Jump to ratings and reviews
Rate this book

ஆலம் [Aalam]

Rate this book
ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

248 pages, Kindle Edition

First published January 1, 2023

14 people are currently reading
79 people want to read

About the author

Jeyamohan

210 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
49 (37%)
4 stars
56 (43%)
3 stars
20 (15%)
2 stars
4 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 14 of 14 reviews
4 reviews3 followers
October 30, 2023
wonderful suspense

Wonderful suspicious crime scene with logical reasoning hunt with values of humanity and justice. There was lot gap in Judiciary system which facilitate crime and justice.
Profile Image for Praveen (பிரவீண்) KR.
229 reviews33 followers
December 20, 2024
Check my review @ https://kalaikoodam.blogspot.com/2024...

மிஷ்கின்-கௌதம்மேனன்-வெற்றிமாறன் கூட்டணியில் திட்டமிடப்பட்ட ஒரு தொடருக்கான கதை. அது எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லோராலும் வாசித்து ரசிக்க முடிந்த ஒரு கதை. கோபமும் பகையும் எதற்கும் தேர்வு அல்ல என்று அந்த இரண்டையும் வைத்தே சொல்லப் படும் ஒரு கதை. பகைமையும் ரத்த நெடியும் நிறைந்த ஓர் புதினம்.
Profile Image for Kavin Selva.
47 reviews1 follower
June 9, 2025
வன்மம், கொலை வெறி, இரத்த வாடை, பகை, ஆற்றாமை, பயம் என இந்த நாவல் மனித மனங்கள கூறு போட்டு காட்டும் crime நாவல்..

சாமிக்கு ஒரு கருணை இருக்குன்னா, அதே சாமிக்கு கொடூரமும் இருக்கு..

மனுஷ வெறி fungus மாறி, நோய் போல அது பரவி பரவி காவு வாங்கிரும்..

கோவம், ஆற்றாமை, அழுகை இதெல்லாம் எந்த புள்ளியில் கொலையா மாறுது?
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
January 26, 2025
...revenge, like a fungal infection, spreads silently and pervasively, consuming everyone it touches. Jeyamohan has this knack for layering stories with profound metaphors, weaving a gripping narrative while embedding subtle commentary on human emotions and societal behavior.

It’s fascinating how he intertwines something as raw as revenge with a biological phenomenon, showing how both can corrupt and spread uncontrollably. You feel the weight of it in every page. It seems like a perfect fit for a series—so much room to explore the nuances and the ripple effects of these themes.
Profile Image for Guru Saravanan.
4 reviews1 follower
June 11, 2024
படித்ததில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.இந்த படைப்பில் எழுத்தாளர் வன்மத்தினை பூஞ்ஜைகளோடு ஒப்பிடுகிறார்.ஒரு தந்தை தன் மகன் மீது கொண்ட பாசம்,மகனை இழந்த தவிப்பு,அதனால் கொண்ட வன்மம்….
அந்த வன்மத்தினால் 17 வருடங்களாக அவர் செய்யும் கொலைகள் என நம்மை அந்த உலகத்திற்கு அழைத்து செல்கிறார்.இறுதிவரை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Sudhan.
8 reviews1 follower
February 22, 2024
ஆலம் - ஜெயமோகன்
எனக்குத் தெரிந்து தமிழில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு நாவல்கள் எழுதப்படுவது மிக அரிது. நான் வாசித்த வரையில் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன் போன்ற மிகச்சிலரே ஓரளவு நல்ல பொழுதுபோக்குக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் குழந்தைகள் அல்லது பதின் பருவத்தினர் வாசிக்கக் கூடிய அளவில்தான் இருக்கின்றன. அவற்றைக் கடந்தால் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய ஜாம்பவான்களின் நூல்களே இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை வாசித்து, சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் நாம் பல சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், திகில் கதைகள், அறிவியல் புனைவுகள் போன்றவற்றை வாசித்து, ஓரளவு திறந்த மனமும், பரந்த பார்வையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழில் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு‌. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பலர் வாசிப்புப் பழக்கத்தை கைவிட இதுவே ஒரு முக்கியக் காரணம்.

