Jump to ratings and reviews
Rate this book

கர்ணனின் கவசம் [Karnanin Kavasam]

Rate this book

248 pages, Paperback

First published December 1, 2013

12 people are currently reading
172 people want to read

About the author

Sivaraman K N

3 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
23 (31%)
4 stars
15 (20%)
3 stars
15 (20%)
2 stars
14 (19%)
1 star
5 (6%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Avanthika.
145 reviews854 followers
January 17, 2015
கர்ணனின் கவசம் பூமியில் இருக்க வேண்டும் என்ற ஐதீகத்தை நம்பி புனையப்பட்ட கதை. கர்ணனுக்கு பின் அதே கவசத்தை அணிந்தவன் ஆதித்த கரிகாலன் என்ற ரீதியில் சோழ வம்சத்தையும் கையில் பிடித்து கதை பயணித்தது கேக்'இன் செர்ரி ! :D

குந்தி, குந்தவை, திரௌபதி, ஆதித்த கரிகாலன், பெருந்தச்சர் வம்சாவெளியினர், அம்பை, பீஷ்மர், சால்வன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமென நம்பப்படும் ரவிதாசன், கிருஷ்ணன், கர்ணனின் சடலம், சகுனி, துரியன், துச்சலை, ஸ்பேஸ்ஷிப்பில் பயணிக்கும் துரோணர், விதுரர், வேத வியாசர், அசோக சக்கரவர்த்தியின் குழு.. அடுத்து என்ன நடக்கிறது என்று புரட்ட தூண்டும் வேகத்தோடு கதை புனையப்பட்டுள்ளது.

இரு பெரும் சாம்ராஜியங்கள் சோழமும் அச்தினாப்புரமும், history repeats என்ற வகையில் ஒரே அரசியல் சூழலை சந்தித்ததை பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதையே கருவாய் கொண்டு எழுதியிருந்தாலும் பல இடங்களில் காதில் பெரும் பூ சுற்றுகிறார்.

பிளஸ்:
அடுத்து என்ன நிகழும் என சிந்திக்க வைத்த கதை.
கதை மாந்தர்களின் ஒரு பிறப்பில் அடக்க முடியா வெறி.
ரவிதாசனின் characterization .
பூலோக ஆயி & பெருந்தச்சர் பற்றிய twist .


மைனஸ்:
over - fantasized !
அலைகழிக்கப்பட்ட கிருஷ்ணர்.
சரியாக பயன்படுத்தப்படாத சகுனி.
எதற்கு த்ரௌபதிக்கும் ஆதித்ய கரிகாலனுக்கும் முடிச்சு போட்டார் என்பது தெரியவில்லை ! என்னமா இப்டி பண்ணிடீன்களேமா ?

லாஜிக் எல்லாம் புறம் தள்ளிவிட்டு மகாபாரத சோழ கதை மாந்தர்களை ஒரு கதையில் சந்திக்க ஆசைகொண்டவர்களுக்கு இது சரியான சாய்ஸ். இல்லையெனில் இருக்கும் ஒரே option என்றும் கூறலாம் ! :P
Profile Image for Shyam Sundar.
112 reviews40 followers
November 22, 2014
இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்த கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு.

மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல்.

நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் காரணத்திற்காக 1000 வருடங்களாகக் கோபமாக இருக்கேன்’ என வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள்.

ஜெர்மனியருக்கு ஏன் கவசம் தேவைப்படுகிறது எனத் தெளிவாகத் தெரிகிறது. துரியோதனனுக்கும் சகுனிக்கும் ஏன் கர்ணனின் கவசம் தேவைப்படுகிறதெனத் தெரியவில்லை. வஞ்சகமாக தானம் கோரிப் பெறவந்த இந்திரனுக்கே கவசத்தைத் தந்த கர்ணன் துரியோதனனுக்குத் தந்திருக்க மாட்டாரா? அதை ஏன் காலம் கடந்து கையகப்படுத்த நினைக்கின்றனர்?

இதில் துரியோதனுக்கு சந்தேகம் வேறு வந்துவிடுகிறது. ஏன் கர்ணனின் கவசத்தை குந்தி பாதுகாக்கிறார் என்று? குந்திக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம் என்று துரியோதனனுக்குப் புரியவில்லை. ஏனென்றால் கர்ணனின் பிறப்பு ரகசியம் வெளிப்படும் முன்பே போரில் இவர்கள் இறந்துவிடுகிறார்கள். இதுவரை சரி. ஆனால் துரியோதனின் கூட்டாளியாக, ஆதித்ய கரிகாலனைக் கொன்ற ரவிதாசன் உள்ளார். அவர் சமகாலத்து ஆள். இந்த நாவலில் எந்த அதிசயமும் புரியாமல் கொஞ்சம் தனித்தன்மையோடு இருக்கும் ஒரே ஆள் இவர் மட்டுந்தான். ஆனால் அவர் துரியோதனனிடம், “இதற்கான விடை வைகுண்டத்தில் கிடைக்கலாம்” என்கிறார். ஙே!!

