அம்மா வந்து ஆரத்தி எடுத்தாள். வரதராஜனின் உள்ளூர் தங்கை கோகிலா வந்திருந்தாள். “கோகிலா! நீ எப்படி வந்தே?” “இன்னிக்குத்தான் அண்ணி!” வரதராஜனைப் பார்த்ததும் அம்மா அழத் தொடங்கினாள். “தம்பீ! பொழைச்சு வந்தியேடா! வயசான காலத்துல என்னலாம் நான் அனுபவிக்கணுமோனு கலங்கிப் போனேன்!” “எனக்கு ஒண்ணுமில்லைம்மா!” “நான் உன்னைப் பெத்தவடா! மத்தவங்களை விட எனக்குப் பதறும்!” கட்டிலில் படுக்கை தயாராக இருந்தது. அதுலே அவரைக் கிடத்தினாள். ஏதோ சூடாக கரைத்துக் கொண்டு வந்து தந்தாள். “நீங்க ரெஸ்ட் எடுங்க!” கதவைச் சாத்திக் கொண்டு வந்தாள். “பாருடி கோகிலா! ஆஸ்பத்திரிலதான் அவனைப் பார்க்க விடலை இவ! இப்ப வீட்டுலேயுமா?' “பாட்டி! டாக்டர் அனுமதிக்கலை அங்க! இங்கே அப்பாவுக்&#