பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் கூட காசாகி கதை பேசுதே..
சாபங்கள் தீரவேண்டும் சட்டங்கள் சிறக்க வேண்டும் தாத்ரிக்கள் மறைய வேண்டும் நல்மங்கையராய் பூக்கவேண்டும்.