கிருஷ்ணர் உதவுகிறேன் என ரவிதாசனிடம் சொல்லுவார். “ஒற்றை ஆடையோட நாடு கடத்தப்படறது என்னன்னு உங்களுக்குத் தெரியாது” என கண்களில் அனல் பறக்க கிருஷ்ணரிடம் பழிவாங்கியே தீருவேன் என சூளுரைப்பார் ரவிதாசன். கல்கி தான் ராஜராஜ சோழனுக்கு சாத்வீக பிம்பத்தைக் கட்டியமைக்க, ரவிதாசன் நாடு கடத்தப்பட்டதாகப் பூசி மெழுகியிருப்பார். ஆனால் உண்மையில் ரவிதாசனுக்கு மரண தண்டனைதான் விதித்துள்ளார் இராஜராஜன். புனைவுக்கு ஏன் வரலாறு என்ற எண்ணமிருப்பின், ரவிதாசனுக்கு பதில் நந்தினியையே நூலாசிரியர் சிவராமன் களமிறக்கியிருக்கலாமே என்ற வாசக நப்பாசைதான்.

கர்ணனின் கவசம்சகுனி, கிருஷ்ணர்லாம் இருந்தும் கதையில் சுவாரசியமான முடிச்சுகளே இல்லை. ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணர் ருத்ரனிடம், “தமிழேன்டா!” என ஏழாம் அறிவு சூர்யா கணக்காக உணர்ச்சி வசப்படுகிறார். என்னடா இது கிருஷ்ணருக்கு தமிழ்மீது இவ்வளவு அக்கறை என அதிசயிக்க வைத்துவிடுகிறார். சரி தமிழுக்கும், கருநீல கண்ணனுக்கும் ஏதாவது தொடர்பை பின்னாடி புனைந்திருப்பார் என நினைத்த எனக்கு ஏமாற்றமே! ஆனால் அதிர்ச்சியில்லை. சமகால அரசியலும் சினிமாவும் என்னை ஓரளவுக்கு இந்த ஸ்டன்ட்களுக்கு பழக்கப்படுத்தியிருந்தன.

ஜடாயு, விதுரர், எரிகல் மனிதன், மணல் மனிதன், கிராபீன் மனிதன், அசோகர் நியமித்த ரகசிய குழு, குந்தவை என நாவல் முடியும்வரை, ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்ற ஆர்வத்தையும் பிரமிப்பையும் கதாபாத்திரங்கள் தக்க வைக்க உதவுகின்றனர். விஜயலாயனின் வாளுக்கு வேலை வந்துவிட்டது என அடிக்கடி, அதை காட்டிப் பேசிக் கொள்கிறார்கள். ‘புகையால் ஆயுதம் செய்வது’, ‘விமானிகா சாஸ்திர’ நூல் என்ற டெக்னிக்கல் பதங்களும் பீடிகை போட மட்டுமே பயன்படுகின்றன.

கதைக்கு தேவையெனின் இன்னும் பல பாத்திரங்களைக் கூடக் களமிறக்கலாம். ஆனால் அந்த சவாலை ஏற்று, தெளிவாக கதாபாத்திரங்களை கையாள வேண்டியது மிக அவசியம். அசோகர் நியமித்த ரகசிய குழுவின் வாரிசுகள் மொத்தம் ஒன்பது பேர். தார் பாலைவனத்தில், ஜெர்மனியனையும் சீனனையும் “பொக்கிஷத்தைத் திருட வந்தீங்களா?” என இந்த ஒன்பது பேரும் அடி பின்னுகிறார்கள். ஆனால் க்ளைமேக்சில் நண்பர்களென கபாடபுரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்கே அந்த ஒன்பது பேருக்கும், பின்னந்தலையில் அடிபட்டு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் கூட ஏற்படவில்லை.

கதையின் போக்கிலேயே சில குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு குழு கவசத்தைத் திருட நினைக்கின்றனர். ஒரு குழு காப்பாற்ற நினைக்கின்றனர். நீங்கள் ஏதோ ஒன்றைக் காப்பாற்ற நினைத்தால் என்ன செய்வீர்கள்? ஒன்று திருட நினைப்பவர்களைத் தடுத்து நிறுத்தணும் அல்லது காப்பாற்ற வேண்டிய பொருளின் இடத்தை மாற்றணும். ஆனால் இக்கதையில் காப்பாற்ற நினைப்பவர்களே பரபரப்பாக பொக்கிஷத்தை எதிரிகளுடன் சேர்ந்து தேடுகிறார்கள். இப்படித் தேடுபவர்கள் தான் பாரத போர் முடிந்ததிலிருந்து பொக்கிஷத்தைக் காப்பாற்றுபவர்களாம். ஒரு பொருள் எங்கிருக்கு என்று தெரியாமலேயே அதைக் காப்பாற்றிவரும் விசித்திர ரகசிய குழுவை வேறெங்கேணும் கேள்விபட்டிருக்கிறீர்களா? எதிரிகளும் வேலை மிச்சமென காப்பாற்ற நினைக்கும் குழுவினைப் பின் தொடர்கின்றனர். இந்த லட்சணத்திற்கு, காப்பாற்றும் குழுவில் உள்ளவர்கள் ‘ஹாலிவுட்’ படம்லாம் பார்த்து அப்டேட்டாக உள்ளனர்.

