கர் மற்றும் ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையினாலும் நம் மனதைக் கவர்ந்த கதைச் சொல்லி பவா அவர்களின் கட்டுரை தொகுப்பு இது.
💫 விகடனில் 25 வாரங்கள் தொடராக வெளிவந்து, இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆகச் சிறந்த திரை கலைஞர்களான இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் கவிஞர் நா. முத்துக்குமார் ஆகியோரின் சிறப்புகளை நான் அறிந்துக் கொண்டது இவர் பதிவுகளின் வாயிலாக தான்.
💫 இவரின் பல பதிவுகளையும் பார்த்திருந்தாலும் - இவரின் படைப்பை படிப்பது இதுவே முதல் முறை.
💫 சொல்வழிப் பயணம்: தான் சந்தித்த மனிதர்கள், பாதித்த நிகழ்வுகள் அதனின் தாக்கங்கள் என அனைத்தையும் இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
💫 மனிதன் தனக்கு ஏற்படும்/நிகழ்த்தப்படும் உணர்வுகளில் மிக பாதிக்கக்கூடியது அவனுக்கு நேரும் அவமானம் தான். எழுத்தாளர் மண்டோ அவர்கள் எழுதிய "அவமானம்" என்ற கதையில் வரும் சுகந்தி மூலம் சொல்கிறார்.
💫 கு. அழகிரிசாமி யின் கதை ஒன்றில் பஞ்சத்தின் காரணமாக, தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வரும் தாய், மகள், ரோட்டில் கிடக்கும் வெள்ளரிப் பிஞ்சை எடுப்பதா வேண்டாமா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் ---- "பசியின் ரணம் மனிதனின் மனதை எதற்கும் தயார்படுத்தும்"-பவா செல்லத்துரை.
💫 மனிதர்களின் மூர்க்கத்தனத்தை சொல்லும் போது மிருகம் போல் நடந்துக் கொள்ளாதே என்று சொல்கிறோம். யானை மீது நெருப்பு டயரை எரிந்தது , வனத்திற்குள் செல்லும் போது, கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பொருட்கள் என நம் மிருகத்தனத்தை காட்டுகிறோம். மனிதர்களை விட விலங்குகள் பல மடங்கு உயர்ந்தவைதான்.
💫 இது மட்டுமல்ல, சொந்த நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துயரம், நம்பிக்கை துரோகம், தற்கொலை எண்ணம், சிறுவர் சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.. இன்னும் பல.
💫 இந்த 25 கட்டுரைகளை வாசிக்கும் போது நிச்சயமாக நம் வாழ்விலும், ஏதோ ஒரு இடத்தில் அந்த உணர்வை கடந்து தான் வந்திருப்போம்.
💫 எண்ணற்ற புத்தகங்களையும் பரிந்துரை செய்திருக்கிறார்.
💫 இந்த வருடம் படித்த படிக்க போகிற புத்தகங்களுள் ஆகச் சிறந்த புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்