காலை எட்டரைக்கெல்லாம் லல்லி புறப்பட்டுப் போய்விட்டாள். ஒன்பது மணிக்கு வாசலில் ஆட்டோ வந்து நின்றது! கடைசிப் பெண் கீதாவும், மாப்ளையும் குழந்தையுமாக உள்ளே நுழைந்தார்கள். “என்னடீ கீதா திடீர்னு? வாங்க மாப்ளை!” அப்பா முகம் துடைத்தபடி ஹாலுக்கு வந்தார். “அடடா வாங்க வாங்க!” “அவருக்கு மெட்ராஸ்ல நாலு நாள் கான்ஃபரன்ஸ்! இந்த சாக்குல உங்கள் நானும் பாக்கலாமேனுதான் வந்தேன்.” “வாடா ராஜா! பாட்டியை மறந்து போச்சா?” “நான் வந்து ஒரு வருஷமாச்சு! அதான் எல்லாரையும் குழந்தை மறந்து போயிட்டான்!” “மாப்ளைக்கு காபி கொண்டு வா சகுந்தலா!” “வேண்டாம்! நான் குளிச்சிட்டு உடனடியா கிளம்பறேன். நிறைய வேலை இருக்கு!” “மாப்ளைக்கு டிபன் பண்ணட்டுமா கீதா?” “பண்ணும்மா.