கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பார்ப்பதினூடாக உருவாகும் கவித்துவத்தை முன்வைப்பவை. ஆகவே புனைவிலிருந்து தாவி கவிதையைச் சென்றடைபவை. ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைகள் தமிழில் மிகப்பரவலான வாசிப்பு பெற்றவை.
தமிழில் மிகப்புகழ் பெற்ற அயல்மொழிக்கவிஞர் எவர் என்று கேட்டால் இணைய பகிர்வுகளின் அடிப்படையில் கல்பற்றா நாராயணனையே ஐயமின்றி சொல்லமுடியும். எளிமையானவை. மெல்லிய நகைச்சுவை ஓடுபவை. ஆழ்ந்த தத்துவ தரிசனங்களை நோக்கி எழுபவை. கூடவே வாழ்க்கையின் அரிய தருணங்களை ஒளிபெறச்செய்து நம்முன் நிறுத்துபவை. கல்பற்றா நாராயணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது.
Kalpatta Narayanan (born January, 1952) is an Indian novelist, short story writer, essayist, columnist, and a poet of Malayalam literature. He is known for his novel, Ithramathram and a number of poetry anthologies and other literary contributions. He is a recipient of several awards including Basheer Literary Award, Ayyappan Puraskaram and the Kerala Sahitya Akademi Award for Literary Criticism.
கல்பற்றா நாராயணன் அவர்கள் எனக்கு "சுமித்ரா" நாவல் மூலம் அறிமுகமானார். அந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்நாவலால் ஈர்க்கப்பட்டதால் அவருடைய மற்ற படைப்புகளை படிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன், ஆனால் போகூழாக அவருடைய வேறு எந்த படைப்புமே அப்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.
இப்போது அவருடைய கவிதை தொகுப்பு ஒன்று வெளியானது தெரிந்து உடனே வாங்கி படித்தேன். இத்தனை ஆண்டு காத்திருப்பு வீண் போகவில்லை, என்னுடைய அத்தனை பெரிய எதிர்பார்ப்பையும் மிக எளிதாக தாண்டிச் சென்றுவிட்டது இச்சிறுநூல்.
எந்த படிமமும் குறியீடுகளும் இல்லாத மிகவும் எளிமையான கவிதைகள். ஆனால் எளிமையை விஞ்சும் ஆற்றல் வேறு எதற்குதான் உள்ளது?. போகிற போக்கில் சொல்லிச் செல்வது போல மிகவும் இயல்பாக வந்து அமைந்திருக்கிறது சொற்கள்.
இந்நூலில் தொடுதிரையை போல பல சிறப்பான கவிதைகள் அமைந்திருந்தாலும், "ஆறுதல்" என்ற ஒரு கவிதை என் மனதை பிழிந்து கண்கலங்க வைத்துவிட்டது. நான் இந்நாள்வரை தேடித்தேடி கண்டடைந்த மிகச்சிறந்த கவிதைகளில் ஆறுதலும் ஒன்று.
ஜெயமோகன் அவர்களின் மொழியாக்கம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மூல மொழியிலேயே படிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
கல்பற்றா நாராயணன் தனித்துவமான கவிஞர். மொழிநடையும் எடுத்துக்கொண்ட கவிதைக்களங்களும் சுந்தரராமசாமியை நினைவுபடுத்துகின்றன. ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் வெளியான புகழ்பெற்ற கவிதைகளும் மேலும் சில நல்ல கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. Seamless translation! நிறைவான தொகுப்பு!