அந்தக் குறையைத் தீர்ப்பதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக, இந்த 'ஆலம்' நாவல் இருக்கலாம். இலக்கியத்துக்கான சிறப்பம்சங்கள் எதுவுமே இல்லாத, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு நாவல். அதனை ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமை எழுதியிருப்பது பெரிய ஆச்சரியமே.

கதை, திருநெல்வேலியில் நடக்கிறது. பல ஆண்டுகளாக நெல்லையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறையே கருப்பொருள். தலைமுறை தலைமுறையாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே பழிக்குப் பழியாக பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. அவற்றை பெருமை எனக் கருதி அந்த இரண்டு குடும்பங்களும் போட்டி போட்டு கொலைகளை அரங்கேற்றுகின்றன. இந்த இரத்த வெறியாட்டத்தில் எதிர்பாராத வகையில் ஒரு அப்பாவியின் உயிர் தவறுதலாக பறிபோகிறது‌. அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அடுத்தடுத்த கொலைகளுக்கு நகர்கின்றன அக்குடும்பங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இரத்தவெறி பிடித்த அந்தக் கூட்டமே பயந்து அலறும் வகையில், அந்த அப்பாவியின் சாவுக்குக் காரணமான அத்தனை பேரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, ஒரு வம்சமே அழிக்கப்படுகறது. இதைச் செய்பவர் உண்மையில் வாழும் ஒரு மனிதனா, அல்லது பிசாசா, அல்லது கடவுளா எனத் தெரியாமல், மிச்சமிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற மன்றாடுகிறது அந்தக் கொலைகாரக் குடும்பம்.

இதிகாசக் கதை போன்ற தொனியைக் கொண்டிருந்தாலும், இன்றைய சூழலோடு இயல்பாகப் பொருந்துகிறது இந்தக் கதை. ஒரு பக்கம் இரத்தம் தெறிக்கும் வன்முறை, இன்னொரு புறம் விறுவிறுப்பான துப்பறியும் படலம், பரபரப்பான கதையோட்டம் என கடைசிப் பக்கம் வரை பறந்து செல்கிறது கதை. இடையிடையே வரும் பூஞ்சைகள் பற்றிய ஒப்பீடுகள் அட்டகாசம். பகைக்கு நடுவில் வாழும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் இல்லாமல், அதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வழக்கறிஞரின் பார்வையில் கதையைச் சொல்லியிருப்பது கூடுதல் சுவாரசியம். கதைக்குத் தேவையில்லாத, தொடர்பற்ற ஒரு வாக்கியம் கூட இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பு. ஒரு பொழுதுபோக்கு நாவலில் இதெல்லாம் அடிப்படைத் தேவைதான் என்றாலும், தமிழில் இவ்வாறு எழுதப்படுவது மிக அரிது.

இப்படிப்பட்ட கதைகளுக்கு சரியான முடிவை எழுதுவது மிக முக்கியம். கொஞ்சம் தவறினாலும் மொத்தக் கதையையும் அது கெடுத்துவிடும். ஆனால் இந்தக் கதையின் முடிவு மிகவும் கச்சிதமாக, எதிர்பாராத வகையில் இருந்தது.

பெரிதாக ஒத்துப்போகாத திருநெல்வேலி வட்டார வழக்கு, கதை நிகழும் காலகட்டம் பற்றிய சிறிய குழப்பம்‌ போன்ற சிறு குறைகளும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்ற, அல்லது இதைவிடச் சிறப்பான பல பொழுதுபோக்கு நாவல்களைப் படித்திருந்தாலும், தமிழில் இப்படி ஒன்றை வாசிப்பது அலாதியான அனுபவமாக இருந்தது.

