அந்தப் பெரிய ஓட்டல் வாசலில் ஆட்டோவை விட்டு இறங்கினான் நந்து. அவர்கள் இருவரும் வாசலில் காத்திருந்தார்கள்.“வாங்க சார்!”இவனை பவ்யமாக அழைத்துப் போனார்கள்.இரண்டாவது மாடிக்கு லிஃப்டில் போய், ஒரு அறை வாசலில் நிற்க, கதவு திறந்தது.“சார் வந்துட்டார் நந்து சார்! இவர்தான் டைரக்டர் இருதயராஜ்!”உயரம் குறைவாக சற்றே குண்டாக இருந்தான் இருதயராஜ். தன் சின்னக் கண்களில் சிரிப்பைத் தேக்கி வைத்திருந்தான். கை குலுக்கினான் நந்துவுக்கு.“ஒக்காருங்க சார்!”அந்த அறையில் இன்னும் ஏழெட்டு பேர் இருந்தார்கள்.“காபி சொல்லுப்பா!”ஒருவன் இன்டர்காமில் காபிக்குச் சொன்னான்.“படிச்சேன் சார் உங்க நாவல்! அபாரம்! அந்த பாதிப்பிலிருந்து விடுபட ரொம்ப நேரமாச்சு.