தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் தலைச் சிறந்தவன் கரிகாலன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரரசன் என்று புகழப்படுபவன். கரிகாலன் சோழ நாட்டை வளமுடையதாக மாற்றி, இமயம் வரைப் படையெடுத்துச் சென்றான் என்பதற்காக இதைக் கூறவில்லை. கரிகாலன் தாயின் வயிற்றில் இருந்த போதே தந்தையை இழந்தவன். பிறந்த பிறகு தாயையும் இழந்தவன். வளர்ந்த போது தன் பகைவர்களிடம் நாட்டையும் இழந்தவன். அதற்குப் பிறகு போராடி தனக்குரிய சோழ உரிமையை மீட்டு, சோழ தேசத்தின் வேந்தனாக முடி சூடினான்.
கரிகாலனுக்கு எதிராக அணி திரண்ட சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டியன் பெரும்பெயர் வழுதி, பதினொரு வேளிர்கள் என்று அனைவரையும் போர்க்களத்தில் வென்று, தனது அரசுரிமையை நிலைநாட்டிய மாவீரன்.
இது ஒரு மிகச் சிறந்த புத்தகம் — படித்துக் கொண்டே போகும் வகையில் உள்ளது! பாரம்பரிய வரலாற்று கதை சொல்லும் முறையில் இல்லாவிட்டாலும், எனக்கு மிகவும் பிடித்தது. இந்த அணுகுமுறை 2000களின் குழந்தைகளை ஈர்க்க ஒரு சிறந்த வழி என்று நம்புகிறேன்.