What do you think?

புறப்பாடு
அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது.
அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒனறு தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது -அதாவது எழுதும் கணத்தில்-ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.

456 pages, Paperback
First published December 1, 2013
About the author
Jeyamohan
210 books879 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 13 of 13 reviews
January 30, 2024
Must read
January 18, 2022
தனித்துவமான அனுபவங்களை தன்னகத்தே கொண்ட படைப்பாளிகளின் படைப்புகளும் தனித்துவம் பெற்றவையாகவே இருக்கும் சிலருக்கு வாழ்க்கையே அப்படிப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது சிலர் தாங்களே தேடி பெறுகின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன் கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறியபின் ஒரு விடுதியில் தங்கி படிக்கிறார், ஊரை விட்டு வடமாநிலத்தில் சிறிதுநாள் கூலி வேலை செய்கிறார், பின் காசி சென்று தமிழ்நாட்டை சேர்ந்த பெண் சாமியார் வீட்டில் தங்குகிறார் பின் சென்னை வந்து அச்சகத்தில் வேலை பார்க்கிறார் நன்கு வியாபாரம் ஆகும் மருத்துவ குறிப்புகள், வர்மக்கலை, ஆபாச கதை புத்தங்களை எழுதுகிறார் அவற்றை பற்றி முழுதாக எதுவும் தெரியாமலேயே பணத்திற்காக அதை செய்கிறார், பின்னர் எதுவும் வேண்டாம் என்று ஒரு சாமியாருடன் வடலூர் செல்கிறார் .
ஆனால் இத்தனை இடங்களிலும் அவரால் ஒன்றிவிட முடியவில்லை தனது இடம் உயர்ந்தது தனக்கான இடம் இதுவல்ல பெறும் அனுபவமெல்லாம் பிற்காலத்தில் தான் எழுதும் நாவல்களுக்கு பயன்படும் போன்ற எண்ணங்கள் எப்போதும் இருக்க எந்த இடத்திலும் பிடிப்பின்றி ஓடி மீண்டும் ஊருக்கே செல்வது போல் முடிகிறது புத்தகம்.
ஜெயமோகன் இதுபோன்று பலநாட்கள் அலைந்து திரிந்திருக்கிறார் என்றும் திருவண்ணாமலையில் சாமியாராகவும் இருந்திருக்கிறார் அப்போது இவருடன் உடன் இருந்த சக துறவி விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் அவை ஏதும் இந்த புத்தகத்தில் இடம்பெறவில்லை.
பெரும்பாலானோர் புத்தகத்தின் விலையை அதன் பக்கங்களின் அளவு வடிவமைப்பு போன்றவற்றை கொண்டே அளக்கின்றனர் சிறந்த எழுத்தாளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற அனுபவங்களையும் அறிவையையுமே புத்தகமாக தருகின்றனர் நிஜத்தில் அது வாசகனுக்கு அவர்கள் தரும் எதனுடனும் ஒப்பிட முடியா பெரும்பரிசாகும்.

