அர்விந்த் அலுவலகத்தில் நுழைந்தான். வழக்கமான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தன் கேபினுக்குள் நுழைந்தான். அந்த தனியார் நிறுவனத்தில் அர்விந்த் பர்ச்சேஸ் ஆபீசர் பதவியில் இருந்தான். மாதம் பிடித்தம் போக கையில் ஆறாயிரம் வரை வரும்! கடுமையான உழைப்பாளி! அனாவசியப் பேச்சில்லை! தானுண்டு, தன் வேலையுண்டு என்ற ரகம்! “ஸ்டெனோவை வரச் சொல்லு!” ப்யூனிடம் சொல்லி விட்டான். ஸ்டெனோ வந்தாள். “புது பி.ஏ. இன்னிக்கு ஜாயின் பண்ணலையா?” “பண்றாங்க சார். ஒன்பது -பத்தரை எமகண்டம்! முடிஞ்சு வருவாங்கனு நினைக்கறேன்!” “அவங்க கிறிஸ்டியன். அவங்க எமகண்டம் பாக்கப் போறாங்களா? சரி வரட்டும்!” ஸ்டெனோ போய் விட்டாள். அர்விந்தின் பழைய பி.ஏ. ஒரு பெண்! அவளுக்கு போன மாதம்தான் கல்யாணம்.