Jump to ratings and reviews
Rate this book

சமயம்: ஓர் உரையாடல்

Rate this book

112 pages, Paperback

First published January 1, 2008

5 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books231 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
March 23, 2025


புத்தகம்: சமயம்
ஆசிரியர்கள் : தொ.பரமசிவன்-சுந்தர்காளி

சில நேரங்களில் பிடிக்காத தலைப்புகளும் பிடித்தமான ஒரு எழுத்தாளரின் வார்த்தைகளால் ஆர்வம் கொண்டு வாசிக்கும் சூழல் வந்துவிடும். அதேபோல் தான் தொ.ப எனக்கு‌.

வரலாற்றை, நம் வேர்களை ,பழக்க வழக்கங்களை குறித்து அறிந்து கொள்ள விருப்பம் உள்ள எனக்கு, சமயங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆவல் எப்போதும் பெரிதாக இருந்ததில்லை.

உண்மையில் தொபவின் சமயங்களில் அரசியல் புத்தகம் அவ்வளவாக ரசிக்காத போதும்,அதில் உள்ள சில தகவல்கள் புதிதாக இருந்தது. அதே போல் தான் இந்த புத்தகமும்.

ஒரு தலைப்பை குறித்து நன்கறிந்த இரண்டு பேர் உரையாடும் போது அந்த இருவரின் மாறுபட்ட கண்ணோட்டத்தால் ஏற்படும் புரிதல், கிடைக்கும் புதிய தகவல்களைண அறிந்து கொள்ளலாம்.

தமிழ்த்துறை பேராசிரியராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அனுபவமும் ஆற்றலும் மிக்கவரும் சமயங்கள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி புலமை கொண்ட டாக்டர் திரு .தொ.பரமசிவம் அவருடன் நவீன சிந்தனையாளரும், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான 'சுந்தர்காளி அவர்கள் நடத்திய உரையாடலின் தொகுப்பு இந்த புத்தகம்.

தாய் தெய்வ வழிபாடு தான் பழங்காலத்தில் இருந்தே தமிழகத்தில் முதன்மையானதாக இருந்து வந்துள்ளது என்ற தகவல் தொ.ப வின் எல்லா புத்தகங்களிலும் இருக்கிறது.

பிற சமயங்கள் எப்படி உள்ளே வந்தன என்றால் அது வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த படையெடுப்புகளால்,வணிகக் குழுக்கள் வரவால் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கு தொடர்புள்ள, ஏற்றுக் கொள்ளக் கூடிய கோட்பாடுகளே நிலைத் நிற்கின்றன. மற்றவை காலப் போக்கில் காணாமல் போயிருக்கின்றன.

நாம் இன்று கொண்டுள்ள வழிபாடு முறைகள், நம்பிக்கைகள் என்பது பலப்பல காலகட்டங்களில் இருந்து சிற்சில எச்சங்களாக மீதம் இருப்பவையே என்ற புரிதல் சமயங்கள் குறித்த என் கண்ணோட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டது.

அதே நேரத்தில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தவர்கள் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் போன்றவற்றையும் எடுத்துக் கொண்டதை அறிகிறோம்.

கடவுளும் சமயமும் இல்லாத உலகைக் கற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வியோடு தொடங்கும் புத்தகம் மேற்கத்திய நாடுகளில் உள்ள சமயங்களில் நிலைப்பாடுகளை நம் கால சூழலில் ஒப்பிடுவதில் தொடங்குகிறது.

இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மனிதன் அதிலிருந்து கற்றுக் கொண்டதில் இருந்தே குகைகள் வீடுகள் கோவில்கள் என் எல்லாவற்றையும் கட்டுகிறான்.

தன்னால் புரியும் கொள்ள முடியாத இயற்கையின் கூறுகளை வழிபட்ட முதல் மனிதனின் உருவமற்ற தெய்வ வழிபாடு கடவுள் வழிபாடாக மாற பல காலம் எடுக்கிறது.

அரசு உருவாக்க காலம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகிறது சமயம் உருவாகிறது. அரசன் கடவுளுக்கு நிகராக வழிபடப்படுகிறான்.

ஐரோப்பிய கண்டத்தில் பாசிசம் எழுந்து மனிதத்தன்மையை இழக்க இயற்கை மீதிருந்த நம்பிக்கை அற்று வேர்கள் குறித்த புரிதல் அழிந்து கருவிகள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கிய போதுதான் என்ற கருத்தை அவர்கள் வரலாறு குறித்து வாசித்தால் அறிந்து கொள்ள முடிகிறது.