March 1, 2022
கடைசி அத்தியாயத்தில் கண்ணீர் வந்துவிட்டது.
January 18, 2024
ஜெயமோகனின் கிட்டத்தட்ட சுயசரிதையான் நிகழ்வுகள் தொகுக்கப்பட்ட புத்தகம். இரண்டு முறை அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்ற அனுபவங்களை எழுதுகிறார். முதல் முறை அவர் நாகர்கோவிலை தாண்டவில்லை. அங்கே ஒரு மாணவர் விடுதியில் அவரது அனுபவங்களும், மறுமுறை இந்தியாவை சுற்றிய அவரது அனுபவங்களும் இருக்கின்றது.
ஜெமோவின் எழுத்து வன்மையில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. சாதாரண நிகழ்வையும் மிகுந்த சுவாரசியத்துடன், ஆழ்ந்த சிந்தனைகளுடன் எழுதுவதில் அவருக்கு நிகர் எவருமில்லை.
அவரது எழுத்துக்களில் இருந்து இந்த நிகழ்வுகள் 1970கலில் நிகழ்வதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த காலகட்டத்தின் வாழ்வு எங்கும் இல்லை. மாறாக நாம் காலத்தை கடந்த ஜெமோவின் வாழ்வு மட்டுமே இருக்கிறது. அபூர்வமாக சில இடங்களில் அவரது நண்பர்களின் வாழ்வை பதிகிறார். ஆனால் அவ்வளவு துயரமும், துன்பமும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் அவரால் அது குறித்து எதுவும் எழுத முடியவில்லை என்பது விநோதமாகவே இருக்கிறது. தன்னுடைய சிரமங்களை, பெருமைகளை எழுதும் அளவிற்கு அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை அவதானிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அவர் சென்னை வரும் காலம் வரை தன்னுடைய நாயர் சாதி குறித்தும், மலையாள தோற்றம் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (சென்னை வரும் வரை ஒரு பொருட்டாக இருந்த அவரது சாதி, சென்னையில் ஏன் எவராலும் கவனிக்கப்படவில்லை என்று அவர் யோசித்தாரா என்று தெரியவில்லை) அவருடன் இருந்த மனிதர்களின் கதையும் அவரது ‘தன்’ பார்வையிலேயே விரிகிறது. இது ஓரளவிற்கு சரி என்றாலும், தன்னை சுற்றிய வாழ்வை, தன்னுடன் ஒரே அறையில் இருந்தவர்களின் துயரங்களைக் கூட அவர் பதியவில்லை .
பயணமாக பார்க்காமல் ஜெமோவின் வாழ்வின் நிகழ்வுகளாக பார்த்தாலும் முழுவதுமாக இல்லாமல் பல துண்டுகளாகவே நிகழ்வுகள் கொடுக்கப்படுகிறது. நினைவின் சுருட்டில் அப்படியாகவே இருக்கிறது என்று அதற்கு காரணம் கொடுக்கப்படுகிறது. ஜெமோவின் சுயதம்பட்டம் சற்று குறைவாகவே இருந்தாலும், புத்தகத்திற்குள் முழுவதுமாக நுழையவிடாமல் அதுவே தடுக்கிறது. இந்தக் குறைகளை தாண்டி ஒரு முறையாவது வாசிக்க வேண்டிய புத்தகம்.

April 20, 2021
Purappadu chronicles the two occasions when as a young man writer Jeyamohan left his home to lead a life away. It is structured like a short story, each chapter reads organically espousing varied themes like the love of the poor people he encounters, the incredible affection shown by his friends etc.
February 18, 2026
நீங்கள் சந்தித்த வெவ்வேறு வகையான மனிதர்கள், எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தனர். புத்தகம் ஏன் படிக்க வேண்டும் என்ற புரிதலே இல்லாமல் இருப்பார் அருமை. ஆனால் அதன் முக்கியத்துவத்தை சரியாக கணித்து(அறிவு), உங்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார். புளி சாதம் போதும் என்று நீங்கள் கூறிய போதும், இன்னொரு அம்மாவிடம் இருந்து சப்பாத்தி வாங்கி கொடுத்த விசாலமான மனது கொண்ட பாட்டியை போன்றோரும் உள்ளனர்; தேய்ந்து போன படத்திற்கு வரவழைத்து, இரண்டு மணி நேரம் வேலை வாங்கி, ஒரு டீ கூட வாங்கி கொடுக்க மனமில்லாத மனிதர்களும் உள்ளனர்.
பாடல்கள் மனதுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன என்று, ரயிலில் ஒல்லி மனிதர் மொழிபெருக்கியில் பாடல்கள் போடும் போது உணர முடிகிறது. நிலங்களை, நினைவுகளை பாடல்கள் மீட்டு எடுக்கின்றன. பாதி பாடல்கள்தான் எனக்கு தெரிந்திருந்தன. எல்லாப் பாடல்களையும் கேட்டேன். (Playlist ன் Spotify link) இசையை ரசிக்க, பணம், காசு தேவை இல்லை; மனம் மட்டும் இருந்தால் போதும்.
எந்த உடைமைகள் மீதும் ஒட்டுதல் இல்லாமல், நினைத்த நேரத்தில் சட்டென்று ஒரு இடத்தை விட்டு கிளம்பி விடுகிறீர்கள். ஆனால் பென்சிலை தூர எறியாமல் வைத்துக் கொண்டதை, எழுதுவதின் மீது நீங்கள் கொண்ட பெரும் பற்றாகவே பார்க்கிறேன்.
அப்போது கிடைத்த வெவ்வேறு அனுபவங்கள் மனதின் உள்ளே சென்று, பல்வேறு கதைகளின் வழியாக வெளியே வந்திருக்கிறது. ஜானின் தங்கை மேரி,மலை பள்ளிக்கூடத்திற்குசென்று வந்தாலும், படிக்க தெரியாமல் இருப்பதிலிருந்து உருவாகி இருக்கிறார், ’கதாநாயகி’ நாவலின் பாதி கதையாக வரும் மலைவாழ் பள்ளி ஆசிரியர்.நண்பனுடன் சென்று தேரிக்காட்டில் தங்கிய அனுபவம், காந்தார நாட்டை நினைவுபடுத்துகிறது. உயிருக்கு பயந்து நண்பனுடன் சேரி வழியாக சென்றது, ‘காவியம்‘ நாவலில் தெரிகிறது.
உங்கள் அனுபவத்தில் ஒரு சதவிகிதம் கூட எனக்கு இருக்காது. உங்கள் கதைகளின் வழியாக பல அனுபவங்கள் கிடைத்தன. திருவனந்தபுரம், லோனாவாலா, பம்பாய், காசி, ஹரித்துவார், மெட்ராஸ் என்று உங்கள் கூடவே, எங்களை அழைத்துச் சென்றதற்கு மிகவும் நன்றி.