அசுவாரசியமும் அலைகழிப்பும் நாவலை லயிக்க முடியாமல் செய்கிறது. ஆனால் 247 பக்கங்கள் படித்ததற்கு இரண்டு விஷயங்கள் ஆறுதல். ஒன்று சிற்ப ரகசியம் பற்றிய கற்பனையான எளிய விளக்கம். மற்றொன்று குலோத��துங்க சோழன் ஏன் கலிங்கத்தை எரித்தான் என்ற புதிருக்கான யூகம்.
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
March 21, 2016
முதல் 60-70 பக்கங்கள் நல்ல விறுவிறுப்புடன் மிக அருமையாக செல்கிறது. பிற்பாதியில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள பாத்திரங்கள், மகாபாரதக் கதையில் உள்ள பாத்திரங்கள், நிகழ்காலத்தில் சிலர், ஜெர்மானியர், சீனர்கள் என ஏகப்பட்ட கதாப்பதிரங்கள். ஆனால், எந்த லாஜிக்கோ, அறிவியலோ, வரலாறோ சரியாக இல்லாமல், ஆசிரியர் படித்தது, தெரிந்தது என எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதி குழப்புகிறார்.

கதையில் தெரிந்து கொண்ட நல்ல விஷயம் : Backup முக்கியம்!!!
Profile Image for Karthick.
369 reviews121 followers
February 9, 2016
Fiction இருக்கலாம் ஆன் இது உலக மகா Fiction..
அடிச்சு தள்ளுங்க Mr. சிவராமன்
Profile Image for Boje Bhojan.
31 reviews
November 9, 2021
மொத்தம் 247 பக்கங்களும் 40 தலைப்புகள் கொண்ட புத்தகமானது. ஒரு சுவாரசியமான நாவல் என்றே சொல்லலாம் காரணம் இது புராண காலத்தையும் தற்போது இருக்கும் நவீன காலத்தையும் இணைக்கும் ஒரு பாலம் போல அமையப் பெற்றிருக்கிறது. கதையின் கரு என்பது மகாபாரதத்தில் வரும் கர்ணனும் அவரது இறப்புக்குப் பிறகு அந்த கவச குண்டலங்கள் என்ன ஆனது என்பதைப் பற்றியும் தேடுதல் தான் இந்த இந்த நாவலின் கதை அம்சம். கதையானது ஜெர்மனியில் தொடங்கி மதுரை தஞ்சை கலிங்கம் என என்று செல்கிறது. இந்த நாவல் ஒரு கலவையான நாவல் என்று சொல்லலாம் காரணம் நிகழ்கால மனிதர் மட்டுமில்லாமல் ஆதித்த கரிகாலன், குந்தவை, ரவி தாசன், வியாசர், சகுனி, குந்தி, துரியோதனன் போன்றவர்களை வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் மன்னர் அசோகர் அவர்களின் ரகசிய குழு, மற்றும் ஜடாயு காளிங்கன் போன்ற அமானுஷ்ய விஷயங்களும் இதில் வருகின்றது. இது மட்டுமில்லாமல் கடலில் மூழ்கியதாக நம்பப்படும் கபடபுரம், அட்லாண்டிஸ் போன்றவை பற்றியும் இதில் இடம்பெறுகின்றன. கர்ணனின் கவசத்திற்கு தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இன்று கேள்வியில் ஆரம்பித்து சுவாரசியமாக நகர்கிறது இந்த புத்தகம். புத்தகத்தை எடுத்தோம் என்றால் அதில் இருக்கும் விருவிருப்பு அதை கடைசி பக்கம் வரை படித்து முடித்த வரையும் நம்மை கீழே வைக்க முடியாத அளவு செய்யும் என்பதே இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.தமிழில் இது போன்ற புத்தகங்கள் இன்னும் அதிகம் வர வேண்டும்.
Profile Image for pinkpretty.
21 reviews2 followers
October 30, 2017
I got to know k n sivaraman books are nice to read and started reading this first.
Each chapter has a twist but it is not that much great. Lack of clarity.

Not a great read .
Profile Image for Bhargavi Sridharan.
2 reviews2 followers
May 22, 2016
This story is a fantastic thriller in tamil based on the belief that Karnan's armour is still on earth and that the descendents os chozha king is protecting it. Each event is beautifully connected to next that joints the points in the story line. I didn't read this story in a single book, I read it in the weekly magazine in which it was first published. Every time you reach the last paragraph of that week, the author puts a brilliant twist that make you wait for the next week. This will be my first read for all the week, it was running. I thoroughly enjoyed the book.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rajesh.
34 reviews1 follower
January 31, 2016
much appreciated book by friend but disappointed one. lot of characters from the past but no real justification and no logics even for fantasy novel. screen play hanging. thought of reading sagunien thayam , decided not to waste my time
3 reviews
November 28, 2014
The excellent fiction novels have read in Tamil. The author imagination and the way he bought the historical characters in today’s world is very good. I have finished this in one reading.
1 review
May 1, 2016
plz give the book
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.