What do you think?

கடலும் ஒரு கிழவனும்
எர்னெஸ்ட் மில்லர் ஹெமிங்வே கியூபாவில் வாழ்ந்தபோது, 1951ஆம் ஆண்டு எழுதி, 1952ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் 'The Old Man and the Sea', எதிர்பாராத உடனடி வரவேற்பைப் பெற்றது. இரண்டு நாட்களில் ஐந்து மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மேலும், 1953ஆம் ஆண்டு மே மாதம், இலக்கியத்துக்கான புலிட்சர் விருதைப் பெற்றது. ஹெமிங்வேக்கு 1954இல் இலக் கியத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, இந்தக் குறுநாவலில் கதை சொல்வதில் அவர் கையாண்ட முறை, அவர் நிகழ்த்திய பெருஞ் சாதனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்நூல் 1958 மற்றும் 1990ஆம் ஆண்டுகளின் இரண்டு முறை திரைப்படங்களாகவும், 1999ஆம் ஆண்டு அசைவூட்டம் பெற்ற குறும்படமாகவும் மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டது. இந்தக் குறும்படம் பதினான்கு விருதுகளை வென்றது.

152 pages, Kindle Edition
Published September 4, 2023
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
November 24, 2025
இந்தக் குறுநாவல் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு ஆலோசனைப் புத்தகம். இன்றைய சவால் மன அழுத்தம், தகவல் பளு, வேலையின் அழுத்தம், தொடர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் என இருக்கும் சூழ்நிலையில், கதையின் செய்தி மனோபலத்திற்கான ஒரு போர்க்கொடியாக இன்றும் நிற்கிறது. தற்காலிக தோல்விகள் இறுதி வெற்றியைத் தடுக்காது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இன்றைய போட்டி சூழலில், செயல்முறையின் மீதான கவனம் மற்றும் தனிப்பட்ட முழுமையடைவின் முக்கியத்துவத்தை இது கற்றுத் தருகிறது.
இந்த இன்ஸ்டாகிராம், டிக்டாக் காலத்தில், ஒரு வயதான மனிதன் ஒரு மீனுடன் கடலில் இருப்பது போன்ற கதை லாசிக்க சலிப்பை ஏற்படுத்தக்கூடும். சில நவீன வாசகர்கள், பெண் கதாபாத்திரங்களின் முழுமையான பற்றாக்குறை மற்றும் வீரம் மற்றும் போராட்டம் பற்றிய "ஆண்" கண்ணோட்டத்தை விமர்சிக்கலாம்.
இன்றைய உலகில், வெளிப்புற வெற்றியை விட உள் வலிமையை மதிப்பது, விடாமுயற்சியை வளர்ப்பது, மற்றும் நமது போராட்டங்களில் அர்த்தம் காண்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, இந்தக் கதை இன்றும் முன்பை விட அதிக சம்பந்தப்பட்டதாகவும், ஏற்றதாகவும் உள்ளது.

May 29, 2026
ஒரு பெருங்கடல்
ஒரு சிறுவன்
ஒரு முதியவன்
ஒரு பெரிய மீன்
ஒரு பெரும் போராட்டம்
ஆனால், அதனுள் அத்தனை வாழ்க்கை பாடங்கள் 💯 அதையும் அறிவுரை போல சொல்லாமல், கதை வழியே விறுவிறுப்பான நிகழ்வுகளாக கூறியிருக்கிறார் "எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)". அவர் இந்த புத்தகத்தில் கையாண்டிருந்த "பனிப்பாறை எழுத்துமுறை (Iceberg Theory)" புதுமையாக அதே நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகவும் இருந்தது. ஆயிரம். நடராஜன் அவர்களின் நல்ல மொழிபெயர்ப்பு.
முதியவர் தன் வாழ்க்கை மூலம் பலவற்றைப் கற்றுக் கொடுத்தார். அந்த சிறுவன் கடைசியில் மனம் நெகிழ வைத்து விட்டான். இறுதியாக இந்தக் கதையும் அந்த முதியவரும் கூறுவது யாதெனில்,
"ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்,
கதை என்னும் முடியல தொடருது பாரு !
என்னைக்கும் - விடாமுயற்சி !" 💪🏻

April 24, 2025
அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்
இந்த நாவல் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. கடலில் பயணித்த தனிமனிதனின் உணர்வுபூர்வமான துயரங்களை, போராட்டங்களை அற்புதமான முறையில் சொல்லி இருக்கிறார் ஹெமிங்வே. அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு..