வித்தகனின் விந்தையான விகசனமே கதையில் வரும் யாமினி மற்றும் இளங்கோவனின் கதை இது!!
வருந்தாதே வாடைக்காற்றே என்ற நாவலின் டீசர்:
சமையலறை வாசலில் நின்றிருந்த யாமினி "இளங்கோ" என்றழைத்தாள் உணர்ச்சியற்ற குரலில்.அடுப்பில் எதையோ கிளறிக்கொண்டிருந்த இளங்கோ தன் செயலை நிறுத்தாமல் "சொல்லு" என்றான் விட்டேத்தியான குரலில் அதில் சில நொடி அவனையே உறுத்து விழித்தவள்,பின்பு தலையை உலுக்கி "நம்ப மேரேஜை பிரக் அப் பண்ணிக்கலாம் இளங்கோ" என்றாள் பட்டென்று. அதிர்ச்சியில் அடுப்பை அணைத்துவிட்டு பெண்ணவளை நோக்கி திரும்பியவனிற்கு தனது செவியின் திறன் குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் கூட தோன்றியது. அதனால் இமைகள் இடுங்க "வாட் கம் அகைன்?" என அவளை விழிகளால் துளைக்க, அதி&#