பஞ்சு வந்து விட்டான்.மொட்டை மாடிக்கு அழைத்துப் போனாள் கிரிஜா.''எப்படிம்மா இருக்கே? இதென்ன கேள்வி? நீ எப்படி இருப்பேனு தெரியாதா? பாவி வாழ்ந்திருக்க வேண்டியவன். போயிட்டானே! முப்பத்தி மூணு வயசுல மரணம் கொடுமை!''அவள் பேசவில்லை!“விடு! உன் துக்கத்தை நான் ஏன் கிளறனும்? எதுக்காக என்னை கூப்பிட்டேம்மா?”கிரிஜா சகலமும் சொன்னாள் பஞ்சுவிடம்.அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.“எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை உங்க ஆலோசனை வேணும்”“எந்த விதத்துல?”“பண விஷயமா மாமாகிட்ட நான் பேசலாமா?”“பேசறதுல தப்பில்லைனு தோனுது சந்திரன் போனப்புறம் நீ அவங்களைச் சார்ந்து இருக்க முடியாது! உன் பங்குகளை பிரிச்சு வாங்கிட்டு வந்து தனியா வாழ்க்கை தொடங்கலாம்...