நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன் ஆன்மாவை இழந்து விட்டது. ஆன்மாவின் மரணம்தான் எங்களின் வீழ்ச்சி. இயற்கைக்கு மரணம் நேர்ந்து விட்டது. காடுகளை வெட்டி வீழ்த்தி விட்டீர்கள். உணவுப் பயிர்களை அழித்து விட்டு போதைச் செடிகளைப் பயிரிட்டீர்கள். எங்களுக்கு வாழ்க்கையே போதை. ஓடுவது போதை. இசை போதை. ஆனால் நீங்களோ போதையை மாத்திரைகளிலும் ஊசிகளிலும் தேடுகிறீர்கள். இயற்கைதான் ருராமுரி. இயற்கை மரணித்த பிறகு ருராமுரி இங்கே எப்படி வாழ்வான்? மழை பொய்த்ததும் இந்தக் காரணத்தினால்தான். நாடகத்திலிருந்து...
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
இந்த நாடகப் பிரதியை படித்த முடித்த கையோடு Theatre Of Crueltyயை பற்றி கொஞ்சம் விரிவாக அறிய வேண்டும் என்கிற முனைப்பில் பல தளங்களில் தேடிப் படித்தேன். எல்லாத் தளங்களிலும் இருந்தும் நான் இறுதியாக பெற முடிந்த ஒன்று இதுவே - "இந்த நாடகப் பிரதியில் பழக்கத்தில் இருக்கும் விழுமியங்களை எல்லாம் ஆர்த்தோ தன்னுடைய உடலின் வழியே தகர்ப்பதாகட்டும், கேளிக்கையை வழக்கமாக கொண்டிருக்கும் கோமாளி கூட இந்நாடக இயக்குனரின் வேண்டுதலின் படி பிரக்ஞையுடன் புரியும் கொலை ஆகட்டும், தற்போது நாம் வாழந்து வரும் கொடூரமான சூழலை உடைத்துக் காட்டும் ருராமுரி மக்களின் குரலாகட்டும் - இது போன்ற சில நுட்பமான விஷயங்கள் எல்லாம் வார்த்தைகளை விட செங்குத்தாக பாயும் ஒளிக்குப் பின், தாராஉமாராவின் இசைக்கு பின்னும் நடுவிலும், பிணங்கள் சூழ்ந்த வாடையின் புழுங்கலின் பின்னர் தான் அரங்கேறுகிறது. இதன் வழியே தான் இந்நாடகப் பிரதி மையத்தில் இருந்து விலகி விடுகிறது. ஒரு கட்டத்தில் இந்நாடகத்தின் பார்வையாளர்களும் ருராமுரி மக்கள் ஆதிகாலத்தில் இருந்ததை போல ஆடைகளற்று விளக்கொளியில் அமர்ந்து கொண்டு ஆர்த்தோ அலறி அலறி பேசுவதை பிரக்ஞையோடு கேட்பதாக முடிகிறது இந்தப் பிரதி.
In the "Theatre Of Cruelty," Antonin Artaud gives more importance to physical expressions, body gestures, sounds, and lights to enhance the text and bring the audience into the performance. This happened strongly in this play which makes to think more about the way Antonin handled the human body against the materialistic pleasures and its individualistic deprivation.
In the end, I came to know that 'The tortured man has raised his voice for the soulless people in a strife-ridden society. And in this play, there's a line which disturbs me - 'சமூக அமைப்பின் வன்முறையை இப்படிப்பட்ட தனிமனித வன்முறைகளால் அழித்து விட முடியாது என்று நான் எத்தனை முறை சொல்வது?"
