“ரமணி! உனக்கு போன்!” ரமணி போய் ரிசீவரை எடுத்தான். “ரமணி! நான் மேடப்பா பேசறேன்!” “சொல்லுங்க!” “உங்கம்மாவுக்கு தலை சுற்றல் அதிகமாகி கீழே விழுந்துட்டா, நான் வந்தப்ப மயக்கத்துல இருந்தா! ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கேன்!” “எந்த நர்ஸிங் ஹோம்?” ரமணியின் குரலில் பதட்டம் இருந்தது. அந்த மேடப்பா சொல்ல, ரமணி உடனே லீவு எழுதி வைத்து விட்டுப் புறப்பட்டான். பைக்கை எடுத்துக் கொண்டு நம்ஸிங் ஹோமை அடைந்து பரபரப்பாக உள்நோக்கி நடந்தான். ரிசப்ஷனில் மேடப்பா! “வா ரமணி! மூணாவது மாடில இருக்கா!” அவன் அம்மா இருந்த அறையை அடைய, தலையில் கட்டோடு படுத்திருந்தாள் அம்மா. “என்ன இது கட்டு?” ரமணி பதறிப் போனான். “கீழே விழுந்ததுல சின்னதா அடி! பயப்பட எதுவும் இல்லை.