பழநிமலை நவபாஷன முருகனை போகர் சித்தர் எப்படி செய்தார்? எதற்காகச் செய்தார்? என்கிற வரலாற்றுச் செய்திகளை 'அன்று' பகுதியிலும், வாழ்க்கை முறையைச் சொல்லும் "இன்று" பகுதியில் அமானுடம் கலந்த ஓர் ஆச்சரிய முரணாக தொடர் முழுக்க வரும் நாகம் அதில் ஓர் அங்கம். அதுமட்டுமல்லாமல் அறிவுப்பூர்வமான கேள்விகளை பாரதி என்கிற கதாநாயகி மூலம் விடைகாணமாட்டாத ஒரு கேள்விக்குறியாகவே தொடர்வதை காண வாசிப்போம் வாருங்கள்...!
ஐந்தாறு வருடங்களுக்கு முன் சமஸ்கிருத சொற்களோ, சிவன், முருகன் குடும்ப உறவுகளோ பெரிதாக நினைத்திருக்க மாட்டேன். இப்ப அந்த கட்டு கதைகளை வைத்து இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்றுவீர்கள், பிழைப்பீர்கள் என்ற எண்ணம் தான்.
இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமே ஆன்மீகம், சித்தர்கள் வைத்து விறுவிறுப்பான கதைக்களமே. அந்த விறுவிறுப்பு மிக குறைவு. சுகி சிவம் அவர்கள் பழநி கோவில் ஆகம விதிகள் படி கட்டப்படவில்லை என்கிறார். ஒரு சித்தர், ஆகம விதிகளில் உதவி தேவையென்றால் தான் செய்ய தயாராய் இருப்பதாய் சொல்வது, அந்த காலத்திலேயே தமிழர்கள் கறுப்பு என்று தாழ்வு மனப்பான்மையில் இருப்பது என்று போகரை, பழநி கோயிலை பெருமைப்படுத்த எழுதியது போல் தெரியவில்லை.
புத்தகத்தின் தொடக்கம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. பொகார் சித்தர், அவருடைய சீடர்கள் மற்றும் அவர்களின் உபதேசங்களைப் பற்றி அறிந்தது மனதை கவர்ந்ததும், புதிய அனுபவத்தை அளித்ததும் ஆகும்.. ஆனால், தற்போதைய காலக் கதைக்களம் அதிக முன்னேற்றமின்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலைத்தது போன்ற உணர்வு ஏற்படுத்தியது. இதனால் சில நேரத்திற்குப் பிறகு அது சற்று சலிப்பாக தோன்றியது.