நாடகம் ஆசிரியர் : சாரு நிவேதிதா 92 பக்கங்கள் எழுத்து பிரசுரம்
இந்த நாடகத்தை வாசிக்க தொடங்கும் முன் நாம் சில வார்த்தைகளுக்கு நம்மை பரீச்சயமாக்கிக்கொள்ள வேண்டும். post modernism, transgresssive writing, metafiction, unreliable narration, self reflexivity, inter texuality. etc. நானும் இதற்கு பின்னர் தான் இந்த நாடகத்தை தொடர்ந்து வாசிக்க முடிந்தது. மேலும் பல இடங்களில் நான் வாசிப்பதை நிறுத்தி Antonin artaud - அவர்களின் உண்மை வாழ்க்கையை வாசித்த பின்பே இந்த நாடகத்தை என்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தது. நான் சாருவை வாசித்தது மிகக் குறைவு. அவருடைய எழுத்தின் வடிவத்திற்கு நான் பழக்க பட்டிருந்தாலும் இந்த நாடகத்தை புரிந்துகொள்வதில் பெரிதும் சிரமப்பட்டேன். எனினும் இறுதியில் முழுதும் எனக்கு புரிந்துவிட்டதா என்றால்? கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது.
அந்தோனின் ஆர்த்தோ - தன் சொந்த வாழ்க்கையில் எப்படி எவராலுமே புரிந்துக்கொள்ளப்படாமல், புறக்கணிக்கப்பட்டு, தனக்கான வாழ்க்கையை தான் வாழ பெரிதும் சிரமப்பட்டு, ஒரு மன நோயாளியாக, ஒரு இசைக்கலைஞனாக, ஒரு ஓவியனாக, ஒரு நாடகக் கலைஞனாக சுற்றி அலைந்தாரோ அது போலத்தான் இந்த நாடகத்தில் வரும் ஆர்த்தோ வும். இந்த கதையில் ஆர்த்தோ வுடன், அவரின் மன நல மருத்துவர், கோமாளி, எழுத்தாளன், நாடக இயக்குனர், ரோராமுரி மக்கள் என பல கதாபாத்திரங்கள் நிறைந்துள்ளன.
கதை முழுக்க ஒழுக்கத்திற்கும் - ஒழுங்கினத்திற்கும் ஒரு தர்க்க போராட்டம் வசனங்கள் வழியும், வசவுகள் வழியும் நிகழ்த்தப்படுகிறது. நவீனத்துவம் - ஒழுக்கம் - சட்டம் - கோட்பாடு - ஒழுங்கு போன்ற அனைத்திற்கும் எதிர் குரலாக சாருவின் குரல் எழுத்தாளனின் விவாதத்தின் வழியும், கோமாளியின் உச்சக்கட்ட ஆத்திரத்தின் வழியும் வெளிப்படுகிறது. இறுதியில் ஆர்த்தோ -வின் விரிவான உரை நமக்குள் நம்மையே பல தர்க்கங்களுக்கு உள்ளாக்குகிறது. அதற்கு விடை கண்டறிவது கடினம் ஏனெனில் அந்த தர்க்கத்தை புரிந்துகொள்ளும் மன நிலையில் நாம் இல்லை என்பதுதான் உண்மை. இப்படியிருக்க இந்த இலக்கிய வகை சமகாலத்திற்கு தேவையா? என்றால் -ஆம், இல்லை என்ற பதில்களுக்கு அப்பால் இருந்தால் என்ன?என்ற புதிய கேள்வி எழுகிறது. இலக்கியம் தன் மக்களின் வாழ்வியலை சேமித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாக இருப்பின் அதில் இது போன்ற படைப்புகளும் தனக்கான இடத்தை தானே எடுத்துக்கொள்ளும்.
மனிதன் தன் முழு சுயத்தை இந்த உலகிற்கு காட்ட விரும்பாதவன். சிரிதினும் சிரிதலவாயினும் தனக்கான ஒரு ரகசியத்தை தன்னோடு சேர்த்து புதைத்து கொள்ள விரும்புபவன். அதற்கு எதிராக தன் முழு சுயத்தை எந்த விருப்பு வெறுப்பின்றி இந்த உலகிற்கு காட்ட விரும்புவன் ஒரு பிறழ்வு எண்ணம் கொண்டவனாகத்தான் இந்த உலகத்தின் ஒழுக்கக்கண்களுக்கு தெரிவான். இந்த நாடகத்திற்கு பல விவாதங்களும், உரையாடல்களும், அமர்வுகளும் நிகழ்த்தி ஒரு முழுமையான புரிதலை உருவாக்க வேண்டும் என்பதே ஒரு வாசகனாக சாருவிடம் எனது வேண்டுகோள்.