என்னுரை----------------------------எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.நீங்காத நினைவலைகளாய் நெஞ்சில் என்றும் வீசிக்கொண்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பிற்கு 'நீங்காத நினைவலைகள் ' என்றே தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை திரு கண்ணன் அவர்களின் 'கவிதை வனம்' குழுவிலும் , திரு அழகியசிங்கர் அவர்களின்' சொல் புதிது' குழுவிலும் திரு வளவதுரையன் அவர்களின் ' இலக்கியம் பேசுவோம் ' குழுவிலும் வெளி வந்தவை .இது ‘நீங்காத நினைவலைகள் ’- நாகேந்திர பாரதி