April 4, 2025
இப்படியே சென்றால் deaddiction centre கு தான் நான் செல்ல வேண்டும். ஜெமோ விடமிருந்து மீள…. சில இடங்களில் சோதிப்பு தான். இறுதி பக்கங்களில் அந்த சக ரயில் பயணியிடம் தன் அனுபவங்களை கூறும் இடங்களைப் போல. ஆனால் என்ன ஒரு படைப்பு? ஒரு வாழ்க்கையா இது? பல கோடி ஜென்மங்கள் அல்லவா?
ராதாகிருஷ்ணன் என்பவனின் குணங்களும் அவனின் மரணமும் அவனை ஜெமோ மரணத்தருவாயில் மடியில் ஏந்தி செய்யும் அந்த பயணம். அப்படியே அடித்து உட்காரவைத்துவிடும். அங்கு அவன் எடுக்கும் ஓட்டம் நம்மையும் சூறாவளியாய் சுருட்டி எடுத்தபடி எங்கெல்லாம் நீள்கிறது
சாக்கடைகள், மலம் திப்பி திப்பியாய் ஊரும் அந்த மும்பை வீடு, சென்னை சேரியின் கொசுக்கடி, காசி - அந்த ரத்தம் ஊரும் பலிபீடங்கள், ரயில் பயணத்தின் புளி சாதமும் எம் ஜி ஆர் பாடல்களும் - எதற்காக அந்த பயணங்கள்? விடை இல்லை. ஆனால் தேடினால் அது தரும் தரிசனங்கள் ஆச்சர்யம்!!!
என்ன எல்லாம் செய்து ஒரு ஜெமோ ஆக முடிந்திருக்கிறது? காமக் கதைகள் எழுதுவது முதற்கொண்டு. எத்தனை மனிதர்கள் சேர்ந்து ஒரு ஜெமோ வை உருவாக்கி இருக்கிறார்கள் - அருளப்பனான அந்த அமானுஷ்ய மனிதன், கடைசி அத்தியாயத்தில் வரும் அவரின் பாட்டியும், தந்தையும், சித்தப்பாவும், ஒழுக்கமற்ற அந்த பிரின்டிங் பிரஸ் பெண்ணும் பின்பு அவளுடன் சந்தோஷமாக வாழும் அவளின் கணவன் முதற்கொண்டு.
வெண்மை கொண்டு பிரகாசிக்க வேண்டுமெனில் அடித்து துவைக்கப்படவேண்டியது மனிதனும் தானே!!!

July 27, 2022
புறப்படுவதற்கு காரணம் அவசியமா ? ஆம் இல்லை இரண்டையுமே சொல்லலாம்! அப்பா திட்டிவிட்டார் என்று வீட்டை விட்டு சென்ற ஜெமோ, நன்பனின் தற்கொலை ஒரு வியாஜம், இது இரண்டாவது புறப்பாடு ! புறப்படுவது ஒரு காரியம் என்றால், அதற்கு ஒரு காரணம் அவசியம். உண்மையில் அந்த காரணம் ஒரு கல்பனையே. ஏன் என்றால் புறப்பட வேண்டுமென்பவனுக்கு பபுறப்பாடு என்பதே காரணம் மற்றும் காரியம்!
June 7, 2019
One deepest and the best bookI have ever read. Just wow❤️
February 4, 2014
Read it in Jeyamohan's blog. Would like to purchase the book and read it again.
This autobiographical book about his struggle during his early twenties is fascinating...

May 9, 2015
A writers early life is not as usual. Jeyamohan proves it in his own words
November 15, 2022
முதல் 50 பக்கங்கள் அட நல்லா போகுது அப்படினு நினைச்சுகிட்டு இருக்கும் போதே ஜெ மோ சுய தம்பட்டம் நாயர் பெருமைன்னு துக்கி கிட்டு வறாரு.. எனக்கு புடிக்கல
Read
April 24, 2019Travelog
Displaying 1 - 13 of 13 reviews