ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்கு பின் அவள் நிலை என்ன?.. தேவநிகேதன் அம்ருதா நிச்சயம் உங்கள் மனதை கவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தாமரையே.. தாரகையே.. கதையோடு பயணிப்போமா..
தேவா அம்ரு இருவரது வாழ்க்கை பயணம் படித்ததில் மனதில் பதிந்தது. அவர்கள் குடும்பத்தின் புரிதலின்மை, அம்ருவின் வெற்றிக்கு வழிவகுத்து பின்னின்று பெருமையாக பார்க்கும் கணவன் தேவா என்று கதை போக்கு சுவராஸ்யமாய் எழுத்தாளர் வழங்கியுள்ளார்.