Jump to ratings and reviews
Rate this book

பூ தொட்ட புயல் 4 : தேனு (Poo Thotta Puyal)

Rate this book
Part 4 of 4 (Episodes 46 to 65) :
"மற்றபடி உன் விருப்பம் தான் எதிலும். புரியும்னு நினைக்கிறேன்." என அவன் அழுத்தம் கொடுக்க அவள் புரிந்தும் புரியாமலும் விழித்தாள்.

"இருவர் தாராளமாக கையை காலை நீட்டி படுக்கும் அளவுக்கு பெரிய கட்டில் தான். இங்கு படுப்பதானாலும் சரி. இல்லை கைகேயி போல கட்டாந்தரையில் படுப்பதானாலும் சரி. உன் இஷ்டம்." விட்டேற்றியாக சொன்னவன் அவனுடைய தலையணை போர்வையை அவள் பக்கம் வீசி விட்டு கண்ணை மூடி கட்டிலில் சாய்ந்தான். அதன் பின் அவனிடம் பேச்சில்லை.

கழுத்தில் தாலி ஏறி இன்னும் முழுதாக ஒரு இரவை தாண்டவில்லை. அதற்குள் அவள் கைகேயியாம். அவன் முகத்தையே வெறித்து பார்த்திருந்தாள் மகிளா. மல்லாக்க போட்ட அய்யனார் சிலை போல பாதி கட்டிலை நிறைத்து படுத்திருந்தான் அவன்.

"அப்படி என்ன பொல்லாத வரம் கேட்டு உங்க உயி… நிம்மதியை எடுத்துட்டேனாம்?" என்று ஆத்திரமும் ஆதங்கமுமாகக் கேட்டாள். 'உயிரை எடுத்தேனாம்.' என்று சொல்ல வாய் வரவில்லை.

கல்லில் வடித்த கிரேக்க சிலை போல அசைவின்றி கிடந்தான் அவன். இறுகிக் கிடந்த முகத்தில் ஒரு இணுக்கு உணர்ச்சி கூட உதிக்கவில்லை. ஒரு துளி கம்பீரம் கூட குறையவில்லை.

அவள் கேட்டுக் கொண்டது போல பெயருக்கு ஒரு தாலி… நாலு சுவற்றுக்குள் என்றாலும் அவன் முழு மனதோடு கட்டி இருந்தால் அவள் மனம் சற்று ஆறியிருக்கும்.

அவள் மீது காதல் இல்லை.... போகட்டும். வெறும் ஆசைக்காக கட்டியிருந்தால் கூட பரவாயில்லை. … அவள் ஆசைக்கு மதிப்பு கொடுத்து தானே கட்டினான் என்று ஆனந்தம் கொண்டிருப்பாள். அவள் ஆசைக்கு மதிப்பு கொடுக்கிறான் என்றால்… அந்த ஆசையில் ஒரு சதவிகிதமாவது அன்பில்லாமல் போகுமா என்றெண்ணி ஆறுதல் கண்டிருப்பாள்.

இங்கோ அவள் கேட்டுக் கொண்டதற்காகக் கூட கட்டவில்லை. அவன் தாய் உண்டாக்கிய ஒரு இக்கட்டிலிருந்து விடுபடக் கட்டியிருக்கிறான். வேண்டா வெறுப்பாக!

ஆக… ஆசையுமில்லை அன்புமில்லை. இந்த லட்சணத்தில் அவள் கைகேயியாம். பெரிய தசரத மகாராஜா! சே... ஒரு விதத்தில் அவன் தசரதனே தான். ஆயிரம் அழகிகள். ஆயிரத்தில் ஒன்றாக இப்போது அவள்.

உள்ளக்கொதிப்பை கொட்டக் கூட உரிமை இல்லாது போனேனே என்று மேலும் குமுறியது பெண் மனம்.

அவனுடைய தனியறை என்பதால் அங்கிருந்தது ஒரே ஒரு தலையணை. ஒரே ஒரு போர்வை தான். அதையும் அவளுக்கு கொடுத்து விட்டவன் இரு கைகளையும் தலைக்கடியில் கோர்த்துக் கொண்டு படுத்திருந்தான். அதற்குள் உறங்கி விட்டானோ?

படுத்ததும் உறக்கம். என்றைக்குமே அது அவளுக்கு சாத்தியப்பட்டதில்லை. நாளொரு பஞ்சாயத்து… பொழுதொரு போராட்டம் என்று போனால்…. படுத்ததும் தூக்கம் எங்கிருந்து வரும்? துக்கம் தான் தொண்டையை அடைக்கும். இப்போதும் அடைத்தது.

அவன் நிலை அதே உறைநிலை தான். ஒரு மாற்றமுமில்லை. உறங்கியிருக்க வேண்டும் அல்லது அவளை தவிர்க்க உறக்கத்தை ஒரு உபாயமாக உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். தரையில் அவள் உருண்டு புரண்டால் கூட லட்சியம் செய்வானா என்பதினி சந்தேகம்.

வெறுங்கையில் அவனுறங்க... அவளும் தலையணையைத் தொடவில்லை. இருவருக்கும் மத்தியில் அணை போல் அந்த தலையணை . இருபுறமும் ஓயாத உணர்வலை. ஓய்ந்து போனாள் மகிளா. சயந்தனும் தான்.

காதலை கட்டாயத்துக்குள்ளாக்குவது கல்யாணம் என்றவன்… இன்றோ, காதலுக்காக கட்டாய கல்யாணத்திற்கும் உடன்படுகிறான். செய்யாததையும் செய்ய வைப்பது தானே காதல்?!

447 pages, Kindle Edition

Published November 24, 2023

Loading...
Loading...

About the author

Thenu Tamil

27 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (38%)
4 stars
4 (30%)
3 stars
0 (0%)
2 stars
2 (15%)
1 star
2 (15%)
Displaying 1 - 1 of 1 review
4 reviews1 follower
November 25, 2023
Editing needed

The author is awesome.but the story has no direction.other characters are kept hanging at the end.author shud seriously consider editing her work.
Displaying 1 - 1 of 1 review