மிருதனின் தொடுகையில் மெல்ல மெல்ல கரைந்து போய் கொண்டு இருந்தவளின் காதோரம்,
“ரூம் போகலாமா?” என்று கேட்டான் மனசாட்சியை விற்றவனாய். அதில் திகைத்துப் போய் அவனை திரும்பி பார்த்தாள். நேருக்கு நேராய் அவனை நின்று எதிர்க் கொண்டவளின் எழில் கோலத்தை விழிகளில் ஆசை போங்க பார்த்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் இருளை கிழித்துக் கொண்டு கூர் முனையாய் அவனை தாக்கியது. ஆனால் அவனுக்கு அதெல்லாம் உரைத்ததா என்று தெரியவில்லை.
அவளிடமிருந்து பதில் வராமல் போக, “சே எஸ் ஆர் நோ..” என்று மீண்டும் கேட்டான்.
“நான் உங்களை காதலிக்கிறேன் மிருதன்...” என்றாள் ஆயாசமாக..
“அதனால தான் உன்கிட்ட கேட்டேன்.. திஸ் மொமென்ட் ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப் வித் யூர்ஸ்” என்றவனை அடிக்க கைகள