அது போல நம் தொற்காசி நாடுகளில் நிகழ வாய்ப்பு குறைவு என்பதற்கு காரணம் நம்மிடம் உள்ள பன்மைத் தன்மை என்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டியதிருக்கிறது.

வளைந்து கொடுக்கும் மரங்கள் புயற்காற்றில் எஞ்சியிப்பது போல எதையும் ஏற்று தன்னை பல காலங்களில் உருமாற்றி நிற்கும் ஒரு சமூகம் எத்தனை காலமானாலும் எஞ்சி நிற்கும்.

புஞ்சைத் தானியங்கள் பயன்பாடு குறைந்து அரிசியின் பயன்பாடு அதிகரித்தது, யூஸ் அண்ட் த்ரோ கப்கள் வரவு போன்றவை நாம் நினைத்ததற்கு மாறான காரணங்கள் சிந்திக்க வைக்கின்றன.

திருவிளக்கு பூஜைகள் பின்னால் இருக்கும் சமய அரசியல்,ஏன் ஐயப்பன் கோவில் செல்வதிலும் ஒரு அரசியல் என்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத எல்லா இடங்களிலும் இருக்கும் சமய அரசியலை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கார்த்திகை தீபம் என்பது இந்து மதம் சார்ந்த வழிபாடு அல்ல அது மழையை அனுப்பி வைக்க தமிழர்கள் கொண்டாடிய பண்பாடு வழிபாடு.

மறை என்றால் மறைக்கப்பட்ட என்று பொருள் கொண்டு திருமறையை பார்க்கும் போது அது மறுவி வந்த திருமுறையை குறித்த கண்ணோட்டம் மாறுகிறது.

பூமிக்கு வரும் தெய்வங்களின் கால்கள் தரையில் படாமல் இருக்க வரையப்படுவதே கோலங்கள்.

சிலப்பதிகாரம், வெண்முரசு போன்ற புத்தகங்களில் வாசித்த அணங்குகள் குறித்து விரிவாக வாசித்தோடு, முருகனும் பெண்களை ஆட்டுவிக்கும் அணங்காக கருதப்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.

பேய் மகளிர், நரபலி, நரமாமிசம் குறித்து சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளில் அறிந்து கொள்ள முடிகிறது. மாலையம்மன் சீலைக்காரி வழிபாடுகள் குறித்தும் தகவல்கள் இருக்கின்றன.

சங்ககாலத்திற்குப்பின் மூவேந்தர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் களப்பிரர்கள் காலத்தில் வரும் சமய மாறுதல்கள் குறித்து பேசுகிறார்கள். எந்த காலகட்டமும் திடிரென்று முடிந்து அடுத்தது தொடங்கியிருக்கவில்லை அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்திருக்கிறது.

எந்த சமயமும் ஒரு நேரத்தில் எல்லா இடங்களிலும் பரவவில்லை மாறாக பெரிய சமயங்கள் பின்பற்றப்பட்ட சமயத்திலும் அதற்கு விதிவிலக்காக நாட்டார் தெய்வ வழிபாடுகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது.

சமண வழிபாடு ஏற்படுத்திய சிறு தெய்வ வழிபாட்டால் தாக்குபிடித்திருக்கிறது.வணிகர்கள் மூலம் வந்ததே சாஸ்தா வழிபாடும், பிள்ளையார் வழிபாடும்‌.

பக்தி இயக்கம் ஓங்கி சமண பௌத்தம் மெல்ல மறைந்த காரணங்கள்,பரத்தமை, சோழர்கள் வீழ்ச்சி, சித்தர் மரபு, இராமர் வழிபாடு தமிழகத்தில் எப்படி வந்தது, நாயக பாவத்தில் கடவுள்கள் பாடப் பெற்றதன் காரணங்கள் போன்றவை குறித்து விளக்கமாக காண முடிகிறது.

விஜயநகரப் பேரரசின் காலம் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக தோன்றியது,அப்போது தெலுங்கு மண்டலங்களாக மாறிய நம் நிலங்கள் மற்றும் தமிழ் ஆட்சிமொழியாக இல்லாமல் போனதும், இஸ்லாமிய கிருஸ்துவ மதமாற்றம் குறித்தும் நிறைய தகவல்கள் இருக்கின்றன.

சிறந்த கேள்விகளே சிறந்த பதில்களை கொடுக்கும் என்பதை புத்தகங்களின் பக்கங்களில் காணமுடிகிறது. நல்ல ஒரு புத்தகம்.

Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.