இந்த நாவல், வெற்றிமாறன் - மிஷ்கின் - கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கவிருந்த ஒரு இணையத் தொடருக்காக எழுதப்பட்டது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் என்னைக் கேட்டால் இதனை இயக்க இவர்கள் மூவருமே சரியான ஆட்கள் இல்லை. சசிக்குமார் அல்லது கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம். சரியான திரைக்கதை வசனங்களோடு இந்தக் கதையை உருமாற்றம் செய்தால், 8 - 10 எபிசோடுகளைக் கொண்ட ஒரு உலகத்தரமான தொடர் நமக்குக் கிடைக்கும்.

டாரண்டினோ படத்தை தமிழில் வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்நாவலை நான் பரிந்துரைக்கிறே��்.
Profile Image for Suba Mohan.
104 reviews3 followers
May 18, 2024
இது ஒரு murder mystery novel. பரபரப்பான கதைப் பின்னணி. கதையோட ஹீரோ ஒரு junior lawyer. அவரோட சீனியர் கோப்ராவோட பழைய கேஸ எடுக்குறதுல தான் கதை ஆரம்பிக்குது. தொடர்ந்து கொலைகள் நடந்துட்டு இருக்கு. ஒரு வம்சத்தையே அழிக்க முயற்சி பண்றாங்க. இதெல்லாம் யார் எதுக்காக பண்றாங்கன்றது தான் மீதி கதை.

நாய்களுக்கு பரவுற பூஞ்சைத் தொற்றையும், மனுஷங்களுக்கு ஏற்படுற பழிவாங்குற குணத்தையும் அதுனால மனுஷங்க மொத்தமா அழியறதையும் ஒப்பிட்டு எழுதின விதம் நல்லா இருந்துச்சு. பங்காளி சண்டைல தான் கொலைகள் நடக்குதுனு நினைக்கும்போது அப்படியே twist பண்ணி personal revengeனு சொன்ன விதம் அருமை. பக்கத்துப் பக்கம் இரத்தம், பகை, அரிவாள், வெட்டுனு ஒரே கொலைவெறியோட இருக்கு. வருஷக் கணக்குல தீர்ப்பு வராம இருக்குறது, சாட்சிகளை வருஷ கணக்குல அலைக்கழிக்குறது, கொலை செய்தவங்களுக்கு உடனே ஜாமீன் கெடைக்குறதுனு உண்மை நிலைமையை புரிய வச்சு இருக்காரு ஆசிரியர். 

இந்தக் கதைல வர முக்கால்வாசி ஆண்கள் ரத்தவெறியிலயே இருக்காங்க. எல்லாப் பெண்களுமே hyper-depressionல இருக்காங்க. ஆண்கள் வெறியோட இருந்தா பெண்கள் நிலைமை இப்படித்தான் இருக்கும்னு ஒருவேளை ஆசிரியர் சொல்றாரு போல. 

Please don't read this book if you are sensitive, soft hearted and hates violence.
4 reviews
June 13, 2024
ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களில் ஒரு சாதாரண புத்தகமாக தான் பார்க்கிறேன். திரில்லர் பிடித்தவர்களுக்கு இந்த புத்தகம் பிடிக்கலாம். தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் வன்மத்தினால் நடக்கும் பிரச்சனைகளே கரு. ஏன் கிரோதம் வன்மம் இருக்க கூடாது என்பதை உணர்த்தும்.
1 review
June 20, 2024
Extraordinary thriller story. You never drop the book while reading. Completed the book in a day.
Profile Image for Gobinath.
34 reviews8 followers
June 27, 2024
மிகவும் சுமார்.

ஒரு சிறுகதையை சுற்றி சுற்றி இழுத்து நாவலாக தந்துள்ளார். மனதில் நிற்கவும் இல்லை மனதைத் தொடவும் இல்லை.
1 review
January 22, 2025
It touches something that's acting as a sediment in human psychology which people never acknowledge, but still surfaces at many times around us.

Humans are evil. Evil is Humane.
Profile Image for Geethan Gunaratnam.
46 reviews2 followers
July 17, 2025
Pick this up if you want to read something that is fast paced, raw and brutal. I picked it up yesterday and finished today.
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.