சுஜாதாவின் தேடலின் வீச்சையும்,பன்முகத்தன்மையையும் அறிந்துகொள்ள விரும்புவோர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ஹைக்கூ,தமிழ் சினிமா ,எழுத்தாளர்கள் ,தமிழ் இலக்கியம்,சந்தித்த மனிதர்கள் ,இசை , தொழில்நுட்பம்,அரசியல் ,அறிவியல்,கவிதை ,நாடகம் ,புத்தகங்கள்,அனுபவங்கள்,தமிழ் மொழியின் வளர்ச்சி,உலக சினிமா மற்றும் தான் தெரிந்துகொண்டவை என அவர் எழுதிய அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.
அவரின் தேடலின் எல்லை இதுதான் என அளவுகோல்களை வகுப்பது கடினம்.பல விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமென ஆர்வமாக உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.