“ஞான் பாப்பச்சன்! கோலப்பனின் மருமகன்! சில நேரங்களில் கோலப்பனின் மறுஜென்மமும் நானாகவே இருப்பதால் கோலப்பனின் கிளி (ஆன்மா) என்னுடைய கைகளில் இருந்தது.
மொழிகளைப் பேசுவதற்கு முன்னர் சைகையில் கதைத்துக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும், சப்தமாக வசைபாடிக்கொண்டும் திரிந்த மனித இனமானது வர்ணரீதியாக வகுக்கப் படுவதற்கு முன்பு உடலில் ஆடை இல்லாமல், நெஞ்சில் நூலும் இல்லாமல் காட்டு முட்டாப் பயல்களாகவும், சப்பட்டைப் பயல்களாகவுமே இருந்தனர். அதற்குப் பிற்பாடு கஷ்டப்பாடுபட்டு சிக்கிமுக்கிக் கல்லை ஒன்றோடொன்று உராவி, தீயைக் கண்டுபிடித்து, தீயைக் கண்டு பயந்து, அதற்குக் ‘கடவுள்’ என்று பெயரிட்டு மாற்றி மாற்றி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள்.